Pages

Monday, August 29, 2011

ராஜிவ் கொலையாளிகள்-தலை தப்பியது தற்காலிகமா?




நாம் அனவரும் வேதனையோடும்.. ஆவலோடும் எதிபார்த்துக்கொண்டு இருக்கிற நிகழ்வுக்கான கேள்வி இது---ஆம்..செப்டம்பர் 9 ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஒருவரும் 5 மணி மற்றும் 5.30 மணிக்கு மற்றவர்களும் தூக்கில் தொங்கப்போவது உறுதி என ஒரு சாராரும்--இல்லை..இல்லை...எப்பாடு

பட்டாவது அம்மூவரையும்( ராஜிவ் கொலையாளிகள் )  காப்பாற்றி விடுவோம் என மறு சாராரும்..களத்தில் உள்ளனர்..

36 வக்கீல்கள் திலீபன் தலைமையில் தில்லியில் முகாமிட்டு,பல்வேறு ஆதாரங்களை சேகரித்து, தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த கடுமையாக உழைத்து வருகின்றனர்..

விடுதலை புலிகள் மீது மாபெரும் பற்றுகொண்ட வைகோ ஒரு மாபெரும் மாபாரத யுத்தமே நடத்தி வருகிறார்..சந்தடி சாக்கில் தன்னை முன்நிறுத்திக்கொள்ள ராமதாசும்..உண்மையிலேயே திருமாவும்..சீமானும்..போராடி வருகின்றனர்..

சட்டத்தையும்..முன்னுதாரணங்களை
யும்..காரணங்காட்டி..ஜெ..தப்பித்துக்கொண்டார்..

காப்பாற்ற வேண்டிய நேரத்தில் காட்டிக்கொடுத்துவிட்டு..நளினி
யை மட்டும் தவிக்கவிட்டு...மற்ற மூவரையும் “காவு “ கொடுக்க கையொப்பமிட்டு விட்டு இன்று கண்ணீர் வடிக்கும் கருணாநிதி...

எது எப்படியோ ஒரு “பாட்டரி செல்” வாங்கிக்கொடுத்ததற்காக...அன்றைய 18 வயது பாலகன்..இன்றைய “பேரறிவாளன்”--தூக்கில் தொங்கப்போகிறான் என்பது நெஞ்சிற்கு நெருடலாக உள்ளது..


நமது சட்டங்கள்..அதை கையாளூபவர்கள்...தீர்ப்பு கூறுபவர்கள்...சிலநேரங்களில் இதயத்தை தொலைத்து விடுவது வாடிக்கையாகி விட்டது..

இரண்டு காரணங்கள் இவர்களுக்குஎதிராக இருப்பதாக நான் கருதுகிறேன்,,


1.  நாட்டின் மஹாராஜா வீட்டுப்பிள்ளை ராஜிவ்...இந்தியாவை ஆண்ட..ஆண்டு (கொன்று )கொண்டிருக்கிற..பிரதமர்கள் குடும்பத்தில் பிறந்து..பிரதமராக இருந்தவர்...அவரை கொன்றதாக கூறப்படுபவர்களை...எந்த ஆளுபவர்களும்  அதிகார வர்க்கமும் காப்பாற்ற முன்வராது...நமக்கேன் வம்பு என ஒதுங்கவே வாய்ப்பதிகம்..

2.அடுத்த பார்லிமெண்ட் தேர்தலை கருத்தில் கொண்டு...பார்லிமெண்ட் தாக்குதல் கொடுங்கோலன்..அப்சல்குரு தூக்கு தண்டனையை...நிறைவேற்ற நினைக்கும் காங்கிரஸ்..இம்மூவரின் தூக்கை நிறுத்தினால்...நிறைவேற்ற முடியாமல் போகும்..
என கருதுகிறது

ஒட்டு மொத்த தமிழர்களின் “”லாபியை”விட..முஸ்லீம்களின் “லாபி”..வலுவானது என்பதை காங்கிரஸ் அறியும்..தமிழ் லாபிக்கு பணிந்தால்..முஸ்லீம்கள் லாபிக்கும் கட்டாயம் பணியவேண்டி வரும்..--அவர்கள் லாபி செய்யாமலே காங்கிரஸ் அவர்களுக்கு பணியுமே..பிறகென்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்ட்பது புரிகிறது...


அப்சல்குருவை தூக்கிலிடாமல் போனால் பெருகிவரும் “இந்து வாக்கு வங்கியை”--ஒட்டுமொத்தமாக இழக்கவேண்டிவரும் என காங்கிரஸ் நினைக்கலாம்..

இவற்றையும் மீறி இவர்கள் தப்பித்தால் அது நீதி மன்றத்தின் கருணையினால் மட்டுமே முடியும்..அதை இப்போது சென்னை உய்ர்நீதி மன்றம் தொடங்கி இருப்பது எல்.டி.டி.ஈ ஆதரவாளர்களுக்கு மகிழ்வு தரும் என்பதில் சந்தேகமில்லை...