Pages

Thursday, March 22, 2012

சிந்துபாத்தும் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையும்

சிந்துபாத்தும் ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையும்

தினத்தந்தியில் சிந்துபாத் தொடர் முடிந்தாலும்  முடியும் ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை முடிவுக்கு வராது போலிருக்கிறதே..

அப்படித்தான் நேற்றைய இன்றைய செயல்பாடுகள் தொடர்கின்றன..

இது தமிழர் பிரச்சினை என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டு போவதால் ஆந்திராவை தாண்டி டெல்லிவரை இதை என்னவென்று தெரிந்து கொள்ள பலர் தயாரில்லை எனும் சூழல்.

எதோ அமெரிக்க தீமானமாம்…ஜெனீவாவாம்…மனித உறிமை மீரலாம்..இலங்கை மீது கண்டன தீர்மானமாம்…அமெரிக்கா கொண்டுவரும் தீர்மான “ஷ்ரத்துக்களை “ “ மவுன மோகன் சிங் “ படித்துப்பார்க்கவில்லையாம்..ஆனாலும் ஆதரவு தெரிவிக்க தயாராம்..

பிரிட்டனின் “சானல்-4 “ போட்டுக்காட்டிய டி.வி. படங்கள் மனித இனத்தின் ரத்தத்தையே உறைய வைக்கிறது.காங்கிரஸுக்கும்..சோனியாவுக்கும்..மௌனமோகன் சிங்குக்கும் ரத்தம் ஓடுகிறதா என்பது தெரியவில்லை.

தான் கட்டிய கட்டடத்தில் நூலகம் வரவில்லையானால் “தீக்குளிப்பேன் “ என மிரட்டும் கருணாநிதி பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை திருத்தத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தரும் வாசகத்தை சேர்க்க ஏன் தயக்கம் காட்டினார்?..”பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் “ என்ற அவரின் ரெட்டை முகம்தானே இது..

சரி! அமெரிக்காவின் இந்த தீர்மானம் இலங்கை மனித உரிமை மீறல்களை கண்டிக்குமா?..இலங்கையின் ”தமிழினக்கொடூரன்”..ராஜபட்சே குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவாரா?
மனித உரிமைகளின் சர்வதேச அமைப்பு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்தி..அதை ஐ.நா. ஏற்று ராஜபட்சே உள்ளிட்ட மனித உரிமை மீறல் வாதிகளுக்கு தண்டனை கொடுக்குமா?

எந்த “பிஸ்கோத்தும் “ இல்லை.இல்ங்கை அரசே நடத்தும் விசாரணைக்குத்தான் இவ்வளவு “அலம்பல்களும்”..ஈரான் ஈராக்கில் அமெரிக்கா நடத்தும் மனித உரிமை மீரல்களுக்கு யார் தண்டனை கொடுபார்கள்.? என்பது வேறு விஷயம்..

அப்படியானால் இலங்கையிலுள்ள தமிழர்கள் ராஜபட்சே கையில் இன்றும் ..நாளை வேறு ஒரு பட்சேயோ..நாயகாவிடமோ சிக்கி “பரலோகம் ‘ போகவேண்டியதுதானா?அதுதான் அவர்கள் தலை விதியா?
காங்கிரஸும் சோனியாவும் தங்கள் தலைவர் கொலைக்கு இலங்கை தமிழர்களை மறைமுகமாக பழிவாங்கி வருகிறார்கள்..அதை தன்கையால் செய்ய முடியாது என்பதால் ஏற்கனவே தமிழர்கள் மீது “இனப்பகை “ கொண்ட ராஜ பட்சே மூலமாக செயல் படுத்தி வருகிறார்கள்..

அப்படியானால் காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு விடுமா?..பிஜேபி தமிழர் பிரச்சினையை தீர்க்குமா?..ஆம்..தீர்க்கும்..

எப்படி?—
மதுரையில் “டெசோ” மாநாடு தொடங்கி வல்லவன் வாஜ்பாய் தமிழினத்தின் மீது வைத்திருந்த பாசம்—நேசம் காரணமாக..1998—2004 ஆட்சி வரை அவர் ஆட்சி செய்தகாலத்தில் இலங்கை அரசு தமிழர்கள் மீது வன்முறையை நிகழ்த்த அஞ்சியது உலகறிந்த உண்மை.

தமிழக மீனவர்கள் மீது இன்று தாக்குதல் நடத்தும் இதே சிங்கள ராணுவம்..வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் தமிழக மீனவர்கள் மீது கைவைக்க நடுக்கியது என்பதும் வரலாற்று உண்மை.இதனால்
இலங்கை பிரச்சினை தொடர்ந்தால்..அதை அரசியலாக்கி தாங்களும் ஆட்சியில் தொடரலாம் என்ற திராவிட கட்சிகள் வாஜ்பாய் ஆட்சியில் வேறு “வேலை பார்க்க வேண்டியிருந்தது..

இலங்கை தமிழர்கள் அனைவரும் இந்துக்கள்..இதை இந்துக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதியாக எடுத்துச் சென்றால்..இந்தியா முழுதும் வெகுண்டெழும்..உலக இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஆதரிப்பர்.
மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அதை மலேசிய இந்துக்கள் பிரச்சினையாக எடுத்ததால்தான்..மலேசிய முஸ்லீம் அரசு பணிந்தது.அதே போல சிங்கள இலங்கை அர்சும் பணிய நாம் ஒன்று சேர்வோம்..கழங்களின் “போலி திராவிட தமிழ்” முகமூடியை கிழிப்போம்.

இந்தியாவில் 75 கோடி “குபேரர்கள் “—திட்டக்கமிஷன் அறிக்கை




உனக்கு என்ன “மரை கழன்று விட்டதா?’ என சிரிக்காதீர்கள்..மர கழன்றது உண்மைதான்..ஆனால் எனக்கல்ல..திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக்சிக் அலுவாலியாவிற்கும் அவரது தலைவர் “மண்” மோகன் சிங்கிற்கும்தான்.

இந்தியா ஏழைநாடு இல்லைதான்..பண்பாட்டில்..கலாச்சாரத்தில்..ஆன்மீகத்தில்..விஞ்ஞானத்தில் இந்தியா பணக்கார நாடுதான்.ஆனால் ஏழைகளே இல்லாத நாடில்லையே..
“மண்”மோகன் சிங் ஆட்சியில் மண்மூடிப்போன பொருளாதாரம் 65 சத இந்திய மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் கொண்டுபோனது…அந்த வறுமைக்கோடு எங்கே போடப்பட்டது தெரியுமா?
ஒரு நாளைக்கு நகர்வாசி ரூ.28 ம்..கிராம வாசி ரூ.22. ம் சம்பாதித்தால் அவன் வறுமை கோட்டிற்கு மேலாம்..இதுதான் “மண்” மோகன் சிங்கின் புதிய பொருளாதார கொள்கை.
நாள் பூரா 4 டீ சாப்பிட்டால் ( ஒரு டீ ரூ.7/=) பசி தீர்ந்துவிடுமாம்..சோனியவுக்கும் ராகுலுக்கும்..திக்விஜய் சிங்குக்கும்..கபில் சிபலுக்கும்..ப.சிதம்பரத்திற்கும் ஒரு நாளைக்கு ரூ 28/= கொடுத்துப்பார்ப்போம்..ஒரு வாரத்தில் இல்லை இல்லை..4 நாளில் செத்துப்போவார்கள்..இந்த ரூபாய்க்கு சாப்பிட்டால் பல் இடுக்கில்தான் போய் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வறுமையை குறை என்கிறோம் ..காங்கிரஸோ வறுமை கோட்டை குறைக்கிறேன் என்கிறது.
ஹய்யாம்..ஜாலி..ஜாலி…காங்கிரஸ் கணக்குப்படி நம்நாட்டில் 75 கோடி பேர் பணக்காரகள்..
அதான் தினசரி கூலி ரூபாய் 22 சம்பாதிப்பவர்கள்..

Friday, March 9, 2012

(அரசின்).. வறுமையை ஒழிக்க--- ”குடி”



கலால் வரித்துறையினர் “திடீர்..திடீரென” ரெயிட்..போகின்றனர்..எங்கே?--”
டாஸ்மாக்” கடைகளுக்கு...ஏன்?--போலிசரக்கு விற்கிறார்களா..என சோதிக்க..
இந்த சோதனைகளுக்கு காரணம் என்ன?-
-”சரக்கு “ விற்பனை குறைந்து வருவதால்..

கலக்டர் ஆபீஸ்களில் திடீர் திடீர் என கூட்டங்கள்..
கலால்துறை...ஓட்டல்..கிளப் வாலாக்கள்..கூடிக்கூடி பேச்சு..
ஏதாவது “காமன் வெல்த் கேம்ஸ்”க்கான முன்னோட்டமா?..இல்லை..பின்னர் வேரென்ன..?..
ஓட்டல்..கிளப்....பார்களில் “சரக்கு “ விற்பனையை அதிகப்படுத்த..அரசின் அதி  அவசர ஆலோசனைக் கூட்டங்கள்தான் இவை..

இந்த அக்கறையை மின்சார உற்பத்தியில் காண்பித்தால் மின்வெட்டு தீருமல்லவா?--தொழில் வளம் பெருகுமல்லவா?--
காசு பெருத்தால் டாஸ்மாக் கொழிக்குமல்லவா...
இதுகூட தெரியவில்லையே இந்த அரசுக்கு..

பிளஸ் 2 தேர்வும்..மூன்றாம் உலக சண்டையும்



கடந்த புதன் கிழமை முதல் தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின..”வரலாறு காணாத “ நியூஸ் கவரேஜ்”  இதற்கு..

1.பரிட்சை எழுதும்போது செய்யவேண்டியதென்ன?---மூத்த ஆசிரியை “டிப்ஸ்”

2. ஹாலுக்குள் நுழைந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?--ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் குறிப்புக்கள்..

3. பரிசை நாட்களில் உட்கொள்ளவேண்டிய உணவுப்பழக்கங்கள்..என்ன?--டயட்
டீஷியனின் அறிவுரை..

4. இன்னும் மாணவர்களை ஊக்கப்படுத்த “அள்ளி இரைக்கப்படும்”--குழப்பக் கரைசல்கள்--

5. மின்வெட்டால் ஏற்பட்ட பாதிப்புக்களை போக்க எத்தனை ஜெனரேட்டர்கள்--எத்தனை செண்டர்கள்--எத்தனை ஆசிரியர்கள்--காப்பி அடித்தால் பிடிக்க பறக்கும் படைகள்..என ஏராளமான “புள்ளி விவர அவலங்கள்”

6. அரசு அலுவலர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை.--.”.பிளஸ் 2 அப்பாக்கள்”--..20 நாட்கள் லீவு போட்டுவிட்டு தன் குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்யும் “திரைமறைவு  காட்சிகள்”..

”தேர்வுகள் “ --ஏன் “டென்ஷனை “ உண்டாக்கும் “உணர்வுகளாக” மாற்றப்பட்டு வருகின்றன ?
“செய்திகள்” என்ற பெயரில் “மீடியாக்கள்” ஏன் அவசியமற்ற புள்ளிவிவரங்களை “கடித்து துப்புகின்றன” ?

எப்போதும் நடக்கும் சாதாரண நடப்புக்களை..செய்திகளாக்கி இப்படி “இறக்கை கட்டி “ பறக்க விட வேண்டுமா?..
இப்போது என்ன “ மூன்றாம் உலக சண்டையா நடக்கிறது” ?

Saturday, February 25, 2012

என்கவுண்டர்களும் ...எதிர்ப்புக்களும்



”பாதுகாப்பு என்பது பகல் கனவாகிவிட்டதா
போலீஸ் எனபது பொறுப்பற்றதாகி விட்டதா
மனித உரிமைகள் மாசுபட்டுவிட்டதா
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதா”

சென்னையை சுற்றியுள்ள இரண்டு வங்கிகளில் கொள்ளை அடித்த வடமாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்களை போலீஸ் போட்டுத்தள்ளியுள்ளது..

இதை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் ஒலித்தவண்னம் உள்ளது.

“தவறுகளை முளையிலேயே கிள்ளி எரிந்தால்தான் மற்றவர்களுக்கு தவறு செய்யும் எண்னமே வராது..அரபுநாடுகளிலுள்ள கடுமையான தண்டனைகள்தான் அங்கு குற்றங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது.”.என்கின்றனர் இதை ஆதரிப்போர்..

இதை எதிர்ப்போர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்...”தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும் எனபதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.அதை முறையாக விசாரித்து நீதிமன்றம் தான் தண்டிக்கவேண்டும்..எனகவுண்டர் மூலம் போலீஸ் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.”.என்கின்றனர்..

இப்படி விவாதங்கள் நீண்டுகொண்டே போனாலும் இதற்குள் பொதிந்திருக்கின்ற விஷயங்கள்தான் என்ன?

வங்கிகள் கிளைகள் விஸ்தரிக்கப்படுகிறது..தனியார் நகை..பணம்..அடகுக்கடைகள்..புற்றீசல்போல் பெருகிவருகிறது..

தங்கவிலை வானத்தை தொட்டாலும்....பெரிய குழுமங்கள் ஊர்தோரும் பிர்மாண்டமான சைஸ் கடைகளை திறந்து வருகிறது..

சென்னையை போன்ற “மெகா சிட்டியின் “ அதிரும் பொருளாதார வளர்ச்சி...கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி ஈர்க்கப்படும்  மக்கள் கூட்டம்..இதனால் போலீஸ் ஸ்டேஷனின் எல்லை விரிவடைந்து வருகிறது...போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய துறைகளின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது..ஆனால் போலீஸ் ஸ்டேஷனின் எண்ணிக்கையோ..போலீஸ்காரர்களின் எண்ணிக்கையோ இதேவைகளின் அடிப்படையில் உயரவில்லை.

சரி..ஒரு குற்றம் நிகழ்ந்து விட்டால்..அதுவும் உடனடியாக குற்றவாளிகள் பிடிபடாவிட்டால்...போலீஸுக்கு கொடுக்கப்படும் “நெருக்கடிகள்”..அதுவும் பத்திரிக்கைகள்..ஊடகங்கள்..எதிர்கட்சிகள்..தொடுக்கும் விமர்சனங்கள்...போலிஸின் பணிகளை விரைவுபடுத்துவதற்கு உதவுவதில்லை..மாறக சோர்வடையச் செய்கிறது.

குற்றச்செயல்களுக்கான காரணங்கள் பலப்பல..பாதுகாப்பு குறவினால் நிகழும் குற்றங்களுக்கு போலீஸை மட்டுமே பொறுப்பாக்க முடியாது..அத்தனை பேருக்குமே போலீஸ் பாதுகாப்பு தரமுடியும்... எனபது நடைமுறை சாத்தியமல்ல..

வங்கிகளும்..வட்டிக்கடைகளும்.. நகைமாளிகைகளும்..தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் குற்றம் நடந்த இடங்களில் பாதுகாப்பு வசதிகளை ( CC.TV...BURGLAR ALARM...ARMED SECURITY GUARD ETC.) இவர்கள் செய்துகொள்ளவில்லை..என்பதும் ஒரு செய்தி..

சென்னை என்கவுண்டரில் ஏராளமான “முரண்பாடுகள்” இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன..அவை என்னவாக இருந்தாலும் அரசே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது..ஒரு ஆறுதல்..
..
ஒரு ஜனநாயக நாட்டில் போலீஸே சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு..தீர்த்துக்கட்டுவதும்...கொல்லப்பட்டவர்கள் மீது கண்டுபிடிக்கப்படாத மற்ற கேஸ்களை போட்டு..’”ஃபைலை குளோஸ்” செய்வதும்..ஆரோக்கியமான செயலகள் அல்ல.

எனகவுண்டரை ஆதரித்து பொதுமக்கள் சொன்ன கருத்துக்கள் ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை..ஆனால், வழக்குகளில் விரைவான தீர்ப்புக்கள் மற்றும் தண்டனை இல்லாததும்.....குற்றவாளிகள் தப்பிப்பதை.. பார்த்துப்பார்த்து வெறுத்துப்போன மக்களுக்கு ஏற்பட்ட கோபம்தான் இந்த குரல்கள்...

எங்ஙெங்கு காணினும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போலிஸ் பந்தோபஸ்து கோரப்படுகிறது..இப்படி போலீஸ் பாதுகாப்பை நம்பியே ஒரு சமூகம் வாழ்முடியுமா? என்பதும் சிந்தனைக்குரிய கேள்வி.


மனித உரிமைக்கு ஆதரவான குரல்.வரவேற்கப்படுகிறது..அது குற்றவாளிகளை பாதுகாக்க பயன்படாமல் இருக்கும் வரை..
போலீஸ் செயலபாடுகளில் உள்ள குறைகள் களையப்படவேண்டும்..
குற்றவாளிகள் தப்பிக்காமல்..விரைவாக தண்டனை பெற்றுத்தரவேண்டும்..
“நமக்கு நாமே” பாதுகாப்பை  ஏற்படுத்தி நம்மையும்..சமூகத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்...

அப்போதே என்கவுண்டரும் நடக்காது..எதிர்ப்பும் கிளம்பாது..

Thursday, February 23, 2012

அறியாமல் இழக்கும் பிர்மாண்டங்கள்



அமெரிக்காவின் வாஷிங்கன் டி.சி...ரயில் நிலயம் ..காலை 9.00 மணி..”பீக் ஹவர் “ என்னும் கூட்ட நெரிசல் நேரம்..

ஒரு இளஞர் வயலினை எடுத்து மிக அருமையான பாடல் ஒன்றை வாசிக்கிறார்.அது அமெரிக்காவின் டாப் டென் பாடல்களில் ஒன்று..

கூட்டம் சட்டை செய்ததாக தெரியவில்லை..ரயிலை பிடிக்க அவசரமாக ஓடிய வண்ணமே இருந்தனர்..

3வது நிமிடம் ...தூரத்திலிருந்து ஒரு அம்மணி.. ஒருடாலரை வீசி எரிந்தார்..7வது நிமிடம் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு..வந்த ஒருசிறுவன் ..வைத்தகண் வாங்காமல் இசை பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான்..அவனது அம்மா தரதரவென இழுத்துக்கொண்டு போனதுதான் மிச்சம்.

10வது நிமிடம் ஒருவர் வந்தார்..இசையை ஒருநிமிடம் கேட்டார்.வாட்சை பார்த்தவண்ணம் வேகமாக நடையை கட்டினார்..
 மொத்தம் 45 நிமிடம்.. 7 டாப் பாடல்களை பாடினார்..1100 பேர் கடந்து சென்றனர்..முடிக்கும் போது கைத்தட்டல் இல்லை ஆரவாரம் இல்லை..பாராட்ட யாருமே இல்லை..

அந்த கலைஞ்னின் பெயர் ஜொஹுவா பெல்..அமெரிக்காவின் மிகப்பிரபலமான இசைஞன்...அவன் வாசித்த  இசைக்கருவியின் மதிப்பு 35 லட்சம் டாலர்..2 நாளைக்குமுன் போஸ்டன் நகரத்தில் அவன் நிகழ்த்திய நிகழ்ச்சி “ஹ்வுஸ்புல்” ஆனதுமட்டுமல்ல ஒரு டிக்கட் விலை 100 டாலர்..

மக்களுடைய சமூக கண்ணோட்டம்---ரசனை மற்றும் முன்னுரிமை பற்றி அறிய ...அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை “வாஷிங்டன் போஸ்ட்” ஆய்வுக்காக நடத்திய ஒரு சாம்பிள் தான் இந்நிகழ்ச்சி.

இதுபோல எத்தனையோ நல்ல விஷயங்கள்--இதமான ...வாழ்க்கைக்கு தேவையான... விஷயங்களை நாம் தாண்டிப்போகிறோம்..அல்லது நம்மை வை தாண்டிப்போகிறது..

.நாம் அறியாமலே...நம்மை அறியாமலே..... நாம் இதை அனுபவிக்காமல்... இழக்கிறோம்.....

 இயந்திரமாக வாழும் ........மரத்துப்போன....பழக்கத்தாலே.....


Sunday, February 19, 2012

சோனியா கப்பலுக்கு சோனியாவே சிறையா?—சிரிப்புத்தான் வருகிறது..




இந்திய மீனவர்கள் இருவரை  கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற இத்தாலிய எண்ணெய் கப்பல் “என்ரிகா லெக்ஸி”..சிறை (….இல்லை..இல்லை… மரியாதையாக அழைத்து வரப்பட்டு ) பிடிக்கப்பட்டு கொச்சி துறைமுகத்துக்குள் கொண்டுவரப்பட்டுரிக்கிறது..



செய்தியை படித்தவுடனே சந்தேகப்பட்டேன்..இலங்கை காரனையே ஒன்றும் செய்யமுடியாத நாம்..இத்தாலிய “காட்டுராணி” சோனியா மெய்னோ நம்மை ஆள்கிறபோது..இத்தாலிய கப்பல் சிறை பிடிப்பா?—சிரிப்புத்தான் வந்தது..



இந்திய கடற்படை அதிகாரியின் வேகவேகமான அறிக்கை…புத்திசாலித்தனமாக இத்தாலிய கப்பலை துறைமுகத்துக்கு கொண்டுவந்ததாக பேட்டிகள்…”இது மிருகத்தனமான கொலை”—என கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சண்டியின் அறிக்கை..



கடல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன---என சோனியாவின் அடிவருடிகள் பாதுகாப்பு மந்திரி அந்தோணியும் கப்பல் மந்திரி வாசனும் பேட்டிகள்..தீவிர நடவடிக்கையில் இறங்கிவிட்டோம்—என எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு…

கப்பல் கைது செய்யப்பட்டுவிடும்..சுட்டவனுக்கு தண்டனை கிடைத்து விடும் ..நீதிதேவதையே உனக்கு நன்றி..என சொல்லவாயெடுத்தபோது…சூது வெளியெ தெரிய ஆரம்பித்தது..



இவ்வளவு வேகமாக காங்கிரஸ்காரன் பேசுகிறானே…இந்தியாவையே இத்தாலிகாரியிடம் அடகுவைத்த பிறகு ஒரு “ஜுஜுபி” கப்பலை கைது செய்ய நாம்மாள் இவ்வளவு பரபரப்பு காட்டுகிறானே என்ற சந்தேகம் மட்டும் தொடர்ந்து மனதை வாட்டிக்கொண்டிருந்தது..

தனது குடும்ப நண்பர் கொள்ளைக்காரன் “குவட்ரோச்சியை” விடுவித்து இத்தாலிக்கு அனுப்பிவைத்த சோனியாவாவது கப்பலை கைது செய்வதாவது…என்று நினைத்தது உண்மையாகிவிட்டது..

கப்பலை விடுவிக்க காரணம் கண்டுபிடித்து விட்டர்கள்…இத்தாலியன் ..இந்திய மீனவர்களை சுட்டது “இந்திய கடல் எல்லையில் “ இல்லையாம்..அதாவது 12 கடல் மைலகளுக்குள் இல்லையாம்..

இந்தியர்கள் சுடப்பட்டபோது இத்தாலிய கப்பல் 18முதல் 20 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்ததாம்..அப்பாடா …சூப்பர் காரணம் கண்டு பிடித்து விட்டார்கள்..இந்திய சட்டம் அங்கு செல்லாதாம்.. இனி விடுதலைதான்



…காட்டுராணிக்கு ஜெ…காங்கிரஸுக்கு ஜெ…இத்தாலிக்கு ஜெ…