Pages

Monday, June 13, 2016

பா. ஜ க வார் ரூம் ரகசியம் -1இது உள்விஷயம்
மூக வலைதளம் என்பதுஉடனடி தொடர்பு’ - ‘உடனடி பதில்’ ‘உடனடி மறுப்பு’. நமதுவளையம்எவ்வாறு பெரிதோ அதற்கேற்றவாறு நமது செய்திப் பரவல் இருக்கும்!

அரசியல், கலை, இலக்கியம், விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள்நொடிக்கு நொடிதங்களதுஇருப்பை(existintence) உலகுக்கு வெளிப்படுத்தும் மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியேசமூக வலைதளம்’.

2014 நாடாளுமன்ற தேர்தலில் இதன் பங்கு அபரிமிதமானது! ஏறக்குறைய 184 நாடாளுமன்ற தொகுதிகளின் வெற்றி தோல்வியை இது நிர்ணயிக்கும் என
தி இந்துபத்திரிகை எழுதியது!

உலகிலுள்ள அரசியல் தலைவர்களில்சோஷியல் மீடியாவைமிகப் பெரும் அளவு பயன்படுத்துபவர் என்ற பெருமை பெற்றவர் நமது பிரதமர் நரேந்திர மோடி!

குஜராத் கலவரத்திற்கு பிறகு இடது சாரி - காங்கிரஸ் ஆதரவு மீடியாக்கள் மோடியை வறுத்தெடுத்த போதும் மோடிக்கு எதிராகப் புதுப்புது அவதூறுகளை நாள் தோறும் அள்ளிவிட்டபோதும், பத்திரிகை தொலைக்காட்சிகள் ஆதரவே இல்லாத மோடி, ஆதரவு தேட புகுந்த இடம்தான் சமூக வலைதளம்!

இதை சரியாக பயன்படுத்தி, எதிர்ப்பாளர்களை மோடி வைக்க வேண்டிய இடத்தில் வைத்தார்! இந்த பணியில் மோடிக்கு பக்கபலமாக இருந்த குழுவிலிருந்து பிரிந்து வந்த ஒருவர்தான் பிராசாந்த் கிஷோர் என்பவர்.

இவர்தான் பிகார் தேர்தலில் நிதிஷுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவை திசை திருப்பியவர் என்று தேர்தல் வெற்றிக்கு பிறகு மீடியாக்கள் இவரை புகழ்ந்து தள்ளின!
இவ்வளவு கதைகளை ஏன் சொல்கிறேன் என்று சொன்னால் பாஜகவின் சோஷியல் மீடியா பொறுப்பாளராக சட்டமன்ற தேர்தல் 2016ல் நான் பணியாற்றினேன்.

தமிழ்நாடு பாஜகவின் சோஷியல் மீடியா டீம் மிகவும் பலம் வாய்ந்தது. விவரமான, அர்ப்பணிப்பு உள்ள தொண்டர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். டீம் தலைவர் பாலாஜி, வைதீஸ்வரன், வெங்கடேஷ் இவர்களின் அறிவுக்கு பஞ்சமில்லை. ஆனால்கீகொடுக்க ஆள் தேவைப்பட்டது!

பாஜக ஆதரவாளர் குழுமம் என்று கோவை தேசபக்தர் சிவகுமார் தலைமையில் இத்துறையில் ஏற்கனவே பணிகளை துவக்கியிருந்தது. டெல்லியில், பீகாரில் இத்துறையில் ஏற்கனவே களம் கண்ட கோவை சூரியாவும் சேர்ந்துகொள்ள டீம் களை கட்டியது.

ஆனால் வெறுமனே வெப்சைட்டை பராமரிப்பது, அவரவர் டைம்லைனில் சில பேனர்களை ஏற்றுவது, ஆயிரக்கணக்கில் லைக்குகள் பெறுவது என்று மட்டும் இருந்த தமிழ்நாடு பாஜக சோஷியல் மீடியாவிற்கு, ‘முழு முகம் கொடுத்துசரியானபடி வழிகாட்டியவர் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ்.

இதன் காரணமாகதமிழ்நாடு பிஜேபி பக்கம்எட்டு லட்சம் லைக்குகளை தாண்டியது. தினசரி 25 முதல் 50 புதுப்புது பேனர்கள் - ஒரு பங்கு மோடி அரசின் சாதனைகள், ஒரு பங்கு கழகங்களின் தகிடுதத்தங்கள், ஒரு பங்கு அதிரடி குற்றச்சாட்டுகள் என பொளந்து கட்டினோம்!

இது எந்த அளவிற்கு போனது என்றால் அதிமுக மீது நாம் வைக்கும் குற்றாச்சாட்டு பானர்கள், திமுக வலைதளங்களிலும் முரசொலியிலும் விளம்பரப்படுத்தப்பட்டது. திமுக மீது நாம் தொடுக்கும் கணைகளை அதிமுக தனது பக்கங்களில் வெளியிடத் துவங்கியது!

பாஜகவின் சமூக வலைதள பிரிவே முன்னணியில் இருக்கிறது எனஇந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியாஎழுதத் துவங்கின. ஒரு கட்டத்தில் அதிமுக வலைதள பிரிவு பின் தங்கியிருந்ததால், பாஜகவோடு போட்டிபோட வேண்டி, வலைதள பிரிவு தலைவரிலிருந்து அனைவரையும் அவர்கள் மாற்றினார்கள்!

தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்காத காரணத்தால் நாம் செய்த பிரயத்தனங்கள் வெளியே சொல்ல, தெரிய வாய்ப்பின்றி போனது!

நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானியின் காட்டமான பேச்சை தமிழில் வெளியிட்டது முதல் அதிரடி.

அஸ்ஸாம் - மே. வங்கம் - தமிழ்நாட்டில் மோடி பேசிய பேச்சுக்களை தமிழில் டப் செய்து வெளியிட்டது அடுத்த திருப்பம். இதற்கான ஷேர்கள் லட்சங்களை தாண்டியது! பாஜகவின் தேர்தல் அசைவுகள் எங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதை உடனுக்குடன் உலகுக்குச் சொல்ல நமது சோஷியல் மீடியா பெரிதும் பயன்பட்டது!

தலைவர்களது வருகை, சுற்றுப் பயணம், உரையின் சுருக்கம், இவைகள் மணித்துளி தோறும் அரங்கேறும் அப்லோடு செய்யப்படும். முக்கிய தலைவர்களின்லைவ்பொதுக் கூட்டங்களையுவா டிவிமூலம் பாஜக பக்கத்தில் வெளியிட்டோம்.

கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கான பாஜகவின் விமர்சனங்களை உடனுக்குடன் வெளியிட்டோம்!
மாநிலம் முழுவதும் இருக்கும் தொண்டர்களும் வேட்பாளர்களும் கட்சியின் பிரச்சார பாடல்கள், டிவி விளம்பரங்கள், தேர்தல் அறிக்கை, கணக்காளர் கையேடு, பேச்சாளர் கையேடு போன்றவற்றை டவுன்லோடு செய்து கொள்ளும் வண்ணம் நாம் அவைகளை நமது பக்கத்தில் அப்லோடு செய்து வைத்திருந்தோம்!

மாநிலம் முழுவதும் சுமார் 3,000 ஆட்டோக்களில் பிரச்சாரம் செய்ய தானியங்கி பிரச்சார ஒலித்தகடுகள் தயாரித்தோம். அதில் சென்னை, மதுரை, திருநெல்வேலி பாஷையில், ஆண், பெண், சிறுவர்கள் குரலை பதிவு செய்திருந்த விளம்பரம் மிகவும் பேசப்பட்டது.

முரளிதர் ராவ் சமூக வலைதளத்தின் நாடி நரம்புகளை அறிந்தவர். டெல்லியிலிருந்து இதில்கரைகண்டதனது உதவியாளர்களை தமிழக தேர்தலுக்காக வரவழைத்தார். தேசபக்தர் சிவகுமாருடன் இருந்த உள்ளூர் டீம் உடன் இணைந்து அது பணி புரிந்தது. மாநிலம் முழுவதும் வலைதளத்தை பின்னி எடுத்த இக்குழு, வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு தனித்தனி சட்டமன்ற தொகுதிகளை குறிவைத்து பணியாற்றியது. இந்த யுக்தி எந்த கட்சியாலும் பின்பற்றப்படவில்லை.
 மாநில மீடியாவின் பணிகளை அப்படியேபிரதி எடுத்துகோவை தெற்கு தொகுதியில் செயல்படுத்தியதால், வானதி சீனிவாசன் பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசப்பட்டது!

தன்னை முக்கிய ஊடகங்கள் புறக்கணித்து அல்லது எதிராக எழுதியபோது, நமக்கென்று ஒரு கட்சி ஊடகமும் இல்லாதபோது சமூக வலைதளமே சரியான ஆயுதம் என தேர்ந்தெடுத்தது மோடியின் ராஜதந்திரம்.
இன்று உலகெங்கும் மோடியின் புகழுக்கு இதன் பங்கு முக்கியமானது! பாஜக போன்ற ஊடக பலமில்லாத கட்சிக்கு சமூக வலைதளம் ஒரு சரியான சாதனம்!
பாஜகவும் பரிவார் இயக்கங்களும் இதன் மகிமையை புரிந்துகொண்டு, ‘சரியாக,  பயன்படுத்தினால், எதிரிகளின் கோட்டைகளை தூள்தூளாக்கலாம்! சென்னை வெள்ளத்தில் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்தபோதும், நம் பணிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது சமூக வலைதளம் தான் என்பது நமக்குத்தெரியும்.

இந்த தேர்தலில் ஏராளமான பரிவார் இயக்கத்தினர் பணிபுரிந்தனர். இவர்களை கண்டுபிடித்து ஒரு சிறந்த அமைப்பு ஏற்படுத்தினால், வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கு அது உபயோகமாக இருக்கும்!

"வெற்றி"- நாணல் கீற்றை "வீரவாளாக" புகழ்ந்து தள்ளும்... தோல்வி, காண்டீபத்தையும் துணி உலர்த்தும் கொடியாக தூக்கிப் போடும்!

தமிழக சட்டமன்ற தேர்தலில்  நமக்கு கிடைத்தபிரசாந்த் கிஷோர்கள்இப்படித்தான் மறைக்கப்பட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை வெளிக் கொணர்வோம்.

3 comments:

Avargal Unmaigal said...

ஆமாம் நீங்கள் சமுக வலைத்தளங்களில் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் தமிழ்நாட்டில் கிடைக்கும் பலன் என்னவோ ஜீரோவாகத்தான் இருக்கிறது...

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

Virtual BJP!

S.Sundar said...

Ground work is not followed after web probaganda. That is why BJP not able to come up.