Pages

Friday, May 11, 2012

செம்பும் நாளைக்கு தங்கமாகும்

அந்தப் பாலைவனத்தின் புழுதிப் புயலில்
புதை மணலில் அனல் காற்றில்
மிடுக்காய் ஒரு ஒட்டகம்
மிதந்து சென்றது.ஆம்!
அது பாலைவனக் கப்பலல்லவா.!

பொந்திலிருந்து ஓடி வந்த ஒருஎலி
தாவிஏறி திமிலில் அமர்ந்தது.
ஹை!ஹை! நாந்தான் ஒட்டகத்தை
ஓட்டுகிறேன் என்றது..

ஈச்சமர நிழலில் இளைப்பார
அமர்ந்த (படுத்த ) ஒட்டகம்
எழுந்திருக்கும் போது மணலில்
புதைந்திருந்த பூரான் ஒட்டகத்தை
தூக்கிவிட்டது நாந்தான் என்றது.

ஓடிவரும் நதியின் வேகத்தை
ஒடிந்து விழும் நாணல் தடுத்ததாம்.
உருண்டுவிழும் நீர்வீழ்ச்சியின் பாதையை
உருண்டு வரும் கூழாங்கற்கள் தீர்மானிக்குதாம்.

இவையெல்லாம் உண்மையெனில்
 இம் மாநாட்டில்.. நான் செய்தேன்
நான் செய்தேன்..நாந்தான் செய்தேன்.. என்பதும்..
அவனால்தான்.. அவனால்தான்.. அவனால் மட்டும்தான் ....
என்பதும் உண்மையாகும்..இதுதான் உரைகல் என்றால்
செம்பும் நாளைக்கு தன்னை தங்கமென கொண்டாடும்.


அத்தனையும் நடத்தியவள் அன்னை மீனாஷி
அவளோடு இணைந்து செய்தவள் மதுரகாளி
இந்த உண்மை உணர்ந்தால் ஈயமும்
செம்பும் கூட நாளைக்கு தங்கம் ஆகும்



No comments: