திமுக உட்கட்சி
தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது. இது கட்சியின் 12-வது தேர்தலாம்..... ஈ.வெ.ராமசாமி
நாயக்கர் “கொள்ளுப்பேத்தி” வயதில் இருந்த மணி அம்மையை திருமணம் செய்ததால்
அண்ணாதுரை, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, ஒரு “முன்னேற்றத்தை” சேர்த்து (யாருக்கு முன்னேற்றம் என்பது இப்போது
தான் தெரிகிறது) திமுக ஆரம்பித்தார்.
இந்த “கொள்கை
வித்தியாசத்தில்” உதித்த திமுக பிற்காலத்தில் பல்வேறு “கொள்கைகளை” உருவாக்கி.... பதவிக்காக் பலி கொடுத்தது
உலகறிந்த ரகசியம்.... திமுகவின் கதை முடியப்போகும் நேரம் வந்துவிட்ட போது, "இந்த
கதைகளை" தொடர்ந்து என்ன லாபம்? சரி விஷயத்துக்கு வருகிறேன்.....
இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது திமுக தலைவராக 92-வயது கருணாநிதியும், 94-வயது அன்பழகன்
அதன் பொதுச் செயலாளரும், 61-வயது ஸ்டாலின் (கருணாநிதியின் 2-வது மகன்)
பொருளாளருமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள்.
இது தான் தெரிந்த விஷயமே!
நீங்கள் புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்கு கேட்கிறது!
புதிது ஒன்றுமில்லை. புரியாதது ஒன்றை உங்களிடம் கேட்கப் போகிறேன்!
புதிது ஒன்றுமில்லை. புரியாதது ஒன்றை உங்களிடம் கேட்கப் போகிறேன்!
கருணாநிதியின் மூத்த மகன்
மு.க. அழகிரி... ஆரம்பம் முதலே கொஞ்சம் “அழுணிப்பிள்ளை”... சவலைப் பிள்ளை என்பார்கள்! ஸ்டாலினுடன் போட்டி
போட்டு திமுக “தென்மண்டல அமைப்புச் செயலாளர்” என்ற பதவி உருவாக்கப்பட்டு, மகுடம் சூடப்பட்டு,
”திருமங்கலம் பார்முலா” என்ற புதிய “ஊழல் தேர்தல் யுக்தியை” உருவாக்கி, மந்திரிசபை கூட்ட்த்துக்கே போகாத
மத்திய அமைச்சராகி, தனது மனதில் நினைத்ததை பேசும் “அம்மா பிள்ளை” ஆவார் ..
தற்போது திமுக தன் வசம் தான் ஒப்படைக்கப்பட
வேண்டும் என கடுமையாக போராடி வருகிறார். இதன் வெளிப்படையாக தனக்கு ”பதவி வேண்டும்” என்பதை
அம்மா மூலம் அப்பாவிடம் சொல்ல வந்த அழகிரியை “வாயைக் கிண்டி” பத்திரிக்கைகாரர்கள் மனதில் இருந்ததை வெளியேற்றி விட்டனர்.
”திமுக திருடர்களின் கூடாரம்.... யார் திருடன்
என்பது உங்களுக்கே தெரியும்.... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை
ஒழிக்க முடியாது” “திமுக திருந்தினாலே தான் அதில் சேருவதை பற்றி
யேசிப்பேன்”...
என திருவாய் மலர்ந்து அருளினார்.
குமுதம் குடும்பச்
சண்டையை தீர்த்து வைத்த கருணாநிதிக்கு உதவ யாருமே இல்லையா? வைரமுத்துவும் –
கி.வீரமணியும் கொஞ்சம் சமாதானம் செய்து பாருங்களேன்!.----பிளீஸ்
அழகிரியின் வார்த்தை ஒவ்வொன்றும் லட்சம் கோடி பெறும்.(2 ஜி போல ) இதை கண்டித்து
திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி அறிக்கைவிட்டுள்ளார் வெறும் கண் துடைப்பு
அறிக்கை....
அழகிரியை “முதல்வர்
பதவிக்கு” மக்கள் முன்மொழியவில்லை என “தினகரன்” பத்திரிக்கை கருத்து வெளியிட்டதால், தினகரன்
அலுவலகம் தீக்கரையாக்கப்பட்ட்து. இரண்டு அப்பாவிகள் எரிந்து சாம்பலாயினர்.
அழகிரியின் வளர்ச்சிக்கு
திமுக முன்னாள் மந்திரி தா. கிருஷ்ணன் தடையாக இருந்ததால், தா. கிருஷ்ணன் கொல்லப்பட்டார்
என குற்றம் சாட்டப்பட்டபோது, “திமுக வில் இப்படி உட்கட்சி கொலைகள் சாதாரணம் தான்” என கருணாநிதி திருவாய் மலர்ந்து அருளியதை
யாரும் மறந்துவிட முடியாது.
ஸ்டாலினுக்கு எதிராக,
கருணாநிதிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவித்ததால், அவர் வீடு தாக்கப்பட்ட்து...
பாவம் பயந்து ஓடி அவர் காங்கிரசில் ஒளிந்து கொண்டார்.
ஆக மகன்களை குற்றம்
சொல்பவர்கள், தண்டிக்கப்படுவார்கள்! மகன்களுக்குள்ளே எழும் குற்றச்சாட்டுக்கள்
மன்னிக்கப்படும்!
லட்சக்கணக்கான தொண்டனின் வேர்வையில், உழைப்பில் உருவான திமுக என்னும் ஆலமரம் அது உருவாக்கிய வழித்தோன்றல் “விழுதுகளை” நம்பாமல், “பழுதுகளால்” முட்டு கொடுக்கப்பட்டிருப்பது---, அரசியலில் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அமைப்பு ரீதியாக வளர்ந்த கட்சி முறையில், திமுகவின் “சரிவு” வருத்தத்தை அளிக்கிறது.
லட்சக்கணக்கான தொண்டனின் வேர்வையில், உழைப்பில் உருவான திமுக என்னும் ஆலமரம் அது உருவாக்கிய வழித்தோன்றல் “விழுதுகளை” நம்பாமல், “பழுதுகளால்” முட்டு கொடுக்கப்பட்டிருப்பது---, அரசியலில் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அமைப்பு ரீதியாக வளர்ந்த கட்சி முறையில், திமுகவின் “சரிவு” வருத்தத்தை அளிக்கிறது.
நமக்கு புரியாத விஷயம்
கருணாநிதியின் உண்மையான ஆதரவு கட்சிக்கா? குடும்பத்திற்கா? குடும்பத்திற்குதான்
என்றால் குடும்பத்தில் யாருக்கு? இந்த ”வாரிசுப் போரை” முடிவுக்கு கொண்டு வந்துவிட்டால், கடைசி
காலத்தில் கருணாநிதிக்கு, மகன்கள் துணை வராவிட்டாலும், மன நிம்மதியும் ஆறுதலும்
துணைவரும்
.
.
No comments:
Post a Comment