Pages

Saturday, June 18, 2016

பா.ஜ.க.--வார் ரூம் ரகசியம்-2

தேர்தலை சந்திக்க போடப்பட்ட 38 துறைகளில் மீடியா ஒரு துறை. ஆனால் 38ல் இரண்டு துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளின் பணிகளும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே நிறைவு பெற்று விடுகிறது.

கடைசி 25 நாள் தேர்தல் பணியின் களப்போர் யுத்திகள் ஆயுதங்கள் மீடியா துறை கையிலே இருக்கிறது. மற்றொன்று டூர்ஸ் அண்டு டிராவல்ஸ். இது தலைவர்களின் சுற்றுப் பயணத்தை முழுவதுமாக நிர்வகிக்கிறது.

மாநிலம் முழுவதும் தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது அதற்கு தலைவர்களுக்கு தாக்குதல்களைக் கொடுக்கும் குறிப்புகளை எழுதித் தருவது  மீடியாவின் ஒரு பணி.

அதிமுக திமுக இரண்டு கட்சிகளையும் சமதூரத்தில் வைப்பது என்று முடிவுசெய்து தாக்குதலை தொடங்கினோம். அதிமுகவிற்கு மாற்று திமுக இல்லை என்றுதான் தாக்குதலில் மையக்கரு. ஆனால் இதன் பலன் முழுதும் அதிமுகவிற்கு போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டவுடன் அதிமுக மீதும் தாக்குதலை நேரடியாக தொடங்கினோம்.

முதலில் ஃபேஸ் புக் அடுத்து பிரஸ் மீட். இதோடு மேடைகளிலும் என தாக்குதல் தொடர்ந்தது. அதிமுக ஆடிப் போனது. ஆனாலும் ரியாக்ட் பண்ணவில்லை. குறிப்பாக நான் தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக மீது தொடுத்த அதிரடி நேரடி தாக்குதல்களுக்கு சி.ஆர். சரஸ்வதியும் ஆவடி குமாரும்  எதிர்வினை புரியாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார். அதிமுகவின் இந்த யுக்தி அதற்கு தேர்தலில் பலன் கொடுத்தது. பாஜக ஆதரவு ஓட்டு அதிமுக பக்கம் சாய்ந்தது.

மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயலின் அம்மா நாட் ரீச்சபிள்" பேச்சை மையமாக எடுத்து நான் தினமலரில் கட்டுரை எழுதினேன். ஜாவ்டேகர் தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்றார். தலைப்பு செய்திகளாக மாறியது. ஏப்ரல் 22ம் தேதிக்கு பிறகு நம்மை 5வது இடத்துக்குத் தள்ளி செய்தி இருட்டடிப்பு செய்த மீடியா இந்த ரக பேச்சுகளுக்கு பின் முன்னணிக்கு நம்மை கொண்டு வந்தது.

மே 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 பகுதிகளாக பேப்பர் விளம்பரங்களை உருவாக்கினோம். தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் திராவிட கட்சிகளின் ஆட்சி. இதற்கு தீர்வு பாஜகவே! ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் அல்ல!
மாற்றத்துக்கான தேடல் இன்றுடன் முடிவடைந்தது. பாஜகவே தீர்வு என்பது கடைசிநாள் விளம்பரம் என்ற வரிசையில் விளம்பரங்களை உருவாக்கினோம்.

திமுக அதிமுகவிடம் சரக்கே இல்லாமல் விளம்பரங்கள் - தனி மனித தாக்குதல்கள் - அந்த விளம்பரங்கள் வாந்தி எடுக்க வைத்தது.
திமுகவின் அனைத்து வேட்பாளர்கள் கையொப்பமிட்ட முதல் பக்க விளம்பரம் என்று வந்தது. வித்தியாசமாக இருக்கிறதே என பிரித்துப் பார்த்தால் தொகுதியில் தான் இருப்பேன் - லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற எம்.எல்.ஏவின் அடிப்படை சடமைகளையே வாக்குறுதியாக போட்ட வினோதத்தை மக்கள் விமர்சிப்பதை கேட்க முடிந்தது!

அதிமுகவின் விளம்பரங்கள் Professional ஆக இருந்தது. பாமகவுடையது குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. மதிமுக காங்கிரஸ் வாசனுடைய விளம்பரங்கள் பொதுக்கூட்ட விளம்பரங்கள் போலிருந்தது. பாஜகவுடையது மட்டுமே Pசழகநளளழையெட ஆக நேர்மையாக அழுத்தமாக புதுமையாக இருந்தது என்ற விமர்சனங்களை கேட்க முடிந்தது. இதன் சூத்ரதாரி ராமப்ரியன். கர்நாடக தேர்தல் பணிக்குழுவின் சேர்மனாக கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் சொன்ன கருத்துக்களை தமிழ் மண்வாசனையோடு இணைத்தேன். எனக்கு உதவியாக கரிகாலனும் இருந்தார்.

நாம் விநியோகிக்கும் நோட்டீசை பொதுமக்கள் வீசி எறியாமல் கட்டாயம் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு சரக்கும் நடையும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நோட்டீஸ் தயாரிக்க முடிவு செய்தோம். 3½ நிமிட நோட்டீஸ் தம்பி ராணாவும் பிரதமரின் வேண்டுகோளை நானும் சாதனைகளை கரிகாலனும் தயார் செய்தோம். ஒரு இளம் டிசைனர் கார்த்தியை ராமப்ரியன் கண்டு பிடித்தார். அனைவரும் உட்கார்ந்து தங்கத்துக்கு பாலிஷ் போடுவது போல தேய்த்துத் தேய்த்து டிசைனை உருவாக்கினோம். இதே போல 30 வாசகங்கள் அடங்கிய 300 ஹோர்டிங் தயாரித்து தமிழ்நாடு முழுதும் கட்டினோம். எந்த அரசியல் கட்சியும் செய்யாத முயற்சியை பாஜக மட்டுமே செய்தது.

இந்த நேரத்தில் அகில இந்திய இணை அமைப்புப் பொதுச் செயலாளர் சந்தோஷ்ஜியை நினைவு கூராவிட்டால் இந்த எழுத்துக்களுக்கு  எந்த அர்த்தமும் இருக்காது.பணி செய்ய ஊக்கம் ஆதரவு ஆனால் கண்டிப்பு திட்டங்களுக்கான பணம் Resource person பல நேரம் idea என விரைந்து முடிவெடுக்கும் அவரது திறன் ஏற்கனவே பேசியதை ஒன்றுவிடாமல் சொல்லும் ஞாபகசக்தி என ஒரு பிரமிப்பான மனிதர் அவர். அவரது வழிகாட்டுதல் தேர்தலை சரியான திசையில் விரைவாக கொண்டு சென்றது.

ராமப்ரியனுடைய Election Management-- highly professional ஆக இருந்தது. இதற்கு காரணம் சந்தோஷ்ஜி. கர்நாட்காவில் தேர்தல் பணி-- கட்சி நிதி நிர்வாகம்-- இவற்றிற்கான ஒரு மிகப் பெரும் நிரந்தர-- முழுமையான குழுவையே சந்தோஷ் ஜி உருவாக்கியிருக்கிறார். மற்ற கட்சிகளின் நிர்வாகத்தை விட இவர்கள் மிகவும் கடைந்தெடுத்த சிங்கரர்களாக இருந்தார்கள். அவர்கள் வழிகாட்டியும் நாம் ஏன் ஜெயிக்கவில்லை என்கிறீர்களா?
என்ன வழிகாட்டினாலும் execution நாம் தானே! இன்னும் ஆள் பலமும் தந்திரமும் நமக்கு தேவைப்படுகிறது.

கோவை தெற்கு, வேதாரண்யம், இரன்டு தொகுதிகளை நாம் உறுதியாக பிடித்துவிடுவோம் என நினைத்தோம். அதற்கான micro management ஐ செயல்படுத்தினோம். ஆனாலும் பெரும்பணம் கொடுத்து இரண்டு திராவிட கட்சிகளும் தங்கள் வாக்கை சிதறாமல் பார்த்துக் கொண்டது.

சென்னையில் இரண்டு தொகுதிகள் நம் ’தாக்குதல் திட்டத்தில்” இருந்தது. ’இடைவெளி அதிகமாக” இருந்ததால் ’’ஏவுகணைகள் ”இலக்கை” அடைய முடியவில்லை. கன்யாகுமரி முழுக்க முழுக்க மத அடிப்படை வாக்கு என்பதால் நமது ’தனித்துப்” போட்டிக்கு ’விடை” இவ்வளவுதான்.

தினத்தந்தியின் சிந்துபாத் கதை போல கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் இல்லாதபடி தொடர்ந்தபோதும்  நம் ஆதரவாளர்களே நம்மை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டபோதும் தைரியமாக நாம் தனியாகச் செல்வோம் என லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலித்தார் கேசவ வினாயகம் ஜி.

உடனடியாக பிரசுரம் அடிக்க உத்தரவு. அரசின் Red-tapism மாதிரி அனைத்துக்கும் முட்டுக்கட்டை போடாமல் உடனடி முடிவுகள், பணியை கொடுத்து விட்டால் முழு நம்பிக்கை, அதனால் முழு சுதந்திரம், என்ற இவரது பாணியால் பல முக்கிய விஷயங்களை அலைபேசியிலேயே விவாதித்து, ஒப்புதல்கள் பெற்றோம்.

ஜிங்கில்ஸ், விளம்பரம் இவற்றின் content ஐ கொண்டு காண்பிக்கும்போதுஇ அவற்றின் மையக்கருவை உள்வாங்கி திராவிட கட்சிகளுக்கு" பஞ்ச்" கொடுக்கும் வண்ணம் மாற்றிக் கொடுத்தார் டாக்டர் தமிழிசை. இவரது விரைவான முடிவு, சுதந்திரம், மீடியா துறையின் வேகத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

பட்டாம் பூச்சி போல ஹெலிகாப்டர்கள் பறந்தனவே! அது நமக்கு எந்த வகையிலாவது லாபமா? டெல்லி நம்மிடம் என்ன எதிர்பார்த்தது? அதை நாம் செய்தோமா? அடுத்து பார்ப்போம்.

Friday, June 17, 2016

நியூஸ்7 கேள்வி நேரம் --கேலி நேரம் ஆகலாமா?


சென்ற 11.06.16 இரவு 910 மணி நியூஸ்தொலை காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியில்பங்குபெற என்னைஅழைத்திருந்தார்கள்.தம்பி கிருஷ்ணா தொடர்ந்து அழைப்பு விடுத்ததாலும் ,முதல்நாளே நான்ஒப்புக்கொண்டுவிட்டதாலும்வந்த வேறு அழைப்புக்களை எற்க்காமல் இதில் பங்கு கொண்டேன்.

தம்பி கிருஷ்ணாவின் “உணவு உபசரிப்புக்கு”ப் பின்தம்பி விஜயன்செந்தில்வேல்அளவலாவலுக்கு பின்,தம்பிகள்கலாரசிகன் கரிகாலன்கமலக்கண்னன் புடைசூழபுத்தக திருவிழாவின் ஒருசில அரங்குகளைசுற்றிப்பார்த்தோம்.

விஜயபாரதம் அரங்கில் ஒரு சின்ன “பர்ச்சேஸ்’—வழியில் நண்பர் மனுஷ்யபுத்திரனை சந்திப்பு,முடித்துவிட்டு,நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தேன்.

முதல் 35 நிமிடங்கள்நிகழ்ச்சி உணர்ச்சிகரமாகஆனாலும் நன்றாகவே போனது..நண்பர் வேல்முருகன்எப்போதும் போல, “தமிழர்களின் ஏகோபித்த தலைவனாக ‘தன்னை காண்பிக்கும் முயற்ச்சிகளை செய்துகொண்டுபார்வையாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிய உரையை ஆற்றிவந்தார்.

பார்வையாளர்களில் அதுவரை இல்லாத சுறுசுறுப்பு திடீரென ஏற்பட்டது.என்னை நோக்கிமட்டுமே கேள்விகள்அடுக்கடுக்காக வந்தது..கேட்டவிதம்- வந்தவிதம்- எல்லாமே இயல்புக்கு மாறாக இருந்தபோதேஏதோ “சூதுஅரங்கேறுகிறது என்பது புரிந்தது..

என்னுடைய பதிலில் இடைமறித்து பார்வையாலர்கள் என்ற போர்வையில் வந்த சிலர்என் மீதும்ஆர்.எஸ்.எஸ்மீதும்பாஜகமீதும்பிரதமர் மோடிமீதும், “அமில வார்த்தைகளை” வீசினார்கள்.

அந்த’ கூச்சல்கள்ரசாபாசம்- ரகளையில்’, முடியவேண்டும்என்றும்ஒருவேளை “கைகலக்கும் அல்லதுதாக்குதல் முடிவும் அவர்கள் எடுத்திருக்கலாம் என்பதும் அவர்கள் செயல்பாடுகளில் புரிந்தது..

என்னுடைய பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது.யார் இடைமறித்தாலும்கட்டுப்பாடாக இருக்கும் என் இயல்புகுணம்அப்போதும் தொடர்ந்தது.எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து நான் பேசி இருந்தால்ஒருவேளை நான்தாக்கப்பட்டிருக்கலாம்.

தம்பி விஜயன் மட்டும் தொடர்ந்து அமைதிகாக்க வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தார்..”தூண்டியவர்கள்”,பின்னாலிருந்துகொண்டு “துடிப்பாக” செயல் பட்டதால், ‘தூண்டி விடப்பட்டவர்கள்’ தொடர்ந்து “ஏசுவதைதொடர்ந்தார்கள்.

அழைத்து வந்த விருந்தினர்களை திட்டமிட்டு அவமதிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் வெளிநடப்புசெய்திருக்கலாம்.ஆனால்,ஆர்.எஸ்.எஸ்கற்றுக்கொடுத்த கட்டுப்பாட்டால்திட்டமிட்டு கலகம்செய்தவர்களோடுவாக்குவாதம் செய்யாமல்அமைதிகாத்தேன்.

சகோதரர் இதயதுல்லா இறுதிவரை உச்சகுரலில் தனது எதிர்ப்புகளை பதிவு செய்துகொண்டிருந்தார்.

திரு வேல்முருகன் மட்டும் அத்தனை சபை நாகரீகத்தையும் பண்பையும் குப்பையில் வீசிவிட்டு, ‘கும்பலைஉசுப்பேற்றுவதிலும், ‘ஒன் அப் மேன்ஷிப்” வீரவசனங்கலையும் பேசியவண்ணம் இருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நடந்தேறிய விருந்தினர் அவமானங்கள்குறிப்பாக பாஜககாங்,மீது நடந்தது,யதேச்சையாக நடந்த்தாக தெறியவில்லை.
டிரெயினை பிடிக்க நான் 9.58க்கே புறப்பட்டு என் காருக்கு வரும்போது என்னை இரண்டு இளைஞர்கள்,துரத்திவந்து ‘ ஐய்யாஅங்கே ஒருகுழு நின்று கொண்டுகேள்விகளை எழுதிக்கொடுத்துஉங்களை நோக்கிஆட்களை அனுப்பியவண்ணம் இருந்தது”, ‘அனுப்பிய முகமும்பரிச்சயமானதாக இருந்ததுஎனச்சொல்லிஒருசில பெயர்களை சொன்னார்கள்.

நியூஸ்நிர்வாகத்தில் எனக்கு அத்தனை பேருமே நண்பர்கள்.இந்த நிகழ்ச்சி நியூஸ்நிர்வாகத்திற்கு ஒருகளங்கமா?, சறுக்கலாஎன்பதை அவர்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன்.


பாஜகவின் ‘மீடியா ஹெட்’ என்கிற முறையில்என் மனவேதனையைவருத்தத்தை பதிவுசெய்கிறேன்

Monday, June 13, 2016

பா. ஜ க வார் ரூம் ரகசியம் -1இது உள்விஷயம்
மூக வலைதளம் என்பதுஉடனடி தொடர்பு’ - ‘உடனடி பதில்’ ‘உடனடி மறுப்பு’. நமதுவளையம்எவ்வாறு பெரிதோ அதற்கேற்றவாறு நமது செய்திப் பரவல் இருக்கும்!

அரசியல், கலை, இலக்கியம், விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள்நொடிக்கு நொடிதங்களதுஇருப்பை(existintence) உலகுக்கு வெளிப்படுத்தும் மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியேசமூக வலைதளம்’.

2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் பங்கு அபரிமிதமானது! ஏறக்குறைய 184 நாடாளுமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை இது நிர்ணயிக்கும் என
தி இந்துபத்திரிகை எழுதியது!

உலகிலுள்ள அரசியல் தலைவர்களில்சோஷியல் மீடியாவைமிகப் பெரும் அளவு பயன்படுத்துபவர் என்ற பெருமை பெற்றவர் நமது பிரதமர் நரேந்திர மோடி!

குஜராத் கலவரத்திற்கு பிறகு இடது சாரி - காங்கிரஸ் ஆதரவு மீடியாக்கள் மோடியை வறுத்தெடுத்த போதும் மோடிக்கு எதிராகப் புதுப்புது அவதூறுகளை நாள் தோறும் அள்ளிவிட்டபோதும், பத்திரிகை தொலைக்காட்சிகள் ஆதரவே இல்லாத மோடி, ஆதரவு தேட புகுந்த இடம்தான் சமூக வலைதளம்!

இதை சரியாக பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை மோடி வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்! இந்த பணியில் மோடிக்கு பக்கபலமாக இருந்த குழுவிலிருந்து பிரிந்து வந்த ஒருவர்தான் பிராசாந்த் கிஷோர் என்பவர்.

இவர்தான் பிகார் தேர்தலில் நிதிஷுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவை திசை திருப்பியவர் என்று தேர்தல் வெற்றிக்கு பிறகு மீடியாக்கள் இவரை புகழ்ந்து தள்ளின!
இவ்வளவு கதைகளை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் பாஜகவின் சோஷியல் மீடியா பொறுப்பாளராக சட்டமன்ற தேர்தல் 2016ல் நான் பணியாற்றினேன்.

தமிழ்நாடு பாஜகவின் சோஷியல் மீடியா டீம் மிகவும் பலம் வாய்ந்தது. விவரமான, அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். டீம் தலைவர் பாலாஜி, வைதீஸ்வரன், வெங்கடேஷ் இவர்களின் அறிவுக்கு பஞ்சமில்லை. ஆனால்கீகொடுக்க ஆள் தேவைப்பட்டது!

பாஜக ஆதரவாளர் குழுமம் என்று கோவை தேசபக்தர் சிவகுமார் தலைமையில் இத்துறையில் ஏற்கனவே பணிகளை துவக்கியிருந்தது. டெல்லியில், பீகாரில் இத்துறையில் ஏற்கனவே களம் கண்ட கோவை சூரியாவும் சேர்ந்துகொள்ள டீம் களை கட்டியது.

ஆனால் வெறுமனே வெப்சைட்டை பராமரிப்பது, அவரவர் டைம்லைனில் சில பேனர்களை ஏற்றுவது, ஆயிரக்கணக்கில் லைக்குகள் பெறுவது என்று மட்டும் இருந்த தமிழ்நாடு பாஜக சோஷியல் மீடியாவிற்கு, ‘முழு முகம் கொடுத்துசரியானபடி வழிகாட்டியவர் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ்.

இதன் காரணமாகதமிழ்நாடு பிஜேபி பக்கம்எட்டு லட்சம் லைக்குகளை தாண்டியது. தினசரி 25 முதல் 50 புதுப்புது பேனர்கள் - ஒரு பங்கு மோடி அரசின் சாதனைகள், ஒரு பங்கு கழகங்களின் தகிடுதத்தங்கள், ஒரு பங்கு அதிரடி குற்றச்சாட்டுகள் என பொளந்து கட்டினோம்!

இது எந்த அளவிற்கு போனது என்றால் அதிமுக மீது நாம் வைக்கும் குற்றாச்சாட்டு பானர்கள், திமுக வலைதளங்களிலும் முரசொலியிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. திமுக மீது நாம் தொடுக்கும் கணைகளை அதிமுக தனது பக்கங்களில் வெளியிடத் துவங்கியது!

பாஜகவின் சமூக வலைதள பிரிவே முன்னணியில் இருக்கிறது எனஇந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியாஎழுதத் துவங்கின. ஒரு கட்டத்தில் அதிமுக வலைதள பிரிவு பின் தங்கியிருந்ததால், பாஜகவோடு போட்டிபோட வேண்டி, வலைதள பிரிவு தலைவரிலிருந்து அனைவரையும் அவர்கள் மாற்றினார்கள்!

தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்காத காரணத்தால் நாம் செய்த பிரயத்தனங்கள் வெளியே சொல்ல, தெரிய வாய்ப்பின்றி போனது!

நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானியின் காட்டமான பேச்சை தமிழில் வெளியிட்டது முதல் அதிரடி.

அஸ்ஸாம் - மே. வங்கம் - தமிழ்நாட்டில் மோடி பேசிய பேச்சுக்களை தமிழில் டப் செய்து வெளியிட்டது அடுத்த திருப்பம். இதற்கான ஷேர்கள் லட்சங்களை தாண்டியது! பாஜகவின் தேர்தல் அசைவுகள் எங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதை உடனுக்குடன் உலகுக்குச் சொல்ல நமது சோஷியல் மீடியா பெரிதும் பயன்பட்டது!

தலைவர்களது வருகை, சுற்றுப் பயணம், உரையின் சுருக்கம், இவைகள் மணித்துளி தோறும் அரங்கேறும் அப்லோடு செய்யப்படும். முக்கிய தலைவர்களின்லைவ்பொதுக் கூட்டங்களையுவா டிவிமூலம் பாஜக பக்கத்தில் வெளியிட்டோம்.

கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கான பாஜகவின் விமர்சனங்களை உடனுக்குடன் வெளியிட்டோம்!
மாநிலம் முழுவதும் இருக்கும் தொண்டர்களும் வேட்பாளர்களும் கட்சியின் பிரச்சார பாடல்கள், டிவி விளம்பரங்கள், தேர்தல் அறிக்கை, கணக்காளர் கையேடு, பேச்சாளர் கையேடு போன்றவற்றை டவுன்லோடு செய்து கொள்ளும் வண்ணம் நாம் அவைகளை நமது பக்கத்தில் அப்லோடு செய்து வைத்திருந்தோம்!

மாநிலம் முழுவதும் சுமார் 3,000 ஆட்டோக்களில் பிரச்சாரம் செய்ய தானியங்கி பிரச்சார ஒலித்தகடுகள் தயாரித்தோம். அதில் சென்னை, மதுரை, திருநெல்வேலி பாஷையில், ஆண், பெண், சிறுவர்கள் குரலை பதிவு செய்திருந்த விளம்பரம் மிகவும் பேசப்பட்டது.

முரளிதர் ராவ் சமூக வலைதளத்தின் நாடி நரம்புகளை அறிந்தவர். டெல்லியிலிருந்து இதில்கரைகண்டதனது உதவியாளர்களை தமிழக தேர்தலுக்காக வரவழைத்தார். தேசபக்தர் சிவகுமாருடன் இருந்த உள்ளூர் டீம் உடன் இணைந்து அது பணி புரிந்தது. மாநிலம் முழுவதும் வலைதளத்தை பின்னி எடுத்த இக்குழு, வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு தனித்தனி சட்டமன்ற தொகுதிகளை குறிவைத்து பணியாற்றியது. இந்த யுக்தி எந்த கட்சியாலும் பின்பற்றப்படவில்லை.
 மாநில மீடியாவின் பணிகளை அப்படியேபிரதி எடுத்துகோவை தெற்கு தொகுதியில் செயல்படுத்தியதால், வானதி சீனிவாசன் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசப்பட்டது!

தன்னை முக்கிய ஊடகங்கள் புறக்கணித்து அல்லது எதிராக எழுதியபோது, நமக்கென்று ஒரு கட்சி ஊடகமும் இல்லாதபோது சமூக வலைதளமே சரியான ஆயுதம் என தேர்ந்தெடுத்தது மோடியின் ராஜதந்திரம்.
இன்று உலகெங்கும் மோடியின் புகழுக்கு இதன் பங்கு முக்கியமானது! பாஜக போன்ற ஊடக பலமில்லாத கட்சிக்கு சமூக வலைதளம் ஒரு சரியான சாதனம்!
பாஜகவும் பரிவார் இயக்கங்களும் இதன் மகிமையை புரிந்துகொண்டு, ‘சரியாக,  பயன்படுத்தினால், எதிரிகளின் கோட்டைகளை தூள்தூளாக்கலாம்! சென்னை வெள்ளத்தில் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்தபோதும், நம் பணிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது சமூக வலைதளம் தான் என்பது நமக்குத்தெரியும்.

இந்த தேர்தலில் ஏராளமான பரிவார் இயக்கத்தினர் பணிபுரிந்தனர். இவர்களை கண்டுபிடித்து ஒரு சிறந்த அமைப்பு ஏற்படுத்தினால், வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு அது உபயோகமாக இருக்கும்!

"வெற்றி"- நாணல் கீற்றை "வீரவாளாக" புகழ்ந்து தள்ளும்... தோல்வி, காண்டீபத்தையும் துணி உலர்த்தும் கொடியாக தூக்கிப் போடும்!

தமிழக சட்டமன்ற தேர்தலில்  நமக்கு கிடைத்தபிரசாந்த் கிஷோர்கள்இப்படித்தான் மறைக்கப்பட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை வெளிக் கொணர்வோம்.