கோவை மற்றும் பொள்ளாச்சி
வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பசுமாடுகளை இறச்சீக்காக கேரளாவிற்கு “கடத்திச்செல்வது”
வாடிக்கையாகிவிட்டது
ஏன் இதை கடத்தல் என்கிறீர்கள்?--மாடுகளை இறச்சிக்காக வெட்டுவது சகஜம் தானே--”இந்துத்வா “ பார்ட்டி என்பதால், முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உணவில் நீங்கள், கை வைக்கிறீர்கல் ..இது நியாயமா?--என்று இடதுசாரி போலிமத சார்பற்றவாதிகள் கேட்கிறார்கள்..
இதற்கெல்லாம் பதில் சொல்லி அலுத்து விட்டதால், நான் சட்டபூர்வமான கேள்விகள் சிலவற்றை கேட்கிறேன்..
1 தமிழ் நாட்டில் பசுவதை தடை சட்டம், இருப்பது போலீசுக்கும், மாட்டு வியாபாரிகளுக்கும், கறி தின்போருக்கும் தெரியாதா?
2.பால் கறவை நின்று போன , நோயில்லாத மாடுகளை ஒருலாரியில் 6 மட்டுமே ஏற்றி, உள்ளூர் தாசில்தரிடம் “சர்ட்டிஃபிகேட்” பெற்ற பிறகே வெளீமாநிலங்களுக்கு எடுத்து செல்லவேண்டும் என்று சட்டம் சொல்கிறதா?--இல்லையா?--
3.இந்த சட்டங்கள் சொல்லுவதுபோல்தான் மாடுகளெடுத்து செல்லப்படுகிறதா?
4.கன்று குட்டிகளையும் கறவை பசுக்களையும் “கறியாக “ சமைக்க எந்த சட்டம் இவர்களுக்கு அனுமதி ந்கொடுத்தது?
இதையெல்லாம்
தட்டிக்கேட்டு “அதிரடி ஆட்டம்” ஆடத்துவங்கினார் எனது அருமை நண்பரும்
கோவையின் பிரபல தொழில் அதிபருமான திரு சிவா என்கிற சிவகணேஷ்..
“மனிதர்களை காக்க மாடுகளை காப்போம்”
மாடுகளை காத்து இயற்கையை காப்போம்”
கடந்த ஓராண்டுகாலமாக தொண்டாமுத்துர் அருகே உள்ள “வெள்ளியங்கிரி ஆண்டவர் கோசாலை” மிகவும் பிரபலமாகி வருகிறது..
பொள்ளாச்சி
வழியாக கேரளவிற்கு கடத்தப்படும் மாடுகளை தன்னூடைய “பறக்கும் படையால்”
ஆங்காங்கே தடுத்து நிறுத்தி” அருகில்லுள்ள காவல் நிலையத்துக்கு
ஓட்டிச்சென்று” வக்கீல் குழு” மூலம்..காவல் துறையுடன் பேசி, கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்து, கோர்ட் ஆணை பெற்று, “வெள்ளியன்கிரி கோசாலைக்கு” மாடுகளை
ஓட்டிச்சென்று, பராமரிப்பது இவரது வாடிக்கை
இதனால் மனம் நொந்த மாட்டு வியாபாரிகள்,போர்வையில்
ஒளிந்துள்ள
சமுக விரோதிகள் போலிசை கையில் போட்டுக்கொண்டு இவருக்கு கொலை மிரட்டல்,
கோசாலை முன்பு ஆர்ப்பாட்டம், மாட்டு சந்தைக்கு தொடர்ந்து பந்த் கொடுத்து,
அரசுக்கு நெருக்கடி, என பல வழி தாக்குதல் நடத்து கின்றனர்.இதன் ஒரு "காட்சியாக" இரண்டு நாள் முன்பு, கோர்ட் உத்தரவு பெற்று, கோசாலை இருந்து 56 பசுக்களை ஒட்டி செல்ல முயன்றபொது அதற்க்கு இடைக்கால தடை பெற்று, "சிவா&கோ" அதை தடுக்க முயல, கோசாலைக்கு தீ வைத்து உள்ளே இருதவர்களை தாக்கினர் மாட்டு வியாபாரிகள் போர்வையில் இருந்த சமுக விரோதிகள்.
கடந்த வாரம் நடிகர் விஷாலை சிவா அவர்கள் கோவைக்கு அழைத்து வந்து, கோவை இந்துஸ்தான் கல்லூரியில், 10,000- மாணவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், "மாடுகளை காப்போம்" என விஷால் அரை கூவல் விடுக்க, மாட்டுகரியாலர்களுக்கு, சிவா&கோ மிது மாபெரும் கோபம் உண்டானது.
இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், "கோவை கேட்டில் கேர் வெல்பர் டிரஸ்ட்"--என்ற அமைப்பே, மாடுகளை காக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது..இதன் தலைவர் நிஜாமுதின் என்னும் இளைஞர் ..இவரும்தான் மாட்டு வியாபர்ரிகள் என்ற பெயரில் அரஜாகம் நடத்தும் சமுக விரோதிகலுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்..
மாடுகளை காக்க இந்துத்வா அமைப்புகள் மட்டுமே இருக்கிறது என்கிற நிலை மாறி, நாங்களும் இருக்கிறோம் என களத்தில் இறங்கிய "புதிய மாட்டுகார வேலன்"--சிவகநேஷுக்கும், நிஜாமுதிநிக்கும், ஒரு சபாஷ் போடுவோம்.
No comments:
Post a Comment