Pages

Friday, October 10, 2014

"ஜெ " கைது "ரியாக்ஷன்" சிநிமாத்தனமாக

சினிமா கதாநாயகன்/  நாயகி,..சாதாரண சட்டை --அதுதான்-நாம்  போடும் சட்டை..போல்.. அணிந்திருந்தால் அவன்/ அவள் ..சினிமா கதாநாயகன்/ நாயகி அல்ல..

பத்து பேரோடு பால் குடம்..ஐந்து பேரோடு  அலகு குத்தி,  காவடி,--8 பேரோடு  தீமிதி,---முன்று பேரோடு  அங்க பிரதக்க்ஷ்ணம்---செய்தால் அது   சினிமாத்தனம்  அல்ல ..

108 பால் குடம்--1008 அலகு  குத்தல்,----5008 தீமிதி,-- 508 அங்கபிரதிக்ஷனம்,--செய்தால் அது   சினிமாத்தனம் ..அதாவது அம்மாவை  விடுதலை கோரி அதிமுக காரன்   செய்தது போல-- .

 மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் --முதலில் பதவி ஏற்பவர் கேமரா பார்க்கும் படி, கரீசிப்பால் கண்ணை துடைத்துக்கொள்கிறார்..அம்மா படத்தையும் அதேபோல் கேமரா பார்க்கும்படி  வெளியே எடுத்து வைத்து பதவி ஏற்கிறார்.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், "இவருக்கு" , சளைத்தவர்கள் இல்லை என்பதை  காட்டுவதற்காக "--விதவிதமான""தழுதழுத்த குரல்களில்""சிணுங்கி--குலுங்கி " அழுகிறார்கள்..டைரக்டர் மணி ரத்னமும்,  ஷங்கரும்,வந்து பார்த்துவிட்டு போனால், "கதைக்கும்--கதாநாயகனுக்கும்"--
"புதிய ஆங்கிள் " .கிடைக்கும்... .
  வேலூரில் தீமிதிப்பு,முப்பாத்தம்மன் கோவிலில் பால்குடம்,--குடந்தையில் யாகம், குமரியில் முளைப்பாரி, தேனியில் மண்சோறு, மதுரையில் அரிவாள் நேத்திகடன், பழனியில் மொட்டை என ஊருக்கு ஊர் "மாறுபட்ட ரோலில்" உடன்பிறப்புக்கள் ஆர்பாட்டம்..

, கண்ணீர் சிந்தல்கள், அம்மாவிற்காக கர்ஜனையுடன் பிரார்த்தனைகள், --பெற்ற அம்மாவிற்காகவும், உடன்பிறந்த சகொதரிகளுக்காவும் "அம்மாவின் இந்த உடன் பிறப்புக்கள்" ஈப்டி பிராத்தனை செய்திருப்பார்களா?

""தெய்வத்துக்கு சிறையா ?"---

"கர்னாடகாவே -- காவிரியை எடுத்துக்கொள்-- அம்மாவை விட்டுவிடு?"
" அம்மாவே வாயுபகவான்..உன்னோடு பெங்களுருக்கு வந்துவிட்டதால் ?--தமிழகத்தில் நாங்கள் முச்சுவிட திணறுகிறோம் --உடனே அனுப்பிவிடு அம்மா?"--
 இதைவிட பெரிய சினிமாத்தனம் --அமீருக்கும்--சீமானுக்கும், பாரதிராஜாவுக்கும் தான் .தெரியும்
அம்மா இத்தனை  நாட்கள் ஏசியில் இருந்து சலித்துப்போய் --ஒரு மாறுதலுக்காக "டிசியில்"( டிவைன் செல்) இருக்கிறார்.
பெங்களுருவின் இயற்கையான  குளிர்ச்சியும்,பரப்பர அக்ரஹார "புளியோதரையும், தயிர்சாதமும்," அம்மாவுக்கு அவர்களின் "அம்மாக்கால" நினைவுகளை ரீங்காரம் இடலாம்..
அன்பிற்கினிய  ரத்தத்தின் ரத்தமான அதிமுகவின்  உடன்பிறப்பே---நீ  போய் -பெங்களுரு சிறை --கோர்ட்டுமுன் "கத்தி--கோஷம் போட்டு, "ஜட்ஜுகளை "உசுப்பேத்தி",..வெளியே வரவேண்டிய உன் அம்மாவை--உள்ளே தள்ளிவிட்டாயே..

 ..இதற்கு உன் "சினிமாத்தனமான"---நடவடிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் தான் காராணம் என்றால் நீ  நம்பவா போகிறாய் உடன் பிறப்பே ..
சுப்ரீம் கோர்ட்டிலாவது உன் அம்மாவிற்கு பெயில் கிடைக்க வேண்டும் என்றால் உடன்பிறப்பே ---
பால்குடம் எடு-----ஆனால் அது பக்தியோடு---பணிவாக --கனிவாக--காதும் காதும் -வைத்தமாதிரி-தனியாக -- நீயாக எடு.-.கேமராவை  கூட்டிச்செல்லாதெ --ஜெயா டிவிக்கு "சிடி"கொடுக்காதே..பேஸ் புக்கில் போடாதே
அப்போது--அப்போதுமட்டுமே இது இயல்பானது..எதார்த்தமானது ..
அதுதான் " ஆண்டவனை மயக்கும்..கோர்ட்டை  மடக்கும்,அம்மாவை விடுவிக்கும் "--செய்வாயா?

Tuesday, October 7, 2014

”ஜெ”யை விடுவிக்காவிட்டால்…----?????????


“ஜெ”யை விடுவிக்கக் கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல..

“ஜெ” கைது சரி என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த தண்டனை தவறு என்றோ நான் எழுதப்போவதில்லை..

இந்தியாவின் நீதித்துறை—சட்டம் எல்லாம் மே மாதம் 26 ந்தேதிக்கு முன்பாக “ஒரு மாதிரியாகவும்”, தற்போது “வேறு ஒரு மாதிரியாகவும்”, அதாவது “தள்ளாடாமல்” –சுத்ந்திரமாக, “தன்காலில்” நின்று செயல்படுகிறது..அதனால்தான் எழுதப்பட்ட தீர்ப்புக்கள் ”திருத்தப்படாமல்” வாசிக்கப்படுகின்றன..இங்கே “நீதி விற்பனைக்கல்ல” என்ற நிலை எழுந்துள்ளது..ஆறுதலான விஷயம்..

அது போகட்டும் ,,விஷயத்துக்கு வருகிறேன்..”ஜெ” யின் “வழக்கு தீர்ப்புநாள்” மற்றும் இன்று அதாவது “ஜாமீன் மனு தீர்ப்பு நாள்” இரண்டுக்கும் சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன்..

செப்டம்பர் 27ந்தேதி “தீர்ப்பு” நாளன்று..பகல் 1.00 மணிவரை “தீர்ப்பு” தண்டனையில் முடியுமென்று..யாராலும் ஊகிக்க முடியாத படி கோர்ட்டின் செயல்பாடுகள் இருந்தது..3.00 மணிக்கு “ஜெ” குற்றவாளி—5.00 மணிக்கு தண்டனை விவரம் அறிவிப்பு வெளியானது..

அதெமாதிரி அக்டோபர் 7-ந்தேதியான இன்று..மாலை 4.00 மணிவரை, இடையில் அரசுதரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின் “ஒரு பல்டியினால்” ஏர்பட்ட தற்காலிக “ஆரவாரம்” தவிர “ஜாமின் நிராகரிப்பு” இருக்கும் என யாரு கணிக்க முடியாத சூழல் இருந்தது..இவை இரண்டும் ஆட்சியாளர்களை விட நீதி மன்றத்தின் மேலாண்மை உயர்வானது என்பதற்கான ஒரு சிக்னல்..…

ஒரு சாமானியனாக எனக்கு இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றியது..

ஒன்று---”ஜெ” கைதுக்கும் “ஜாமீன் மறுப்புக்கும்” அதிமுகவினர் ஏன் இவ்வளவு “ரவுஸ்” விடுகின்றனர்..அப்படி என்ன-- “ஜெ” கைது செய்யப்படக்கூடாத—கைது செய்யப்பட முடியாத..”ஸ்பெஷல் பிறவியா”?—”ஜெ”வை விடுவிக்காவிட்டால், காற்று வீசுவது நின்றுபோகும்?—எப்போதாவது பெய்யும் ம்ழையும் கூட பொழியாது போகும்?—திருப்பூர் சாய ஆலைகள் கழிவு நீரை “பூரணமாக சுத்திகரித்து “வெளியில் விடுவர்?—என்பதெல்லாம் நடந்து விடுமா?

இரண்டு—அதிமுகவினர், கருப்பு சட்டை அணிவது.., , வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவது, சாலையில் படுத்து புரண்டு போராட்டம், அலகு குத்தி, தீ மிதித்து, காவடி எடுத்து, ஊர்வலம் போவது, பதவி ஏற்பில் “அழுதுகொண்டே” உரை வாசிப்பது, --இவை யாவும், ”கேமராவோ, வீடியோவோ படம் பிடிக்காது,” என்று சொன்னால், அப்போதும் இதுபோல செய்வார்களா?

எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறேன்..இருந்தாலும் உள்ளுக்குள்ளே உருத்திக்கொண்டிருக்கும் உண்மை எழுதத்தூண்டுகிறது..

சங்கராச்சாரியார்—சங்கராச்சரியார் என்று மடத்துக்கு அதிபதி..ஜெயேந்திரர் என்று பெயர்..தவறு செய்தாரா?—தண்டனைக்கு உரியவரா? என்பதெல்லாம் எனக்குத்தெரியாது..இன்னும் சொல்லப்போனல் நான் மனிதர்களை வணங்குவதில்லை..என் தாய், தந்தை, குரு தவிர.--.எனவே எனக்கு ‘ஜெயேந்திரர்” மீது எனக்கு எந்த ஈர்ப்பும் “சாஃப்ட் கார்னரும்” கிடையாது.

ஆனால் லட்சோபம் லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு மடத்தின் அதிபதியை, தர்மம், நியாயம், சாஸ்திரங்களை மீறி, நள்ளிரவில், “விசாரணைக்கு மட்டும்தான்”—வந்து போ—என சொல்லி, அரசு பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து, தீவிர வாதியை பிடிப்பது போல ஹெலிகாப்டரில்  ஆந்திரா சென்று, இழுத்து வந்து, கைய்யில், சந்நியாசி வைத்திருக்கும் “தண்டத்தோடு”, சிறைச்சாலைக்குள் தள்ளிய காட்சி---, அப்ப..பப்பா?—

பிரபல பெண் எழுத்தாளர்கள், திரைப்பட நடிகைகளை எல்லாம் விட்டு, “எனக்கு சாமியாரோடு தொடர்பு உண்டு “ என அறிக்கை விடச்சொன்ன அநியாயம்..

அந்த மகானுபாவரின் “நெஞ்சு” எப்படி “வெந்து” இருக்கும்?—அந்த “மாமடத்தின்” மானம் எப்படி காற்றில் பறந்திருக்கும்??—”வாய்தா—வாய்தா””என எத்தனை முறை, அந்த பாதங்கள், கோர்ட் படி ஏறி இறங்கி இருக்கும்?

இவை எல்லாம் இப்போது நினைத்து பார்க்க காரணம் என்ன?—ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது,

,”தெய்வம் நின்று கொல்லும்”--.,

இந்து தர்மம் சனாதனமானது..புராதனமானது…இப்பிறவியில் செய்த பாவபுண்ணியங்களின் கணக்கு, இப்பிறவியிலேயே “சரி செய்யப்படும்”
—”நோ டேக்கிங் ஓவர்”—நோ கேரி ஃபார்வர்ட்”

இது “ஆச்சாரியாருக்கும் பொருந்தும்—ஆட்சியாளருக்கும் பொருந்தும்”

சரி பிளாஷ் பேக் முடிவுற்றது..சப்ஜெட்டுக்கு வருகிறேன்..

“ஊழல் என்பது மனித உரிமை மீறலாம்---ஊழல் வாதிகளுக்கு “ஜாமீன்” அடிப்படை உரிமை இல்லையாம்—

இதை கர்னாடகா ஹைகோர்ட் மட்டும் சொல்லவில்லை—ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட சொல்கிறது..

சொல்வதை சொல்லிவிட்டேன்..திருந்த வேண்டியவர்கள் திருந்தினால் திருந்தட்டும்..இல்லாவிட்டால்---

காலம் –திருத்தும்—