Pages

Monday, December 30, 2013

போலிசை கைது செய்

போக்குவரத்து போலீசாரின் "அறிவு கெட்டத் தனத்தால்" ( கொஞ்சம் மரபு மீறிய சொல்தான்..ஆனாலும், கோபத்தின்   வெளிப்பாடு)..உளுந்தூர் பேட்டையை  அடுத்த ஷேக் ஹுசைன் பேட்டை அருகே 7 அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாகி இருக்கிறது..

இதை எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை..இப்படி " மடத்தனமாக" ( மீண்டும் மரபு மீறிய சொல்) போக்குவரத்து பொலிசார் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல..

சாலைகள் ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு சொத்து போலவும், 80 கி.மி, 100 கி.மி வேகத்தில் வரும் வாகனங்களை எந்த முன் தடுப்பு நடவடிக்கைகளும், ( வேகத்தடை--செக் போஸ்ட் தடை போல . )இல்லாமல், இடம் பொருள் ஏவல் பாராமல், திடீரென கையை காட்டி, ஓரங்கட்ட சொல்வதும், அதை எதிர் பாராத பின்னால் வரும் வாகனங்களில் உள்ளோர் பரலோகம் போவதும், தொடர்ந்து கொண்டிருப்பது நெஞ்சம் கனக்க  வைக்கிறது,

போக்குவரத்து பொலிசாரின் "வாகனப்பரிசொதனை" என்கிற லஞ்ச நாடகத்தினால், இதுவரை எத்தனையோ, டாக்டர்கள், வக்கீல்கள், கலைஞர்கள், சிறார்கள், பெண்கள், அரசுஅதிகாரிகள், அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்..இரு
ந்தும்கூட போலிஸ் மேலிடத்திலிருந்த, இப்படி  செய்யாதீர்கள்" ..பரிசோதனை இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள், என்ற எந்த வழிகாட்டுதலும், வந்ததாக தெரியவில்லை..
பொலிசார் எந்த காலத்திலும், சொந்த புத்தியோடு செயல் பட்டதாக தெரியவில்லை..வழிகாட்டுதல்கள் வந்தாலாவது மாறுவார்களா? என்கிற ஆதங்கம்தான் இப்படி எழுத துண்டியது..

நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளிலும்,வாகன பரிசோதனைகளுக்கு சரியான இடம் தேர்வு செய்யாமல் , முக்குகளில் மறைந்து நின்று, சினிமா வில்லன் போல திடீரென் தோன்றி, கையைக்காட்டி நிறுத்தி, சாலைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பெரும் இடையுறு செய்து, முடிந்த அளவுக்கு விபத்து ஏற்படுத்தும் பொலிசாரின் செயல்களை யார் தடுப்பது?--அந்த "மரமண்டைகளுக்கு" ( மீண்டும் மறு மீறிய சொல்)யார் புத்திமதி சொல்வது?--

நேற்று முன்தினம் உளுந்தூர் பேட்டை விபத்து, நெஞ்சை உலுக்குகிறது..நெடுஞ்சாலையில் அதிவேக மாக வந்த வாகனத்தை மடக்கி நிறுத்தி, தீவிரவாதிகளை கைது செய்யப்போகிறார்களா?--கொள்ளையனை பிடிக்கப்போகிரார்களா?--மணல் லாரியிலிருந்து 100 ரூபாய் லஞ்சம் வாங்க கையை நீட்டி, 7 அப்பாவி உயிர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே ..

இந்த உயிர்பலிக்கு காரணமான பொலிசார் மிது கொலைவழக்கு போடவேண்டும்..ம்ம்ம்..ஹூம்...ரொ
ம்ப கோபப்படுகிறேன் நான்.----.ஒரு பிஸ்கோத்தும் நடக்காது.."மெமோ" கூட கொடுக்கமாட்டார்கள்..
இதற்க்கு பின் என்னதீர்வு?--ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்...பிளாக்கில்..."பொங்
கி வழியலாம்"..அக்கம் பக்கம் பார்ப்பவரிடம் "குமுறலாம்"'..சொந்தக்காரகளாக இருந்தால் "போலிஸ் ஸ்டேஷனை முற்றுகை " இடலாம்..
வேறென்ன செய்யமுடியும்..எத்தனை "புலம்பினாலும்" எந்த போலீசுக்கும் "புத்தி வரப்போவதில்லை"..எந்த மேலதிகாரியும் ஆணை இடப்போவதில்லை..

நம் தலைவிதி இவ்வளவுதான்...பிரேக் பிடிக்காத  வண்டி  ,  போலிஸ் மேல் மோதினால்தான் திருந்துவார்களோ ?

Friday, December 27, 2013

குப்பையுடன் கூட்டணி சேர்ந்த “துடைப்பம்”


"ஊழலை கூட்டி தள்ளுவேன் "--என "துடைப்பத்தை " எடுத்தார்...அண்ணா ஹஜாரே --ஊழல்--- குப்பைகளை கூட்டி தள்ளும் முன்பே--- துடைப்பத்தை பிடுங்கிக் கொண்டு  ஓடிவிட்டார் ஹஜாரே சிஷ்யர் அரவிந்த் கேஜ்ரிவால்.
.
துடைப்பத்தை காட்டி --ஊழல் குப்பைகளை கூட்டித் தள்ளுவேன்-- என சூளுரைத்து டெல்லி மக்கள் வாக்குக்களை பெற்று, பாஜகவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் கேஜ்ரிவால்..

32 இடங்களை பிடித்த பாஜக மேஜாரிடிக்கு 4 இடங்கள் குறைந்ததால், "ஆட்சி அமைக்க போவதில்லை " என சொல்லியத்தால், 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டது.

10 நாள் அவகாசம் கேட்ட கேஜ்ரிவால், இரண்டு நாளில் முடிவு சொல்வதாக கூறி, ஒரே நாளில் ஆட்சி அமைக்கிறோம் என்று முடிவை வெளியிட்டார்..

நிபந்தனை அற்ற ஆதரவு---நிபந்தனையுடன் கூடிய ஆதரவு--என்று காங்கிரஸ் மாற்றி மாற்றி சொன்னாலும், கடைசியாக "வெளியிலிருந்து" ஆதரவு தந்ததால்,  கேஜ்ரிவால் வரும் 28 ந்தேதி டெல்லி முதல்வராக முடிசூடப்போகிறார்..

"காங்கிரஸ் என்னும் ஊழல் குப்பையை அகற்றுவோம் "--என்று சூளுரைத்த ஆம் ஆத்மியின் "துடைப்பம்" --ஆட்சியை பிடித்தது, ஆனால் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாதததால், 8 சீட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் "குப்பையை" கூட்டு சேர்த்துக்கொண்டது..

ஆக குப்பையை அகற்ற களமிறங்கிய துடைப்பம் கடைசியாக குப்பையுடனேயே கூட்டு சேர்ந்து கொண்ட அவலம் டெல்லியில் நடந்தது.---இது ஒரு புறம்..

இந்த ஆம் ஆத்மி துடைப்பம் உண்மையிலேயே துடைக்குமா/..அல்லது பேப்பரில் இருக்கும் விளம்பர துடைப்பமா? --பார்ப்போம்..

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். வரூமானவரி  அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால், ஊர் ஊர் ஆக மாறிச்செல்ல வேண்டிய பதவியில் இருந்தாலும், அன்னை சோனியாவின் அருளால், எந்த ஊருக்கும் மாறுதல்-- ”ஆக்காமல்”,-- டெல்லிக்குள்ளேயே மாறுதல் ஆகாமல் தொடர்ந்து இருந்தார்..ஆனால் அந்த சோனியாவையே எதிர்த்து பின்னாளில் போராட்டம் நடத்தினார்..

"காங்கிரஸ்--பாஜக எதுவுடன் கூட்டணி சேரமாட்டேன்" என வாக்குறுதி அளித்தார்..ஆனால் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார்..

டெல்லி போலிஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டது..அதன் அனுமதியில்லாமல் ஒரு போலிஸ் காரரைக் கூட மாற்றும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை. இதை நன்றாக.தெரிந்த ஐ,ஆர்.எஸ். அதிகாரி கேஜ்ரிவால், "போலிஸ் சீர்திருத்தம் " கொண்டுவருவேன் என்று  கூசாமல் பொய்சொல்கிறார்..

ஜன்லோக்பால் மசோதா மட்டுமல்ல எந்த சட்டமும் இயற்றுவது சட்டமன்றம்தான்..இது தெரிந்த கேஜ்ரிவால், மக்கள் மன்றத்தில்சட்டமியற்றுவேன் என அடம் பிடிக்கிறார். 

காங்கிரசும் பாஜகவும் பணக்காரர் கட்சி என்று சொல்லும் கேஜ்ரிவாளின் கட்சியில் 28 க்கு 12 எம்.எல்.ஏ க்கள் கோடிஸ்வரர்கள்..

"மக்களை மேலும் பிச்சைக்காரகள் ஆக்கும்  மற்ற அரசியல கட்சிகளுக்கு நான்தான் மாற்று" --என்று தேர்தல் கோஷம் எழுப்பினான்ர். ஆனால் மக்களை கையேந்த வைக்கும் -- இலவச மின்சாரம்--இலவச குடிநீர் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்..

மொத்தத்தில் ஆம் ஆத்மி என்பது காங்கிரசின் "பி" டீம் என்பது வெட்டவெளிச்சமானது..

குப்பையை கூட்டி எரிய வேண்டிய துடைப்பம்-- குப்பையுடன் கூட்டு சேர்ந்தது. .

Tuesday, December 10, 2013

பாஜக திமுகவோடு கூட்டணியா?தமிழக பாஜக சரித்திரத்தில் எத்தனையோ பிரசித்தி பெற்ற மாநில செயற்குழுக்கள் நடைபெற்றுள்ளன..அதில் நவம்பர் 27—28 ந்தேதி பரமக்குடியில் நடந்த மாநில செயற்குழு வித்தியாசமானது.

அங்கு மூன்று வகை வித்தியாசங்களை என்னால் பார்க்கமுடிந்தது..
1 “.பாராளுமன்ற தேர்தலை நாம் எப்படி அணுகவேண்டும்?—கூட்டணி என்று வைத்துக்கொண்டால் அது யாரோடு?---உங்கள் மனந்திறந்த கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.”.—என்று மாநிலத்தலைவர் திரு.பொன்னார் அவர்கள் அழைத்தவுடன் வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களில் பாதிக்குமேல் கருத்து சொன்ன ஆர்வம்.

.2. நம் லட்சியத்தோடும் கொள்கையோடும் என்றும் ஒத்துப்போகாத ..நமக்கு என்றுமே ஒத்துவராத..திமுகவோடு கூட கூட்டணி வைத்துக்கொள்ளலாம்..என நம்மில் சிலரே சொன்ன “ஆச்சரியமான---அதிர்ச்சிகரமான ” கருத்துக்கள்..

3.” வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை ஓட்டம்—மற்றும் கிராம யாத்திரை” பற்றிய விரிவான விபரமான ஆழமான கருத்து பரிமாற்றம் வழங்கிய திருமதி வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கருப்பு முருகானந்தத்தின் விளக்கங்கள்..

செயற்குழுவன்று காலை “தினமலரில்” திமுக கூட்டணிக்கு ஆதரவான முடிவில் பாஜக இருப்பதாக வந்த கட்டுரையும், செயற்குழு முடிந்த அடுத்த நாட்களில், அதே அர்த்தத்தில், வேறு சில பத்திரிக்கைகள் எழுதிய கட்டுரைகளும், என்னைப்போன்ற பாஜக தொண்டனையே உலுக்கியது என்பது உண்மைதான்..

இச்செய்தி பாஜகவின் தொண்டனையும், நமது இயக்க ஆதரவாளர்களையும் பெரும் அதிச்சியில் ஆழ்த்தி வருகிறது என்பதை “முகநூலிலும்” நேரில் என்னிடம் பார்க்கும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்தும், மேலும் உறுதியாகிறது..

செயற்குழுவின் நிறைவுரையில், முதலில் பேசிய திரு எல்.ஜி. அவர்கள், “ஒரே கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் “ இருக்க முடியாது என்பதையும், அடுத்த கூட்டணி..( திமுக பாஜக கூட்டணி)—யின் ரசாயனம் ( கெமிஸ்ட்ரி)..வீழ்படிவுகளைத்தான் (பிரிசிபிடேட்)..உண்டாக்கும் என்பதையும் அழகாக..சிலேடையாக சொல்லி நம் “அதிர்ச்சிக்கு “ முற்றுப்புள்ளி வைத்தார்.

நிறைவுரை ஆற்றிய திரு.பொன்னார் அவர்கள், “ மதுரை தாமரை சங்கமத்தின் மூலம், தமிழகத்தில் பாஜக இருக்கிறது என்று காட்டினோம்..எங்கே இருக்கிறது? என்று கேட்டவர்களுக்கு,..திருச்சி “இளந்தாமரை “ மாநாட்டின் மூலம் “தமிழகம் எங்கும் இருக்கிறது” என்று நிரூபித்தோம்..நாம் கூட்டணிகளை தேடிப்போன காலம் போய் கூட்டணிகள நம்மைத்தேடி வரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.”.

“ .கூட்டணி அமைந்தால் அது நம் தலைமையிலேயே அமையும்..அதற்க்குள் நம் வலிமையை நாம் பெருக்கிக்கொள்வோம்..12500 கிராமங்களிலும் யாத்திரை செய்து மக்களை சந்தித்து புதிய பாஜக கிளைகளை உருவாக்குவோம்..சர்தார் வல்லபாய் பட்டேலின் “ஒற்றுமை ஓட்டத்தை “ பள்ளி கல்லூரி மாணவர்களை திரட்டி நடத்துவோம்.” என்று தெளிவாக தொண்டர்களுக்கு செய்தி சொன்னார்..

தற்போது சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும், “தெளிவான பாஜக தொண்டனையும்” குழப்பத்தில் ஆழ்த்தும் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது..இதை நம்பிய ஒருசில தொண்டர்களும், ஆதரவாளர்களும், “ தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தாக்கிய சண்டாளர்களுடனா கூட்டு?—நாம் சூடு சொரணையை இழந்து விட்டோமா? “என்றவகையில் “முகநூலில்” கொதிப்பதை பார்க்க முடிகிறது..

இப்படி பதட்டப்படவோ இம்மாதிரியான கூட்டணி செய்திகளை நம்புவதோ அவசியமற்றது..நமது தலைவர்கள் தெளிவானவர்கள்…அவர்கள் காங்கிரஸ் கட்சியைப்போல மேலிருந்து திணிகப்பட்டவர்கள் அல்ல..நம்மில் ஒருவராக இருந்து உயர்ந்தவர்கள்தான்…நம் உணர்வுகளை மட்டுமல்ல நாட்டின் சூழ்நிலைகளையும் தெளிவாக புரிந்தவர்கள்..நம் லட்சியம்—கொள்கைக்கு என்றும் வலுசேர்ப்பவர்கள்...

பொய்ச்செய்திகளை படித்து நம்மை நாமே குழப்பிக்கொள்வதை தவிர்ப்போம்..வல்லபாய் பட்டேல் ஒற்றுமை ஓட்டத்தை மாபெரும் வெற்றியுடன் நடத்தி, மக்கள் ஆதரவை திரட்டுவோம்..கிராமங்கள் தோறும் பாதயாத்திரை நடத்தி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே, ஆயிரக்கணக்கான புதிய கிளைகளையும், லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களையும் சேர்த்து, மேலும் வலு பெற்ற தமிழக பாஜகவை உருவாக்குவோம்..

நம் லட்சியம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 20+ எம்.பி.க்களை அனுப்பி மோடி அவர்களை பிரதமராக்குவது மட்டுமல்ல..2016 சட்டமன்ற தேர்தலில்..ஆட்சியை பிடிக்கும் வலுப்பெற்ற கட்சியாக மாறுவதும் ஆகும்…

இதை நிறைவேற்ற… உடனே புறப்படுவோம்..
ஒற்றுமை ஓட்டத்தில் கிராமம் தோறும் செல்வோம்.. .