Pages

Sunday, April 29, 2012

அபிஷேக் சிங்வியும்----அய்யோ பாவம் பங்காரு லட்சுமண்ணும்பா.ஜ.க.காரன் எதை செய்தாலும் வெளிப்படையாகவே செய்வான்..5000 ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் “கேமரா “ முன்புதான் வாங்குவான்..இப்படி ஒரு கிண்டல் விமர்சனத்தை “சோ” கூட எழுதியதுண்டு ..

ஒரு காங்கிரஸ்காரர் சொன்னார்..”நீங்கள்ளாம் நீலப்படத்தை சட்டசபையில் பார்த்ததற்கே பிடிபட்டீர்கள்..எங்கள் ”அபிஷேக் சிங்வி “ நீலப்படத்துல நடிச்சதற்கே பிடிபடல்ல..என்றார்..பாஜக சாமர்த்தியம் அவ்வளவுதான் என்று என்னால் திருப்பி பதில் சொல்ல முடியவில்லை.

2ஜி..ஆதர்ஷ்...காமன்வெல்த்...பொபர்ஸ்...என நடந்த உண்மையான ஊழல்களில் சிக்கிய காங்கிரஸ் காரர்களின் மீது வெறும் “கேஸ்” மட்டுமே நடந்து வருகிறது.
ஆனால் நடக்காத பேரத்தில்---கிடைக்காத ஆர்டரில்...இடைக்கால நிவாரணம் ஒரு லட்சம் வாங்கியதாக பங்காருக்கு 4 ஆண்டு சிறை..ஒரு லட்சம் அபராதம்..ப.சிதம்பரத்தின் சிபிஐ கோர்ட்டுதான் பாஜக விஷயத்தில்..என்ன  பாஸ்ட்...என்ன நேர்மை...

நோ எண்ட்ரில போய் பிடிபட்டவனும் கொலைகாரனும் “குற்றம் புரிந்தவர்கள் தான்”--சட்டப்படி தவறிழைத்தவர்கள்தான்..இருவரையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்பது கொலைகாரன் தரப்பு வாதம்..அதுதான் சரி என்பதும் “மீடியாவின் “ வாதம் ..காங்கிரஸ் காரனை காப்பாற்றுவதற்காகவே அவதரித்தவர்கள் அவர்கள்.

இருவருக்கும் தண்டனைதான் வேறு பாடு..அசிங்கம் ..அவமானம்..மாறுபடாது என்றால்...நோ எண்ட்ரி காரன் கொலைபுரிய துவங்கிவிட்டால்..மனீஷ் திவாரிகள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமே..

இப்போது ஒரு புதுமையான பழக்கம் பரவ ஆரம்பித்துள்ளது..

”அவனை நிறுத்தச்சொல்லு..நான் நிறுத்தறேன்.”
.
”நீ மட்டும் என்ன யோக்கியனா..என்ன யோக்கியன்னான்னு கேக்க”

”நீயும் ஒழுங்கில்லை..நானும் ஒழுங்கில்லை..”

”I AM NOT OK...YOU ARE NOT ALSO OK”..

மனோதத்துவப்படி இது குற்றம் புரிவோரின் மனநிலை
அதனால் இதை “காங்கிரஸாரின் மனநிலை” என்றும் சொல்லலாம்.

Saturday, April 28, 2012

மதுரை ஆதீனத்தின் விலை ஒருகோடியா?


கட்சிகள் கூட்டணி போட்டன..ஜாதிகள் கூட்டணி போட்டன..கிறிஸ்தவமும் --இஸ்லாமும் கூட்டணி போட்டன..இப்போது புதிதாய் ஒரு “மடக்” கூட்டணி.
ஆனால் இது ச..ரி..யா..ன..கூட்டணி...சபல கூட்டணி..மடத்துக்குள்ளேயே “டிஸ்கொத்தே “ ஆடும்  காவி போர்வை போர்த்திய கூட்டணி..

இந்த கூட்டணிக்காக கை மாறிய பணம் பலகோடி..ஆனாலும் உடனடியாக ஒருகோடி...ஒருமாதத்தில் மதுரை ஆதீனத்திற்கு “கதவை திற..நாத்தம் வரும் “ புகழ் நித்தி...தங்க சிம்மாசனம் --பீடம்..கிரீடம்...செங்கோல்..தருவாராம்..அடுத்த சில ஆண்டுகளில் மதுரை ஆதீன உலகப் புகழ் பெருமாம்..

மதுரை ஆதீனத்தின் 293 வது பட்டமாக ஸ்ரீல ஸ்ரீ ரஞ்சிதா நித்தியானந்தா.பதவிப்பிரமாணம் செய்யப்பட்டிருக்கிறார்.இதில் பல..”இல்லாததும்.பொல்லாததும் “அரங்கேரியிருக்கிறது.

ஏற்கனவே தனக்கு ஒரு மடத்தை நிறுவி அதன் “அதிபதி “ யாக இருக்கும் “நித்தி” மீண்டும் வேறு ஒரு மடத்திற்கு அதிபதி ஆக்கப்பட்டிருக்கிறார்.இதுமாதிரி “கவர்னர் ஆக்டிங்” போவது போலவோ அல்லது இரண்டு மடத்திற்கு ஒரு பீடாதிபதி என்பது போலவோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிரீர்களா?..நான் படவில்லை..

பதவி ஏற்பு விழா போட்டோவை பாருங்கள்..ஏதோ அரசவையில், சக்ரவர்த்தி இளவரசருக்கு பட்டம் சூட்டுவது போன்ற தங்க மயமான அலங்காரம் ,ஆபரணம், தங்க கிரீடம், பீடம், அப்பப்பா...மூக்கின்மேல் விரல் வைக்கும் காட்சிகள்,இதைக்காண ஏராளமான பெண்களொடு திருமதி ரஞ்சிதா நித்தியும் வந்திருந்தது, மேலும் ஒரு கவர்ச்சி.

மதுரை ஆதீனமே ஒரு பொறம்போக்கு..அதற்கு நித்தியை ரொம்ப பிடிக்குமாம்..ஏனாம்?..நித்தியுடைய பக்தர்களில் பெரும்பாலும் பெண்களாம்..அமக்களமாய் டான்ஸ் ஆடுவாராம்..இவருக்கும் “பெண் டான்ஸ் “ பிடிக்குமாம்..இதை நான் சொல்லவில்லை தினமலரில் அவர்களே சொன்னவை..என்ன ஒற்றுமை--என்ன நட்பு..என்ன டேஸ்ட்..

சென்சார் இல்லாமல் நீலப்பட வீடியோ பார்க்கணும்ன்னா..மானாட மயிலாட--அதையே பிராக்டிகலா செய்யணும்னா..நித்தி ஆசிரமம்..இப்போ அதுக்கு மதுரையில் ஒரு பிராஞ்ச் திறந்திருக்கிறார்கள்..மதுரைவாசிகளுக்கு ஜாலிதான்.

நான் சாதாரண அப்பாவி இந்து..எனக்கு சாமானியனும்..சாமியாரும் ஒன்றுதான்..என் மதத்தை அழிக்க இறைவனே எழுந்தாலும் ...அதை அவனை.. எதிற்ப்பேன்..இந்த “ஜுஜ்ஜுபீ”  நித்தி...”பிஸ்கோத்து” மதுரை ஆதீன கூட்டணியின்  நடத்தும் கலாச்சார சீரழிவை..தொடர்ந்து கண்டிப்பேன்..

காவிப்போர்வைக்குள் காமக்கேளிக்கை நடத்தும் இவர்களை தாங்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை..அதை அவரிடம் “டொனேஷன்-லஞ்சம் “
வாங்குபவர்கள் செய்யட்டும்..

Wednesday, April 4, 2012

மீண்டும் கூடிய “கூடா நட்பு”அன்பிற்கினிய புரட்ச்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்..

ஏப்ரல் ஃபூல் தினத்தில் தமிழக மக்கள் காதில் ஏன் பூ சுற்றினீர்கள் என்பதே எங்கள் கேள்வி..என்னவா அது ?,,உங்கள் பழைய  உடன்பிறவா சகோதரி சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொண்டததைதான் சொல்கிறேன்..

நீங்கள் இரும்பு மனுஷி--சமூகநீதிகாத்த வீராங்கனை--பராசக்தி--அன்னைமேரிமாதா--என்பதெல்லாம் உங்களை நம்பியுள்ள தொண்டர்கள் உங்களுக்கு கொடுத்த பட்டங்கள்..

திடீரென ஒருநாள் 30 வயதுவாலிபனை வளர்ப்பு மகனாக ஸ்வீகரித்து ஆடம்பர திருமணம் நடத்தி ஆட்சியை இழந்தீர்கள்..

வீடியோ கேஸெட் விற்றுக்கொண்டிருந்த பெண்ணை உடன்பிறவா சகோதரியாக்கி உலகை புல்லரிக்க வைத்தீர்கள்.

அந்த சகோதரி குடும்பத்தார் ....உங்கள் கட்சிக்காரர்களும் தமிழக வாக்காளர்களும் உங்களுக்கு சம்பாதித்துக்கொடுத்த முதலமைச்சர் பதவியையும் அரசாங்கத்தையும் துஷ்பிரயோகம் செய்து ....கோடிக்கணக்கில் ஊழல் புரிந்து... சம்பாத்தித்து... சொத்துசேர்த்தை ...பார்த்துக்கொண்டு.. நீங்கள் வாளா இருந்தீர்கள்

கடந்தமாதம் திடீரென உடன்பிறவா சகோதரியையும் அவரது “ஆக்டோபஸ்” குடும்பத்தாரையும் கட்சியை விட்டு நீக்கி அதிர்ச்சி தந்தீர்கள்..

இக்குடும்பத்தாரின் அராஜகத்தால் பதவி இழந்த ரத்தத்தின் ரத்தங்களும்... தொண்டர்களும்.. அன்று ஆனந்த கூத்தாடினார்கள். நீங்கள் உண்மையிலேயே இரும்பு மனுஷி.. என்று சொல்லி புளங்காகிதமடைந்தார்கள்.

இதற்கு மேலும் பூச்சொரிதல் போல அந்த ஆக்டோபஸ் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர்மீதும்  நீங்கள் திமுகவினர் மீது போடும் அதே நில அபகரிப்பு வழக்கைப்  போட்டு உள்ளே தள்ளினீர்கள்.

அக்குடும்பத்தோடு யாரும் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்கள் அறிக்கை விட்டவுடன் “ ஆஹா..அம்மா மாறி விட்டார்கள்..அவர்கள்தான் இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் “ என்று ஒருபுறம் ஆனந்த கூத்தாடிய தொண்டர் கூட்டமும் மறுபுறம் சின்ன அம்மாவால் பதவிக்கு வந்தவர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டதையும்  நாங்கள் அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம்..

உங்கள் அபிமான ஆசான்.. நண்பர் ...பத்திரிக்கையாளர் “சோ” கூட “நீங்கள் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் “ என பக்கம் பக்கமாக அவர் பத்திரிக்கையில் எழுதி தள்ளியதையும் பார்த்து... இம்முறை உங்களிடம் ஏற்பட்ட மாற்றம் ”நிரந்தரம்”--முன்பு ஒருமுறை மூட்டை முடிச்சோடு போனவறை திரும்ப ஏற்றுக்கொண்டது போல இம்முறை நடக்காது ...என ஒருசிலர் நம்பினார்கள்.

ஆனால் இது “கபட நாடகத்தின் “ ஒரு காட்சிதான்..கபடம் நிச்சயம் மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளும் “ என உங்களை விமர்சிப்பவர்கள் கூறிய கருத்துக்களும் ஓங்கி ஒலிக்காமலில்லை.

கடந்தவாரம்... அதிமுக வரலாற்றில் ...கருப்பு வாரம் ...என்பது இப்போது புரிகிறது.”சின்ன அம்மா “ விட்ட கண்ணீர் அறிக்கையின் போதே பல உண்மை அதிமுக தொண்டர்களின் நெஞ்சம் சிதறிப்போனது....எங்கே அம்மா.. சசியை மீண்டும் அதிமுக வில் சேர்த்து விடுவார்களோ என அவர்கள் அஞ்சினார்கள்.

அறிக்கை விட்ட நாளில் நடந்த அதிமுக கூட்டங்களில் கூட நீங்கள் உறுதியாக இருப்பது போல் உங்கள் முக பாவனைகள் இருந்ததால்..சசியை அம்மா சேர்க்க மாட்டார்கள் ..என்று மீண்டும் ஒரு நப்பாசை நம்பிக்கை அதிமுக தொண்டனிடம் துளிர் விட்டது.

இவைகள் சிதைந்து போகிற மாதிரி இன்று நீங்கள் சசியை மீண்டும் அதிமுக வில் சேர்த்து விட்டீர்கள்..” புலி நட்பு குட்டி பகை “ என்பது போல்...சசியை சேர்த்துக்கொண்டு “ஆக்டோபஸ் “ குட்டிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என நீங்கள் அறிக்கைவிடுவதை பார்த்து சிரிப்புத்தான் வருகிறது.

அதையெல்லம் விட்டுத்தள்ளுங்கள். சசியோடு நீங்கள் எப்படி இருந்தால் எங்களுக்கென்ன ? என்று எங்களால் ஏன் இருக்க முடியவில்லை.?

சுதாகரனிலிருந்து ஒவ்வொருவராக போயஸ் தோட்டத்திற்குள் நுழைவதும்... ஒரே நாளில் கட்சியை அவர்களிடம் அடமானம் வைப்பதும்..ஊழல் கரை புரண்டு ஓடுவதும்... அதிமுக தொண்டன் அவர்களிடம் மிதி பட்டு சாவதும்..அடுத்த மாதம் ...சொல்லிவைத்தார்போல் சுதாகரனை நீக்கி...மஹாதேவனை சேர்ப்பதும்... அவரும் “இதே திருவிளையாடல்களை “ தொடர்வதும் ...அதிமுகவில் வாடிக்கையாகிவிட்டதே அம்மா.

இது மாறாதா? ..இக்குடும்பத்திடமிருந்து அதிமுக விற்கும் அம்மாவிற்கும் விடுதலை கிடைக்காதா? என ஏங்கித்தவித்த தொண்டனின் நெஞ்சில் டிசம்பர் மாதம் நீங்களே பால் வார்த்தீர்கள் ..அது மூன்று மாததிற்க்குள் மீண்டும் நஞ்சாகிப்போனதே என அவன் எண்ணி ஏங்குவதை நாங்கள் பார்க்கிறோமே.அம்மா

கருணாநிதியின் ஊழல் குடும்பத்தை வீட்டுக்கனுப்ப எம்ஜியார் அதிமுக வடிவில் அவதாரம் எடுத்தார்.கருணாநிதி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானே அதிமுகவை எம்ஜியார் உங்கள் கையில் கொடுத்தார்.நீங்கள் சசி குடும்பதிடம் கொடுப்பதற்காக இல்லையெ..

சசி பூதத்திடம் நீங்கள் சரணடைந்து இன்று கருணாநிதி கைகளை வலுப்படுத்தி விட்டீர்களே..அதிமுக தொண்டர்களை நிராதரவாக்கிவிட்டீர்களே..இனி தொண்டனுக்கும் உங்களுக்கும் இடையே மீண்டும் ஒரு பெரும் இடை வெளி விழுந்து விட்டதே அம்மா.

இனி ஆக்டோபஸ் குடும்ப குட்டிகள் கூண்டை உடைத்துக்கொண்டு அதிமுக நந்தவனத்துக்குள் புகுந்து மீண்டும் அராஜகத்தை தொடங்கும்.

அதிமுகவின் ஆட்சிமன்ற க்குழு எப்போது போல “டம்மி பீஸாகி” சின்ன அம்மா குழுவாகும்..ராவணன்களும் நடராஜன்களும் மீண்டும் கூட்டணிகளையும் மந்திரிகளையும் முடிவு செய்வார்கள்.

குஜராத்தின் மோடி செய்தது போல ..தமிழகத்தையும் நீங்கள் உலக வரை படத்திற்குள் கொண்டு செல்வீர்கள் என்ற எங்கள் நம்பிக்கைகள் மீண்டும் பொந்துக்குள் போய்  புதைந்து விட்டதே அம்மா.

கூடா நட்பு கேடாய் முடியும்--இது பழ மொழி..இன்று மீண்டும்
கூடிய நட்பு கேடாய் முடியப்போகிறதே..என உங்கள் நலன் விரும்பிகள் ஒவ்வொருவரும் அஞ்சுகிறார்களே அம்மா..

இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி  ஏமாற்று தினம் ..கற்பனையில் வந்த தினம்..கனவாய் போய் விடாதா இந்த சசி சேர்ப்பு அறிவிப்பு என உங்கள் நலன் விரும்பிகள் ஏங்குவது உங்கள் காதில் விழுகிறதா அம்மா

கடைசி செய்தி:- தோட்டத்துக்குள் சசி புகுந்தாகிவிட்டது ..இனி கனவேது.. ..கற்பனை ஏது.  எல்லாம் நிஜமே ..இது  ஏப்ரல் பூல் இல்லை...நாம்  நிஜமாலுமே  பூல். .