Pages

Tuesday, January 13, 2015

இந்திய தலைமை நீதிபதி தத்து - மோடியை பாரட்டக் கூடாதாம்?இந்திய தலைமை நீதிபதி தத்து பிரதமர் நரேந்திர மோடியை “மோடி சிறந்த தலைவர்” தொலை நோக்கு கொண்ட சிறந்த மனித பண்பாளர், நல்லாட்சி வேண்டும் என விரும்புபவர்” என கூறியுள்ளார்.

உடனே வந்தது கோபம்..... காங்கிரசுக்கு, கம்யூனிஸ்ட்களுக்கும்
“பதவியிலுள்ள தலைமை நீதிபதி பிரதமரை பாராட்டலாமா?” அரசுக்கு எதிராகத்தான் கோர்ட்டின் பிரதான வழக்குகள் உள்ளன. இது நீதியை தடம் புரளச் செய்யாதா? என காங்கிரசின் ஒரு  செய்தி தொடர்பாளர் சொல்ல-- நீதிபதி தத்து சொன்னது சரிதான் என காங்கிரசின் மற்றோரு செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனுசிங்க்வி சொல்ல எப்போதும் போல காங்கிரசில் இருவேறு கருத்துக்கள் நிலவியது.

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் ஆதங்கங்களுக்கு காரணம் என்ன?...காங்கிரஸ் போல ஊழலில் உறித்திளைத்து கேஸ் வாங்கியது போல .. ஏராளமான வழக்குகளை “மோடி” வாங்கப் போவதில்லை!

எனவே நீதிபதியை ”கையில் போட்டுக்கொள்ளும்”  அவசியம் மோடிக்கு  இல்லை! திருவள்ளுவரையும், பாரதியையும், தமிழ்நாட்டுக்கு வெளியே புகழ்பெற செய்வதில் ”உள்நோக்கம்” இருக்கிறது என புலம்பும் கம்யூனிஸ்டுகள் இப்படித்தான் குற்றம் சாட்டுவார்கள்!

திமுகவும், அதிமுகவும் ஒருவரையொருவர் பார்ப்பதில்லை. பேசுவதில்லை அப்படிச் செய்தால், அம்மாவும், ஐயாவும் “கட்டம் கட்டி விடுவார்கள்”.

அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்குமான நல்லுறவு “ஊழலிற்கு துணை போகும்” உறவாகவே உள்ளநிலையில் --இயல்பான நல்லுறவு இருந்தால் அது இவர்களுக்கு “கெட்டவார்த்தையாகிவிட்டது”

மீடியாக்கள்தான் “தத்துவிடம்” இயல்பாக பேசுவதுபோல் (ஆஃப் தி  ரெக்கார்டு என்பார்கள்) --பேசி அவரிடம் இவ்வளவு விஷயத்தை பெற்றிருக்கிறார்கள். அதற்கு மேல் பத்திரிக்கையாளர் தர்மத்தை மீறி வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கு மேல் இதை வைத்து விவாதம் நடத்துகிறார்கள்.

திரு தத்து அவர்கள் பதவி ஏற்றவுடன் பலமுறை  நீதித்துறை வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளுடன் மோடியை சந்தித்து இருக்கிறார். அவரது ஒவ்வொரு கோரிக்கையும், மோடி ஏற்றுக்கொண்டு உடனடியாக செயல்படுத்தி வருகிறார்.

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த கோரிக்கைகள் தத்துவுக்காக செயல்படுத்த படவில்லை. நாட்டிற்காக, நீதி பரிபாலன சீர்திருத்தங்களை ஏற்கனவே தன் சிந்தனையில் தீட்டி வைத்திருக்கும் மோடி செயல்படுத்தி வருகிறார்.
Print all
In new window

பெருமாள்முருகனின் “மாதொரு பாகன்”முடிவுக்கு..வந்தது


இந்துக்களுக்கு மனம் புண்படி எழுதும் எழுத்துக்கள்-- செய்யும் செயல்பாடுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. மொகலாயர், கிறிஸ்தவர்களால் மட்டுமல்ல நம் சொந்த இந்து சகோதரர்களே அதை செய்திருக்கின்றனர், செய்தும் வருகின்றனர்.

கடவுள் இல்லை என்பதும், மதமே இல்லை என்ற , 5000 வருடங்களுக்கு முன்பே “கர்வா” என்னு ம் சிந்தனை கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்.
அதற்காக பூமி உருண்டை என்ற கலிலியோ, கிறிஸ்த்தவத்துக்கு எதிரான சிந்தனையாளர் சாக்ரடீஸ் போன்றோரை தூக்கிலிடடது போல இந்துமதம் அவர்களை தூக்கிலிடவில்லை.

அந்த காலத்தில் 8 வகையான திருமண முறை இருந்தது என்றும் அதில் 4 வகை திருமண முறைகளை ---- ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும்== அதில் ஒன்று தான் “நியோகா” முறை என்பதும், மனுஸ்மிருத்தியில் குறிப்பிட்டிருக்கிறது.

நேற்றைய டிவி விவாதங்களில், “மாதொரு பாகனுக்கு” ஆதரவாக “நியோகா” முறை சொல்லப்பட்டு-- மகாபாரத்தில் அம்முறையில் பிறந்த ஒரு சிலரின் பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது.

தான் செய்த தவறை நியாயப் படுத்த , நாம் மதிக்கும் தலைவர்கள், புராணங்கள், நீதி நூல்களை “துணைக்கு அழைப்பது" இவர்களின் வழக்கம், வாடிக்கை. --

குடிகாரர்கள், காந்தியே ஒருமுறை மது அருந்தியதாக சொல்லியிருக்கிறாரே, மாமிசம் சாப்பிட்டதாக எழுதி இருக்கிறாரெ, அதனால் தான் நான் குடிக்கிறேன் என சொல்வதும் இந்த “அநியாயங்களுக்கு” ஆதரவு திரட்டுபவர்களின் வாதம்.

விதிவிலக்குகள் விதியாகக்கூடது.... அன்றைய காலத்தை இன்றைக்கு ஒப்பு நோக்கமுடியாது... “நீதிகள்” மட்டுமே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். “நெறிமுறைகள்” காலத்துக்கு காலம் மாறலாம்.....

பெருமாள் முருகனின் புத்தகத்தில், குழந்தையில்லா தம்பதிகள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரருக்கு எடுக்கப்படும் 15 நாள் திருவிழாவில், 14-ம் நாள், எந்த பெண்ணும் எந்த ஆணோடும் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்றும், அன்று ஊரிலுள்ள அத்தனை பொண்ணும் “தேவதாசிகள்” (நான் எழுத்தாளர் உபயோகித்த வார்த்தையை எழுதவில்லை) என்று குறிப்பிட்டுள்ளதும், ""இது பலகாலமாக கடைபிடிக்கப்பட்ட நடைமுறை"- என்று தமது எழுத்துக்கு அவர் நியாயத்தையும் கற்பித்திருப்பது மாபெரும் மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

91-வயது நிரம்பிய காளியண்ணன் என்னும் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் தனக்கு தெரிந்து இப்படி ஒரு நடைமுறை அங்கு இருந்ததே இல்லை என்று கூறியிருக்கிறார்.

கடையடைப்பு, போராட்டம் முடிந்து பேச்சுவார்த்தையும் முடிந்து பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பும், புத்தகத்தை திரும்பபெறுவதாக அறிவித்ததும் பிரச்சனையே முடிவுக்கு கொண்டு வந்திருப்பது ஆறுதலான செய்திதான்

ISIS ன் பாரீஸ் பத்திரிக்கை அலுவலக தாக்குதல்--சில உண்மைகள்

இம்மாதம் . முதல் வாரம்  பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக ஊழியர்கள் உட்பட  17 பேர் ISIS பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் பிரான்ஸ் நாட்டின் மிகச்சிறந்த “கார்டூனிஸ்டுகள்” ..முகம்மது நபிகளை உருவாக்க வரைந்தார்களாம் அதனால் இந்த தண்டனையாம்.

இப்பத்திரிக்கை மத......மொழி பாகுபாடு இல்லாமல் ஏசுகிறிஸ்து, போப்பாண்டவர் உட்பட பலரை கார்ட்டூன் வரைந்து கிண்டல் அடித்துள்ளது. இத்தனைக்கும் இதனுடைய சர்குலேசன் வெறும் 45,000 தான். ஏற்கனவே ஒருமுறை இதுமாதிரி படம் வரைந்து முஸ்லீம் பயங்கரவாதிகளால், இந்த பத்திரிக்கை தாக்கப்பட்டு அரசு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

இந்த தாக்குதல் நடத்தியது வீடியோவாக இணையதளத்தில் உலாவுகிறது. துப்பாக்கியால் குண்டு மழை பொழிந்த பயங்கரவாதிகள், இலக்கை நோக்கி சுட்டதை பார்க்கும் போது அனுபவம் மிக்க ராணுவ வீரர்களின் “துல்லியம்” மிகவும் அதிதுல்லியமாக இருந்தது, அவர்களுக்கு எவ்வளவு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரம். பின்னர் அவர்கள் வேறொரு இடத்தில் அடுத்த நாளே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் சிறப்பம்சம்.... இந்தியா போல அவர்களை நாட்டிலிருந்து தப்பிவிடுவதும், கைதுசெய்து, தண்டனை கொடுக்காமல் ஆதரவு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிப்பதும் அங்கு நடக்கவில்லை.

சுமார் 1400 பேர் பிரான்ஸிலிருந்து சிரியாவிற்கு சென்று ISIS யிடம் பயிற்சி பெறுவதாகவும், அதில் 800 பேர் தற்போது பிரான்சுக்குள் வந்துவிட்டதாகவும், இனி “பிரான்சுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் சகஜமாகிவிடும்” என்பதும் பிரான்சை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இத்தாக்குதலுக்கு 40 உலகத்தலைவர்களையும் அழைத்து 30 லட்சம் மக்கள் கண்டன ஊர்வலம் போனது, பயங்கரவாததிற்கு எதிராக அம்மக்களின் மனேநிலைக்கு சான்று!

நாமும், மன, மத மாச்சர்யங்களை, மண்ணில் புதைத்துவிட்டு, பயங்கரவதத்தை இந்திய மண்ணிலிருந்து விரட்ட ....என்று ....ஒன்று ..சேருவோம்?

மைத்ரிபாலா சிறீசேனா மோடியோடு ஜோடி சேருவாரா?


இலங்கை அதிபர் தேர்தல், சார்க் நாடுகளில் குறிப்பாக இந்தியாவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு.... தேர்தல் வழிமுறைகளும், மிகப் பெரும் ஆச்சரியம், மற்றும் திகில் கதை திடீர் திருப்பங்கள்!

ஜோசியர்களின் பேச்சை நம்பி மகிந்திரா ராஜபஷே தன் பதவி காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்பே தேர்தலை நடத்தியது... (இந்து மதம் இரண்ய கசிபுகளுக்கு இப்படித்தான் இறுதி நிலை கொண்டு வரும்). “கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை” என்ற ராஜபஷேவிற்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை ‘எதிரி’ அவரின் மந்திரி சபைக்குள்ளே இருக்கிறார் என்று தெரியவில்லை.

SLFP மற்றும் UNP கட்சிகளே “வேட்பாளர்” கிடைக்காமல் போட்டியிடாத போது மைதிரிபாலா ஸ்ரீசேன என்னு ம் ராஜபஷே மந்திரிசபை, மந்திரி களத்தில் குதித்தார். தீவிரசிங்களவாத JHU வும் தமிழ்வாத TNA-யும் முஸ்லீம் வாத முஸ்லீம் கட்சிகளும் ஒவ்வொன்றாக களத்தில் ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

கட்சியே இல்லாத, சிறிசேனா என்னும் தன் சொந்த கட்சிகாரரால் ராஜபஷே தோற்கடிக்கப்பட்டார். இதுதான் “அட்ரஸ் இல்லாதவரால்” அக்கிரமக்காரர்கள் ஆண்டவன் தண்டிக்கும் யுக்தி!

சரி ஏன் இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு முக்கியமானது?

ஸ்ரீலங்கா கடந்த 10-ஆண்டுகளாக அதிகமாக சீனா பக்கம் சாய்ந்துள்ளது. எம்மன ஹோட்ட துறைமுக திட்டத்தில் சீனா 1117 மிலியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. கொழும்பு சிட்டி துறைமுக திட்டத்திலும் 1.4 பிலியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் 3-ல் 1-பகுதியை 99-ஆண்டுகால “லீஸ்” எடுத்துள்ளது. 4.8 பிலியன் டாலருக்கு   இலங்கை, விரைவுசாலை, துறைமுகம், ஏர்ப்போர்ட், நீர்பாசனம், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த ஆர்டர் வாங்கியுள்ளது.

இதனால் இந்தியாவிற்கு என்ன  பிரச்சனை என்பது நீங்கள் கேட்பது புரிகிறது?

ஒரு அண்டை நாடு, நம்மோடு நல்லுறவில் இல்லை என்றால் நமக்கு பொருளாதார இழப்பு, பாதுகாப்பு அச்சுறுத்துதல், அதுவே, நம் எதிரிக்கு அடைக்கலம் கொடுத்து அவரது வியாபாரம் மற்றும் ராணுவத்தை அந்நாட்டில் முகாமிடச்  செய்தால், நம்நிலை என்னவென்ற் சொல்வது?

அதுதான் இலங்கையில் நடக்கிறது. வெற்றி பெற்ற ஸ்ரீ சேனாவும் அவரை ஆதரித்த ரனில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா இருவரும் சீன எதிர்ப்பு, மேற்கு நாடுகள் ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் இது நமக்கு சாதகமான அம்சம்!

தமிழர்கள் மற்றும் மைனரிட்டி ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதால், ஸ்ரீசேனா தமிழர்களுக்கு “உதவி செய்ய” கடமைபட்டவர்.... செய்வாரா? என்பது போக போகத்தான் தெரியும்!

இந்தியா தனது ராஜேந்திர உறவை சிறப்பாக பயன்படுத்தி வருவது ஸ்ரீலங்கா விஷயத்தில் கண்கூடு... ராஜபஷேவை “மீனவர்களை தூக்கு தண்டனையிலிருந்து” விடுவிக்க செய்தது முதல் செய்தி. ராஜபஷே ஆட்சி மாற்றத்தை தடுக்க “எமர்ஜன்சி” அறிவிக்க முயன்றதை தடுத்து நிறுத்துயது இரண்டாவது செய்தி. ஸ்ரீசேனாவை மோடி வாழ்த்தியது மட்டுமல்ல, இந்தியாவிற்கு வருகை தர அழைப்புவிட்டது மூன்றாவது செய்தி!


கடனில் மூழ்கியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதாரத்தை மீட்க இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்பது ஸ்ரீசேனாவிற்கு தெரியும். மோடியும் இதை பயன்படுத்தி, பொருளதார உதவிகள் மூலம் உறவு மற்றும் நட்பை வலுப்படுத்துவார்.

இவை செயலாக்கப் பெறும் போது, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும்.தமிழ் நாட்டில் "தமிழ் வியாபாராம் "செய்துவரும் கட்சிகள் வியாபாராம் மூழ்கி போண்டியாகும் ..

Friday, January 9, 2015

தி.மு.க...கிணத்துக்குள் சூராவளி

     திமுக உட்கட்சி தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது. இது கட்சியின் 12-வது தேர்தலாம்..... ஈ.வெ.ராமசாமி நாயக்கர் “கொள்ளுப்பேத்திவயதில் இருந்த மணி அம்மையை திருமணம் செய்ததால் அண்ணாதுரை, திராவிடர்  கழகத்திலிருந்து பிரிந்து, ஒரு “முன்னேற்றத்தைசேர்த்து (யாருக்கு முன்னேற்றம் என்பது இப்போது தான் தெரிகிறது) திமுக ஆரம்பித்தார்.
     இந்த “கொள்கை வித்தியாசத்தில்உதித்த திமுக பிற்காலத்தில் பல்வேறு “கொள்கைகளைஉருவாக்கி.... பதவிக்காக் பலி கொடுத்தது உலகறிந்த ரகசியம்.... திமுகவின் கதை முடியப்போகும் நேரம் வந்துவிட்ட போது, "இந்த கதைகளை" தொடர்ந்து என்ன லாபம்? சரி விஷயத்துக்கு வருகிறேன்.....
     இந்த கட்டுரையை நீங்கள் படிக்கும் போது திமுக தலைவராக 92-வயது கருணாநிதியும், 94-வயது அன்பழகன் அதன் பொதுச் செயலாளரும், 61-வயது ஸ்டாலின் (கருணாநிதியின் 2-வது மகன்) பொருளாளருமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள்.
     இது தான் தெரிந்த விஷயமே! நீங்கள் புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்கு கேட்கிறது!

புதிது ஒன்றுமில்லை. புரியாதது ஒன்றை உங்களிடம் கேட்கப் போகிறேன்!
     கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி... ஆரம்பம் முதலே கொஞ்சம் “அழுணிப்பிள்ளை”... சவலைப் பிள்ளை என்பார்கள்! ஸ்டாலினுடன் போட்டி போட்டு திமுக “தென்மண்டல அமைப்புச் செயலாளர்என்ற பதவி உருவாக்கப்பட்டு, மகுடம் சூடப்பட்டு, திருமங்கலம் பார்முலாஎன்ற புதிய “ஊழல் தேர்தல் யுக்தியைஉருவாக்கி, மந்திரிசபை கூட்ட்த்துக்கே போகாத மத்திய அமைச்சராகி, தனது மனதில் நினைத்ததை பேசும் “அம்மா பிள்ளை” ஆவார் ..
     தற்போது திமுக தன் வசம் தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என கடுமையாக போராடி வருகிறார். இதன் வெளிப்படையாக தனக்கு பதவி வேண்டும்என்பதை அம்மா மூலம் அப்பாவிடம் சொல்ல வந்த அழகிரியை “வாயைக் கிண்டிபத்திரிக்கைகாரர்கள் மனதில் இருந்ததை வெளியேற்றி விட்டனர்.
     திமுக திருடர்களின் கூடாரம்.... யார் திருடன் என்பது உங்களுக்கே தெரியும்.... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை  ஒழிக்க முடியாது” “திமுக திருந்தினாலே தான் அதில் சேருவதை பற்றி யேசிப்பேன்”... என திருவாய் மலர்ந்து அருளினார்.
அழகிரியின் வார்த்தை ஒவ்வொன்றும் லட்சம் கோடி பெறும்.(2 ஜி  போல ) இதை கண்டித்து திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி அறிக்கைவிட்டுள்ளார் வெறும் கண் துடைப்பு அறிக்கை....
     அழகிரியை “முதல்வர் பதவிக்குமக்கள் முன்மொழியவில்லை என “தினகரன்பத்திரிக்கை கருத்து வெளியிட்டதால், தினகரன் அலுவலகம் தீக்கரையாக்கப்பட்ட்து. இரண்டு அப்பாவிகள் எரிந்து சாம்பலாயினர்.
     அழகிரியின் வளர்ச்சிக்கு திமுக முன்னாள் மந்திரி தா. கிருஷ்ணன் தடையாக இருந்ததால், தா. கிருஷ்ணன் கொல்லப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டபோது, “திமுக வில் இப்படி உட்கட்சி கொலைகள் சாதாரணம் தான்என கருணாநிதி திருவாய் மலர்ந்து அருளியதை யாரும் மறந்துவிட முடியாது.
     ஸ்டாலினுக்கு எதிராக, கருணாநிதிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவித்ததால், அவர் வீடு தாக்கப்பட்ட்து... பாவம் பயந்து ஓடி அவர் காங்கிரசில் ஒளிந்து கொண்டார்.
     ஆக மகன்களை குற்றம் சொல்பவர்கள், தண்டிக்கப்படுவார்கள்! மகன்களுக்குள்ளே எழும் குற்றச்சாட்டுக்கள் மன்னிக்கப்படும்!

லட்சக்கணக்கான தொண்டனின் வேர்வையில், உழைப்பில் உருவான திமுக என்னும் ஆலமரம் அது உருவாக்கிய வழித்தோன்றல் “விழுதுகளை
நம்பாமல், “பழுதுகளால்முட்டு கொடுக்கப்பட்டிருப்பது---, அரசியலில் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், அமைப்பு ரீதியாக வளர்ந்த கட்சி முறையில், திமுகவின்  “சரிவுவருத்தத்தை அளிக்கிறது.
     நமக்கு புரியாத விஷயம் கருணாநிதியின் உண்மையான ஆதரவு கட்சிக்கா? குடும்பத்திற்கா? குடும்பத்திற்குதான் என்றால் குடும்பத்தில் யாருக்கு? இந்த வாரிசுப் போரைமுடிவுக்கு கொண்டு வந்துவிட்டால், கடைசி காலத்தில் கருணாநிதிக்கு, மகன்கள் துணை வராவிட்டாலும், மன நிம்மதியும் ஆறுதலும் துணைவரும்
.
     குமுதம் குடும்பச் சண்டையை தீர்த்து வைத்த கருணாநிதிக்கு உதவ யாருமே இல்லையா? வைரமுத்துவும் – கி.வீரமணியும் கொஞ்சம் சமாதானம் செய்து பாருங்களேன்!.----பிளீஸ்

Thursday, January 8, 2015

”இந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்”…… சாஷி மகராஜ் பேசியது தவறா?


  உ.பி. மாநிலம் உன்னோவா லோக்சபா தொகுதியின் M.P சாஷி மகராஜ்... இவர் மனதில் பட்டதை மறைக்காமல் பேசுபவர். இவர் பேசுவதை ”மறைந்து நின்று” பார்த்து, ”மறந்தும்” உண்மை கலக்காமல். தலைப்புச் செய்தியாக வெளியிடுவது பத்திரிக்கைகளுக்கு தலையாய கடமை...ஆகி வருகிறது
.
     கோட்சே பற்றி இவர் பேசிய பேச்சை “பூதமாக்கி பெரிதுபடுத்தி ஒரு வாரம் செய்தியாக ஓட்டினார்கள்”... நிரஞ்ஜனா ஜோதி என்கிற தலித் இன பெண்,--- சாமியாரான இவரது பேச்சுக்களுக்கு “மதவாத உரைஎழுதி “ஒரு மாதம்அமர்களப்படுத்தினார்கள். தற்போது சாஷி மகராஜ் “இந்துக்கள் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்என்கிற பேச்சை அரசியலாக்கி ஊடகங்கள் “விவாத மேடைகளில்அரங்கேற்றி வருகிறார்கள்!
     அதிலும் கூட “பாதி பேச்சை மட்டும் பிரசுரித்துமீதியை மறைத்து விவாதம் நடத்துகிறார்கள்! ஆம் பாதியை மட்டும் போட்டால் தான்.... மீதியை மறைத்தால்தான்... “விவாதமேநடத்த முடியும்.
     சாஷிமகராஜ்... பேசியது என்ன. உ.பி. மாநிலம் மீரட் நகரில்.. ஒரு இந்து சாமியார்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

“நாம் இந்துக்கள்... நாம் இருவர் நமக்கு ஒருவர்
என்கிற கொள்கையை கடைபிடித்து ஒரு குழைந்தை மட்டும் பெற்றுக் கொள்கிறோம். நாம் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை ஆன்மீகத்துக்கு தத்துக் கொடுத்து சன்னியாசி ஆக்க வேண்டும். இன்னொரு குழந்தையை -நாட்டுக்கு தத்துக் கொடுத்து ராணுவ வீரனாக்க வேண்டும். குடும்பத்திற்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
     இதில் என்ன தவறு இருக்கிறது. உடனடியாக இதற்கு எதிர்ப்பு..... மாபெரும் எதிர்ப்பு.... காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி கண்டனம்... ”உடனடியாக நரேந்திர மோடி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ராஜ் நாத் சிங்கும் நரேந்திர மோடியும் ஏன் மெளனம் காக்கிறார்கள்?” என தொடர்ந்தது மீடியாக்களின் செய்திகள்....

முதலில் ஒரு சில ஊடகங்களில் சாஷி மகராஜ் 4 குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்என்று பேசப்பட்டதாக மட்டும் செய்திகள் வந்தது. இதன் மூலம் சாஷி மகராஜையும் பாஜாகவையும், மோடி அரசையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எதிராக பேசுவதாகவும் இந்திய மக்கள் தொகை கொள்கைக்கு எதிராக பேசுவதாகவும் குற்றம் சொல்ல வழிவகை செய்ய முயன்றார்கள்...
     மாறாக முழு பேச்சான, ”ராணுவத்துக்கு ஒருவர், ஆன்மீகத்துக்கு  ஒருவர், குடும்பத்திற்கு ஆணொன்று பெண்ணொன்று என்று சொன்னால் குற்றம் காண முடியாதல்லவா?
     எனவே இது “செலக்டிவ் அட்டாக்தொடர்ந்து ஊடகங்களும் காங்கிரசும் இதைத்தான் செய்து வருகிறது.
     இதில் வேடிக்கை என்னவென்றால், இது சம்பந்தமான பாஜக மற்றும் மோடி அரசை கண்டிக்கும் வகையிலான ஊடகங்களின் விவாதங்களில் முஸ்லீம் கட்சியினரும் கலந்து கொண்டு சாஷி மகராஜின் 4 குழந்தை பேச்சை கண்டிக்கின்றனர்.
     ”4 மனைவிகளின் 14 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் இவர்களை கண்டிக்க ஊடகங்களும் மற்ற கட்சிகள்ம் வராது” என்கிற தெம்பு அவர்களிடம் உள்ளது.
     மோடி அரசின் வளர்ச்சிப் பாதையின் வேகம், ஊழலற்ற நிர்வாகம், ஊடகங்கள் கண்களை உருத்துவதால், குறைகள் கண்டுபிடிக்க வாய்ப்புகளே கிடைக்கததால், அர்த்தமற்ற, ஆக்க பூர்வமற்ற “டீக்கடைபேச்சுக்களை, ”திண்ணை லாவணிக் கச்சேரிகளை”.. காங்கிரசும் ஊடகங்களும் நடத்தி வருகின்றனர்.
     இன்னும் கொஞ்சகாலம் ஊடகங்கள் நிலை பரிதாபம்தான். காங்கிரஸ் கொடுத்த மாதிரி “ஊழல்செய்திகள் பாஜக கொடுக்காத்தால் வந்த ஏக்கம் இது!
     ஆனால்,கொஞ்ச காலத்துக்குள் ஊடகங்கள் வளர்ச்சி பற்றி செய்தி வெளியிடும் கட்டாயத்துக்கு மக்களால் தள்ளப்பட்டுவிடும். அப்போதே..அப்போது மட்டுமே  ஊடகங்களின் ஆக்க பூர்வ செயல்பாடுகள் ஆரம்பமாகும்.