Pages

Saturday, August 13, 2011

சிதம்பரமே..உன் ஜீன்ஸை..(GENE).. அசிங்கப்படுத்தாதே

குஜராத்தில் மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....சஞ்சீவ் பட்...ராகுல் ஷர்மா..ரஜ்னீஷ் ராய்......எதற்காக........

 சஞ்சீவ் பட் கடந்த 10 மாதங்களாக வேலைக்கு வரவில்லை...2002 இல் நடந்த கோத்ரா சம்பவத்தின் உண்மையை 9 ஆண்டுகள் உறங்கி விட்டு இப்போது சொல்கிறாராம்...

ராகுல் ஷர்மா..2005 ஷஹாபுதீன்...என்கவுண்டரில் உண்மைகளை இப்போது உரைக்க தயாராக இருக்கிறாராம்.

இதில் சஞ்சீவ் பட்...காங்கிரஸ் தலைவர்களோடும்..சில தேச விரோத சக்திகளுடன் மிக நெருக்கம்...

இவர்களைத் தூண்டியது யார்...எதற்காக இவர்கள் திடீரென படமெடுத்து ஆடுகின்றனர்.

இந்தியாவின் உள்துறை மந்திரி ப.சிதம்பரம்...குஜராத் மாநில அரசின் நடவடிக்கைக்கு உள்ளான இம்மூவர் மீதும் கவலை கொண்டுள்ளாராம்...அவர்களை சந்திக்க தயாராக உள்ளாராம்...என்னே பரிவு..என்னே தயவு..

கருணாநிதியால்...பணிநீக்கம் செய்யப்பட்ட...ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமா சங்கர் மீது அன்றைக்கு ஏன் இவருக்கு அக்கறை வரவில்லை...”ஜெ” அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட டி.ஜி.பி..ஜாப்பர் சேட் மீது இவரின் கனிவுப்பார்வை  ஏன் திரும்பவில்லை...

ஜாஃபர் சேட் மீது இவர் பார்வை பட்டால்...அன்றைக்கு புதுக்கோட்டையில் இவர்மீது அதிமுகவினர் கைவைத்தது  மீண்டும் அரங்கேரலாம்..

குஜராத் ஆபீசர்கள் உள்ள பரிவு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி இந்தியர்கள் மீது ஏன் இவருக்கு இல்லை...

குற்றசாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தும் ப.சிதம்பரம்...பயங்கரவாதிகள் மீதும் பரிவு கொண்டு பேசுவாரா?...

இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே..குப்பையில் வீசும் சிதம்பரம்...இந்தியாவை ஒன்றுபடுத்திய இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் சீட்டில் அமர தகுதியானவரா...

சிதம்பரம் ஏன் இப்படி செய்கிறார்...

2ஜி ஊழலில் கைய்யும் களவுமாக பிடிபடப் போகிறார்..
.
ஸ்விஸ் வங்கி கருப்புப் பண பட்டியலில் இருக்கும் இவர் பெயர் விரைவில் வெளிவரப்போகிறது.

நிதி மந்திரியாக இருந்த்போது “ஸ்டாக் மார்க்கெட்டுக்கு “ வெளியே நடந்த வியாபாரத்தை விட “ உள்ளே நடந்த வியாபாரம்” அதிகம்--அதில் இவர்மகன்..”கார்த்திக்கும்”..சோனியா மருமகன்..ராபர்ட் வடேதராவும்”...சுருட்டிய கோடிகள் வெளியே வரும் அபாயம் நெருங்கி வருகிறது..

இந்த பயத்தினால்..மோடிக்கு இந்த அதிகாரிகள் மூலம் “கொசுத்தொல்லை “ கொடுத்து வருகிறார்..சிதம்பரம்

இந்த கொசுக்களுக்கு நாங்கள் வைக்கும் “ஆல் அவுட்”..காங்கிரஸ் மகாசபையோடு உங்களையும் சேர்த்து “ஆல் அவுட்டாக்கப் “போவது உறுதி..சிதம்பரம்

YOUR "JUDGEMENT DAY"... IS NOT FAR OFF CHIDAMBARAM

No comments: