Pages

Saturday, January 22, 2011

கர்னாடகா விவகாரத்தில் காங்கிரஸ் செய்வது சரி(யா)யே


கர்னாடகா மாதிரியே ---தலைப்பும் என்ன தடுமாறுது---பெங்களூரும் குளிர்னால—உள்ளுக்குள்ள சூடா..(அரசியல்)..எறக்கி…எப்போதும் விஜய்காந்த் மாதிரி “ஸ்டெடியா இல்லையே…

 பின்ன என்னங்க..பி.ஜே.பி.காரங்க..பார்லிமண்ட நடத்தவே விடமாடேங்கிறாங்க…
2ஜி ஊழல்ல சோனியா..சிக்கி இருக்கிறது வெளிப்படையா தெரியா ஆரம்பிச்சிடுச்சு..
ஜேபிசி..விசாரணை வெச்சா..தண்டனை கிடைக்குதோ இல்லையோ..”குட்டு “..வெளிப்பட்டுடும்..
கல்மாடியை காப்பத்தபோய்..ஆஸ்திரேலியாவிடம் அவப்பெயர்..
ஆதர்ஷ் ஊழல்ல..கட்டடத்தையே இடிக்கிற முடிவுக்கு வந்துட்டாங்க..
ஸ்விஸ் வங்கி கருப்புப் பண விவகாரம் “’தலை வலி கொல்லுது”..
தன் மீது தொடர்ந்து அம்பு பாய்ச்சும் பாஜகவிடமிருந்து கொஞ்சநேரமாவது விடுதலை வேண்டாமா?---
ஒரு புத்திசாலி அரசியல் வாதி இதை விட சிறப்பாக எப்படி முடிவெடுக்க முடியும்?..

கட்டிகிட்டு வான்னா..வெட்டிகிட்டு வரும் சூப்பர் கவர்னர்..பரத்வாஜ்..அசுர வேகத்தில் செயல்பட்டு..காங்கிரஸை காப்பாத்திக்கிட்டு வர்ரார்..(காப்பாத்துகிறாரா..காவுகுடுக்கிறாரா..என்பது போகப்போகத்தான் தெரியும் )

காங்கிரஸ் “இமாலய ஸ்கேம்களிலிருந்து “’கொஞ்சம் மூச்சு விட வேண்டுமென்றால்..அதற்கு இதை விட்டால் வேறு வழியே கிடையாது..கிடைத்த எடியூரப்பவை..நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..

பாஜக அவரை காப்பற்ற தன் படைகளை..டெல்லியிலிருந்து…கர்னாடகா..பக்கம் திருப்பும் என்பது..காங்கிரஸ் கணக்கு..
அந்நேரம்தான் சோனியா ஓய்வெடுக்க முடியும்..
பிஜேபி சோனியாவின் மீது தன் பிடியை இன்னும் கொஞ்சம் இருக்கினால்…காங்கிரஸ் கர்னாடகாவை கைவிடும்..

ஜெயிக்கப்போவது..யாரு?..பொருத்திருந்து பார்ப்போம்..

மன்மோகனின் முன்னுரிமை ""இந்திய மக்களா?--சுவிஸ் மன்னரா?

தொடர்ந்து தன் கெளவுரவத்தையும்---மரியாதையையும் அதலபாதாலத்துக்கு கொண்டுசெல்வதையே தினசரி கடமையாக செய்துவரும் மன்மோகன் சிங்---மீண்டும் ஒருபடி சறுக்கியுள்ளார்..

சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கருப்புப் பணம்--யார் யாருடையது--என்ற தகவலை பெற்ற மன்மோகன் அரசு---அந்த “”புனிதர்களின் “”--பெயரை வெளியிட மறுக்கிறது..

இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை “எப்போதும் போல “” உச்சநீதி மன்றம் “ கண்டித்துள்ளது--கருப்புப்பண முதலைகளின் பெயர்களை வெளியிட மறுக்கும் மன்மோகன் சிங்---அதற்கு சொல்லும் காரணம் தான் “ வெகு சூப்பர்”

“பொருளாதார மேம்பாடு--மற்றும் ஒத்துழைப்புக்கான சர்வதேச அமைப்புடன் “”--செய்துகொண்ட ஒப்பந்தப்படி---கருப்புபண முதலைகளின் பெயர்களை வெளியிடக்கூடாதாம்..அவர்கள் காப்பாற்ற பட வேண்டுமாம்..ஏனெனில் சோனியாவும் அதில் அடக்கமென்பதாலோ”--

அப்படியாயின் 2009 தேர்தலில் “சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வோம் “--வெளியிடுவோம்----என்று இந்திய மக்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே---அது எங்கே போனது--எப்போதும்போல காற்றில் பறந்துவிட்டதா?

இந்தியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு இல்லை மதிப்பு
சுவிஸ் வாக்குறுதிக்காக ஏன் இந்த அவமதிப்பு


Sunday, January 16, 2011

ராகுலுக்கும்...ஐய்யப்பனுக்கும் என்ன உறவு

செத்தா--- தேர்தல் நேரத்ல---- சாவணும்-----
என்னடா இது-””-வாழ்ந்தா உன்னோட தான் வாழணும்””---””வீழ்ந்தா தமிழுக்காகதான் வீழணும்””---இப்படித்தான வசனம் கேட்டு நமக்கு பழக்கம்--இது என்ன புதுசா இருக்கு...

ஆமாம் --புதுசுதான் ---

இலங்கை கடல் படையினரால் முந்தாநாள் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவருக்கு --அவர்குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்--அவர் தங்கைக்கு அரசு வேலை------

இதற்கு முன்னால் இலங்கை கடல் படையினரால் தமிழக மீனவர்கள் பலபேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்--அவர்களுக்கெல்லாம் வெறும் ஒரு லட்சம்தான் --

ஆனால் இப்பொது ஐந்து லட்சம்---காராணம்--இன்னும் நாலு மாதத்தில் சட்ட்மன்ற தேர்தல்-----

கேரளாவில் ஐய்யப்பன் கோயில்--புல்மேடு---கூட்ட நெரிசலில் சிக்கி--108 ஐய்யப்பமார் பலி----அச்சுதானந்தன் விஜயம்--அவர் மாநில முதல்வர் -- அதனால் வந்தார்--புரிகிறது------

தமிழக அரசு ””விரைவாக செயல்பட்டு “”----ஆம்புலன்ஸ் அனுப்புகிறது----அதிசயமாக விரைவாக செயல்படுவதில் இருந்தே தெரிகிறது--தேர்தல் நெருங்குகிறது என்று--

எந்த பதவியிலுமில்லாத ராகுல் காந்திக்கு என்ன திடீர் ஆர்வம்--கரிசனம்--அவருக்கும் கேரளாவுக்கும் என்ன தொடர்பு---அவருக்கும் ஐயப்பனுக்கும் என்ன உறவு--அவருக்கு ---ஐயப்பன் யார்---- என்பதே தெரியாதே--பின் ஏன் கரிசனம்--

எல்லாம் கேரள சட்டமன்ற தேர்தல் படுத்தும் பாடுதான் ---ஆம் கேரள சட்டமன்ற தேர்தலும் ஏப்ரல்  மாதம்தான் வரப்போகிறது-----இல்லாவிட்டால் 108 பேர் என்ன--1008 பேர் செத்தாலும்--- ராகுலோ ---சோனியாவோ--- வரப்போவதில்லை----கருணாநிதியும் ஐஞ்சு லட்சம் தரப்போவதில்லை----

சாவு கூட  “எலக்‌ஷன் நேரத்தில் “ வந்தால்தான்  பணம் வருகிறது--பார்க்கவும் வருகின்றனர்__
 

Saturday, January 15, 2011

மோடியின் அடுத்த குறி சீனா


ஒர் நாடு-- செய்வதை--- ஒரு மாநிலம் செய்கிறது---ஒரு நாடு --செய்யவேண்டியதை விட அதிகமாக---  ஒரு மாநிலம் செய்கிறது..நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா ? என்கிற பிரமை ஏற்படுகிறது..

ஆம்--நரேந்திர மோடியின் “வைப்ரண்ட் குஜராத்”--நிகழ்வுகளைத்தான் சொல்கிறேன்.

அவர் அப்படி என்ன சாதித்து விட்டார்?--அவர் என்ன இந்திரனா?--சந்திரனா?--காங்கிரஸ்காரகள் புலம்புவது காதில் விழுகிறது..
இந்த மதவாதிக்கு அப்படி என்ன மரியாதை ?--என்ற “உஷ்ண மூச்சுக்காற்று”--பக்கதிலுள்ளவர்களையும் சுடுகிறது..

நரேந்திர மோடியின் சாதனைகள் --என்ன கொம்பா?--அதை வேறு யாரும் சாதிக்க முடியாதா?--அவர் சாதனைகள் என்ன “செய்யமுடியாத “” ஒன்றா ?

இதற்கு என்ன பதில்?--உண்மையில் யதார்த்தம் என்ன?--மேற்கண்ட குற்ற்ச்சாட்டுகளை அடுக்கும் யாராலும் நரேந்திர மோடியின் “”ஜுஜுபிதனமான”--”வெற்று வேட்டு “’--சாதனைகளை செய்யமுடியவில்லையே?--

காங்கிரஸ் ஆளுகின்ற எந்த மாநிலமாகட்டும்--எந்த முதல்வராகட்டும்--எந்த மந்திரியாகட்டும்--மற்ற கட்சி மந்திரிகளாகட்டும் --யாராலும் மோடியைப்போல்  முயலவில்லையே--

லண்டன் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டி --டிரினிட்டி யூனிவர்சிட்டியில் படித்ததாக “”ரீல் “ விடும்  இளவரசர் ராகுல் காந்தி கூட இவர் சவாலை ஏற்க ஏன் தயாரில்லை?--ஒரு மாநிலத்தின் முதல்வராகி “சாதனை படைக்க “”தைரியமில்லையே--

உலகின் 3 இல் 1 பகுதி நாடுகள் (95 ) பங்கு பெற்று--7936 புரிந்துணர்வு ஒப்ப்ந்தங்கள்---21 லட்சம் கோடிக்கு வர்த்தகம்--- 52 லட்சம் வேலை வாய்ப்புக்கள் ---காங்கிரஸும் பிரதமரும் கொஞ்சம் “”கனவுலயாவது” இதை நினைத்து பார்க்கட்டும்.

ஜனவரி 12--13--குஜராத்--காந்திநகர் சாதனைகள்---மோடிக்கு போட்டி மோடிதான் --ஆனால் மோடி தனக்கு போட்டியாக நினைப்பது சீனாவைத்தான் -

இந்திய மாநிலங்களோ--ஏன் ஏக இந்தியாவோ மோடியின் சாதனைகளுக்கு பக்கத்தில் கூட வர இயலவில்லயே என்பதே நம் வருத்தம்---

மோடியின் அடுத்தகுறி சீனா---இது நம் தேசத்துக்கு பெருமை--இதை மோடி நிறைவேற்றும் வரை காங்கிரஸ் காரர்கள் “”மதவாத ஊளை” யிடாமல் இருந்தால் சரி..

Thursday, January 13, 2011

ஒரு கையில் கோப்பை ---ஒரு கையில் கோப்பு -- அடுத்த முதலவர் விஜயகாந்தே வருக

சேலத்தில் ஒன்பதாம் தேதி நடந்த "மாபெரும்   " மாநாட்டில்  "கோப்பை முதல்வர்  " விஜயகாந்த்  பேசும்   போது    கேப்டன்   டி .வியில்  லைவ்  ஆக  பார்த்தவர்களுக்கு  விஜயகாந்த்  என்ன  கண்டிஷனில்   இருந்தார்  என்பது  சொல்லாமலே --புரிந்திருக்கும்  --"தமிழ்  நாட்டின்  அடுத்த முதல்வருக்கான  தகுதி--எப்படி இருக்கிறது பார்த்தீர்களா---

செயலில்தான்  நம்  முதல்வர்கள்  "ஜீரோ " என்றால்  நடத்தையில்  கொஞ்சம்  இவ்வளவு  மோசமில்லை  .. --இவர்  செயல் ===பதவிக்கு வந்த பின்புதான் தெரியப்போகிறது--இப்போதே விருத்தாசலம் எம்.எல்.ஏ ஆக இவர் கிழித்தது ஒன்றுமில்லை--முதல்வராகி என்ன கிழிப்பார் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

தனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தை ஒரு நிமிடம் கூட இவரால் சரியாக பயன்படுத்த முடியவில்லை--நாலைந்து வார்த்தை கூட கோர்வையாக வரவில்லை--சபை நாகரீகம் கொஞ்சமாவது இருந்திருந்தால்  மேடைக்கு வருமுன் "தீர்த்தவாரி " செய்யாமல்  வந்திருக்கவேண்டும் ..

மது அருந்துவது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்--எப்போது ?--அது அறைக்குள் இருக்கும்வரை--அறையை விட்டு வெளியே வந்தால்--அதுவும் பொது இடத்துக்கு வந்தால் --நாகரீகம் வேண்டும்--இது இவரிடம்  இருந்ததாக தெரியவில்லை . --இது ஒருபுறம் இருக்கட்டும்--

மது அருந்துவது என்பது மனோ ரீதியாக ஒரு வியாதி--அதைவிடுவது என்பது மிகவும் கஷ்டம். கடுமையான மருத்துவம் மேற்கொண்டால் இது சாத்தியம்--இல்லாவிடில் "கட்டலே போகும் வரை"-- இது தொடரும் --இவர்களது  மனது  "ஸ்டெடி  யாக  "  இருக்காது --உடலும்  அப்படியேதான்  என்பதும்  உண்மை --ஆனால்  இவர் "ஸ்டெடியாக  " நின்றார் .இவரின்கீழ்  தமிழ் நாடு  "ஸ்டெடி  ஆக இருக்குமா ?

"வேகமாக  பேசினால்  --நாக்கு  குழறும் " --என்ற  ஒப்புதல்  வாக்குமூலம்  வேறு .. மேடையில்  இருந்த  அவர்  மனைவி  இவர் உளறுவதை  கேட்டு  "நெளிவதை  "பார்க்க முடிந்தது .

இவர் முதல்வரானால் --தமிழ்நாடு  ஐ .ஏ .எஸ் . ஆபீசர்கள் --ஒவ்வொருமுறை  கோப்புகளில்  கையெழுத்து  வாங்கும்  போது ஒரு கோப்பையுடன்தான்  செல்லவேண்டும் . சட்டமன்றத்துக்குள் ஒரு "பார்" ஒப்பன் செய்யவேண்டியிருக்கும்---முதல்வரின் டேபிளுக்கு மேல் "பைல்களுக்கு "பதில் "பாட்டில்கள்" வைக்கவேண்டியிருக்கும் .  சட்டமன்றத்தில் முதல்வரின் சீட்டிற்கு பக்கத்தில் ஒரு பிரிட்ஜ்  நிறைய மதுபான பாட்டில்கள்அடுக்க  வேண்டியிருக்கும். 

பொறுப்பில்லாமல்  "தண்ணியில்  மிதக்கும்  "-இப்படிப்பட்ட  தலைவனுக்கு ---பிரமாண்டமான  கூட்டம் ---லட்சக்கணக்கான  தொண்டர்கள்  ..

வெட்கம்  கெட்ட  அரசியில் 

Tuesday, January 11, 2011

நரேந்திர மோடியின் "வைப்ரன்ட் குஜராத்"

இந்தியாவை உலுக்கப்போகும் ---"'வைப்ரன்ட் குஜராத்""---ஐந்தாவது பாகம்


நரேந்திர மோடி ---ஆன்மிக வாதியா--அரசியல் வாதியா---தொழில் முன்னேற்ற  சிர்ப்பியா---நவீன இந்தியாவை உருவாக்கப்போகும் நவ      யுக   நாயகனா  

 ---அல்லது    அடிமைத்தளத்தை  ஞாபகப்படுத்தும்  ஆங்கில  மீடியாக்கள்   கூறும்  மதவாதியா  --
நாளை ஜனவரி 12 --13   நடக்க  இருக்கும்  வைப்ரன்ட் குஜராத்  இதற்க்கு  பதில்  சொல்லும் --
18 துறைகள் --80 நாடுகள் --12 இந்திய  மாநிலங்கள் --அதில்  ஆந்திரா  உள்ளிட்ட  காங்கிரஸ்  மாநிலமும்  அடக்கம் --பங்கு  கொள்ளப்போகிறார்கள் . 

ஒரே  ஒரு  துறை  ---கப்பல்  துறையில்  மட்டும்  இப்போதே --110 ஆயிரம்   கோடி  முதலீடு  செய்ய  முதலீட்டாளர்கள்  குவிந்து  விட்டார்களாம் --அப்படியானால்  மீதி  துறையில்  முதலீடுகள்  எவ்வளவு  இருக்கப்போகிறதோ --இதுவரை   600 புரிந்துணர்வு   ஒப்பந்தங்கள்  கையெழுத்திட  தயாராக  இருக்கிறதாம் --
சரி  --தமிழ்  நாடு  எப்படி  இருக்கிறது --எல்லோரையும்  கடன்காரனாக்கி    ஒரு  லட்சம்  கோடி  ரூபாய்  கடனில்  ஓடிக்கொண்டிருக்கிறது . இலவசங்களை  அள்ளிவீசி -- அனைவரையும்   கடனாளி  ஆக்க --- ஏழைகளை  மேலும்  ஏழை  ஆக்கி  ---குடிமக்களை  குடிகாரனாக்கி ---நாட்டையே  பிச்சைக்காரனாக்கி  ----இப்படி  ஒரு  முதல்வர் --இப்படி  ஒரு  மாநிலம் -- இதுவும்  இந்தியாவில்  தான்  இருக்கிறது

--குஜராத்தும்  இந்தியாவில்  தான்  இருக்கிறது .  

"அங்கலாப்பு பட்டு " என்ன ஆகப்போகிறது---வரும் தேர்தலிலாவது --தமிழகத்தில் ""இன்னொரு மோடியை " தேடுவோம் ..

Monday, January 3, 2011

இத்தாலிய கொள்ளைக்கும்பல் தலைவி சோனியா--PART-2


ZERO TOLERANCE, SECRET BILLIONS

http://epaper.expressbuzz.com/NE/NE/2011/01/03/ArticleHtmls/03_01_2011_009_004.shtml?Mode=1
http://expressbuzz.com/opinion/columnists/zero-tolerance-secret-billions/236261.html

 

சுறாவின் சுறுசுறுப்பு

ஜப்பானியர்களின் பிரியமான முதல் மற்றும் முழு உணவு மீன்--அதுவும் FRESH மீன்--
மீன் வியாபாரம் செய்யும் "அகிரா" நிறுவனத்தினர் நல்ல மீன் பிடிக்க கடலுக்குள் வெகுதூரம் செல்லவேண்டியிருந்தது. --வியாபாரப் போட்டியில் --'FRESH'--மீன்களே ஜெயிக்க முடிந்தது--

நீண்டதூரம் கடலுக்குள் சென்று பிடித்து வரும் மீன்கள் கரைக்கு வருவதற்குள் "பழசாகிவிடுகிறதாம் '--( நம்நாட்டில் அவை very fresh )---சுவை  குறைந்து  விடுகிறதாம் --
ஜப்பானியர்களுக்கு நாக்கு ரொம்ப நீளம் --உள்ளே செல்ல மறுத்தது--வியாபாரம் படுத்தது.

"அகிரா" நிறுவனம் மீன்பிடி படகில் "FREEZER "வைத்து பார்த்தது --ஜப்பானியரின் நாக்கு ஏற்றுக்கொள்ளவில்லை---தண்ணீருள்ள மீன் தொட்டி வைத்துப்பார்தார்கள்--மீன்கள் " டயர்ட் "ஆகி --டேஸ்ட்--குறைகிறதாம் --இதையும் ஜப்பானியரின் நாக்கு ஏற்றுக்கொள்ளவில்லை---

இப்போது "அகிரா"--"நடையை மாற்றியது"--மீன் தொட்டியில் சில "சுறா"--குஞ்சுகளை விட்டது---அவை ஒருசில மீன்களை தின்றாலும் --மற்ற மீன்களை விரட்டி--விரட்டி--( PRODDING )---விளையாடி--அவைகளை சுறுசுறுப்பாக வைத்து "ஜீவனுள்ள "--மீன்களாக்கியது--
பிடித்தகையோடு சமைத்த சுவை --ருசி--ஜப்பானியர்களுக்கு கிடைத்தது-

சுராவின் சுறுசுறுப்பால்--அகிராவின் வியாபாரம் " சுறுசுறு "


சுராவைப்பார்த்து நாமும் சுறுசுறு ஆவோமா 

Sunday, January 2, 2011

சாலை---கொலைகார --- போலிஸ்

இந்த தலைப்பு கொடுத்தது வருத்தமாய் தானிருக்கிறது ...என்ன செய்ய போக்குவரத்து போலிசின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.

கிருஷ்ணகிரி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மாமூலுக்கு " கைநீட்டி"-- ஒரு லாரியை திடீரென நிறுத்த --பின்னால் வேகமாக வந்த ஆம்னி மோதி --அதில் பயணம் செய்த 5 அப்பாவிகள் அதே இடத்தில் அவுட்.

இதற்குமுன் ஒரு அரசு உயர் அதிகாரியும் இதேமாதிரி --முனனால் போன வாகனத்தை போலிஸ் நிறுத்த --இவர் சென்ற வாகனம் பின்னால் மோதி அவரும் அவுட்.

கோயம்புத்தூர் நகர சாலைகளில் " கண்ட இடங்களில் "--இதேமாதிரி போலிசின் செய்கைகள் ---"இங்கிதம் இல்லாமல்" --கண்ட இடங்களில் --வண்டிகளை கைகாட்டி நிறுத்துவது--அதனால் "டிராபிக் ஜாம் "" ஆக்குவது --இதனால் ஒருசில இடங்களில் "ஆக்சிடன்ட் " ஆவது --யார் போலிசுக்கு புத்தி சொல்லுவது?

சரக்கு வாகனங்களையும் இம்மாதிரி திடீரென மறைந்திருந்து நிறுத்தி-- "சேல்ஸ் டாக்ஸ் "--அதிகாரிகளும் உய்ர்ப்பலி ஏற்ப்படுத்துகிறார்கள் .-

இத்தனைக்கும் இவர்களுக்கு அனுபவம் உள்ளது--பயிற்ச்சி உள்ளது--ஏன் பிறகு "திருடனை பிடிப்பது போல " "மறைந்திருந்து " நிறுத்தி மக்கள் உயிரை பலி  வாங்குகிறார்கள்.

விபத்தை தடுக்க வேண்டியவர்கள் விபத்தை உண்டாக்குகிறார்கள் ...இவர்களது மேல் அதிகாரிகள் இவர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கக்கூடாதா ?--

" ஸ்பாட் பைனுக்கும் --செக்கிங்குக்கும் "--நடு ரோடுதானா கிடைத்தது---அவற்றுக்கென தனியிடம் ஒதுக்ககூடாதா  ?--மக்கள் என்ன மீறி தலை தெறிக்க ஓடிவிடவா போகிறார்கள்?

லாரிகளை நிறுத்தி "கைநீட்டும் " போலிசை யார் தட்டிக்கேட்பது?--அதுவும் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களை திடீரென நிறுத்துவது --பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்ற ""பாலபாடம் "--கூட இவர்களுக்கு தெரியாதா?--போலிஸ் என்றால் பெரிய கொம்பா?-- 

ஷைலேந்திர பாபு--டிஜிபி --ராதாகிருஷ்ணன் போன்ற நல்ல--புத்திசாலியான அதிகாரிகள் கண்ணில் கூட இது படவில்லையா?

ஒருவேளை இச்செய்தி யார்மூலமாகவது அவர்கள் கண்ணில் பட்டால் நல்லது--இனியாவது இம்மாதிரியான உயிர்ப்பலிகள் நடவாமல் இருக்கும்Saturday, January 1, 2011

இத்தாலி சோனியா கொள்ளைக்கும்பலின் EXECUTIVE DIRECTOR--மன்மோகன் சிங்

இன்று ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாள்--ஒரு இமாலய ஜோக்கோடு இவ்வருடத்தை துவக்குகிறோம்---ஜோக்கடித்தது “அடப்பாவி” மன்மோகன் சிங்--
“நிர்வாக தூய்மைக்காக இரண்டுமடங்கு முயற்சி எடுத்துக்கொள்வோம்”--இதுதான் அவர் செய்தி..

போதும்யா---ஒருமடங்கு எடுத்த முயற்சியே--1,76,000 கோடி ரூபாய்----இரண்டுமடங்குக்கு..இந்தியாவில் காசில்லை-மிஸ்டர் மன்மோகன் சிங்ஜி---இன்னும் ஒருவருடம் நீங்கள் தொடர்ந்தால்....இந்தியா இடிஅமீனின் உகாண்டா ஆகிவிடுமே..

நம் பிரதமர் மன்மோகன் சிங் மிக நல்லவர்---காங்கிரஸ் கட்சியில் “பழம் தின்னு கொட்டை போட்ட “”--பிரதமர் பதவிக்காக---தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த --”பல வவ்வால்களுக்கு “---”கடுக்காய் “”கொடுத்துவிட்டு---”குட்டிப்பூனையாய்”---சோனியாவின் காலடியை சுற்றி வந்து---பிரதமர் பதவியை பெற்ற அப்பாவி--

மிகச்சிறந்த மனநல அறிஞர்---சோனியாவின் மனம் அறிந்து அவர் நலம் காக்கும் அறிஞர்---நாட்டு மக்களுக்கு சொந்தமான “சொத்தின் சாவியை”--சோனியா கையில் கொடுத்து கொள்ளை அடிக்க சொன்ன புண்ணியவான்---ஏழை இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக---செலவிடச் சேர்த்து வைத்திருந்த பணத்தை எல்லாம் “இதோ இருக்கிறது பணப்பெட்டி”---என “சோனியா கும்பலிடம் “--காண்பித்துக் கொடுத்த “”தர்மவான்”---

கொள்ளை அடிக்கும்போது..பக்கத்திலேயே இருந்தாலும் “பங்கு “ கேட்காத “உத்தமர்”
நாட்டு மக்களின் சொத்தை திருட அனுமதித்தாலும் காட்டிக்கொடுக்காத “குடும்ப விசுவாசி”

மக்களை சந்திக்காமலே “கொல்லைப்புறமாக”--பார்லிமெண்டுக்கு வந்தவர்--என்று யாரும் சொல்லிவிடக்கூடாது---என்பதற்காக--சோனியா குடும்பத்தையே--இந்திய மக்களாக --பார்க்கும் பண்பாளர்

இப்படிப்பட்டவர் “நிர்வாகத் தூய்மை “ பற்றி அறிக்கை விடுவது--”நித்தியானந்தா”--ஒழுக்கம் பற்றி உரை ஆற்றுவது போலுள்ளது..

ஊழலை ஒழிப்போம்--என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியாவே உரையாற்றும் போது---ஊழல் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி---சோனியாவின் “தொண்டர் அடிப்பொடி “...மன்மோகன் சிங்...புத்தாண்டு செய்தி--இப்படி தருவது--ஆண்டின் ஆரம்பமே “வயிறு குலுங்கும் ஜோக்”குடன் தொடங்குகிறது..