ஒரு “ டிபார்ட்மெண்ட் ஸ்டோர் “ முன்பு “ இங்கு கணவன்கள் விற்கப்படும் “..என பலகை போட்டுருந்தது..
அது ஐந்து மாடிகள் கொண்ட ஒரு அங்காடி..ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வகையான கணவன்மார்கள் கிடைபார்கள்..
வாங்க வருபவர்களுக்கு இரண்டு “கண்டிஷன்கள்”
ஒன்று...ஒருவர் ஒருதடவைக்கு மேல் வர அனுமதி இல்லை
இரண்டு...ஒவ்வொரு தளமாக மேலே போகலாம்..கீழே வரக்கூடாது..
நம்ம ராசாத்தி கணவன் வாங்க கடைக்கிப் போனாள்..
முதல் தளத்திலிருந்த வாசகம்...
“இங்கு வேலைக்கு போகும், தீய பழக்கங்கள் இல்லாத கணவன் மார்கள்கிடைக்கும்”...
ராசாத்தி மனதுக்குள்...இது அடிப்படை தகுதி தானே...அடுத்த தளத்தை பார்ப்போம்..அங்கு மேலும் சிறந்த கணவன் கிடைக்கலாம்..என புறப்பட்டார்..
இரண்டாவது தளத்தில் இப்படி எழுதி இருந்தது.....
“இங்கு வேலைக்கு போகும், ...தீய பழக்கங்கள் இல்லாத ..மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யும்.... கணவன் மார்கள்கிடைக்கும்”...
ராசாத்திக்கு ஒரே சந்தோஷம்...இருந்தாலும் இதைவிட அதிக தகுதி உள்ள கணவன் அடுத்த தளத்தில் கிடைக்கலாமல்லவா?..என அடுத்த தளத்துக்கு நடையை கட்டினாள்..
அங்கே இப்படி வாசகம் இப்படி இருந்தது...
“இங்கு வேலைக்கு போகும், தீய பழக்கங்கள் இல்லாத ..மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யும் ..அஜித் ..சூர்யா..போன்ற அழகான ..கணவன் மார்கள்கிடைக்கும்”...
ராசாத்திக்கு சந்தோஷமோ சந்தோஷம்..ஆஹா..நம்ம கணவன் சினிமா நடிகர் மாதிரி..இருப்பானே...இங்கேயே ஆளை தேர்வு செய்து விடலாம்..என எண்ணியவளுக்கு ஒரு திடீர் சந்தேகம்..அடுத்த தளத்தில் இதைவிட அதிக தகுதிகளுடன் கணவன் கிடைத்தால்....மனோவேகம் வாயுவேகமாக 4 வது தளத்துக்கு நடையை கட்டினாள்..
அங்கு வாசகம் இப்படி இருந்தது.....
“இங்கு வேலைக்கு போகும், தீய பழக்கங்கள் இல்லாத ..மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்யும் ..அஜித் ..சூர்யா..போன்ற அழகான .....மட்டுமல்லாத...மனைவியை எப்போதும் “ஜாலியாக வைத்துக்கொள்ளும்”...கணவன் மார்கள்கிடைக்கும்”...என எழுதியிருந்தது..
ராசாத்தியின் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை..மகிழ்ச்சியின் உச்சிக்கே போனாள்..ஒரே ஜாலி..தினசரி ஊர் சுத்தலாம்...ஹோட்டல்..ஹோட்டலாக உண்டு மகிழலாம்..நோ..சமையல்..நோ..குக்
5வது தளத்தில் இப்படி எழுதி இருந்தது..
“ அன்புடைய பெண்ணே..உன் ஆசைக்கு அளவே இல்லை...என தெரியும்...அதனால்தான் இந்த தளத்தையே அமைத்தோம்..இங்கே எதுவும் இல்லை...வெளியே போகும் வழி எக்ஸிட் என அம்புக்குறி இட்டு காட்டப்பட்டு இருக்கிறது..”..நீங்கள் செல்லலாம்....
அட என் ராசாத்தி..அதிகம் ஆசை பட்டால் இதுதானோ வழி...
No comments:
Post a Comment