ஆரோக்கியத்தை சிதைக்கும்
ஆஸ்பத்திரிகள்
சட்டத்தை சீர்குலைக்கும்
வக்கீல்கள்
கல்வியால் வயிறுவளர்க்கும்
கல்லூரிகள்
சுதந்திரத்தை தூக்கிலிடும்
ஆட்சியர்கள்
செய்திகளை சிதைக்கும்
“சேனல்கள்”
ஒழுக்கத்தை பலிகொடுக்கும்
மதவாதிகள்
பொருளாதாரத்தை சீரழிக்கும் வங்கிகள்
இத்தனையும் பார்த்துகிட்டே
இருக்கோம்
பார்த்துகிட்டே
வாழ்ந்துகிட்டே இருக்கோம்
மரத்துப்போச்சு மறந்துகிட்டே வாழ்வோம்..
1 comment:
பார்த்துகிட்டே வாழ்ந்துகிட்டே இருக்கோம்
மரத்துப்போச்சு மறந்துகிட்டே வாழ்வோம்..
சரியான வார்த்தை அண்ணா ,
என் மேல் எனக்கும் கோவம் !
கையாலாகாத தனத்தை எண்ணி !
Post a Comment