இம்மாதம் . முதல் வாரம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்கள் உட்பட 17 பேர் ISIS பயங்கரவாதிகளால்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் பிரான்ஸ் நாட்டின்
மிகச்சிறந்த “கார்டூனிஸ்டுகள்” ..முகம்மது நபிகளை உருவாக்க வரைந்தார்களாம்
அதனால் இந்த தண்டனையாம்.
இப்பத்திரிக்கை
மத......மொழி பாகுபாடு இல்லாமல் ஏசுகிறிஸ்து, போப்பாண்டவர் உட்பட பலரை
கார்ட்டூன் வரைந்து கிண்டல் அடித்துள்ளது. இத்தனைக்கும் இதனுடைய சர்குலேசன்
வெறும் 45,000 தான். ஏற்கனவே ஒருமுறை இதுமாதிரி படம் வரைந்து முஸ்லீம்
பயங்கரவாதிகளால், இந்த பத்திரிக்கை தாக்கப்பட்டு அரசு போலீஸ் பாதுகாப்பு
அளித்துள்ளது.
இந்த
தாக்குதல் நடத்தியது வீடியோவாக இணையதளத்தில் உலாவுகிறது. துப்பாக்கியால்
குண்டு மழை பொழிந்த பயங்கரவாதிகள், இலக்கை நோக்கி சுட்டதை பார்க்கும் போது
அனுபவம் மிக்க ராணுவ வீரர்களின் “துல்லியம்” மிகவும் அதிதுல்லியமாக
இருந்தது, அவர்களுக்கு எவ்வளவு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம்.
பின்னர் அவர்கள் வேறொரு இடத்தில் அடுத்த நாளே சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
என்பதுதான் சிறப்பம்சம்.... இந்தியா போல அவர்களை நாட்டிலிருந்து
தப்பிவிடுவதும், கைதுசெய்து, தண்டனை கொடுக்காமல் ஆதரவு ஆர்ப்பாட்டம் செய்ய
அனுமதிப்பதும் அங்கு நடக்கவில்லை.
சுமார் 1400 பேர் பிரான்ஸிலிருந்து சிரியாவிற்கு சென்று ISIS யிடம் பயிற்சி
பெறுவதாகவும், அதில் 800 பேர் தற்போது பிரான்சுக்குள் வந்துவிட்டதாகவும்,
இனி “பிரான்சுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் சகஜமாகிவிடும்” என்பதும் பிரான்சை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இத்தாக்குதலுக்கு
40 உலகத்தலைவர்களையும் அழைத்து 30 லட்சம் மக்கள் கண்டன ஊர்வலம் போனது,
பயங்கரவாததிற்கு எதிராக அம்மக்களின் மனேநிலைக்கு சான்று!
நாமும், மன, மத மாச்சர்யங்களை, மண்ணில் புதைத்துவிட்டு, பயங்கரவதத்தை இந்திய மண்ணிலிருந்து விரட்ட ....என்று ....ஒன்று ..சேருவோம்?
No comments:
Post a Comment