பழைய தலைப்பு மட்டுமல்ல..ஏதோ பழைய திரைப்படத்தின் பெயர்போல இருக்கிறதல்லவா?
வாழ்க்கை தத்துவங்களின் வலிமையான கருத்தை சொல்லும் வார்த்தைகளை மாற்ற முடியாதல்லவா?
அவை பழசுதான் ஆனால் என்றும் இளமைதான்..சரி சப்ஜெட்டுக்கு வருவோம்.
நமது 5வது மாநில மாநாடு “தாமரை சங்கமம்” தமிழக பாஜக வரலாற்றில் “பல புதுமைகளை”--”பல முதன்முதலான “ விஷயங்களை செய்துள்ளது.
1..தமிழக பாஜக வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பலகோடி செலவில் நடத்தப்பட்ட முதல்மாநாடு..
2..”தகவல் தொழில் நுட்பம் “ ஒரு அரசியல் கட்சியால் அதிகமாக பயன்படுத்தபட்ட மாநாடு..என்னும் பெருமை இதற்கே
.
3..பிர்மாண்டமான பந்தல்..ஒரே நேரத்தில் 11/2 லட்சம் பேர் அமரக்கூடியது என்பதும் முதல்முறை
4...தமிழகம் முழுதும் ஒரு ஊர்கூட பாக்கியில்லாமல் சுவர் வாசகம், பிளக்ஸ் போர்ட் வைத்து விளம்பரம் செய்ததுடன், அத்தனை ஊர்களிலிருந்தும்
லட்சக்கணக்கில் திரணட தொண்டர் கூட்டம், அத்தனை செலவும் 100 சதம் தொண்டர் களின் கைக்காசே..என்பதும் வித்தியாசம்
5..போலீஸின் அதீத அத்துமீறலால் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட தொண்டர்கள் அத்தனைபேரும், குறைந்தபட்சம் 17 கி.மீ தூரம் நடந்தே மாநாட்டுப்பந்தலை அடைந்தனர்.
அந்தவகையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிக தூரம் நடந்து, நடத்திய முதல் அரசியல் கட்சி மாநாடு என்னும் பெருமை பெருகிறது. அனேகமாக இது “கின்னஸ் “ சாதனையாக கூட இருக்கலாம்...
6..ஒரு இடத்தில்கூட தள்ளுமுள்ளு..வாய்த்தகராறு,..கை
7...பேட்டரிகாரில் திரு கட்கரியை அழைத்து வந்த வித்தியாசம்.
.
8..ஊருக்குள் நுழையும் ஒருசில இடங்களில் போலீஸின் அத்துமீறல்களால் தடியடியால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டாலும் அமைதிகாத்தது தமிழக அரசியல் வரலற்றில் முதல்முறை..
9..மிகப்பெரிய” எல்.ஈ.டி..ஸ்கிரீன்.”.எந்த இடத்திலிருந்தும் மேடையை பார்க்கும் பிரம்மாண்டம்..
10...கலை நிகழ்ச்சிகள் கண் கவர்ந்தது..மனங்கவர்ந்தது..கலா
மிகத்துல்லியமாக திட்டமிடப்பட்டது..மிகச்சரியாக செயல்படுத்த ஆவன செய்யப்பட்டது..தொடர்ந்து காற்றும் மழையும் மாறி மாறி நம் செயல்பாடுகளுக்கு “செக்” வைத்தது..
இவையெல்லாம் மீறி அன்னை மீனாஷி --அம்மன் மதுரகாளியின், அருளால், நம்மால் இயற்கையின் சீற்றத்தின் கஷ்டங்களை ஓரளவுக்குத்தான் கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது.
அதனால்தான் “ஒரளவு குறைகளும்..கஷ்டங்களும் “ ஏற்பட்டிருக்கலாம்.
ஒருவேளை இயற்கை நமக்கு இடர்பாடுகள் தராமல் இருந்திருந்தால், “துல்லியமாக திட்டமிடப்பட்டு அங்குலம் அங்குலமாக சிறப்பாக நடத்தப்பட்ட மாநாடு “ என்னும் முழுப்பெருமையை பெற்றிருப்போம்.
வாழ்க்கை பயணத்தில் சோதனைகள் வருவது சகஜம்...அரசியல் கட்சியின் வாழ்விலும் சாதனை..சோதனைப் பயணங்கள் தொடர்கின்றன..இந்த மாநாடு தொடங்கிவைத்த நமது பயணம் முடியவில்லை..தொடரும்...மீண்டு
No comments:
Post a Comment