Pages

Friday, August 12, 2011

ராமதாஸ் ...நரியின்...பெரிய குறி

”திராவிட கட்சிகளோடு கூட்டு சேர்ந்தது தவறு....இனி சேரமாட்டோம்...நம்பாவிட்டால்..தீக்குளித்து நிரூபிக்க தயார்..”--இது சோரம் போனபின்பு ராமதாஸின் “பத்தினிப் புலம்பல்..”

தமிழகத்தை சீரழித்தது திராவிட கட்சிகள்..இனி அவர்களோடு ஒட்டுமில்லை...உறவுமில்லை...”--இதுவும் ராமதாஸின் காலங்கடந்த ஞானோதயம்..”

முதலில் ராமதாஸின் வீரவசனங்களை நம்பலாமா?...

என் வாழ்நாளில் நானோ என் குடும்பத்தாரோ..எம்.எல்.ஏ..எம்.பி...அமைச்சர்கள் போன்ற அரசு பதவிகளில் இருக்க மாட்டோம்...--ராமதாஸின் இந்த சபதம்..போலியானது.....ஏமாற்றுத்தனமானது......

நாங்கள் ஊழல் புரிந்தால் ..எங்களை ..முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள்..”இதுவும் அவரின் இன்னொரு வசனம்..

மக்களை சந்திக்காமலே கொல்லைப்புரமாக மகனை மந்திரி ஆக்கியவர்..ராமதாஸ்..இதற்கு எவ்வளவு சவுக்கடி கொடுக்கலாம்..

.ஊழல் பெருச்சாளி..”..கேத்தன் பரேக்குடன்..”சேர்ந்து விளையாடிய “..லஞ்ச ஊழல் “ விளையாட்டில்..அன்புமணிக்கு மிக முக்கிய பங்குண்டு..என்பது ஊரறிந்த ரகசியம்....இதற்கு எத்தனை சவுக்கடி கொடுக்கலாம்..

தன் பின்னாலே இருக்கும் ஏழை பாட்டளிகளுக்கு பட்டை நாமம் போட்டு விட்டு இவரும் இவர் குடும்பத்தாரும் கொழிக்கும் கோடிகள் எத்தனை....

இந்த புதிய வசனங்கள் எக்காலத்திலும் எடுபடாது... அப்படியாயின் விவரமில்லாமலா ராமதாஸ் வசனம்  பேசினார் என்கிறீர்களா?

இல்லை..இல்லை...இல்லவே இல்லை..

1967 இல் இருந்து தமிழகம் கூட்டணி “அனாச்சாரத்தில்”அமிழ்ந்து கிடக்கிறது...2011 தேர்தலில் திமுக மீதிருந்த அதிருப்தி “ஜெ” வுக்கு பெரும் லாபம் தந்தது..மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்..இந்த நாடித்துடிப்பை மருத்துவர் தெரிந்து வைத்துருக்கிறார்..

யார் தருவார்...யார் தருவார்.. என ஏங்கியிருக்கும் மக்களின் மாற்ற எதிர்பார்ப்பை ..நான் தருவேன்..என ஏமாற்ற காத்திருக்கிறார்..ராமதாஸ்..

அரசியலில் எதுவும் நடக்கலாம்..எனபது ஒரு வாசகம்....

ஆனால் ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும்...ராமதாஸை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்..
..

No comments: