சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு பூஜ்யம்---------வாக்கு சதவீதம் ஒரு சதம் மட்டுமே உயர்வு-----மாநிலத்தலைவர் உள்ளிட்ட பெரும் தலைகள் உருண்டன----தேர்தல் தோல்விக்கு..பொறுப்பேற்று மாநிலத்துணைத்தலைவர் ராஜினாமா-----
அடுக்கடுக்கான திடுக்கிடும் செய்திகள்---பா.ஜ.கவின் தொண்டனின் மனநிலை லேசாகவாவது ஆடுகிறதா?---அவன் அலைபாய்கிறானா?---எதிர்த்துப் போட்டியிட்ட ஒரேகட்சி நிலைகுலையாதா?-----
எண்ணற்ற ஆசைகளில் எதிரிகள் விரிக்கும் வலைகளில்... பாஜ விழாத காரணத்தால்...”ஜெ”..புகழ் பாடியவர்கள் ,,தொலைந்துவிட்ட கருணாநிதியை..தேடும் படலத்தை விட்டு விட்டு.. ஆண் சிங்கமாக கர்ஜிக்கும் பாஜக மீது தாக்குதல் துவங்கியுள்ளனர்..
முதன் முதலில் இது “ஜெ” யின் வெற்றி அல்ல...கருணாவின் மீதிருந்த “கடுப்பலை”----திமுக மீதிருந்த “எதிர்ப்பலை”---திமுக எதிர்ப்பலைக் குதிரையின் மீது ஒரு ஜாக்கியாக “ஜெ”--கால்களை காம்யூனிஸ்டுகளும்...வாலில் விஜயகாந்தும்---கட்டிக்கொண்டும்
குஸ்தி களத்தில் இரண்டு பயில்வான்கள்---ஒன்று ஜெ--இரண்டு கருணா...கடந்த நாலரை ஆண்டுகளாக “ஜெ”--ஃபார்மில் இல்லை..சண்டையே போடவில்லை..அதாவது... எதிர்கட்சியாக செயலபடவே இல்லை..முழுதும் கொடநாடுவாசம்..கருணாவின் மீதிருந்த கடுப்பில் பார்வையாளர்களாக இருந்த மக்களே சண்டை போட்டு கருணாவை வீழ்த்திவிட்டனர்..எதிரில் ந்ன்றுகொண்டுருந்த “ஜெ” வெற்றி பெற்ற தாக அறிவிக்கப்பட்டார்..
”ஜெ”யிக்கு மக்கள் போட்டது பிச்சை--பாஜ ஓட்டு பாஜ உழைத்து சம்பாதித்தது..உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்---
தேர்தல் களத்தில் பா.ஜ.க.திட்டமிட்டு செயல்பட்டது......”ஒரு ஊழலுக்கு மாற்று மற்றொரு ஊழலா?”-----என சங்கநாதமிட்டது...”ஊழல் கூட்டணிகளிடமிருது தமிழகத்தை விடுவியுங்கள்”--என வீரச்சமர் புரிந்த்தது..
இரண்டு “மாமிச மலைகளுக்கிடையே”நடந்த சண்டையில் மக்கள் பாஜவை பார்க்கவே முடியவில்லை--அந்த அளவுக்கு புழுதி உயரே பறந்தது..இந்த சூழலில் கூட ஒரு சதவீத ஓட்டுயர்வு..பாஜ உழைப்புக்கு கிடைத்த வெற்றி...
ஆக பாஜ தோற்க வில்லை--அது வருத்தப்பட....வேதனைப்பட...கவலை
ஒன்று மட்டும் உறுதி..பாஜ பிரச்சார பலன்கள் முழுதும் ---பாஜ கருணா எதிர்ப்பு போர் முழுதும் --எங்காவது கருணா ஜெயித்து விடுவாரோ என்கிற “ஃபியர் சைகோஸிஸ்”--என்னும் அதீத பயத்தினால்.....”ஜெ”விற்க்கே போய் விட்டது..
இப்போது பாஜ காலம்--ஆம்...”ஜெ”யின் முகம் எல்லோருக்கும் தெரியும்...திறமைகளும் சொல்லாமலே புரியும்...கருணாவை ஆட்சியில் அமர்த்த திமுக முயல்கிறதோ இல்லையோ “ஜெ” உடனே துவங்கி விடுவார்...பாஜவின் திமுக எதிர்ப்பு நிலை ஏற்கனவே தெரியும்--இப்போது “ஜெ” யின் முகத்திரை பாஜவால் கிழிக்கப்படுமானால்...அடுத்த ஆட்சி பாஜகவுனுடையதே .
2 comments:
பாஜகவிற்கு சூ அடிக்கப்பட்டது.. அதுக்கு மருந்து போடுறீங்களா ?
அப்பட்டமான உண்மை நண்பரே.செயல்படாத எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஜெ நெகடிவ் வாக்கினால்தான் வெற்றி பெற்றார். பிஜேபி ஆதரவாளரான நானும் என் குடும்பத்தாரும் எங்கள் தொகுதியில் (திருப்பெரும்புதுர்) பிஜேபி வேட்பாளர் நின்றாலும் கருணாநிதி வந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் இலையில் குத்தினோம்.
Post a Comment