Pages

Friday, December 31, 2010

அடிமைத்தளத்தின் அத்தியாயமே--புத்தாண்டே வருக


ஆங்கில புத்தாண்டின் மோகமா?--காலனி ஆதிக்கம் நம்மீது பதிந்ததின் தாக்கமா?
------புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்போதும் போல விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

வியாபாரிகளூக்கு கொண்டாட்டம்--பொய்யுரைகள்--ஏமாற்று இலவசங்கள்---கிரெடிட் கார்ட் எமன் மூலம் நடுத்தட்டு வர்க்கத்தை “கடனாளியாக்கும்”--டி.வி.--செல்....டிவிடி என ஆடம்பர பொருள் விற்பனைகள்--

பிட்டிஷ்காரன் நம்மீது பதித்த அரசியல் ஆதிக்கத்தை அறிந்திறாத--படித்திறாத---இன்றைய இளைஞர்கள் கூட்டம்--ஆங்கிலேயனின் “சமூக சிதைப்புத் திட்டத்தினால் “ (மெக்காலெ கல்வி முறை )  விட்டில் பூச்சிகளாகி--நடுரோட்டில்---போதையில் நின்று---புத்தாண்டை வரவேற்கப்போகிறார்கள்.

“ஆங்கிலப்புத்தாண்டு நமதல்ல--வரவேற்காதே--””---இப்படியும் ஒரு சிறு குரல்--

கோவில்களில் கூட்டமோ--கூட்டம்----ஆகமவிதிகளை காற்றில் பறக்கவிட்டு---””இறைவனை எழுப்பி”---இரவு 12 மணிக்கு--அருள்பாலிக்க வைக்கும்--”அறம் அழிக்கும் குழு “----

ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடினால் அறம் அழிந்துவிடுமா?--குடி முழுகி விடுமா?--இப்படியும் குரல்

ஆங்கிலம் தாய்மொழியாக கொள்ளாத நாடுகள்---மக்கள்---கிறிஸ்தவம்  வலுவில்லாத ஊர்களைப் போய்ப் பாருங்கள்--(இந்தியா தவிர )- ஆங்கிலப் புத்தாண்டு ஏதோ ஒரு மூலையில் பூனையாய் சுருண்டு படுத்திருக்கும்.

பின் நம்நாட்டில் ஏன் இவ்வளவு கூட்டம்---- ஆர்ப்பாட்டம்---

இருக்கத்தானே செய்யும் --நம் அனைத்து மொழி--மதத்தினரிடமும்--PRACTICAL--ஆக---ஆங்கிலப்புத்தாண்டு உபயோகமே இருக்கிறது..ஆகவே அவர்கள் சாலையில் திரளுவதும்---கோயிலில் கூடுவதும் இயல்புதானே


என் நண்பர் மாற்று
மொழி ஒன்று கற்றுக்கொள்ளவேண்டும் ---முதலில் ஒரு இந்திய மொழியுடன் ஆரம்பிக்கிறேன் -என்று “இந்தி “ கற்க முயன்றார்--முடியவில்லை--காரணம் கேட்டேன் --என் ஆங்கிலம்தான் என் தடைக்கல்--என்றார்..எப்படி என்றேன்  --எங்கு சென்றாலும் ஆங்கிலத்தை வைத்து சமாளித்து விடுவதால் மாற்று மொழி கற்கும் ஆர்வமே தொடர்வதில்லை--என்றார்.

எதுவாக இருந்தாலும் “மெக்காலே”-----ரொம்பவே "POWERFUL"--ஆன ஆளுதான் ---இத்தனை காலமாக இத்தனை கோடி இந்தியர்களை இறந்தும் -- “அடிமைகளாக “வைத்துள்ளானே..

Thursday, December 30, 2010

அரசி உடையில் ஒரு அரக்கி --இந்தியாவே விழித்தெழு

An empress of India in new clothes
 

Like Sonia Gandhi, I am a Westerner and a brought-up Christian. Like Sonia Gandhi, I have lived in India many years and I have adopted this country as my own.
 
But the comparison ends there. I did land in India with a certain amount of prejudices, cliches and false ideas, and I did think in the enthusiasm of my youth to become a missionary to bring back Indian ‘pagans’ to the ‘true god’. But the moment I stepped in India I felt that there was nothing much that I could give to India, rather it was India which was bestowing me. In fact in all my years here India has given me so much — professionally, spiritually, sentimentally. Most Westerners, who come here, still think they are here to ‘give’ something to a country, which, unconsciously of course, they think is lesser than theirs. It was true of the British, it was true of Mother Teresa, it is true of Sonia Gandhi.
 
It is a fact that Sonia brought discipline, order and cohesion into the Indian National Congress. But the amount of power that she, a person of foreign origin, an elected MP like hundreds of others, possesses should frighten her. All the television channels report without a blink that Maharashtra CM rushes to Delhi to meet Sonia Gandhi to plead for his life. But should not Chavan have gone to the prime minister first?
 
The CBI blatantly and shamelessly quashed all injunctions against OttavioQuattrocchi and even allowed him to get away with billions of rupees which he had stolen from India. Yet, without batting an eyelid, and with the Indian media turning a blind eye, it goes ruthlessly after the chief minister of the most efficiently run state, the most corruption free. Today the Congress, with Sonia’s overt or silent consent, pays corers of rupees to buy MPs to topple non-Congress governments. Her governors shamelessly hijack democracy by twisting the law.
 
Are Indians aware that their country has entered a state of semi-autocracy where every important decision comes from a single individual residing in her fortress of 10 Janpath surrounded by dozens of security men, an empress of India? Do they know that the huge amounts of the scams, whether the 2G, the CWG, or the Adarsh housing society scam, do not go into politicians’ pockets (only a fraction), but to the coffers of the Congress for the next general elections, and more than anything to please Sonia Gandhi? Nobody seems to notice what is happening under the reign of Sonia Gandhi.
 
That an Arundhati Roy is allowed to preach secession in India, whereas on the other hand the Congress government has been going after the army, the last body in India to uphold the time-honoured values of the Kshatriya's — courage, honour, devotion to the Motherland. They alone today practise true secularism, never differentiating between a Muslim or Hindu soldier and who for a pittance daily give their lives to their country. First it was the attempt of a caste census, a divide-and-rule ploy if there is one; then there are the first signs that the government is thinking about thinning down the presence of the Indian army in the Kashmir valley, which will suit Pakistan perfectly. And now there is the Adarsh housing society scam in which the army officers, at the worst, were innocently dragged into it. We know now that it was the politicians of the Congress who benefited the most out of it.
 
It would be impossible in France, for example, to have a non-Christian tell a Hindu (who is a non-elected president or PM) to be the absolute ruler of the country behind the scenes, superseding even the PM. There are many capable people in the Congress. Why can’t a billion Indians find one of their own, who will understand the complexity and subtlety of India, to govern themselves?  Not only that, but her very presence at the top has unleashed forces, visible and invisible that are detrimental to the country. There is nothing wrong in espousing the best of the values of the West — democracy, technological perfection, higher standards of living — but many of the institutions are crumbling in the West: two out of three marriages end in divorce, kids shoot each other, parents are not cared for in their old age, depression is rampant and Westerners are actually looking for answers elsewhere, in India notably.
 
One does not understand this craze to Westernise India at all costs, while discarding its ancient values. Sonia Gandhi should do well to remember that there still are 850 million Hindus in India, a billion worldwide and that whatever good inputs were brought by different invasions, it is the ancient values of spirituality behind Hinduism which have made India so special and which gives it today unique qualities making an Indian Christian different from an American Christian, or an Indian Muslim different from a Saudi Muslim.

It is an insult to these tolerant Hindus to show United States President Barack Obama as his first input of the Indian capital the tomb of Humayun, a man who slaughtered Hindus in thousands, taking Hindu women and children as captives. He even subjected his elder brother Kamran to brutal torture, gouging his eyes out and pouring lemon into them!!
 
The tragedy of India is that it was colonised for too long. And unlike China, it always looks to the West for a solution to its problems. Sonia Gandhi, whatever her qualities, is just an incarnation of that hangover, an empress of India in new clothes

courtesy:-MacLithon

Friday, December 24, 2010

மூஞ்சப்பாரு----எவண்டி உன்னப் பெத்தான்
”மூஞ்சப்பாரு
எவண்டி ஒன்னப்பெத்தான்
ஏங் கைல கெடச்சா செத்தான்”

இன்று காலை எப்போதும் போல நடைபயிற்சி மேற்கொண்டேன் --நேரத்தை பிரயோஜனமாக செலவழிக்க “ஐ..பேடை””--காதில் மாட்டிய போது சூரியன் பண்பலையில் (எஃப்.எம் )ஒலித்த  புதிய ”பொறநாநூறு””-----”அலிங்கத்துப்பரணி”--இது

அப்பப்பா--என்ன சொல்லாட்சி---கருத்துக்கருவூலம்---வார்தை பிரவாகம்---தமிழின் ஆழம்--

ஏதோ ஒரு புதிய “சினிமா”விலிருந்து ஒரு ஆண் பாடகர்---காதலி வருணனையா?--தகப்பன் நிந்தனையா?---மனச்சிதறல் நோய்கண்டவனின் -தொண்டை கிழியும் கத்தலா?---  என்ன பாடல் வரிகள்--என்ன அர்த்தம்--(இப்படி ஒன்று இருந்தால் ..)

ஆங்கிலத்தில் இரண்டு அழகான வார்த்தைகள்--ஒன்று--GROWTH---2--DEVELOPMENT--

GROWTH--எனில் வளர்ச்சி
DEVELOPMENT-- எனில் முன்னேற்றம்

வளர்ச்சி--உயிர் உள்ளவைகளின் உடன் பிறந்தது
வயதாக ஆக வளர்கிறோம்
மரமும்--மனிதனும் கூட..வளர்கிறது

தமிழ் வளர்கிறதா?--எங்கே வளர்கிறது?---
சங்க இலக்கியம் சரிந்துபோய்--
சென்னை பாஷையில் சீரழிந்து---சூரியன் பண்பலை ( பண்பலையா--பண்பற்ற அலையா? )---தொடங்கி--அத்தனை எஃப்.எம்.களும்--அதற்குமேல் டி.வி. தொகுப்பாளியினிகள்...வாயில் ரோடு ரோலர்களில் சிக்கிய கருங்கல்லாக அரைபடுகிறதே--தமிழ்-- அதுதான் வளர்ச்சியா?

இந்த வளர்ச்சியின் வெளிப்பாடுதான் -”மூஞ்சப்பாரு---ஒன்ன எவண்டி பெத்தான்””---போன்ற--”சங்கை கலக்கிய “--( சங்க இலக்கிய அல்ல )பாடல்கள்.

மண்சாலை--தார் சாலை ஆனால் முன்னேற்றம்----படிக்காதவர் வீட்டுப் பைய்யன் டாக்டர் ஆனால் முன்னேற்றம்---அரிவாளை தூக்கியவர்கள்--எழுதுகோல் பிடித்தால் முன்னேற்றம்..
சங்கத்தமிழை ----சாதாரண தமிழனையும் படிக்கவைத்தால் முன்னேற்றம்---தமிழை உலகநாடுகளின் ஒப்பற்ற மொழியாக்கி--ஐ.நா சபையின் ஆட்சி மொழியாக்கினால் முன்னேற்றம்--

அமுதமெனும் தமிழில்--”மூஞ்சப்பாரு”---போன்ற “நஞ்சை”--கலப்பதுதான் -முன்னேற்றமா?

எந்த ஒரு மனிதனும் தானாக விரும்பி உயிர் விடுவதில்லை --
எந்த ஒருமொழியும் தானாக ----தன்னில் மாற்று மொழியை கலப்படம் செய்துகொண்டு---தலை கிறுகிறுத்து சாவதில்லை..

ஆனால் தமிழ் சாகிறது--சாகடிக்கப் பட்டுக்கொண்டிரிக்கிறது
அதைக் கொல்ல --எஃப்.எம்---------டி.வி.---------சினிமா-------என்ற ஆங்கிலப்படையோடு--முன்னாள் தமிழர் தளபதிகள்--புறப்பட்டு வருகிறார்கள்--

அம்மா--தமிழே நீ கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டு நான்
சும்மா--இருக்கிறேனே--
முதலில் என்னைக்கொல்--என புறப்படவா?--இல்லை
உன்னைக்கொல்ல துடிப்பவனை--போட்டுத்தள்ள புறப்படவா?
 

--

Thursday, December 23, 2010

விக்கி லீக்ஸின் --ஜுலியன் அசாஞ்--என்னும் ஆயிரம் பாம்பு

யானை காதுக்குள் எறும்பு போனாலே திண்டாட்டம் தான்--பாம்பு போனால்----போனது--அதுவும் ஆயிரம் பாம்பு--
ஆம்--அமெரிக்கா என்னும் யானையின் காதுக்குள்---

உலகத்தின் --தானாக நியமித்துக்கொண்ட போலிஸ்காரன் ---யாரும் தட்டிக்கேட்க முடியாத தண்டல்காரன் --
--ஆப்கானிஸ்தானத்தை அடித்து நொறுக்கிய அயோக்கியன் ----ஈராக்கின் எண்ணையையும்..மக்களின் ரத்தத்தையும் உறிஞ்சும் ---அமெரிக்கா--என்னும்
ஆக்டோபஸ்

மனித உரிமை என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்கா...அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் அது நிலைகுலைந்து போனாலும்---அதன் எஃப்.பி.ஐ அலுவலகம் மற்றும் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை ஒன்றும் செய்ய முடியவில்லை...ஆணவம் --அகம்பாவம்--அக்கிரமம்--அனைத்தின் உறைவிடம் அமெரிக்கா--

இரும்புக்கோட்டைக்குள் எலி புகமுடியுமா?--முடியும் என்றான் ஒருவன் ---அதுவும் சுண்டெலி---அரசாங்க ஆதரவில்லா தனிமனிதன் --
ஆஸ்திரேலியாவின்  -ஜூலியன் அசாஞ்---அமெரிக்காவின் அத்தனை அத்துமீறல்களையும்---ஆஃப்கானிஸ்தான் -ஈராக்கில் அதன் அத்தனை மனித உறிமை மீறல்களையும்--புட்டுப் புட்டு வைத்தான் --ஆதாரங்களோடு--நிஜ வீடியோ காட்சிகளோடு----அமெரிக்காவை சந்திக்கு இழுத்தான்

அமெரிக்கா அதிர்ந்தது--மற்றவர்கள் கஷ்ட்டப்படும் போது கைகொட்டி சிரித்த அமெரிக்கவைப் பார்த்து உலகம் கை கொட்டி சிரித்தது--அமெரிக்கா கைகட்டி நின்றது.
“”விக்கி லீக்ஸ்” என்ற இணைய தளத்தின் மூலம்---அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளின் ஆட்சியாளர்களை--அக்கிரமக்காரர்களை---புரட்டிப்போட்டார் ஜுலியன் அசாஞ்--

இந்தியாவில் ராகுல்--சோனியா கும்பல்--அமெரிக்க தூதரகத்திற்கு சென்று--கைகட்டி வாய்பொத்தி---இந்துத் தீவிரவாதம் பற்றி உளறியதையும் வீக்கிலீக்ஸ்--போட்டுக்கொடுத்து விட்டது..

விக்கிலீக்ஸை முடக்க அமெரிக்கா--ஸ்வீடன் ---மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் முயன்றபோது--உலகெங்கும் பல நாடுகளிலிருந்து 800 இணைய தளத்திலிருந்து விக்கிலீக்ஸ் வெளியானது..பாலியல் குற்றத்துக்காக இங்கிலாந்து அவரை கைது செய்தபோது---உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் குரல் அவருக்கு ஆதரவு தெரிவித்தன..

ராடியா டேப்ஸ்--2-ஜி கொள்ளை--காமன்வெல்த் ஊழல்--என்ற வெளியில் தெரிந்தவைகளையே நம்மால் முழுதும் தெரிந்துகொள்ள முடியவில்லையே---ஜுலியன் அசாஞ் போல இங்கும் ஒரு இண்டியன் அசாஞ் இருந்தால் கொள்ளைகள் வெளிவரும்--நீதி நெஞ்சு நிமிறும்

Wednesday, December 22, 2010

சோனியாவின் ஆர்.எஸ்.எஸ்--ஜன்னிசமீப காலமாக காங்கிரஸுக்கு இந்து ஜுரம்--ஆர்.எஸ்.எஸ்.ஜுரம் பிடித்துக்கொண்டுவிட்டது.--அதுவும் ஹை டெம்ப்ரேச்சர்.---அனேகமாக ஜுரம் ஜாஸ்தியாகி இம்முறை காங்கிரஸ் பிழைக்காமலே போகலாம்.

திக் விஜை சிங்கும் ராகுல் காந்தியும் ஆர்.எஸ்.எஸை வசைபாடுவது அதிசயமோ ஆச்சரியமோ இல்லை.

எப்போதெல்லாம் தோல்வி ஜன்னி வருகிறதோ-- அப்போதெல்லாம் காங்கிரஸ் சாப்பிடிடும் மருந்து ஆர்.எஸ்.எஸ்.--தப்பில்லை---நிறைய சாப்பிடட்டும்--

ஆனால் கவலைப்படக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது--ஒரு சின்ன “பிளாஷ் பேக்”

1977 இல் ஜனதா வெற்றிக்குப் பிறகு இத்தாலிக்கு ஓட நினைத்த சோனியா---இந்திரா மறைவிற்குப் பிறகு ராஜிவ் அரசியலுக்கு வரவேகூடாது என்ற சோனியா---நரசிம்மராவ் காலத்தில் காங்கிரஸுக்கு தலைமை ஏற்க மறுத்த சோனியா---2004 இல் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு --பிறகு “”டம்மியை” முன்மொழிந்த சோனியா---காங்கிரஸ்காரன் எழுதிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்து வந்த--- சோனியாவின் செயல் பாட்டில்--- இன்று மாபெரும் மாற்றம்--இது எங்கிருந்து வந்தது?--யார் கொடுத்த ஊக்கம்?

ஒரு கட்சியின் தலைவி--இதுவரை பத்திரிக்கையாளர்களையே சந்தித்ததில்லை---பாராளுமன்றத்தில் பேசியதே இல்லை---கடந்தவாரம் மட்டும் 2-ஜி ஊழலில் கொள்ளையடித்தபணம் நாடுமுழுதும் சிரிப்பாய் சிரித்தபோது---இவர் நடந்துவரும்போது---பத்திரிக்கைகளுக்கு காரசார பேட்டியளிக்கிறார்--பொரிந்து தள்ளுகிறார்--மன்மோகன் சிங்கை தாங்கிப்பிடிக்கிறார்---தற்போது ஆர்.எஸ்.எஸ் மீது பாய்கிறார்--சோனியாவின் இம்மாற்றம் நம்மை சந்தேகிக்க வைக்கிறது--
பணபலமா?--வெளிநாட்டு பக்கபலமா?--மதம் கொடுக்கும் இதமா?--

இந்நாட்டின் அத்தனை சொத்தும் இத்தாலிக்கு ரயிலேறுகிறது---நாட்டின் எதிரிகள் அனவரும் அவருக்கு நண்பர்களாகின்றனர்---கட்டைவிரல் சூப்பும் காங்கிரஸ் அவருக்கு தாளம் போடுகிறது--

பயந்த சோனியா இப்போது துணிந்துவிட்டார்--அதன் வெளிப்பாடே இந்துத்வா மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்.
கை நொண்டி---கால் முடம்--கண் குருடு---வாய் ஊமை---ஹார்ட் பிராப்ளம்--என உயிருக்குப் போராடும் காங்கிரஸை வீழ்த்த இதுவே தருணம்--

சோனியா கும்பலை இத்தாலிக்கு விரட்டுவோம்--காங்கிரசை வீழ்த்துவோம்-

Tuesday, December 21, 2010

ஃபுஜிமோரி...சோனியாவும்---பவர்புரோக்கர்--பர்க்கா தத்தும்

ஃபுஜிமோரி...சோனியாவும்---பவர்புரோக்கர்--பர்க்கா தத்தும்


”நீரா ராடியா”---டேப்....பாட்டு டேப்புக்களையும்...பலான டேப்புக்களையும் பின்னுக்குத்தள்ளி...உலக மொத்த ஊடகமும் தினசரி(பாடும்) பிரசுரிக்கும் டேப்பாகிவிட்டது.

800 டேப்புக்கள்---அத்தனையும் இந்தியாவின் மந்திரிசபையை தீர்மானிக்கும் பேச்சுக்கள்---பேசியவர்களில் ஒருவருக்குகூட அந்த அதிகாரம் இல்லை---நாட்டை வழிநடத்துபவர்களின் தலை எழுத்தை யார் யாரோ தீர்மானிக்கும் அதிசயம் சோனியாவின் ஆட்சியில்....


மன்மோகன் சின்கை முன்னாள் பிரதமராகவும்--- கருணாவை முன்னாள் முதல்வராகவும்-- ஆக்கப்போகும் டேப் இது--கோபாலபுரத்தில் எத்தனை கோஷ்டிகள்--திராவிட கடலுக்குள் எத்தனை இடத்தில் பூகம்பம்--என்பதை ரிக்ட்டர் அளவுகளில் குறித்துக்காட்டிய டேப் இது.

2-ஜி அலைக்கற்றை கொள்ளையில் அடித்த பணத்தில் பெரும் பங்கை பெற்றவர் நாட்டின் நம்பர் ஒன் பெண்மணி என்பதும் --அந்த பணம் அவரது சொந்த ஊரான “வாட்டிகன்” இருக்கும் நாட்டுக்கு--சர்வதேச பயங்கரவாதிகளின் “ஹவாலா” பரிவர்த்தையில் கொண்டு செல்லப்பட்டுவிட்டது என்பதை சொல்லிய டேப் இது.

யார் இந்த நீரா ராடியா?--ஒரு அன்னி பெஸண்ட்டா?--ஒரு சரோஜினி நாயுடுவா?---இல்லை--இல்லை-- இவர் ஒரு சிவகாசி ஜயலக்‌ஷுமி---கென்யாவில் பிறந்து ஒரு பிரிட்டன் காரனை கட்டிக்கொண்டு “பவர் புரோக்கிங்” நடத்திய நங்கை---9 லக்‌ஷ்த்தை 300 கோடியாக்கி வருமானவரித்துறைக்கு டிமிக்கி கொடுத்தபோது பொறி வைக்கப்பட்டார்.

மாடி வீட்டு ஏழை என்பார்கள்--ஏழை எப்படி மாடிவீட்டில் இருப்பான்?---மாடி வீட்டு ஏழை என்று சந்திரபாபு ஒரு சினிமா எடுத்தார்--போண்டியானது வேறு கதை--”ஒயிட் காலர் கிரிமினல் “ என்பது தற்போது பிரபலமாகிவருகிறது--அப்படி ஒரு கிரிமினல் ஆதிக்கம் இன்று ஒரு சில பத்திரிக்கையாளர் உருவில் வருகிறது..

அரசியல் ஒரு சாக்கடை--சரி---.சினிமா என்பது ஒரு கூவம் --சரி---பத்திரிக்கை என்பது  இன்று கூவத்துக்குள் ஓடும் சாக்கடை---பர்க்கா தத்தும்--வீர் சங்க்வியும்---பத்திரிக்கை துறையை மீளாத கூவத்து  சாக்கடை ஆக்கிவிட்டார்கள்.

“தன் செய்தி நல்ல கவரேஜில் “ வரவேண்டும் என்பதற்காக --அரசியல் வாதிகள் பத்திரிக்கையாளர்களோடு நட்பாக இருப்பது வழக்கம்..ஆனால் இப்பழக்கம் “மந்திரிசபையை நிர்ணயிப்பது வரை “போனதுதான் தூரதிர்ஷ்ட்டம்.

என்.டி.டி.வியின் பர்க்கா தத்--பார்லிமெண்ட் ஓட்டுக்கு பண புகழ்..ராஜ்தீப் சர்தேசாய்---வாக் த டாக்..சேகர் குப்தா---சர்வதேச பொருளாதார பயங்கரவாதி..நீரா ராடியா- டேப் புகழ்..வீர் சங்வி---வீரப்பன் புகழ் நக்கீரன் கோபால்--காமராஜ்-”-செய்திகளை முந்தித்தந்தவர்கள்--இன்று முந்திக்கொண்டு “செய்தி “ஆனார்கள்”..

கார்கில் போரில் எல்லையில் பர்க்கா தத் “கட்டுப்பாடில்லாமல்”-- ஷூட் செய்த வீடியோக்களால்--கட்டுப்பாடான நம் வீரர்கள்--பாக்கிஸ்தானியரால் “ஷூட்” செய்ய்யப்பட்டு மாண்ட கொடுமை---
26/11 மும்பை தாக்குதலில் இந்த பெண்மணி செய்த “அகராதித்தனமான “ வீடியோ ஷூட்டிங்” ட்ரைடண்ட் ஓட்டலிலும்--பாராஸூட்டில் இறங்கிய நம் வீரர்களையும் பயங்கரவாதிகள் --சுட்டு வீழ்த்திய அவலம்..
கோத்ரா படுகொலை சம்பவத்திற்கு பிறகு குஜராத் கலவரத்தில் இவரது “கவரேஜ்”--காங்கிரஸால் இவர் எப்படி “கவர் செய்யப்பட்டார்” என்பதற்கு உதாரணம்.

இதற்கு பாவ மன்னிப்பு பெறாமலே..இந்திய நாட்டின் மந்திரிசபையை தீர்மானிப்பதில் இந்த அம்மணி பேசிய பேச்சுக்கள் “ராடியா டேப்புக்களில் “ சந்தி சிரிக்கிறது...

மந்திரிசபை அமைப்பது மன்மோகன் கையில் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்--கங்கிரஸ் கைய்யிலும் அது இல்லை என்பதே வெட்ககரமான விஷயம்...

டெஹல்கா--என்னும் சித்தரிக்கப்பட்ட --கற்பனையான ஊழலை--”ஸ்டிங்க்..ஆப்பரேஷன்” என்னும் பெயரில்---10--15 எம்.பிக்களை டி.வியில் காட்டி--- நாடு முழுதும் அசிங்கப்படுத்தினார்களே---இப்போது திரைமறைவில் இவர்கள் பேசி-- சர்வதேச பயங்கரவாதிகள்பங்குதாரர்களாக உள்ள  பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களை மந்திரியாக்க முயன்றது  ஊழலினும் கொடுமையான தேச துரோகமல்லவா?--

சுதந்திரம் பெற்றதில் இருந்து பத்திரிக்கைகள் பெரும்பாலும் (ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு )காங்கிரஸை ஆதரித்தே வந்துள்ளது.(இந்த விஷயத்தில் காங்கிரஸ் என்றும் கில்லாடிதான்  ).இம்முறை மன்மோகன் சிங்க் என்ற பிரதமர்--இல்லை..இல்லை..மண்டு--மக்கு---ரப்பர் ஸ்டாம்ப்---ஊர்க்காரன் பெற்றதற்கெல்லாம் தான் தகப்பன் என்பது போல ---யார் யாரோ நியமித்து இவர் கையெழுத்து போட்டு மந்திரியாக்கும் அவமானம் நடந்தேறியிருக்கிறது..

“”ஆல்பர்ட்டோ ஃபுஜிமோரி”---எனபவன் -தென் அமெரிக்க நாடான பெருவின் அதிபராக 1990 இல் பதவியேற்றான்..அடிப்படையில் ஜப்பானில் இருந்து பெருவில் குடியேறிய அகதி அவன்.---பத்தே ஆண்டில் பெருவைச் சுரண்டி--மக்களை வாட்டியெடுத்து---சர்வாதிகாரி ஆனான்.. நாட்டையே கொள்ளையடித்து அத்தனை சொத்துக்களையும் தன் தாய்நாடான ஜப்பான் உட்பட பலநாடுகளில் முதலீடு செய்தான். இன்று-- நாட்டைவிட்டு தப்பியோடிய அவனை துரத்திப்பிடித்து--25 ஆண்டு சிறைதண்டனை கொடுத்திருக்கிறார்கள் பெரு மக்கள்-- என்பது வேறு விஷயம் ..

இந்தியாவின் “ஃபுஜிமோரி”--சோனியா கும்பல்--மன்மோகன் என்ற “மக்கு பிளாஸ்திரியை”--கையில் வைத்துக்கொண்டு சர்வதேச பயங்கரவாதிகள் பங்குதாரர்களாக உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் 2-ஜி..ஸ்கேம்--நடத்தி---லட்சம் கோடிகளை இத்தாலிக்கு கடத்துகிறது..இந்தியா என்னும் “பெரு”மை மிக்க நாடு இன்று “பெரு” நாடு அடைந்த அவமானநிலையில் இருக்கிறது. .

இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் “இந்திய ஃபுஜிமோரிக்கு”--துணைபோகும் பன்னாட்டு பயங்கரவாதி--நீரா ராடியா---பத்திரிக்கையுலக “பவர் புரோக்கர்கள்”--பர்க்கா தத்---வீர்சங்க்வி----போன்றோறை அவர்கள் சார்ந்திருக்கும் பத்திரிக்கைகள் உலகமே சாடி வருகிறது--என்பதுதான்.

Sunday, December 5, 2010

காங்கிரஸை சுட்டு வீழ்த்துமா--காவித்தோட்டா?


காங்கிரஸை சுட்டு வீழ்த்துமா--காவித்தோட்டா?

என்னுடைய அருமை நண்பர் --பிரபல  ஆங்கிலப் பத்திரிக்கையின் மூத்த நிருபர்----எனக்கு சில கேள்விகள் கொண்ட “மெயில்” அனுப்பி இருந்தார்.அவை கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் கூட சிந்திக்க வைத்தது..

$ வெறும் 65 கோடி ரூபாய் (போஃபர்ஸ் ) ஊழலிலேயே ராஜீவ் காந்தி ஆட்சி இழந்தார்..ஆட்சி முறையில் மக்களுக்கு பெரும் அதிருப்தி இருந்திருக்கவில்லை.எதிர் கட்சிகளும் ஒன்றும் பெரிதாய் வலுவாக இல்லை.-----ஆனால் இன்றோ.....

$காமன்வெல்த்தில் 70,000 கோடி ஊழல்..

$ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்..

$2-ஜி..ஸ்பெக்ட்ரம்..1,76,000 கோடி ஊழல்..

$மிகவும் பலவீனமான பிரதமர்----பலவீனமான (மண்வாசனை இல்லா) கட்சித்தலைவி சோனியா

$அரசுக்கு எதிராக மக்களின் கடும் அதிருப்தி---- கடும் விலைவாசி உயர்வு

எதிர்கட்சிகளுக்கு இவ்வளவு சாதகமான சூழ்நிலை இருந்தும் கூட..மிகவும் பலவீனமான எதிர்கட்சிகள்.
அடிக்கடி “இளசு” என்னும் பெயரில் “புதுசை” கொண்டுவரும் பிஜேபி..

$சென்ற ஆண்டுவரை நிதின் கட்கரியை யார் என்று  பலருக்கு தெரியாது...

$சென்ற ஆண்டுவரை முன்னணியில் இருந்த அத்வானி இன்று பின்னணியில்...

$காங்கிரஸிலும் திமுகவிலும் தலமை தெளிவாக இருக்கிறது..

$அடிக்கடி தலைமையை மாற்றுவதில் பா.ஜவும் அதிமுகவும் ஒன்றுதான்

$ இப்போது சோனியாவை வீழ்த்த முடியவில்லை என்றால் எப்போது வீழ்த்துவது.


பி.ஜேபியின் வலிமை
இப்போது பிஹாராம்..நாளை..டெல்லியாம்

$உலர்ந்த மருந்தை தோட்டாக்களில் நிரப்பத்தான்   “தாமரை யாத்திரை”யாம்

$ மார்ச் மாதம் நடக்கும் தேர்தல் “காமன்வெல்த்தில்”...காவித்தோட்டா..குறிதவறாமல்..காங்கிரஸ்..திமுகவை வீழ்த்துமாம்...

இதுதான்.....கமலாலயதில் கிடைத்த செய்தி

பாவம்--ரா.ல் வின்சி என்கிற ராகுல் காந்தி


பாவம்--ரா.ல் வின்சி என்கிற ராகுல் காந்தி

 குஜராத்தில் அஹமதாபாத் பல்கலைகழக மாணவர்களை சந்தித்த” ரால் வின்சி”--இதுதான் ராகுல் காந்தியின் ஒரிஜினல் பெயர்---இப்படி நடக்கும் என நினைத்துப் பார்திருக்கமாட்டார்.

எந்த ஊருக்குப் போனாலும் காலேஜ்..காலேஜாக இவரை ஏற்றி இறக்குவதுதான் காங்கிரஸாரின் பழக்கம்..
ராகுல் கல்லூரி வாசல் மிதித்ததில்லை--
லண்டன் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்ததோடு சரி..பரிட்சை எழுதவில்லை..
சிந்துஜாவின் மானேஜ்மெண்ட் கோட்டாவில் ஹாவேர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்ததோடு சரி..”மக்கு ”என்பதால் படிப்பு ஏறவில்லை..பல்கலைகழகமே மூணு மாதத்தில்  விரட்டிவிட்டது.

இவரின்  படிக்காத ஆசையெல்லாம் ..இப்போது காங்கிரஸார் ...கல்லூரிக்கு அழத்துப்போய் நிறைவேற்றுகிறார்கள்.
அப்படி ஏறியதில்தான் குஜராத் மாணவர்கள் கேட்ட கேள்வி ராகுலின் முகத்திரையை கிழித்தது..

”குஜராத்தில் நரேந்திர மோடி சிறப்பாக ஆட்சி புரிகிறாரே..பின் ஏன் நாங்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப்போடவேண்டும்”’--இதுதான் அவர்கள் கேட்ட கேள்வி--

இந்த கேள்விக்கு விடை தெரியாத “”ரால் வின்சி..என்ற ராகுல்”..மோடியை மாசேதுங்குக்கு ஒப்பிட..மாணவர்கள் ரகளையில் இறங்க..ரால் வின்சி ஒரே ஓட்டம்..

பாவம் ராகுல் காந்தி..அவருக்கு தகவல் சொல்லுபவர்கள் எப்போதும் தவறாகவே சொல்லுகிறார்கள்..

இப்போதுகூட தமிழகத்தில் காங்கிரஸ் (இளைஞர் காங்கிரஸ் )உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டு கோடியாம்..
வாக்களர் பட்டியல்--டெலெபோன் டைரக்டரியை பாத்து எழுதும் காங்கிரஸாரின் போலிக்கணக்கு. ரால்..வின்சிக்கு தெரிந்திருக்க நியாமில்லை.

மாநிலம் முழுதும் நடை பயணம் வெற்றியாம்...அடுத்து காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்குமாம்..””டுபாக்கூர்” புள்ளிவிவரங்களை நம்பி டெல்லியில் இளைஞர் காங்கிரஸாரிடையே ராகுல் உதிர்த்த பொன் மொழிகள் இவை.

உ.பி.யில் மண் சுமந்தும் மாற்றம் வரவில்லை

கர்னாடகாவில் செய்த பிரசாரங்கள் பலன் தரவில்லை.

குஜராத்தில் நரேந்திர மோடியை “மாசேதுங்க்” என விமர்சித்து இருந்த கொஞ்சம் நஞ்சம் “இம்மேஜ்ஜையும்” இறக்கிகொண்டாகிவிட்டது.

வெளிநாட்டு ரத்தமில்லையா?..இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியல்ல..அதுவும் காங்கிரஸ்காரன பத்தி கொஞ்சமும் தெரியல்ல.கூட இருந்தே குழிபரிக்கிறான்..பக்கத்தில் இருந்தே தவறான வழி நடத்துரான்..

பிஹாரில் இவர் பேச்சு கேட்டு தனியா நின்னு..மரண அடி.
குஜராத்தில் இனி வரவே முடியாது
அடுத்து தமிழ் நாட்ல காங்கிரஸ தோக்க தயார் பண்ணிக்கிட்டு இருக்காங்க..

பாவம் ரால்..வின்சி...விவரமில்லாத புள்ள..

Saturday, December 4, 2010

மைசூர் ஆமை--திருவாரூர் பச்சோந்தி--இத்தாலி நாரை--தமிழ்நாடு தவளை--கதை

ஒரே  ஒரு காட்டில, ஒரே ஒரு கிணறாம்... அந்த கிணற்றுக்குள்ள எக்கச்சக்கமான தவைளகளாம்!தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவைளகள். அதே  கிணற்றில் இருந்த ஓர் மைசூர்---ஆமைக்குப் பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம்.

ஆமை, தவைளகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல்,சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே தவைளகளுக்குச் சலித்துவிட்டதாம்.


''சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் நமக்கு வேண்டும்'' என்று முடிவு எடுத்து, ஒருதிருவாரூர் --பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம்.நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவைளகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவைளகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகைள எல்லாம் தானே பிடித்துத் தின்ன ஆரம்பித்துவிட்டதாம்.

பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவைளகள்,''பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்துஅதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்'' என்று வானத்தைப் பார்த்துப் பலமாக யோசித்தனவாம்

 அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு இத்தாலி நாரை. ''ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தைன அகலம்! தூய்மையும், பலமும், அசாத்திய திறைமயும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுக்காலம் வந்துவிடும்!'' என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்த கிணற்றுத் தவைளகள்!

இந்த முறை அசாத்திய மாற்றம்! தவைளகளுக்குப் போட்டியாக பூச்சிகைள யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவைளகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!

''சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா... தங்கைளேய தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?'' என்று மிச்சம் மீதியிருந்த தவைளகள் கவைலேயாடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்


நீதி:    கதரோ  ,.. கதிரவனோ , இலையோ  ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவைளகளின் --(தமிழ்ர்களின் ) தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை!
இது 2011 லும் தொடருமா?

இன்றே..இப்போதே..இங்கேயே..இனிதே..வாழ்ந்துவிடு…

இன்றே..இப்போதே..இங்கேயே..இனிதே..வாழ்ந்துவிடு…

இது அமங்கலமான வார்த்தையா?..நாளைக்கு நாம் இல்லாமல போய்விடுவோம்?..

நேற்று என்பது “”போயிந்தி”—கான். (GONE)..நாளை என்பது நம் கையில் இல்லை..ஆகவே..இன்றுதான் நமது சொந்தம்..வாழ்ந்துவிடு..என்றுதானே அனேகர் சொல்கிறார்கள்.

LIVE..NOW AND HERE..  இன்றே..இப்போதே..இங்கேயே..வாழ்..வாழ்ந்துவிடு..இதுதான்..உண்மை..நிச்சயம்..நிதர்சனம்..என்கிறார்கள்..மனோதத்துவ நிபுணர்கள்.

சரி..அதை எப்படி வாழ்வது?..எழுந்தது முதல்..இரவு படுக்ககையில் விழுவதுவரை…எந்த திட்டமில்லாமலும்..ஒருசிலர் மட்டும் எதோ திட்டத்துடனும்…ரோபோமாதிரி..கால்நடைகள் மாதிரி..பலவாராக வாழ்கிழ்றோம்.—அல்லது..நாள்—நேரம்..நம்மை..இழுத்துச் செல்கிறது-இதிலே நம் பங்கு என்ன இருக்கிறது?..என்று மனம் சொல்கிறதே..

நேற்றைக்கு சதோஷமாகத்தானே இருந்தது..அது வாழ்க்கையில்லையா?—இன்றைக்கு “”அது “—இதுவரை—இல்லையே..பின் எப்படி வாழ்வது?—வாழ்ந்துவிடு..என்கிறாயே/--

நேற்று போல—”அதுவாக”—வருமா (சந்தோஷம்)—அல்லது..நாமாக “துளாவ வேண்டுமா?”—இல்லை இறைவன் கொண்டு தருவானா?—

நான் சொல்லுகிற “அது “ இப்படி கிடைக்காது..யாரும் தரமுடியாது---ஆண்டவன் உட்பட..
நாமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எங்கிருந்து எடுத்துக்கொள்வது?—இது எங்கே கிடைக்கிறது?—அட்ரஸ் கிடைக்குமா?—

கிடைக்கும்---யார்..” ”இது”—கிடைக்கும் என்று நம்புகிறானோ---அவனுக்குள்ளிருந்து---அவனுடைய மனதுக்குள்ளிருந்து---”இதை”—எடுத்துக்கொள்கிறான் .-உருவாக்குகிறான்—
அவனுடைய முகவரிதான் .-இது கிடைக்குமிடம்---இதன் அட்ரஸ்..

ரொம்ப குழப்பமாய் இருக்கிறதே---இன்றே வாழ்ந்துவிடு என்று சொல்லி---இன்றே கொன்று விடுவீர்கள் பொலிருக்கிறதே?—

தைரியமாய் இருங்கள்—அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது—ஒரு உதாரணத்தை பார்ப்போம்--

 .
ன் நண்பர் அமெரிக்காவில் பி.ஹெச்.டி படித்து வேலைபார்க்கிறார்—ஏன்..அமெரிக்காவில் பி.ஹெச்.டி என்கிறீர்கள்—அது என்ன கொம்பா?—
இங்கே பி.ஹெச்.டி—தெருவுக்குத் தெரு..விக்குது—அங்க அப்பிடி விக்க முடியாது—வாங்கலாம்..படிச்சுமட்டும்—அதனாலதான் அப்படி சொன்னேன்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தோடு—பிள்ளை குட்டிகளோடு இருக்கிறார்.சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்.படித்தால்தான் -வேலை—வாழ்க்கை—என்ற கட்டாயம்.--அதிகட்டாயம்.முனைப்போடு அத்தனையும் செய்து இன்று “”எங்கோ” இருக்கிறார்.

ஆனால் அவரால்—”வடிவேலு ஜோக்குக்குகூட” சிரிக்கமுடியவதில்லை.இயற்கையையும்—இனிமையையும்—ஏன் அவரது வளத்தையும்—வாழ்வையும் கூட—அவரால்..ரசிக்க—ருசிக்க முடிவதில்லை.இது ஏன்?

அந்த பத்தாவது வயதில் தகப்பனை பறிகொடுத்து—வாழ்க்கை என்னும் ஜீவ-மரண போராட்டத்தில்—”கடும் போராளியாகவே”—அவர் வழ்ந்து வந்திருக்கிறார்..இன்று போரில்லை—ஜீவனுண்டு—மரணமில்லை.பின் ஏன் அவரால் வாழ்க்கையை ருசிக்க முடிவதில்லை?

அவர் மனம் பத்து வயதும்—அதற்குப் பின்னிருந்த “”போராளி” காலத்திலேயே இன்னும் இருக்கிறது.இன்று
51 வயதான பின்னும் கூட—பழைய 21 வயதை விட்டு இன்னும் அவர் மனம்--மேலே வந்தபாடில்லை.

நேற்றைய நினைவுகள்---"இன்றை" அழிப்பதற்கு விடலாமா?—நாமே அதற்கு துணை போகலாமா?—

ஆற்றங்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட முடிவு செய்த நரி—அதற்கு ஆட்டுக்குட்டியிடம் காரணம சொன்னதாம்—”அன்று உன் அம்மா நீரைக்கலக்கினாங்க—அதனால அதுக்கு நீதான் இன்னிக்கி தண்டனை பெறணும்”’என்று சொல்லிய மாதிரி….

“”பழைய கிலேசங்களை””---தொடர்ந்து---சுமந்து----புதிய நாட்களில் புகுத்தவேண்டாம்—திணிக்க வேண்டாம்—””

ஆகவே—இன்றே..இப்போதே…இங்கேயே…இனிதாய் வாழ்வோம்—
புதிதாய் பிறந்தது போன்ற—
சுகத்தில்—இன்பத்தில்.

Wednesday, November 24, 2010

“”PLASTIC””---பிளாஸ்டிக்..பவ்யம்

“”PLASTIC””---பிளாஸ்டிக்..பவ்யம்

சைக்காலஜியில்----..இந்திரன்..சந்திரன்..என்று இல்லாததையும்..பொல்லாததையும்..புகழ்வதை.--.”பிளாஸ்டிக்..
ஸ்டோரோக்”---என்பார்கள்..

நாம் விரும்பாதவர் காலில் விழும்போதும்..கும்பிடும்போதும் செய்வதும்தான்..”பிளாஸ்டிக்..பவ்யம்”
பொதுவாக காலில் விழுந்து நாம்  வணங்குவது --நம்மைவிட பெரியவர்கள்..சாமியார்கள்…குடும்ப முக்கியஸ்தர்கள்..என்பது நம் பண்பாடு..

இதை இந்து பண்பாடு எனலாம்..
தமிழர் நாகரீகம் எனலாம்
திராவிட கலாசாரம் எனலாம்…
இந்தியப் பண்பு எனலாம்..

வார்த்தைகள் என்ன உபயோகித்தாலும் நாமும்..நம் நாடும்..ஏற்றுக்கொண்ட பாரம்பரியம் இது..

இன்று திரு.ஸ்டாலின் அவர்கள்..புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா காலருகில் பணிந்து வணங்குவதுமே……(தினமலரில் படம் ) மேற்சொன்னவைதான்..

இது சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்து வாக்களர்களை வீழ்த்த செய்ததாக தெரியவில்லை..
திமுக இந்து ஓட்டை நம்பி என்றும் இருந்ததில்லை.இந்துக்களும் “ஒட்டுமொத்தமாக” ஓட்டுப்போடப்போவதில்லை..மேலும் இந்தப் படத்தைப் பார்த்து மாறப்போவதுமில்லை.

நான்கூட காவி கட்டிய சில சாமியார்கள் காலில் வேண்டாவெறுப்பாகத்தான் வீழ்ந்திருக்கிறேன்..அவர்களை பிடிக்காவிட்டாலும்…காவிக்காக..

என்னுடைய உறவினர்கள் சிலரது காலிலும்----..அவர்களை பிடிக்காவிட்டாலும்… வயதில் பெரியவர்கள்..என்பதால்..

கொள்கை ரீதியாக “நாத்தீகம்” பேசினாலும் ஸ்டாலினிக்கு..சாய்பாபா..”குணசீலன்”---ஆரோக்கியம் மட்டுமல்ல—ஆட்சியை பிடிக்க அவரது ஆசிகள் உதவும் என்பதாலும் இருக்கலாம்..

அந்தவகையில் “ஜெ”..காலில் விழுபவர்கள் அத்தனைபேரும் “பிளாஸ்டிக்..பவ்யம் “தான்..
பெருசு..சிறுசு.—என வயசு வித்தியாசமில்லமல்..விழுகிறார்களே…இது சரியா..
தன்னைவிட வயதில் பெரியவர்கள் தன் காலில் விழுந்தால்….நாம் சேர்த்துவைத்த புண்ணியமெல்லாம்..புஸ்வாணமாகிவிடுமாமே…..

 “ஜெ” சேர்த்த புண்ணியம் தொலைந்ததால்..புது புண்ணியத்துக்காகத்தான்..--கோயில்..கோயிலாக அலைகிறாறோ..

--