Pages

Friday, August 12, 2011

டாஸ்மாக்கில் தொலைந்த இஸ்லாமிய சிறுவன்

குடிகாரத்  தந்தை... 6... வயது பச்சிளம் பாலனை ..உத்திரப் பிரதேச மாநிலம் அலஹாபாத்.. “ டாஸ்மாக்கில் “..தொலைத்து விடுகிறார்..
விக்கித்துப்போன அக்குழந்தை லக்னோவில் ஒரு நல்லமனங்கொண்ட டீக்கடைக்காரரின் கைய்யில் கிடைக்கிறது.

உள்ளூர் டி.வி.க்களில் படத்துடன் விளம்பரம் செய்தும்  யாரும் வந்து கேட்காததால் ..டீக்கடைக்காரரே பையனுக்கு..தாய்..தந்தையானார்.

மூன்றாண்டுகள் சென்று சிறுவனின் தாய்.. மகனை தன்னிடம் ஒப்படைக்க உயர்நீதி மன்றம் மூலம் அணுகினார்..சிறுவன் தாயுடன் செல்ல மறுத்தான்..

இந்த சம்பவத்தில் என்ன புதுமை இருக்கிறது...இதே மாதிரி பல சம்பவங்கள் படித்திருக்கிறோமே..என நீங்கள் கேட்பது புரிகிறது..

முகமது அப்பாஸ்...ஷானாஸ் பேகத்திற்கு பிறந்த ..அக்பர் ..என்னும் இச்சிறுவனை கண்டெடுத்து வளர்த்து வருவது அக்குலால் என்னும் டீக்கடைக்காரர்..

அக்பர் என்னும் பெயரை மாற்றாமல்..அவன் மதத்தையும் பள்ளி ரெகார்டுகளில் மாற்றாமல் மகனை விட அதிக பாசத்தோடு அவனை வளர்த்து...அதற்காக தானும் திருமணம் செய்து கொள்ளாமல்...இருந்த அக்குலால்..அதே வாஞ்சையை வளர்ப்பு தந்தையின் மீது பாசம் பொழிந்த அக்பர்...தன்னை அழைத்து செல்லவந்த பெற்ற தாயிடம் செல்ல மறுத்தான்.

இந்த பாசப்போராட்டத்தை உயர்நீதி மன்றமும்..உச்சநீதி மன்றமும்...ஏற்றுக்கொண்டு...அக்பர் அக்குலாலுடனே இருக்கவேண்டும்...அதுவே அக்பரின் ஆசை...அதுவே எங்களின் தீர்ப்பும்கூட...என சொன்னதும்...

மதங்களை விஞ்சியது மனிதநேயம்..என்றனர் சிலர்....இந்துமதமும் ..மனிதநேயமும் ஒரு கொடியின் இருமலர்கள்  என்றனர் பலர்...



No comments: