Pages

Friday, June 29, 2012

இதய வலி—ஒலி—கேட்கிறதா?—இனியே நீ அரசன்..

இதய வலி—ஒலி—கேட்கிறதா?—இனியே நீ அரசன்..

அந்த சீன தேசத்து மஹாராஜா…மகனை சிறந்த மன்னனாக்க..தன் “ஜென் குரு” விடம் அனுப்பிவைத்தார்..
ஆஸ்ரமத்துக்குள் நுழைந்த இளவரசனை ஓராண்டு காட்டிற்கு அனுப்பிவைத்தார் “ஜென் குரு”
ஆண்டு ஒன்று முடிந்த பின்பு ஆஸ்ரமத்துக்குள் நுழைந்த இளவரசனிடம் “அனுபவங்களை சொல் “ என்றார் “ஜென் குரு”
நான் காற்றில் அசையும் மரத்தின் ஓசையை  கேட்டேன்..பறவைகள் எழுப்பும் ஒலியையும் வண்டுகளின் ரீங்காரத்தையும் கேட்டேன்…உயரத்திலிருந்து விழும் நீர் வீழ்ச்சியின் ஓசையை கேட்டேன். என்றான்..
போதாது ..இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்..மீண்டும் ஓராண்டு கானகத்தை தழுவு என்றார்.என்றார் ஜென் குரு
.
ஓராண்டும் ஓடிற்று..மீண்டும் திரும்பிய இளவரசனை குரு பார்க்க இளவரசன் சொன்னான்…….
பூக்கள் மலரும் போது விரியும் இதழ்களின் ஒலியை நான் உணர்ந்தேன்…
காலைக்கதிரவனின் வெப்பத்தால் சூடாகும் பூமியின் வாசத்தை என்னால் நுகர முடிந்தது..
இரவில் பெய்த பனியால் சுற்றுண்ட புல் நீரை உறிஞ்சும் ஒலியை என்னால் கேட்க முடிந்தது..என்றான்.
சரி..உனக்கு தகுதி வந்து விட்டது ..நீ..நாடு திரும்பலாம் என்றார்..

இது எப்படி தகுதியாகும் என்று கேட்ட மற்றொரு சிஷ்யனுக்கு பதில் சொன்னார் ஜென் குரு…
மக்கள் தங்கள் கவலைகளை –கஷ்டங்களை தெரிவிக்க ஆர்ப்பாட்டங்கள்…போராட்டங்கள்…நாடகங்கள்…ஊடகங்கள்..என பல அம்சங்கள் உள்ளது.
இவைதான்..புறக்காதால் சப்தம் கேட்ட முதலாண்டு அனுபவங்கள்..

குடிமக்களின் கவலைகளை தெரிவிக்க இயலாத போதும்..அவன் இதயத்திலுள்ள வலியின் ஓசையை..மனதிலுள்ல கவலையின் வாசத்தை உணர்பவனே அரசன்.
அந்த சக்தியை இளவரசன் இப்போது இரண்டாமாண்டு அனுபவத்தில் பெற்று விட்டான் .. என்றார் ஜென் குரு.

இன்றுதான்…இங்குதான்..போராட்டங்களும்..தீவைப்புக்களும்..கோர்ட் தீர்ப்புக்களும் கூட ஆட்சியாளர்களின் செவிகளை எட்டுவதில்லையே..காதுகள் செவிடாகிவிட்டனவே..

பயிரை மேயும் வேலிகள்


ஆரோக்கியத்தை சிதைக்கும் ஆஸ்பத்திரிகள்
சட்டத்தை சீர்குலைக்கும் வக்கீல்கள்
கல்வியால் வயிறுவளர்க்கும் கல்லூரிகள்

சுதந்திரத்தை தூக்கிலிடும் ஆட்சியர்கள்
செய்திகளை சிதைக்கும் “சேனல்கள்”

ஒழுக்கத்தை பலிகொடுக்கும் மதவாதிகள்
பொருளாதாரத்தை சீரழிக்கும் வங்கிகள்
இத்தனையும் பார்த்துகிட்டே இருக்கோம்

பார்த்துகிட்டே வாழ்ந்துகிட்டே இருக்கோம்
மரத்துப்போச்சு மறந்துகிட்டே வாழ்வோம்..

Friday, June 22, 2012

ஜனாதிபதி தேர்தல் படும்பாடு


சரித்திரத்தை மறந்துவிடுவது நமக்கு சகஜமாக போய்விட்டது.
சரித்திரத்தை மறக்கடிப்பதும் காங்கிரஸுக்கு சகஜமாய் போய்விட்டது..

ஒவ்வொருமுறையும் பழைய சரித்திரத்தை முறியடிக்கும்--
புதிய சரித்திரத்தை உண்டாக்குவதால் மக்களுக்கும் மறதி அதிகமாய் விட்டது..

ஜனாதிபதி தேர்தலும் அப்படி ஆகிவிட்டமாதிரி உள்ளது..

பாஜகவிற்கு எதிராக பேசப்படுவது
ஒன்று..பாஜகவில் ஜனாதிபதி வேட்பாளருக்கு பஞ்சம்….
ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்…
கையை பிசைகிறார்கள்…
இதில் கடைசி ஒன்று மட்டும் உண்மை…
ஆம்…”கை”’யை பின்பக்கம் திருப்பி ஒரேடியாக உடைக்க போகிறோம்..
அதனால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல் தான் பல அவதூறுகள்.

பாஜகவில் ஜனாதிபதிக்கோ…பிரதமர் பதவிக்கோ ..
வேட்பாளர்கள் கொட்டிக்கிடக்கிறார்கள்..
அதனால் போட்டி கடுமை..அதனால்.தேர்வு தாமதம்..

காங்கிரஸில்-- சோனியா மட்டும்தான்…ராகுல் மட்டும்தான்..
வேறு யாராவது கையை தூக்கினால்…”கை” யே கையை முறிக்கும்.

அப்படியும் இப்படியுமாக அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி ..
எப்படி அறிவிக்கப்பட்டார்…எவ்வளவு நாள் கடந்தது…
எவ்வளவு இழுபறி..எவ்வளவு எதிர்ப்பு..

இப்போதுள்ள ஜனாதிபதி பிரதிப பாட்டீல் எப்போது அறிவிக்கப்பட்டார்?..
கடைசி நேரத்தில் திடீரென அல்லவா வந்து குதித்தார்..
இது மறந்து போச்சே..

காங்கிரஸின் அதிகார பூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து
அதன் பிரதம மந்திரியே…இந்திரா காந்தியே..…வி.வி. கிரியை ஜெயிக்க வைத்தாரே..
இது மறந்து போச்சே.

ஜனதிபதி போஸ்ட் என்ன சோனியா வீட்டு துணி தோய்க்கும் போஸ்ட்டா..ஆராயாமல் அறிவிக்க..
ஆகவேதான் பாஜக அலசி ஆராய்ந்து ..நல்லவரை..வல்லவரை..எளியவரை..வலியவரை…இதுவரை பிரதிநித்வம் கொடுக்கப்படாத வடகிழக்கு மாநிலத்தவரை……ஒரு பழங்குடி இனத்தவரை பி.எ.சங்மாவை அறிவித்துள்ளது..

காங்கிரஸ் முக்கி முனகி வேட்பாளராக அறிவித்த முகர்ஜி மேல்
இப்போது தோண்ட தோண்ட ஊழல் பூதம் ஒவ்வொன்றாக வெளிவருகிறது..
நேரு குடும்ப வீட்டு வேலைக்காரர்..அல்லது ரப்பர் ஸ்டாம்ப்..
அல்லது ஊழல் பெருச்சாளி..இவைதானே காங்கிரஸில் வேட்பாளர்களின் தகுதி…

முகர்ஜி காங்கிரஸ் கலாச்சாரத்தை காப்பாற்றுவாரா....
அல்லது சோனியாவுக்கு தண்ணி காண்பித்து இத்தாலிக்கு ஓட்டுவாரா…
வேடிக்கை ..பார்ப்போம்..

Wednesday, June 20, 2012

மதவாதம் வேகுமா?


கல்யாணத்தில் மாப்பிள்ளை சைடில் சொந்தக்காரர்…..அதுவும் தூரத்து……..வெகுதூரத்து …..சொந்தக்காரர் …சாப்பாட்டு பந்தியில்..உட்கார்ந்து கொண்டு அரிசி வேகவில்லை என்பார்…”திருமணம்…ரணகளம்”-- ..ஆகும் ..சிலநேரம் திருமணம் நின்றுகூட போகும்…இது அந்தக்காலம்

இன்று.. தேஜ.கூட்டணியின்..தூரத்து சொந்தக்காரார்…--பழைய கால கல்யாண ஸ்டைலில்…… பிஹார் முதல்வர்..நித்தீஷ் குமார்… புழுத்துப்போன மதவாத அரிசியை எடுத்து வந்து ..”வேகவில்லை”-- ..என கூப்பாடு போடுகிறார்..இந்தமுறை கல்யாணம் நிற்காது..மாப்பிள்ளை நரேந்திர மோடி இந்தியாவின் அடுத்த பிரதமராக மாலை சூடுவார்..

பாழடைந்து போன பிஹாரில்..நிதீஷ்.. முழுத்திறமையும் காட்டி, அதை மேலே கொண்டுவருவதை விட்டுவிட்டு…உலக பணக்காரன் நரேந்திர மோடியோடு போட்டி போட நினைக்கிறார்..

ஆம்..போட்டிபோட..நினைக்கக்கூட…கனவுகாணக்கூட முடியாத தூரத்தில்தான் நித்தீஷ்குமார் இருக்கிறார்.

இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை..நரேந்திர மோடிக்கு இந்தியாவின் எந்த மாநில முதல்வர்களும் இணையில்லை(…வளர்ச்சியில் …முன்னேற்றத்தில்….)
ஏன் மத்திய அரசுகூட இணையில்லை..

மோடி அரசாங்கத்தின் பொருளாதார …விவசாய வளர்ச்சி…மொத்த இந்தியாவின் வளர்ச்சியின் சதவீதத்தை விட அதிகமாக உள்ளது..

இப்போது சொல்லுங்கள்…மோடி என்கிற “வளர்ச்சியின் குபேரனை”---”நிர்வாகத்திறமையாளன்” என்கிற பணக்காரனை…குஜராத்துக்கு வெளியே இந்தியாமுழுவதற்கும் தலைவனாக்குவது தவறா?

பொருளாதார வளர்ச்சியில் உலகமே பயந்து நடுங்கும் சீனாவோடு பொருளாதார வளர்ச்சியில் போட்டிபோடும் மோடியை இந்தியாவிற்கு பிரதமராக்குவது தவறா?

பிஹாரிலுள்ளவர்களை எல்லாம் இந்திய முழுவதும் கையேந்த வைத்துள்ள நித்தீஷ் குமாருக்கு மோடி மீது அவதூறு பேச என்ன தகுதியுள்ளது?

மதவாதம் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது..புதைத்த பிணத்தை தோண்டியெடுத்து காங்கிரஸும் நித்தீஷும் அழுகிறார்கள்.

இந்த துர்நாற்றம் பிடித்த அழுகிய பிணத்தை..சுமந்து வருபவர்களை இந்திய மக்கள் ஓட ஓட விரட்டி வருகிறார்கள்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வளர்ச்சியை மைய்யமாக வைத்த தேர்தல்..

பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் இந்தியாவை தூக்கி நிறுத்தும் வல்லவன் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்..
வளர்ச்சியின் நாயகன்..இந்தியாவை ..வாழவைக்க…வல்லரசாக்க..வல்லமை படைத்த …மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமர்..

இதை தடுக்க…எந்த “”குமாராலும்….சுமாராலும்…காந்தியாலும்…சாந்தியாலும்” முடியாது..

Tuesday, June 5, 2012

“ஃபுல்”அடிக்காமலே நான் “ஃப்ளாட்”காமசூத்திரம் படித்ததில்லை
கஜுராஹோ போனதில்லை
டாஸ்மாக்கில் நுழைந்ததில்லை
சாராயத்தை சுவைத்ததில்லை
நாவில் நர்த்தகிக்கும் செர்ரியும்
சுவைக்கத் துடிக்கும் இதழ்களும்
“ஃபுல்”அடிக்காமலே என்னை
“ஃப்ளாட்” ஆக்கியதடி பெண்ணே