"இதோ வருது..
இதோ வருது"- என்ற ஹெல்மெட் ஒரு வழியாக வந்துவிட்டது.சென்னை உயர்நீதிமன்றம்
தன தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக நின்றுவிட்டது .நீதிபதி கிருபாகரன்
தன் சொந்த வக்கீல்கள், சகாக்களின் ஊர்வலம் ,ஆர்பட்டாம் போன்ற கடும்
எதிர்ப்பையும் மீறி தீர்ப்பை அமல்படுத்த முயல்வதற்கு என் பாராட்டுக்கள்!
இடையில்
தமிழக அரசு "ஹெல்மெட் விஷயத்தில் நாங்கள் யாரையும் கட்டாயப்
படுத்தப்போவதில்லை .உயிர்மேல் ஆசை உள்ளவர்கள் அணியலாம்" என அறிவித்து
விட்டதாக வாட்ஸ் அப் செய்திகள் காற்றுதீ போல பரவ , நல்ல வேளை தமிழக அரசு
அதை அதிக காலதாமதம் எடுத்து கொள்ளாமல் மறுத்து உள்ளது!
"ஹெல்மெட்"
அணியாமல் சென்றவர்கள் 1.40 லட்சம் பேர்களின் மீது அபராதமும் வழக்கும் இந்த
பத்து நாளில் காவல்துறை போட்டதன் மூலம் இதற்கு முன்பு இதே மாதிரி
அணிவிக்க உத்த்ரவு போடுவதுவும்--aஅது ஒரு வாரத்தில் அமல்படுத்தாமல் ஓய்ந்து -பழைய
ஹெல்மெட்டுகள் விற்று தீர்க்க மந்திரிகள் செய்யும் "தரகு வேலை" என மக்கள்
நினைத்தது மாறிப்போனது ஆச்சரியமாக இருந்தது
இம்முறை
"ஹெல்மெட்" விற்பனை படு ஜோர். 350 ரூ க்கு வட மாநிலங்களிலிருந்து கொள்முதல்
செய்யப்பட்டு 600 ரூ லிருந்து-1000 வரை விற்கப்பட்டு ஹெல்மெட்
வியாபாரிகளுக்கும் தீபாவளி பட்டாசு போல ,சீசனல் வியாபாரம்
செய்தவர்களுக்கும் மிகபெரிய லாபத்தை ஈட்டி தந்தது ,பல ஆயிரம் லட்சாதிபதிகள்
உருவாக ஹெல்மெட் காரணமாக இருந்திருக்கிறது.
அதெல்லாம்
சரி ! இப்போது புதிய பிரச்சனை உருவாகி இருப்பது நம்மில் பலரால் உணர
முடிகிறதா?.குதிரைக்கு கண்மறைத்து ,கட்டபட்டிருக்கும் ”மறைப்பு போல”-” ஹெல்மெட்
அணிந்தவர்களுக்கு--- தனக்கு முன்னால் போகிறவர்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
தனது--
இடது,வலது-- பக்கத்தில் வரும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை.இதனால்
"தைரியமாக" அவர்கள் தன் பக்கத்துக்கு வாகனங்கள் பற்றி கவலை படாமல்
திரும்புவதும் ஓட்டுவதும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மிகுந்த
"டென்சன்" ஏற்படுத்துகிறது.
புதிதாக
வாகனம் கற்றுக்கொண்ட பெண்-- நட்ட நாடு ரோட்டில் "ஹாயாக" ஓட்டுவது போல
"ஹெல்மெட்" ஓட்டிகள் படுத்தும்பாடு ரொம்ப கவலை அளிக்கிறது!
புதிதாக
ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் ”பறக்கிறார்கள்.”-நடுவயதுகாரர் கள் ”நடுரோட்டில்”-
ஓட்டுகிறார்கள்.பெண்கள் பற்றி சொல்லவே வேண்டாம்."வேறு வாகனங்கள் எதுவும்
இல்லாத சாலை" என்கிற கற்பனையில் மிதக்கிறார்களோ என்கிற மாதிரி உள்ளது
அவர்களது "டிரைவிங்"
இந்த "புதிய நிலை" ஒரு புதிய போக்குவரத்து பிரச்சனையை உருவாக்கியிருகிறது."பாதுகாப்பி ற்க்கான ஹெல்மேட்-" டூ வீலர் காரர்களின் "பயத்தை போக்கி"-- மற்றவர்களுக்கு "பயத்தை உருவாக்கியும்" விட்டது
"சீப்பு
கொடுத்தாளே..சில்லறை கொடுத்தாளா" என்று ஒரு சினிமாவில் வசனம்
வரும்!ஹெல்மெட் அணியச் சொன்னவர்கள்-- அதன் சாதக பாதகங்களையும் அணிந்து
ஓட்டும் முறைகளையும் சொல்லித்தருவார்களா?
சொல்லித்தந்தால் ஓட்டுபவர்களுக்கு "பயன்!" இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு "பயம்"
No comments:
Post a Comment