Pages

Saturday, July 28, 2012

அஸ்ஸம் கலவரமும்---- குஜராத் கலவரமும்

அஸ்ஸாமில் கடந்த 20 ம் தேதி 4 போடோ போராளிகளை
நடு ரோட்டில் அஸ்ஸாம் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்கள் வெட்டி சாய்த்ததால்..அஸ்ஸாம் இன்று பற்றி எரிகிறது.

3.5 லட்சம் பேர் மாநிலத்திற்குள்ளேயே அகதிகள். 275 அகதி முகாம் கள். 42 பேர் பலி. இப்படி ஒரு நிலை தேவையா? எவ்வளவு வருத்தகரமாக இருக்கிறது.

இந்த சம்பவம் யாரால் துவக்கப்பட்டது?..சிறுபான்மை முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பால்….ஏன் துவக்கப்பட்டது?..காங்கிரசின் ஓட்டுவங்கி அரசியலால்….வங்காள தேசத்திலிருந்து “சட்டத்துக்கு புறம்பாக “ குடியமர்த்தப்பட்ட, 30 லட்சம் முஸ்லீம் வாக்களர்களுக்கும், உள்ளூர் போடோ பழங்குடி இனத்தவருக்கும் ஏற்பட்ட மோதலால்  துவங்கியது.

இந்த அஸ்ஸாம் கலவரம், பல்வேறு வகைகளில், காங்கிரஸ்,..மனித உரிமை ஆர்வலர்கள், வெளிநாட்டின் கையூட்டு பெற்று இந்திய ரத்தம் குடிக்கும் பல்வேறு ஊடகங்கள், இடது சாரிகள், பெண்ணியவாதிகள், போலிமதசார்பற்ரவர்கள், என, பல்வேறு இயக்கங்களின் “சாயத்தை “ வெளுக்கவைத்து விட்டது..

குஜராத்தின் கோத்ரா ரயில் நிலயத்தில்,56 அப்பாவி கரசேவகர்கள், கம்பார்ட்மெண்ட் வெளியே தாழிடப்பட்டு, மண்ணெண்ணை உள்ளெ வீசப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள் அதற்கான எதிர்விளைவை குஜராத் சந்தித்தது.

காலை 7 மணிக்கு கோத்ரா ரயில் எரிப்பு..இரவு 7 மணிக்கு மோடி ராணுவத்திற்கு அழைப்பு..ராணுவம் 48 மணி நேரம் கழித்து வந்தது..அதனால் மோடி முஸ்லீம் விரோதி..மதவாதி..

20.7.12..அஸ்சாமில் போடோ தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள்..கலவரம் வெடிக்கிறது..கோக்ராஜ்ஹர் மாவட்ட கலக்டர் ராணுவத்தை அழைக்க …அஸ்ஸாம் காங்கிரஸ் அரசுக்கு அழைப்பு விடுக்கிறார்.4 நாள் கழித்து ராணுவம் வருகிரது.மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் தான் ஆளுகிறது..பெரும்பாலான பாதிப்பு முஸ்லீம்களுக்குத்தான் என “ இந்துப்பத்திரிக்கை” எழுதுகிறது..

குஜராத்தில் 2 நாள் கழித்து ராணுவம் வந்ததற்காக மோடிமீது வீசப்பட்ட தாக்குதல்கள் எவ்வளவு?;; 4 நாள் கழித்து அஸ்ஸாமில் ராணுவம் வந்ததற்கு இதே குரல்கள் கண்டிக்கவில்லை ..கனைப்புக்கள்கூட இல்லை..

ஏன் மதசார்பற்ற காங்கிரஸ் முஸ்லீம்களை தண்டித்தது? அப்படியானால் அஸ்ஸாம் காங்கிரஸ் முதல்வர்  அருண் கோகை ஆர்.எஸ்.எஸ்.காரரா? இந்து வெறியனா? முஸ்லீம் விரோதியா?

ஏன் இவரை தோலுரிக்க மீடியாக்கள் வரவில்லை? பர்க்கா தத்தும் அருந்ததி ராயும் எங்கே போனார்கள்?
இன்னொரு சுவாரசியமும் நடந்தேரியிருக்கிரது..அஸ்சாம் முதல்வர் அருண்கோகை “ ”பத்திரிக்கைகள்..டி.விக்கள்.,,அடக்கிவாசியுங்கள்,.அனாவசியமாக பொய் செய்திகள் வெளியிட்டு கலவரம் பெருக காரணமகிவிடாதீர்கள்,” என உருக்க மாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அப்படியானால் குஜராத் கலவரத்தின் போது “லைவ் “ டெலிகாஸ்ட்” செய்தனரே பர்கா தத்தும்,,ராஜ்தீப் சர்தேசாயும். பிரணாய் ராயும்,..அப்போது சிரித்து,,குதூகலித்து மகிழ்ந்தனரே காங்கிரஸ்காரர்கள்..அது சரிதானா?

மோடி ..முடிய வேண்டும்..அதற்காக குஜராத் பற்றி எரிந்தாலும் பரவாயில்லை என்பதுதானோ இவர்களின் தாரக மந்திரம்..

இப்போது அஸ்ஸாமில் மீடியாக்கள் செய்வது அநியாயம் என்றால் அன்று குஜராத்தில் செய்தது நியாயமா? காங்கிரஸ் அரசு என்பதால் முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பர்க்கா தத்தும், ஷபானா ஆஸ்மியும் பரிதாப படமாட்டார்களோ?

வங்கதேசத்திலிருந்து திருட்டுத்தனமாக ஊடுருவி குடிபெயர்ந்த முஸ்லீம்களை, உள்ளூர் முஸ்லீம்கள் அடைக்கலம் தந்து ஆதரிப்பதே கலவரத்துக்கு காரணம்.வாக்களர்களாக பதிவு செய்யப்பட்டதால், காங்கிரஸ் கண்மூடி இருந்து இவர்களை ஆதரிப்பதும் ஒரு காரணம்.

இப்போது ராணுவம் விரைகிறது..பிரதமர் பார்வை இட வருகிறார்…சோனியா பரிதாபப் படுகிறார்.. ஆனாலும் அகில இந்தியா மீடியாக்கள் வாய் பொத்தி மவுனம் சாதிக்கின்றனர்…சித்தார்த் வரதராஜன்களும் ஸ்டீலாசெட்டில்வாட் களும், மேதாபட்கர்களும்..இருக்குமிடம் தெரியவில்லை..ஏனெனில் கலவரம் நடந்தது காங்கிரஸ் ஆளும் பூமியில்..

மோதல்களும் கலவரங்களும் மோடி பூமியில் என்றால் அது பெரும் சதி …காங்கிரஸ் மாநிலத்தில் என்றால் வெறும் செய்தி..
அஸ்ஸாம் கலவரம் தூரதிருஷ்டம்தான்..ஆனாலும் அது போலிமதசார்பற்றவர்களின்…காங்கிரசின் முகத்தை “பிளேடால்” கிழித்து அடையாளம் போட்டு விட்டது..

இனி நாட்டுக்கு நன்மைதான்.

Sunday, July 22, 2012

பழக்கு........மாறும்..பழக்கம்

திருமணம் ஆகி புறப்பட்டுப்போன என் மகள்..அமெரிக்காவிலிருந்து 2/12 ஆண்டுகள் கழித்து வந்திருந்தாள்.

கொஞ்சம் கலர் கூடியிருந்தாள்..மற்றபடி மாற்றம் ஒன்றும் இல்லை.
நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை.. What is this wet toilet ?-இல்லை..நம் கலாச்சாரத்தை மீறிய மேற்கத்திய டிரஸ் இல்லை.


எங்கள் வீடு முழுவதையும் இரண்டு நாள் முயன்று தானே கழுவி சுத்தம் செய்தாள்.ஆண்டுகளாக பீரோவில் தூங்கிய துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டு கரண்ட் பில்லை ஏற்றினாள்.
வீட்டுக்குள் வைத்திருந்த குப்பை போடும் தொட்டியை கூட அருமையாக சுத்தம் செய்து புதிய பொலிவு கொடுத்தாள்.

வீட்டிற்கு பின்புறம் உள்ள ஒரு மருந்து கடைக்கு போக ”ஒரு நோ எண்ட்ரி” –குருக்கு வழி உள்ளது.அதை தவிர்த்து ரோடு சுற்றி போனாள்.
தொண்டை கரகரப்புக்கு வாங்கிய மருந்தை வாயில் போட்டுக்கொண்டு அதன் “ராப்பரை”..தன் கைப்பைக்குள் போட்டு ( ரோட்டில் வீசாமல் )வீட்டுக்கு வந்து குப்பை தொட்டியில் போட்டாள்..

இவையெல்லம் அடிப்படை விஷயங்கள் தானே..இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

ஆனந்த விகடனின் பழைய பதிப்பில் ஒரு பேட்டியில் பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயா.அவர்கள்..”பல் தேய்த்து விட்டுத்தான் காப்பி குடிக்க வேண்டும் “ என்பதை தனக்கு எம் ஜி ஆர். தான் கற்றுக்கொடுத்தார்.என குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை விஷயங்களை கூட மற்றவர்கள் சொல்லி தெரிய வேண்டியிருக்கிறதா? அதற்காக  அமெரிக்கா போக வேண்டுமா? நாம் கற்றுக்கொடுப்பதில்லையா?

கற்றுக்கொடுக்கிறோம்..ஆனால் கடை பிடிப்பதில்லை..கடை பிடித்தாலும் தொடர முடிவதில்லை..தொடர்ந்தால் நம்மை பைத்தியக்காரனாக பார்க்கிறார்கள்.

அதெல்லாம் சரி..அனைவரும் தொடர..அரசு செலவில் அமெரிக்கா போய் வருவோமா?..
அங்கே போய் வந்தாலாவது மாறுவோமா?
இதற்கு அம்மா உதவுவாரா?

Saturday, July 21, 2012

காலி காம்ரேடுகளும்..மனேசர் மாருதி கார் தொழிற்சாலையும்

ஒரு தொழிலை நசுக்க வேண்டுமா ?—எந்த போட்டியாளரும் தேவை இல்லை..ஒரு தொழிற்சாலையை பொசுக்க வேண்டுமா?-எந்த கொலைகாரரும் தேவை இல்லை..

கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் ஒன்றிருந்தால் போதும்..தொழிலாளி வயிறும்..காயும்..முதலாளி.பயிறும் காயும்..காம்ரேடு குதிரை அதில் மேயும்.

இந்தவாரம் ஹரியானா மாநிலம் மானேசர் மாருதி கார் தொழிற்சாலையிலும் இதுதான் நடந்தது..
ஃபாக்டரியின் ஒரு பெரும் பகுதி தீ வைத்து கொளுத்தப்பட்டது.அதோடு “மனித வள மேம்பட்டுத்துறை மேலாளர்”  மனிதத்தன்மையே இல்லாமல் காம்ரேடுகளால்..கால்கள் வெட்டப்பட்டு எலும்புகள் முறிக்கப்பட்டு..தீ வைத்து கருக்கப்பட்டார்.
ஆத்திரம் தீராத காம்ரேடுகள் பொங்கி எழுந்து இரண்டாம் தளத்தில் பேச்சு வார்த்தை நடக்கும் போதே 26 அதிகாரிகளை வெட்டி சாய்த்தனர்..முட்டிக்கி முட்டி தட்டி எலும்புகளை உடைத்தனர்..

இதற்காக ஏற்கனவே திட்டம் தீட்டி..ஒத்திகை நடத்தியது போல காரியங்கள் அரங்கேறின.

இந்த கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளே இருந்த கொலைகார காம்ரேடுகள் போதாதென்று வெளியிலிருந்தும் “ட்ரையண்டு ஆர்ம்ஸ் கில்லர்ஸ்” கூட்டிவரப்பட்டனர்..

புதிய தலைமுறை தொலை காட்சிக்கு பேட்டியளித்த மார்க்ஸிஸ்ட் எம்.எல்.ஏ வரதராசன்…நிர்வாகத்தை பணிய வைக்க --இதெல்லாம் சகஜம்..என கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மே.வங்கம் சிங்கூர் டாடா நானோ கார் தொழிற்சாலை மோடியின் குஜராத்துக்கு சென்றுவிட்டது.ஹரியானா மானேசர் கார் தொழிற்சாலையும் குஜராத்து வரலாம் என அழைப்பு விடுக்க மோடி ஏற்கனவே ஜப்பான் சென்று விட்டார்.

தொழிற்சாலைகள் இடம் மாறினாலும் காம்ரேடுகள் மனமாறுவார்களா?

"வைக்கவேண்டிய இடத்தில் வைத்தால் வஸ்தாத்தும் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பான்".
என்பது போல..மோடிமுன் இவர்கள் சுருட்டி—மூடிக்கொண்டு இருப்பதை தவிர வேறு வழி என்ன இருக்கிறது..

Wednesday, July 18, 2012

ராகுலுக்கு பதவியாம்…எங்களுக்கு ஓகே…

“மூக்கு முட்ட குடிச்சவன் மூச்சு முட்டி செத்தான்” இது முது (புது) மொழி..

அதிகார போதை தலைக்கேறிய காங்கிரஸ்…டமாலென கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது.

மீண்டும் காங்கிரசை எழுப்பி…நிறுத்தி,,,நடக்க வைக்க..திக் விஜய் சிங்கும்..அம்பிகா சோனியும்..அகமது பட்டேலும்..ஆலோசனை செய்து வருகின்றனர்..வெறும் ஆலோசனை அல்ல…வெல்லம் போட்ட ஆலோசனை..ஆம்..!..ராகுலுக்கு பதவி கொடுத்து  “பக்கட் சீட்டில்” உட்கார வைத்து விட்டால்…காங்கிரஸ் எழுந்து....நின்று…..நடந்து விடுமாம்…

முதலில் உயிர் பிழைக்க வையுங்கள் ஐய்யா….அப்புரம்  அது  நிற்பது….நடப்பதை பார்க்கலாம்…என காங்கிரசை பார்த்து மம்தா பானர்ஜியும்..சரத் பவாரும் சொல்வது காதில் கேட்கிறது..

தோல்வி அடிவாங்கி “காய்த்துப்போன “ காங்கிரசின் முதுகில் மீண்டும் ஒரு லக்கேஜை (ராகுலை) ஏற்றி விட்டால்..காங்கிரஸ் வேக மாக ஓடுமா?

உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுலுக்கு எவ்வளவு விளம்பரம்..?..என்ன ஆட்டம்..என்ன பாட்டம்..—குடிசையில் பிரியாணி சாப்பிட்டது முதல்…தாடி வளர்த்து முஸ்லீம் வாக்காளரை ஏமாற்ற நினைத்தது வரை…ஒரே ..படமோ படம்……முடிவு..ராகுலையும் காங்கிரசையும் மூட்டைகட்டி..டெல்லி சப்தர்ஜங் சாலை வீட்டுக்கு அனுப்பியதுதான் நடந்தேரியது..

 ராகுல்..தோற்றதுதான் தோற்றார்..சரி..கருணாநிதியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டாமா?..புள்ளி விவரங்களை அள்ளி விட்டு…தான் தோற்கவில்லை என அறிக்கை விடுவார்..ஓடி ஒளிய மாட்டார்..உடனே மாநாடு அறிவிப்பு வெளியிட்டு வசூல் வேட்டையில் இறங்கி விடுவார்..
இப்படிப்பட்ட ஒரு வழிகாட்டித்தலைவரை..கூட்டணியில் வைத்துக்கொண்டும்..ராகுல் மூன்று மாதமாக வெளியே வரவே இல்லையே..அதுக்குத்தான் சென்னை வரும் போதெல்லாம் ப.சிதம்பரம் போல அடிக்கடி  “கோபால புரத்துக்கு” போய் வருவதை பழக்கமாக ராகுல் வைத்திருக்க வேண்டும்..அது இல்லாததால் தான் இப்படி ஓடி ஒளிந்த அவமானம்?..

பாராளுமன்றத்துக்குள்ளும்..ஏன்.. வெளியிலும் கூட வாய்திறக்காத சோனியாகாந்தி…காங்கிரஸ் தலைவியாக பொறுப்பேற்றது முதல் இதுவரை எத்தனை முறை “பிரஸ்ஸை “ சந்த்தித்திருக்கிறார்? கருத்து சொல்லியிருக்கிறார்..?அவருக்கே யூபிஏ தலைவர் பதவி…தோல்வில் ஓடி ஒளியும் மகன் ராகுலுக்கு பிரதமர் பதவி…காங்கிரசில் வேறு ஆளே இல்லையா?..காங்கிரஸ் திருந்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

எங்களுக்கெல்லாம் ராகுலை மூன்று வகையில் பிடிக்கும்..
ஒன்று…எங்கு தேர்தல் நடந்தாலும் ( அது இடைத்தேர்தல் உட்பட )ராகுல் அங்கு பிரச்சாரத்துக்கு வரவேண்டும்..அப்போதுதான் காங்கிரஸ் அங்கே மாபெரும் தோல்வி அடையும்..அது ராகுல் ராசி..
இரண்டு…உடனடியாக ராகுலை காங்கிரஸ் தலைவராகவோ.. அல்ல்து தேர்தல் பொறுப்பாளராகவொ நியமிக்க வேண்டும்..
ராகுலை காங்கிரஸ் தலைவராக்கினால் எங்களது நீண்ட நாள் ஆசையான காங்கிரஸின் இறுதி உடனே வந்துவிடும் காங்கிரஸ் முடிந்துவிடும்..
குறைந்தபட்சம் தேர்தல் பொறுப்பாளராவது ஆனால்..தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்..எனவே இந்த இரண்டில் எங்களுக்கு எதுவும் ஓகே..

மூன்று….மன்மோகனுக்கு மாற்றாக உடனடியாக ராகுலை பிரதமராக நியமித்தாலும் எங்களுக்கு டபுள் ஓகே..காரணம்… காங்கிரசுடன் சேர்ந்து இருந்ததால்... 2014 தேர்தலில் கட்டாயம் மண்னைக்கவ்வுவோம்..அதனால் இருக்கும் வரை உடும்புப்பிடியாக பதவியில் இருந்து விடுவோம்….என்பதால் ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் முலயாம்..லாலு..சரத்பவார் மாயா..ஆகியோர்..இதனால் 2014 வரை ஆட்சி தொடரலாம் என்னும் இன்றைய நிலையில்..ராகுலின் ராசியால் அவர் பிரதமராக நியமனமானால்..உடனடியாக ஆட்சி கவிழ்ந்து தேர்தலும் உடனடியாக வரும் ..
பாஜக வெல்லும்..எனவே ராகுல் பிரதமராக வருவது எங்களுக்கு பாக்கியம்..

காங்கிரசை பதவியில் இருந்து ஓட்ட....ராகுலுக்கு பதவி கொடுங்கள்....தேசத்தை காப்பாற்றுங்கள்

Tuesday, July 17, 2012

டெசொ..பிசுபிசுத்த கதை

கிராமத்தில் யாரவது இறந்து போனால்..விட்டுக்கு துக்கம் கேட்க வருவோரெல்லாம்,  “ ஒப்பாரியில் “ கலந்து கொண்டு ஓலவமிடுவர்.
ஊருக்குள் வரும் வழிப்போக்கனும்..அந்த முகம்  தெரியாத இறந்தவருக்கு “ஒப்பாரி ‘ இடுவதை திரைப்படங்களில் கூட பார்த்திருக்கிறோம்.
கருணா நிதி ஈழத்தமிழருக்காக இடும் ஒப்பாரியும் இந்த வகையை சேர்ந்ததுதான்.

2009 ஜூலை 1ந்தேதி..(ஆதாரம் ..டைம்ஸ் ஆஃப் இந்தியா)தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதி ஒலித்த ஒப்பாரியின் வடிவம் இதுதான்..
“தமிழ் ஈழம் சாத்தியமில்லை..சிங்களரை எதிர்த்து பேசாமல்..அவர்கள் கோபத்தை தூண்டாமல்,…அவர்களோடு இணக்கமாக வாழ தமிழர்கள், கற்றுக்கொள்ள வேண்டும்..உங்கள் உரிமைகளுக்காக போராடுங்கள்.””

இப்படி அடக்கி வாசித்த கருணாநிதி ,,ஆட்சியை இழந்துவிட்டால் ஒலிக்கும் ஒப்பாரியின் சத்தமே வித்தியாசமாக இருக்கும்,,.
ஏப்ரல் 20ந்தேதி..தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்புக்கூட்டம்…
ஜூன் 3ந்தேதி “டேசோ” மாநாடு அறிவிப்பு
ஜூலை 16ந்தேதி தமிழ் ஈழ அறிவிப்பை இழுத்து மூடி…வெறும் “இலங்கை தமிழர்களுக்கு அதிக உரிமைக்கான  அறைகூவல்”  மாநாடாக மாற்றம்

இப்படியாக கருணாநிதியின்  “தமிழ் ஈழ பரிணாம வளர்ச்சி….தமிழ் ஈழ பரிணாம வீழ்ச்சியாக”” மாற என்ன காரணம் என்பதை பார்ப்போமா?

இலங்கைக்கு சமீபத்தில் சென்று வந்து…அங்குள்ள தமிழர்களுக்கு அதிக உரிமை தரவேண்டுமென கோரிய..பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியது போல,,,இலங்கையிலுள்ள தமிழ் தேசிய கூட்டணி கூட ( I.N.A.)தனி நாடு கோரவில்லை..மாறாக அதிக உரிமை ..ஆட்சியில் பங்கு…என்பன அவர்கள் கோரிக்கைகளில் சில…

தமிழ் ஈழத்திற்கு “வாய்ஸ் “ கொடுக்கும் வைக்கோவும் நெடுமாறனும் கூட கருணாநிதியின் டெசோ வில் கலந்து கொள்ள தயாரில்லை..

மத்தியில் ஆட்சியில் பங்குள்ள கருனாநிதி…தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தவரை..மாநாட்டுக்கு அழைப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது..அதன் ரகசிய தூதுதான்..”ப.சிதம்பரம்…சிதம்பரம் ரகசியமாக கருணாநிதியை “ சந்தித்தது..

கருனாநிதியின் தமிழீழ ஆதரவை விட “ஜெ”வின் இலங்கை தமிழர் ஆதரவு செயல்பாடுகள்…தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்று வருவதால், சோர்ந்து போன கருணாநிதி…”டெசோ “ விற்கு மூடுவிழா நடத்த முடிவு செய்து..”வெறும் ஈழத்தமிழர் இழந்த உரிமை மீட்பு” குரலோடு மாநாடு கூடிக்கலையும் கூட்டமாக மாற்ற இருக்கிறார்..

திமுக ஆட்சியின் போது இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்பட்ட ஆதரவு பேரணிகள்,,மனித சங்கிலிகள்…பொதுக்கூட்டங்கள்…மாநாடுகள்…இவற்றிக்காக செய்யப்பட்ட செலவுத்தொகையை…இலங்கையிலுள்ள தமிழர்களின் நல்வாழ்வு நிதிக்கு அனுப்பியிருந்தால்…அவர்கள் இன்று “வீடு வாசலுடன் “ மூன்று வேளையும் சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கும்.

மாறாக “ஜெ” ஆட்சியில்..அகதிமுகாம் களில் வாடும் இலங்கை தமிழர்களுக்கு ஒதிக்கிய நிதியால்,,அவர்களின் அல்லல்கள் பெரும்பாலும் களையப்பட்டு வருகிரது..

பெருகி வரும் மின்தட்டுப்பாடு..விலைவாசி உயர்வு..வேலையின்மை…இவைகளை எதிர்த்து போரிட்டு வரும் தமிழ் நாட்டு மக்களுக்கு..வழிகாட்டவேண்டிய கருணாநிதி..தமிழீழ பூச்சாண்டி காட்டுவதை தமிழ்நாட்டு மக்கள் ரசிக்கவில்லை..

ராஜபக்‌ஷே மீது கருணாநிதியின் கூட்டாளிகள், சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்,  தங்களது வலுவான கரங்களை பதித்திருந்தால்,,ராஜபக்‌ஷெ தமிழர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க முடியாது..

கருணாநிதியின் கூட்டாளி காங்கிரஸின் தவறான கொள்கையால்,,விளைந்த ஈழத்தமிழர்களின் அவலநிலையை மாற்றும் உயரிய நோக்கில் “டேசொ” மாநாடு கூட்டப்படவில்லை.

ஆதாயம் இல்லாமல் கருனாநிதி “ஆத்தோடு “ போக மாட்டார்..என்றாலும்….

இம்முறை “கூட்டல் “ பலன் தராது….கூடுதல் பலம் பெறாது..

இம்முறை கருணாநிதிக்கு ஆதாயம் ….”கழித்தல்தான்”…காங்கிரஸில் இருந்து ”கழிதல்தான்”…பாவம்..

Sunday, July 8, 2012

” செத்தவர்கள் சங்கம் ”


எனக்கு இதை கொடு...அதைக் கொடு...என அரசாங்கத்திடம் கேட்டு வாங்க எத்தனையோ சங்கங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை..

“நான் உயிரோடு இருக்கிறேன்...என்னை நம்பு...
நான் சாகவில்லை..என்னை நம்பு..
நான் பேயல்ல என்னை நம்பு..”--
என்கிற “மிரிடெக் சங்கம்”--(MIRITEK SANGH ")
 “செத்தவர்கள் சங்கம் “..ஒன்று உ.பி.யில் உள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் தான்... இது வெளியே தெரிந்தது.சந்தோஷ் குமார் சிங்..(32 ) நம்மூர் பத்மராஜன் மாதிரி..( வி ஐ. பி. க்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டியிடுபவர் )..ஜனாதிபதி தேர்தலில் மனு தாக்கல் செய்ய சென்றார்,,பத்மராஜன் மாதிரி தேர்தல் தோறும் நின்று விளம்பரம் தேட அல்ல..தான் செத்துவிட்டதாக “ பொய் சர்ட்டிபிகேட் “ கொடுத்த அரசாங்கத்துக்கு ..தான் உயுருடன் இருப்பதாக,,காண்பிக்க..

அடையாள அட்டை கேட்டார்கள்...செத்தவனுக்கு ஏது அடையாள அட்டை?..வேட்பு மனுதர மறுத்தார்கள்...அதனால் மனு தாக்கல் செய்யமுடியாமல் வெளியே வந்த போதுதான் “ விஷயம் வெளியே தெரிந்தது”..
உயர்சாதி சந்தோஷ் குமார் சிங்..ஒரு தலித் பெண்ணைக்கூட்டிக்கொண்டு ஒடிப்போனதால் ,,ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டு..அரசின் ரெக்கார்டுகளில்...” சவமாக்கப்பட்டார்”

இதே மாதிரி ..” ஒரு வழக்கில் “..சிக்கி --உள்ளே போன ராம் நாராயணனும்...குடும்பச்சண்டையில் விரட்டி விடப்பட்ட லால் பிஹாரியும்...தீரஜ்தேவியும்...அரசின் ரெக்கார்டுகளில் “நரபலி கொடுக்கப்பட்டு “ சொத்துக்கள் சொந்தக்கரர்களாலேயே அபகரித்துக் கொள்ளப்பட்டது.

உத்திரப்பிரதேசம் முழுதும் இம்மாதிரி 50,000 பேர்கள் அரசின் ரெக்கார்டுகளிலிருந்து “மாயமாகியுள்ளனர்”
தேசிய மனித உரிமை கமிஷன் முயன்ற பிறகு ஒரு 300 பேருக்கு மட்டும் “ உயிர் பிச்சை “ கொடுத்தது அரசாங்கம்..

இன்னும் ”பிணமாகவே வாழும் “ லால் பிஹாரிகளும்..சந்தோஷ் குமார்களும் நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களாம்..
இவர்கள் ஆரம்பித்த “செத்தவர்கள் சங்கம் “ இம்மாதம் 36 ஆவது “செத்த ஆண்டை “ கொண்டாடுகிறதாம்.

அதி சரி ...உயிரோடு இருக்கும் நாம் ..சோனியா ஆட்சியில் பிணமாக அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..
அதற்கு என்ன செய்வது?..

“பேய் ஆட்சி செய்தால் பிணமாகும் வாழ்க்கைதானே”

Sunday, July 1, 2012

கிருமியை ஒழிக்க கிருமிநாசினியை ஒழிப்போம்..

ஆல்கஹால்
ஒரு வேதியியல் பொருள்..ஒரு சமுதாயத்தை..ஒரு நாட்டை..படுத்துகின்ற பாட்டை பார்த்தீர்களா?

சிற்றூர்களையெல்லாம் என் கார் கடக்கின்ற போது, சிறைக்கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் ஒருவரிடம்…நூற்றுக்கணக்கானவர்கள்” ”பாட்டில்” வாங்க முண்டியடிக்கும்..காட்சியை காணத்தவறியதில்லை.

1971 வரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் ..”தண்ணியை” தொட்டுப்பார்க்கமல் இருந்த தமிழ்நாட்டின் சரித்திரத்தை ..மாற்றியமைத்த புண்ணியம் கருணாநிதிக்கே போய்ச் சேரும்.

காலையில் பணிவாக பேசும் என் டிரைவர்  மாலை 6 மணிக்குமேல் போன் எடுத்தால்,,பேசும் அரசியலும் சித்தாந்தமும் ..உதிர்க்கும் பொன் மொழிகளும் ..அப்பப்பா..அவன் பேசவில்லை..அவன் ”உள்ளே  இரக்கிய சரக்கு”. பேச வைக்கிறது.திரப்படம் ஒன்றி வடிவேலுவின் காலையில் நல்லவன்..மாலையில் குடிகாரன் பாத்திரம் ..இவனைப்போன்றவர்களை பார்த்துத்தான் சித்தரிக்கப்பட்டதோ..

இந்த போதை தரும் வஸ்துவின் பெயர்தான் ஆல்கஹால்..வேதியியலில் இதை ரத்தின சுருக்கமாக எத்தனால் அல்லது எதில் (C2H5OH) ஆல்கஹால்  என்பர்..இது கரும்பு சர்க்கரை கழிவு “மொலாசசில்” இருந்து தயாரிக்கப்படுகிறது..

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்த காலகட்டத்தில், பட்டை சாராயம் என்னும் உள்ளூர் சரக்குக்கள் பேட்டரிகள் ஊரவைத்த நொதித்தலில் இருந்து தயாரிக்கப்பட்டது.

இயற்கை மது அல்லது தென்னம் பால் அல்லது பனம்பால் எனப்படும் “கள்ளும் “ குடித்தவர்களை  ஜொள்ளு விட வைப்பதும் உண்டு..
நான் மும்பைக்கு பயிற்சிக்குப்போன 1985 ஆம் ஆண்டு “பாங்” என்ற “தத்தூரா” என்ற நம்மூர் ஊமத்தை விதையை அரைத்த பாலை என் தம்பி வாங்கிக்கொடுக்க ..நான் குடித்துப்பட்ட அவஸ்தை பத்து பக்கம் எழுதலாம்.

சட்டம் படித்த போது “தத்தூரா பாய்சனிங் “ என்னும் “ரெஃபெரென்ஸ்” கொலை வழக்குகள் நினைவுக்கு வந்ததால், “ பாங் “ ..கிக் ஏற்றுவதற்கு பதிலாக பயத்தைதான் ஏற்றியதுதான் மிச்சம்.

ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் “ஒரு செயின் “ மாற்றிப்போட்டால் வேறு ஒரு பொருள் ஆகிவிடும்..
அப்படி எத்தில் ஆல்கஹாலில் இருந்து சிறிது வேறு பட்டதுதான் மெதில் ஆல்கஹால் (CH3OH).இதற்கு “வுட் ஆல்கஹால் “ என்ற பெயரும் உண்டு.ஆனால் சிறிய மாற்றம் என்றாலும் குணத்தில் மிகப்பெரிய மாற்றம் உண்டு.

ஆம் இது கொடிய விஷமாகும்.பத்து மிலி குடித்தாலே கண் போய்விடும்..30 மிலி குடித்தால் உயிர் போய்விடும்..இந்த வுட் ஆல்கஹாலை குடித்தால் நம்மை “கட்டையிலே “ போக வைத்துவிடும்.

ஆனால் எதில் ஆல்கஹால் ஒரு “ஃபுல்” அடித்தாலும் “ஸ்ட்ரைட்டாக “ நிற்கலாமாம் ...

பத்தாம் நூற்றாண்டில் பெரிஷியாவிலிருந்து ஒரு வேதியியல் விஞ்ஞானி “அல்-ரியாஸ்” தான் குடிமகன்களுக்கு “கொள்ளுத்தாத்தா “ ஆவார்..அவர் கண்டுபிடித்த எதில் ஆல்கஹால்தான் இன்றைய சரக்கிற்கு மூல முதற்பொருள்..முழுப்பொருள்..

அராபிய மொழியில் அல் என்றால் ”பொருள்”..குஹுல் என்றால் கண்ணுக்கான “மை” என்று பொருள்.இன்று அந்த “மை” அதை குடிப்பவர்களை கண்ணை மூட வைத்து மண்ணுக்குள்ளே அனுப்பி வருகிறது.

தண்ணீர் எப்படி எல்லா பொருட்களையும் கரைக்கும் திரவமாக பயன் படுகிறதோ அது போல,தண்ணீருக்கு அடுத்த “கரைப்பான் “ ஆல்கஹால்தான்.

அது மட்டுமல்ல ஆல்கஹால் தண்ணிரில் சிறப்பாக கரையும் என்பதும், அதை அருந்தியவர்களையும் கரைத்து, அவர்களது அஸ்தியை ஆற்றில் கரைக்க வைத்து விடும் என்பதும்,நாம் பார்க்கின்ற உண்மைகள்.

மதுவில் போட்ட பூச்சி மாண்டு போவதாகவும், மது குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சி மாண்டு போகும் எனவும் ஒரு ஜோக் சொல்லப்படுவதுண்டு.உண்மையில் ஆல்கஹால் ஒரு சிறந்த “கிருமிநாசினி”..பல புகழ்பெற்ற கிருமிநாசினி தயாரிப்புகளில் ஆல்கஹால் பெரும் பங்கு வகிக்கிறது.

குடியும் குடிகாரனும் சமூகத்தின் கிருமி..இந்த கிருமிகளை உருவாக்குவதே இந்த “கிருமிநாசினிதான்”கிருமியை உருவாக்கும் ஒரே கிருமிநாசினி ஆல்கஹால்தான்..
கிருமியை ஒழிக்க கிருமிநாசினியை ஒழிப்போம்..