Pages

Tuesday, January 13, 2015

இந்திய தலைமை நீதிபதி தத்து - மோடியை பாரட்டக் கூடாதாம்?



இந்திய தலைமை நீதிபதி தத்து பிரதமர் நரேந்திர மோடியை “மோடி சிறந்த தலைவர்” தொலை நோக்கு கொண்ட சிறந்த மனித பண்பாளர், நல்லாட்சி வேண்டும் என விரும்புபவர்” என கூறியுள்ளார்.

உடனே வந்தது கோபம்..... காங்கிரசுக்கு, கம்யூனிஸ்ட்களுக்கும்
“பதவியிலுள்ள தலைமை நீதிபதி பிரதமரை பாராட்டலாமா?” அரசுக்கு எதிராகத்தான் கோர்ட்டின் பிரதான வழக்குகள் உள்ளன. இது நீதியை தடம் புரளச் செய்யாதா? என காங்கிரசின் ஒரு  செய்தி தொடர்பாளர் சொல்ல-- நீதிபதி தத்து சொன்னது சரிதான் என காங்கிரசின் மற்றோரு செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்க்வி சொல்ல எப்போதும் போல காங்கிரசில் இருவேறு கருத்துக்கள் நிலவியது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் ஆதங்கங்களுக்கு காரணம் என்ன?...காங்கிரஸ் போல ஊழலில் உறித்திளைத்து கேஸ் வாங்கியது போல .. ஏராளமான வழக்குகளை “மோடி” வாங்கப் போவதில்லை!

எனவே நீதிபதியை ”கையில் போட்டுக்கொள்ளும்”  அவசியம் மோடிக்கு  இல்லை! திருவள்ளுவரையும், பாரதியையும், தமிழ்நாட்டுக்கு வெளியே புகழ்பெற செய்வதில் ”உள்நோக்கம்” இருக்கிறது என புலம்பும் கம்யூனிஸ்டுகள் இப்படித்தான் குற்றம் சாட்டுவார்கள்!

திமுகவும், அதிமுகவும் ஒருவரையொருவர் பார்ப்பதில்லை. பேசுவதில்லை அப்படிச் செய்தால், அம்மாவும், ஐயாவும் “கட்டம் கட்டி விடுவார்கள்”.

அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்குமான நல்லுறவு “ஊழலிற்கு துணை போகும்” உறவாகவே உள்ளநிலையில் --இயல்பான நல்லுறவு இருந்தால் அது இவர்களுக்கு “கெட்டவார்த்தையாகிவிட்டது”

மீடியாக்கள்தான் “தத்துவிடம்” இயல்பாக பேசுவதுபோல் (ஆஃப் தி  ரெக்கார்டு என்பார்கள்) --பேசி அவரிடம் இவ்வளவு விஷயத்தை பெற்றிருக்கிறார்கள். அதற்கு மேல் பத்திரிக்கையாளர் தர்மத்தை மீறி வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு மேல் இதை வைத்து விவாதம் நடத்துகிறார்கள்.

திரு தத்து அவர்கள் பதவி ஏற்றவுடன் பலமுறை  நீதித்துறை வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளுடன் மோடியை சந்தித்து இருக்கிறார். அவரது ஒவ்வொரு கோரிக்கையும், மோடி ஏற்றுக்கொண்டு உடனடியாக செயல்படுத்தி வருகிறார்.

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த கோரிக்கைகள் தத்துவுக்காக செயல்படுத்த படவில்லை. நாட்டிற்காக, நீதி பரிபாலன சீர்திருத்தங்களை ஏற்கனவே தன் சிந்தனையில் தீட்டி வைத்திருக்கும் மோடி செயல்படுத்தி வருகிறார்.
Print all
In new window













No comments: