*** 3.5.2012 அன்று ஆரணி கோட்டை கைலாசநாதர் கோயில் தேர் சக்கரம் உடைந்து 5 பக்தர்கள் பலி..
****குடியாத்தம் சிவகாம சுந்தரி--பாலசாதுலீஸ்வரர் கோயில் தேர் மின்கம்பத்தில் உராய்ந்து 5 பக்தர்கள் பலி..
**5.5.12 அன்று கோவை பாலமலை ரெங்கநாதர் கோயில் தேர் சாய்ந்து ஒரு பக்தர் பலி..
**ஸ்ரீமுஷ்ணம் பூவராகவப் பெருமாள் கோயில் தேர் இழுக்கமுடியாமல் பாதிவழியில் நின்றது...
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர... ஒரு தெய்வம் மறந்தாலும் ...மற்றோரு தெய்வம் வந்துவிடும் என்பதால் ...நமது நூற்றுக்கணக்கான தெய்வங்களுக்கு ..நாம் தேரோட்டம் நடத்துகிறோம்.
திருவாரூர் ஆழித்தேர்...ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து--ராப்பத்துக்கு பிந்தைய தேர்...கும்பகோணம் ஒப்பிலியப்பன் தேர்....மதுரை மீனாஷி தேர்...ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் தேர்...என.. நீரற்ற நெற்றியில்லை..தேர்ற்ற கோயிலில்லை..என தேரில்லா தெய்வமே இல்லை..
இத் தேர்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும் பராமரிப்பு என்பதே இல்லை...ஒரு தேரோட்டத்திலிருந்து அடுத்த தேரோட்டம் வரை 360 நாட்கள் காய்ந்து கருவாடாக நட்ட நடு ரோட்டில் அநாதையாக தேர் நிற்பதும்..துரு பிடித்து..உளுத்து..போவதும் ஆண்டவனுக்கே தெரியும்..ஆள்பவருக்கு ஏன் தெரிவதில்லை..
தேரோட்டத்திற்கு ஒரு நாளைக்குமுன்...கொஞ்சம் பெயிண்ட்..கொஞ்சம் கிரீஸ்....அவ்வளவுதான்...அது ஓடப்போகும் சாலையின் ”தரம்..குண்டு..குழி...மின்கம்
பின் ஏன் விபத்துக்கள்....அதுவும் இவர்கள் ”செயல்பாடு குறை பாட்டால்”.. நிகழும் விபத்துக்கள்..இவைகளை ஏன் தடுக்க முடிவதில்லை?
தேரோட்டத்தில் ஏற்படும் விபத்து..இடர்கள்..அந்த ஆண்டு முழுதும் அவ்வூர் மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது..ஏதோ தெய்வ குற்றமோ என அஞ்சுகின்றனர்....உண்மையிலே குற்றம் அரசுடையது...
அம்மா...தேர்..ஓடட்டும்..தேர் ஏறி உயிர் ஓடாமால் பார்த்துக்கொள்ளுங்கள்...சரியா?
No comments:
Post a Comment