Pages

Friday, August 26, 2011

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே ராகுல்

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸுக்கு ஒருதுளியும் விருப்பம் இல்லை. அன்னாவின் கடைசி மூன்று கோரிக்கைகளையும்கூட  ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை.

அன்னாவின் கோரிக்கைகளை ஏற்க காங்கிரஸுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.அப்படி ஏற்றால் பாதி பார்லிமெண்ட்  ஜெயிலுக்குள்தான் கம்பி எண்ண வேண்டியிருக்கும்...முழு காங்கிரஸும் திஹார் ஜெயிலுக்குள்தான் இருக்கும்.சோனியா கனிமொழி அறைக்கு பக்கத்து அறைவாசியாக இருப்பார்..அதனால்தான் அன்னாவின் “ஜன்லோக்பாலுக்கு”--காங்கிரஸ் கடும் எதிற்ப்பு தெரிவிக்கிறது.

11 ஆம் நாள் உண்ணாநோன்பிலும் 74 வயது தாத்தா இளைஞன் போல் அல்லவா இருக்கிறார்.ஒரு பிட் கூட அசரவில்லையே---அவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நாடே பற்றி எரியுமே..காங்கிரஸுக்கு ஏன் கொஞ்சம்கூட கவலை இல்லை.

இன்று 26.8.2011 வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி திடீரென கவலை பட்டார்..தான் எழுதிவைதிருந்த ( --அம்மா மாதிரி--)சினிமா பாணி முதலைக்கண்ணீர் வசனத்தை ராகுல் பார்லிமெண்டில்  ஒப்பித்தார்....

என்ன வேடிக்கை என்றால்---ஊழலை அறவே ஒழிக்கவேண்டுமாம்---யாரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசுகிறார்..ஆதர்ஷ் ஊழல் விலாசராவ் தேஷ்முக்---உர ஊழல் சரத்பவார்---2-ஜி ஊழல் சிதம்பரம்--(ராசா முதலானோர் உள்ளே இருக்கின்றனர் )---இவர்களை வைத்துக்கோண்டு “ நா “கூசாமல் பேசுகிறார்..

ஒவ்வொரு குடிமகனும் முன்னுக்கு வரவேணுமாம்---இதையூம் யாரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசுகிறார்..--அப்பாக்கள் தயவில் மந்திரி ஆன--முரளி தியோரா மகந்-மிலிந்த் தியோரா--மாதவ ராவ் சிந்தியா மகன்..ஜோதிராதித்ய சிந்தியா--ராஜேஷ் பைலட் மகன் சச்சின் பைலட்--இவர்களெல்லாம் காங்கிரஸ் போஸ்டர் ஒட்டி முன்னுக்கு வந்த கீழ்மட்ட தொண்டன்களா ?--அப்படி போஸ்டர் ஒட்டிய தொண்டன்களை யாரையாவது ராகுல் முன்னேற்றி விட்டுருக்கிறாரா?--

ராகுல் சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லாமல் பல வெடிகளை இன்று பாராளுமன்றத்தில் கொளுத்திப்போட்டார்..--

அரசே தேர்தல் செலவுகளை ஏற்கவேண்டுமாம்---யார் தடுத்தார் இவர்களை--கடந்த 7 ஆண்டுகாலமாக “ராகுல் தர்பார் “--தானே நடக்கிறது..

அரசு வெளிப்படையாக இருக்கவேண்டுமாம்--2-ஜி ஊழல் சந்தி சிரித்தது போதாதா?--எல்லா நடைமுறைகளையும் காற்றி பறக்கவிட்டு விட்டு --மந்திரிகள் குழு நடத்திய ஊழல் நாடகம் இப்போது வெளிவந்திருக்கிறதே ராகுல்--.இன்னும் “முக்காடு போர்த்தாமல் “--காங்கிரஸ் வெளியே நடமாடுகிறதே--இதற்கு என்ன சொல்ல?--

அன்னா ஹாஸாரே --தன் கோரிக்கைகளை ஏற்கச்சொல்லி அரசை நிர்பந்த படுத்துவது...நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தாம்--அதாவது ராகுல் என்ன சொல்லவருகிறார்...ஹஸாரே ஹிந்து--அவர் கோரிக்கைகள் வலுப்பெற்றால் மற்ற முஸ்லிம்--கிறிஸ்தவர்கள் வருத்தப்படுவார்கள்--அதாவது இப்படிச்சொல்லி அவர்களை தூண்டிவிட ராகுல் முயல்கிறார்..இது நல்லதா?--

ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்டதாம்..ஹ்ஸாரேவின் உடல் நிலை கண்டு ராகுல் வருத்தப்படுகிறாராம்..அவர் உண்ணாவிரதமிருக்க எந்த கட்சி--ஆட்சி--காரணம்--எத்தனை முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பட்டை நாமம் போட்டார்கள்--இன்றுகூட உயிருக்கு போராடும் ஹ்ஸாரே மீது எதாவது கரிசனம் இவர்களுக்கு இருக்கிரதா?--

காங்கிரஸே--ஒருமுறை நாட்டை பிளந்தது போதும்...ராகுலை உளரச்சொல்லி மீண்டும் ஒருமுறை முயற்ச்சிக்காதே--அன்னா ஹஸாரேவை அபாண்ட மாக பேசி--வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சாதே.
.



5 comments:

ராஜ நடராஜன் said...

நான் காங்கிரஸின் வாரிசு அரசியலுக்கு எதிரானவன்.ஆனாலும் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் உரையாற்றியதை வரவேற்கிறேன்.காரணம்,ஏற்கனவே ராகுலுக்கு பேசுவதில் மெச்சூரிட்டி போதாது.கூடவே அவர் ஒன்றை சொல்லப் போக எதிர்க்கட்சிகள் திரிபு நிலையை உருவாக்குவார்கள் என்பதால் அவர் பாராளுமன்றத்தில் தனது கருத்தை வைத்ததே சரி.

மன்மோகன் சிங்,பிரணாப்,சிதம்பரம்,கபில் சிபல்,சல்மான் குர்ஷித்,ராகுல்,மனிஷ் திவாரி என இதுவரை ஜன் லோக்பால் சட்ட வரைவு பற்றிக் கருத்து தெரிவித்தவர்களின் மொத்த உருவத்தையும் பார்த்தால் புரியும் ஒன்று ஜன் லோக்பால் சட்டத்திற்கு எதிரானவர்கள் சோனியா காங்கிரஸ் என்பது.

பி.ஜே.பி,சோனியா காங்கிரஸின் கயிறு இழுக்கும் போட்டியில் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதமும்,உயிர் பற்றிய கவலையும் பின் தள்ளப்படுகிறதென்றே சொல்வேன்.

மதுரை சரவணன் said...

nalla alasall..vaalththukal

venu rajendran said...

Dear Mr.Sekar,

This will be the spark for BJP to come back to power

One of the speech written by a degraded mind and voiced by a person with no thinking
Congress can never support Annaji

Good
Regards
Raj

Anonymous said...

என்று முடிவுக்கு வருமோ இந்த அன்னா ஹசாரேவின் போராட்டம்?!

எஸ்.ஆர்.சேகர் said...

இத முடிச்சுட்டாருன்னு நினைச்சா--இன்னும் அஞ்சாரு ஐயிட்டத்த எடுத்துடுச்சே பெருசு--அதான் டேர்தல் சீர்திருத்தம்--ரைட் டு ரீகால்--இப்பிடி