”வண்ணானுக்கு வண்ணாத்திமீது ஆசை--வண்ணாத்திக்கு கழுதை மீது ஆசை”--என்பது கிராமத்து பழமொழி..
இதற்கும் என் தலைப்புக்கும் சம்பந்த படுத்தி கொண்டால் அத்ற்கு நான் பொறுப்பல்ல..
” Change and --Progress with Anbumani"
“”மாற்றம்--முன்னேற்றம்--அன்பு
மணி”--
இந்த வாசகங்கள் இன்றைய நாளிதழில் முழு பக்க விளம்பரமாய் வந்துள்ளது ஆச்சரிய பட வைக்கவில்லை..
மருத்துவர்
ராமதாசு ஒரு முடிவோடுதான் இருக்கிறார்..தன் குடும்பத்தில் தானோ..தன்
உறவினரோ ஆட்சியில் உரிமை கோரமாட்டோம்--ஆட்சிக்கு வரமாட்டோம்..”--என
சத்தியம் செய்துவிட்டு..அன்புமணியை தேர்தலில் நிறுத்தாமலே கலைஞரிடமிருந்து
ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பெற்றுவிட்டு மத்திய சுகாதார கெபினட்
மந்திரியாக எடுத்த எடுப்பிலேயே ஆக்க்கி..அழகு பார்த்துவிட்டார்..
இனி தமிழக முதல்வராக்க ஆசைபடுகிறார்..”அத்தனைக்கும்--
ஆசைப்படு”--என்ற ஒரு கார்ப்பரேட் சாமியாரின் புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன்..ராமதாஸ் அதை படித்திருப்பார் போலிருக்கிறது..
அன்புமணிக்கு தமிழக முதல்வராகும் தகுதி இருக்கிறதா?--
இது என்ன வீண் பேச்சு..தகுதி இருந்தால் மட்டுமே ஆசைப்படவேண்டுமா?--
ராமதஸ்
மகன் என்னும் தகுதி--”இண்டக்ஸ் மெடிகல் காலேஜ்”--ஊழலில்
அடித்த--ஆயிரக்கணக்கான கோடிகள் “கையிருப்பில்” இருக்கும் தகுதியும்
போதாதா?--
அதெல்லம் சரிங்க..காசுள்ளவன் எல்லாம் முதல்வர்
ஆகலாம் என்றால்...மணல் குவாரி வைகுண்ட ராஜனும்--வளர்ப்புமகன் சுதாகரனும்
முதல்வராகலாம் அல்லவா?--அதுபோலவா அன்புமணியும்?
வன்னியர்
பெல்டில் அவரது சாதிக்காரன் அத்தனை பேரும் ஓட்டுப்போட்டு ஜெயித்தாலும்
இவருக்கு ஒரு 25 --30 எம்.எல்.ஏ தான் கிடைக்கும்..இதை வைத்து முதல்வர்
ஆகிவிடமுடியுமா?--இவருக்கு இவ்வளவு பெரிய ஆசை எப்படி வந்தது?--
எல்லாம்
மோடி செய்த மாயம்தான்..”சோசியல் மீடியாவில்” மோடி பெற்ற பெருமை--பெயர்
புகழ்--தாங்களும் பெற்றுவிடலாம் என “கனவு காணும்” கூட்டத்தில் அன்புமணியும்
ஒருவர்..அதனால்தான் “அன்புமணி பார் சிஎம்”--என்னும் இணய தளத்தை துவக்கி
இன்று முதன்முதலாக விளம்பரத்தை துவக்கி விட்டார்..
ஒருவேளை
12.07.2015 நல்ல நாள் என சோதிடர்கள் குறித்து தந்திருக்கலாம்..இதே
பாணியில்தான் மார்ச் மாதத்தில் ஒருநாள்..”உலக.இனப்பாகுபாடு
ஒழிப்புதினம்.....” என்று தளபதி ஸ்டாலினும்...உலக மகளிர்
தினத்தன்று..கனிமொழியும்..விளம்
பரம் தந்து..மோடிமாதிரியாக முயற்ச்சித்துள்ளனர்..
வேட்டியை “தார் பாய்ச்சி “கட்டியவனெல்லாம்--காந்தியாகவு
ம்...சட்டையில் ரோஜா குத்தியவனெல்லாம்..நேருவாகவும்.
.தொப்பியும் கூலிங் கிளாசும் போட்டவனெல்லாம் எம்ஜியார் என்றால்--அன்புமணியும் “மோடியாகி” விடலாம்.
நாஞ்சில் மனோகரன் சொன்ன “கருவிலே குற்றம் “ போல முதல் விளம்பரத்திலேயே குற்றம்--
CHANGE
AND PROGRESS WITH ANBUMANI யாம் ...PROGRESS ..முன்னேற்றம் வந்தாலே
மாற்றம் வரும்----வெறும் மாற்றங்கள் ஏற்கனவே பலவந்து நமக்கு
ஏமாற்றங்களைத்தான் தந்தது..
1967 இல் காங்கிரஸ் போய் திமுக
வந்த மாற்றமும்---1977 இல் திமுக போய் அதிமுக வந்த மாற்றமும்--1984 இல்
இந்திரா போய் ராஜீவ் வந்த மாற்றமும்..நமக்கு ஏற்றமில்லை--ஏமாற்றம் தான்
தந்தது..
மோடி மாற்றம் மட்டுமல்ல --முன்னேற்றம்--”
எல்லோருக்கும் முன்னேற்றம்--எல்லோரும் இணைந்த முன்னேற்றம்”--இதுவே மோடியின்
மாற்றம்--வளர்ச்சி---
அன்புமணி மாற்றம் தருவாராம்----பிறகு முன்னேற்றமாம்..
இவர்மீதான
மருத்துவ கல்லூரி ஊழல் இன்னும் நடந்து வருகிறது..அதிலிருந்து முதலில் இவர்
”வெளியே”- வரட்டும் --அப்புறம் முதல்வராக “உள்ளே” வர முயற்சிக்கலாம்..
ராமதாசுக்கு மகன் மீது ஆசை--மகன் அன்புமணிக்கு பணம் மீது ஆசை---
தமிழக மக்களுக்கு ஏற்றம் தருபவர் மீது ஆசை--ஏமாற்றம் தருபவர் மீது அல்ல
ஏற்றம் தருபவர் ---ஒருவரே...அது மோடிமட்டுமே--
No comments:
Post a Comment