Pages

Sunday, May 13, 2012

அனுதினமும் எமக்கு அன்னையர் தினமே



இன்று அன்னையர் தினமாம்
அப்படியானால் மற்ற நாட்கள்  ?
ஆங்கிலேயனுக்கு ஒரு நாள்தான்
நமக்கு தினம் தினமுமே..

காப்பியடிக்கும் கலையிலே நாம் வல்லவர்கள்
தொழிலிலே காப்பியடி  கோடிகளைச் சேர்
அரசியலில் காப்பியடி கேடிகளைச் சேர்
தொண்டில் காப்பியடி புண்ணியத்தைச் சேர்
ஆன்மீகத்தில் காப்பியடி ஆதீனமாக சேர்

உறவுகளில் காப்பியடித்தால் உண்மை சுருங்கும்
உண்மையை காப்பியடித்தால் பொய்மை பெருகும்
அன்னை என்பவள் நம் தொப்புள்கொடி பந்தம்
அவளுடைய உறவுநம் ஆயுள் பர்யந்தம்

ஒருநாளில் முடிவதில்லை அன்னையின் உறவு
உறவுக்கு ஒருதினம் இல்லைநம் மரபு
தாயாக தாரமாக தங்கையாக மகளாக
ஆயுள்முழுதும் போற்றுவதே நம்முடைய இயல்பு..

No comments: