Pages

Wednesday, July 29, 2015

புதிய மாட்டுக்கார வேலன்—சிவ கணேஷ்

கோவை மற்றும் பொள்ளாச்சி வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பசுமாடுகளை இறச்சீக்காக கேரளாவிற்கு “கடத்திச்செல்வது” வாடிக்கையாகிவிட்டது

ஏன் இதை கடத்தல் என்கிறீர்கள்?--மாடுகளை இறச்சிக்காக வெட்டுவது சகஜம் தானே--”இந்துத்வா “ பார்ட்டி என்பதால், முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உணவில் நீங்கள், கை வைக்கிறீர்கல் ..இது நியாயமா?--என்று இடதுசாரி போலிமத சார்பற்றவாதிகள் கேட்கிறார்கள்..

இதற்கெல்லாம் பதில் சொல்லி அலுத்து விட்டதால், நான் சட்டபூர்வமான கேள்விகள் சிலவற்றை கேட்கிறேன்..

1 தமிழ் நாட்டில் பசுவதை தடை சட்டம், இருப்பது போலீசுக்கும், மாட்டு வியாபாரிகளுக்கும், கறி தின்போருக்கும் தெரியாதா?

2.பால் கறவை நின்று போன , நோயில்லாத மாடுகளை ஒருலாரியில் 6 மட்டுமே ஏற்றி, உள்ளூர் தாசில்தரிடம் “சர்ட்டிஃபிகேட்” பெற்ற பிறகே வெளீமாநிலங்களுக்கு எடுத்து செல்லவேண்டும் என்று சட்டம் சொல்கிறதா?--இல்லையா?--

3.இந்த சட்டங்கள் சொல்லுவதுபோல்தான் மாடுகளெடுத்து செல்லப்படுகிறதா?
4.கன்று குட்டிகளையும் கறவை பசுக்களையும் “கறியாக “ சமைக்க எந்த சட்டம் இவர்களுக்கு அனுமதி ந்கொடுத்தது?
இதையெல்லாம் தட்டிக்கேட்டு “அதிரடி ஆட்டம்” ஆடத்துவங்கினார் எனது அருமை நண்பரும் கோவையின் பிரபல தொழில் அதிபருமான திரு சிவா என்கிற சிவகணேஷ்..
“மனிதர்களை காக்க மாடுகளை காப்போம்”
மாடுகளை காத்து இயற்கையை காப்போம்”
கடந்த ஓராண்டுகாலமாக தொண்டாமுத்துர் அருகே உள்ள “வெள்ளியங்கிரி ஆண்டவர் கோசாலை” மிகவும் பிரபலமாகி வருகிறது..
பொள்ளாச்சி வழியாக கேரளவிற்கு கடத்தப்படும் மாடுகளை தன்னூடைய “பறக்கும் படையால்” ஆங்காங்கே தடுத்து நிறுத்தி” அருகில்லுள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச்சென்று” வக்கீல் குழு” மூலம்..காவல் துறையுடன் பேசி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கோர்ட் ஆணை பெற்று, “வெள்ளியன்கிரி கோசாலைக்கு” மாடுகளை ஓட்டிச்சென்று, பராமரிப்பது இவரது வாடிக்கை

இதனால் மனம் நொந்த மாட்டு வியாபாரிகள்,போர்வையில்
ஒளிந்துள்ள சமுக விரோதிகள் போலிசை கையில் போட்டுக்கொண்டு இவருக்கு கொலை மிரட்டல், கோசாலை முன்பு ஆர்ப்பாட்டம், மாட்டு சந்தைக்கு தொடர்ந்து பந்த் கொடுத்து, அரசுக்கு நெருக்கடி, என பல வழி தாக்குதல் நடத்து கின்றனர்.

இதன் ஒரு "காட்சியாக" இரண்டு நாள் முன்பு, கோர்ட் உத்தரவு பெற்று, கோசாலை இருந்து 56  பசுக்களை ஒட்டி செல்ல முயன்றபொது அதற்க்கு இடைக்கால தடை பெற்று, "சிவா&கோ" அதை தடுக்க முயல, கோசாலைக்கு தீ வைத்து உள்ளே இருதவர்களை தாக்கினர் மாட்டு வியாபாரிகள் போர்வையில் இருந்த சமுக விரோதிகள்.

கடந்த வாரம் நடிகர் விஷாலை சிவா அவர்கள் கோவைக்கு அழைத்து வந்து, கோவை இந்துஸ்தான் கல்லூரியில், 10,000- மாணவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், "மாடுகளை காப்போம்" என விஷால் அரை கூவல் விடுக்க, மாட்டுகரியாலர்களுக்கு, சிவா&கோ மிது மாபெரும் கோபம் உண்டானது.

இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், "கோவை கேட்டில் கேர் வெல்பர் டிரஸ்ட்"--என்ற அமைப்பே, மாடுகளை காக்கும் போராட்டத்தை முன்னின்று  நடத்துகிறது..இதன் தலைவர் நிஜாமுதின் என்னும் இளைஞர் ..இவரும்தான் மாட்டு வியாபர்ரிகள் என்ற பெயரில் அரஜாகம்  நடத்தும் சமுக விரோதிகலுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்..

மாடுகளை காக்க இந்துத்வா அமைப்புகள் மட்டுமே இருக்கிறது என்கிற நிலை மாறி, நாங்களும் இருக்கிறோம் என களத்தில் இறங்கிய "புதிய மாட்டுகார வேலன்"--சிவகநேஷுக்கும், நிஜாமுதிநிக்கும், ஒரு சபாஷ் போடுவோம்.

Wednesday, July 15, 2015

சல்மான் குர்ஷித்தின் “தெனாவட்டு”

"இந்திரா காந்தி போட்ட "எமர்ஜென்சி" சரியானதே!மன்னிப்பு எதற்கு கேட்க வேண்டும்?"-சல்மான் குர்ஷித்
1975 ஆம் ஆண்டு --இந்திராவை காக்க --"எமெர்ஜென்சி" கொண்டு வந்தது காங்கிரஸ் !
1.5 லட்சம் பேர் எந்த குற்ற பத்திரிக்கையும்--வாய்தா நீட்டிப்பும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்
21 மாதம் கருப்பு நாட்கள்.--ஜனநாயகம் புதைகுழியில்--.சுதந்திரம் சவகிடங்கில்...பேச்சுரிமை தொண்டைக்குழிக்குள்--."இந்திராவே இந்தியா" என்றார் காங்கிரஸ் தலைவர் DK.பரூவா
இந்தக்காலத்தில் சித்திரவதைக்குள்ளான எதிர்க்கட்சி காரர்கள் எத்தனை பேர்?கொன்று குவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எத்தனை பேர்?.கருத்தடை ஆபிரேசன் செய்யப்பட்ட முஸ்லிம் ஆண்/பெண் எத்தனை பேர்?இதில் வயோதியர்/வயதுக்கு வராத முஸ்லிம்கள் எத்தனை பேர்?
கணக்கு தெரிந்தால் மக்கள் விடும் கண்ணீரில் காங்கிரஸ் கரைந்து போகும்!

இவ்வளவு தவறையும் செய்த காங்கிரஸ் , முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் மிகவும் "தெனாவட்டாக"பேசி உள்ளார்.
"இந்திரா அறிவித்த அவசர நிலை சரியானது தான் .அது சரி என்பதால் தான் 1980 இந்திராவை மக்கள் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.மக்கள் ஆதரித்த பின் மன்னிப்பு எதற்கு கேட்க வேண்டும்?"
இது தான் சல்மான் குர்ஷித் உதிர்த்த முத்துக்கள் ..
அடப்பாவிகளா !மக்கள் ஆதரித்தார்கள் என்றால் 1977இல் ஏன் இந்திரா,சஞ்சய் இருவரையும் சேர்த்து காங்கிரஸ்சை மக்கள் தோற்கடித்தார்கள் -

ஒருவேளை 1980 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருந்ததை வைத்து "எமெர்ஜென்சியை" நியாயப்படுத்தினால் ,2002 கோத்ரா கலவரத்துக்கு பிறகு மோடியை மூன்று முறை குஜராத் மக்கள் 3இல் 2 பங்கு மஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்தினார்களே ! அப்போது நீங்கள் ஏன் மோடியை குற்றம் சொல்வதை நிறுத்தவில்லை .

டில்லி துர்க்மான் கேட்டில் முஸ்லிம் பெண்கள்/வயோதிகர்கள் கதறக்கதறக் குடும்பகட்டுப்பாடு ஆபரேசன் செய்து,வீடுவாசலை விட்டு விரட்டிய நீங்கள் ,குஜராத் முஸ்லிம்களுக்காக "நீலிக்கண்ணீர்" வடிப்பது எதனாலே?
சல்மானின் "தெனாவட்டு" இதோடு நிற்கவில்லை."1975இல் எமெர்ஜென்சி அணிவிக்கும் நிலைக்கு காரணமாக இருந்த எதிர்கட்சிகள் தான் மன்னிப்பு கோர வேண்டும்" என்று போட்ட  குண்டுதான் மிகுந்த ஆச்சரியமானது
உன்னை அடித்து துவைத்தால் உனக்கு ஏற்பட்ட காயங்கள்,ரணங்களுக்காக நீ என்மீது வழக்கு தொடுப்பாயானால் உன்னை அடித்ததால் ஏற்பட்ட என் "கைவலிக்கு" நான் உன் மீது வழக்கு தொடுப்பேன்”-- என்பது போலுள்ளது சல்மானில் குற்றச்சாட்டு
இந்த சல்மான் குர்ஷித் ரொம்ப விசிதிரமானவர்.

 மும்பை, ஆக்ரா, ஐதராபாத், டில்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடந்து ஆயிரகணக்கானோரை கொன்று குவித்த "சிமி" என்ற இயக்கத்திற்கு மத்திய அரசு தடை செய்தது
அந்த தடையை எதிர்த்து சிமிக்கு ஆதராவாக கோர்ட்டில் ஆஜரானவர் தான் இந்த சல்மான் குர்ஷித்
அவர் திருவாய் மலர்ந்தருளியதோ அல்லது அவர் சார்ந்த காங்கிரஸின் நிலைப்பாடோ ஆச்சரியமானதில்லை
ஆனால் சரித்திரத்தை மறந்துவிட்டு "அவசரநிலையின் அட்டூழியங்கள்" வெளிவராமல் பார்த்துக்கொள்ள அல்லது மக்களுக்கு நினைவுபடுத்தாமல் மோடியை மட்டுமே குறிவைக்கும் இன்றைய மீடியாகளின் நிலைப்பாடு தான் ஆச்சரியமளிக்கிறது !

ஹெல்மெட் ஓட்டுனர்கள் ---ஜாக்கிரதை

"இதோ வருது.. இதோ வருது"- என்ற ஹெல்மெட் ஒரு வழியாக வந்துவிட்டது.சென்னை உயர்நீதிமன்றம் தன தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக நின்றுவிட்டது .நீதிபதி கிருபாகரன் தன் சொந்த வக்கீல்கள், சகாக்களின் ஊர்வலம் ,ஆர்பட்டாம் போன்ற கடும் எதிர்ப்பையும் மீறி தீர்ப்பை அமல்படுத்த முயல்வதற்கு என் பாராட்டுக்கள்!
இடையில் தமிழக அரசு "ஹெல்மெட் விஷயத்தில் நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தப்போவதில்லை .உயிர்மேல் ஆசை உள்ளவர்கள் அணியலாம்" என அறிவித்து விட்டதாக வாட்ஸ் அப் செய்திகள் காற்றுதீ போல பரவ , நல்ல வேளை தமிழக அரசு அதை அதிக காலதாமதம் எடுத்து கொள்ளாமல் மறுத்து உள்ளது!
"ஹெல்மெட்" அணியாமல் சென்றவர்கள் 1.40 லட்சம் பேர்களின் மீது அபராதமும் வழக்கும் இந்த பத்து நாளில் காவல்துறை போட்டதன் மூலம் இதற்கு முன்பு இதே மாதிரி அணிவிக்க உத்த்ரவு போடுவதுவும்--aஅது  ஒரு வாரத்தில் அமல்படுத்தாமல் ஓய்ந்து -பழைய ஹெல்மெட்டுகள் விற்று தீர்க்க மந்திரிகள் செய்யும் "தரகு வேலை" என மக்கள் நினைத்தது மாறிப்போனது ஆச்சரியமாக இருந்தது
இம்முறை "ஹெல்மெட்" விற்பனை படு ஜோர். 350 ரூ க்கு வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 600 ரூ லிருந்து-1000 வரை விற்கப்பட்டு ஹெல்மெட் வியாபாரிகளுக்கும் தீபாவளி பட்டாசு போல ,சீசனல் வியாபாரம் செய்தவர்களுக்கும் மிகபெரிய லாபத்தை ஈட்டி தந்தது ,பல ஆயிரம் லட்சாதிபதிகள் உருவாக ஹெல்மெட் காரணமாக இருந்திருக்கிறது.
அதெல்லாம் சரி ! இப்போது புதிய பிரச்சனை உருவாகி இருப்பது நம்மில் பலரால் உணர முடிகிறதா?.குதிரைக்கு கண்மறைத்து ,கட்டபட்டிருக்கும் ”மறைப்பு போல”-” ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு--- தனக்கு முன்னால் போகிறவர்களை மட்டுமே பார்க்க முடிகிறது.
தனது-- இடது,வலது-- பக்கத்தில் வரும் வாகனங்களை பார்க்க முடிவதில்லை.இதனால் "தைரியமாக" அவர்கள் தன் பக்கத்துக்கு வாகனங்கள் பற்றி கவலை படாமல் திரும்புவதும் ஓட்டுவதும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மிகுந்த "டென்சன்" ஏற்படுத்துகிறது.
புதிதாக வாகனம் கற்றுக்கொண்ட பெண்-- நட்ட நாடு ரோட்டில் "ஹாயாக" ஓட்டுவது போல "ஹெல்மெட்" ஓட்டிகள் படுத்தும்பாடு ரொம்ப கவலை அளிக்கிறது!
புதிதாக ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் ”பறக்கிறார்கள்.”-நடுவயதுகாரர்கள் ”நடுரோட்டில்”- ஓட்டுகிறார்கள்.பெண்கள் பற்றி சொல்லவே வேண்டாம்."வேறு வாகனங்கள்  எதுவும் இல்லாத சாலை" என்கிற கற்பனையில் மிதக்கிறார்களோ என்கிற மாதிரி உள்ளது அவர்களது "டிரைவிங்"
இந்த "புதிய நிலை" ஒரு புதிய போக்குவரத்து பிரச்சனையை உருவாக்கியிருகிறது."பாதுகாப்பிற்க்கான ஹெல்மேட்-" டூ வீலர் காரர்களின் "பயத்தை போக்கி"-- மற்றவர்களுக்கு "பயத்தை உருவாக்கியும்" விட்டது
"சீப்பு கொடுத்தாளே..சில்லறை கொடுத்தாளா" என்று ஒரு சினிமாவில் வசனம் வரும்!ஹெல்மெட் அணியச் சொன்னவர்கள்-- அதன் சாதக பாதகங்களையும் அணிந்து ஓட்டும் முறைகளையும் சொல்லித்தருவார்களா?
சொல்லித்தந்தால் ஓட்டுபவர்களுக்கு "பயன்!" இல்லாவிட்டால் மற்றவர்களுக்கு "பயம்"

Sunday, July 12, 2015

அன்புமணி மகனுக்காக அப்பா ராமதாசின் விளம்பரம்

”வண்ணானுக்கு வண்ணாத்திமீது ஆசை--வண்ணாத்திக்கு கழுதை மீது ஆசை”--என்பது கிராமத்து பழமொழி..
இதற்கும் என் தலைப்புக்கும் சம்பந்த படுத்தி கொண்டால் அத்ற்கு நான் பொறுப்பல்ல..
” Change and  --Progress with Anbumani"
“”மாற்றம்--முன்னேற்றம்--அன்புமணி”--
இந்த வாசகங்கள் இன்றைய நாளிதழில் முழு பக்க விளம்பரமாய் வந்துள்ளது ஆச்சரிய பட வைக்கவில்லை..
மருத்துவர் ராமதாசு ஒரு முடிவோடுதான் இருக்கிறார்..தன் குடும்பத்தில் தானோ..தன் உறவினரோ ஆட்சியில் உரிமை கோரமாட்டோம்--ஆட்சிக்கு வரமாட்டோம்..”--என சத்தியம் செய்துவிட்டு..அன்புமணியை தேர்தலில் நிறுத்தாமலே கலைஞரிடமிருந்து ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை  பெற்றுவிட்டு மத்திய சுகாதார கெபினட் மந்திரியாக எடுத்த எடுப்பிலேயே  ஆக்க்கி..அழகு பார்த்துவிட்டார்..
இனி தமிழக முதல்வராக்க ஆசைபடுகிறார்..”அத்தனைக்கும்--ஆசைப்படு”--என்ற ஒரு கார்ப்பரேட் சாமியாரின் புத்தகத்தை நான் பார்த்திருக்கிறேன்..ராமதாஸ் அதை படித்திருப்பார்  போலிருக்கிறது..
அன்புமணிக்கு தமிழக முதல்வராகும் தகுதி இருக்கிறதா?--
இது என்ன வீண் பேச்சு..தகுதி இருந்தால் மட்டுமே ஆசைப்படவேண்டுமா?--
ராமதஸ் மகன் என்னும் தகுதி--”இண்டக்ஸ் மெடிகல் காலேஜ்”--ஊழலில் அடித்த--ஆயிரக்கணக்கான கோடிகள் “கையிருப்பில்” இருக்கும் தகுதியும் போதாதா?--
அதெல்லம் சரிங்க..காசுள்ளவன் எல்லாம் முதல்வர் ஆகலாம் என்றால்...மணல் குவாரி வைகுண்ட ராஜனும்--வளர்ப்புமகன் சுதாகரனும் முதல்வராகலாம் அல்லவா?--அதுபோலவா அன்புமணியும்?
வன்னியர் பெல்டில் அவரது சாதிக்காரன் அத்தனை பேரும் ஓட்டுப்போட்டு ஜெயித்தாலும் இவருக்கு ஒரு 25 --30 எம்.எல்.ஏ தான் கிடைக்கும்..இதை வைத்து முதல்வர் ஆகிவிடமுடியுமா?--இவருக்கு இவ்வளவு பெரிய ஆசை எப்படி வந்தது?--
எல்லாம் மோடி செய்த மாயம்தான்..”சோசியல் மீடியாவில்”  மோடி பெற்ற பெருமை--பெயர் புகழ்--தாங்களும் பெற்றுவிடலாம் என “கனவு காணும்” கூட்டத்தில் அன்புமணியும் ஒருவர்..அதனால்தான் “அன்புமணி பார் சிஎம்”--என்னும் இணய தளத்தை துவக்கி இன்று முதன்முதலாக விளம்பரத்தை துவக்கி விட்டார்..
ஒருவேளை 12.07.2015 நல்ல நாள் என சோதிடர்கள் குறித்து தந்திருக்கலாம்..இதே பாணியில்தான் மார்ச் மாதத்தில் ஒருநாள்..”உலக.இனப்பாகுபாடு ஒழிப்புதினம்.....” என்று  தளபதி ஸ்டாலினும்...உலக மகளிர் தினத்தன்று..கனிமொழியும்..விளம்பரம் தந்து..மோடிமாதிரியாக முயற்ச்சித்துள்ளனர்..
வேட்டியை “தார் பாய்ச்சி “கட்டியவனெல்லாம்--காந்தியாகவும்...சட்டையில்  ரோஜா குத்தியவனெல்லாம்..நேருவாகவும்..தொப்பியும் கூலிங் கிளாசும் போட்டவனெல்லாம் எம்ஜியார் என்றால்--அன்புமணியும் “மோடியாகி” விடலாம்.
நாஞ்சில் மனோகரன் சொன்ன “கருவிலே குற்றம் “ போல முதல் விளம்பரத்திலேயே குற்றம்--
CHANGE AND PROGRESS WITH ANBUMANI யாம் ...PROGRESS ..முன்னேற்றம் வந்தாலே மாற்றம் வரும்----வெறும் மாற்றங்கள் ஏற்கனவே பலவந்து நமக்கு ஏமாற்றங்களைத்தான் தந்தது..
1967 இல் காங்கிரஸ் போய் திமுக வந்த மாற்றமும்---1977 இல் திமுக போய் அதிமுக வந்த மாற்றமும்--1984 இல் இந்திரா போய் ராஜீவ் வந்த மாற்றமும்..நமக்கு  ஏற்றமில்லை--ஏமாற்றம் தான் தந்தது..
மோடி மாற்றம் மட்டுமல்ல --முன்னேற்றம்--” எல்லோருக்கும் முன்னேற்றம்--எல்லோரும் இணைந்த முன்னேற்றம்”--இதுவே மோடியின் மாற்றம்--வளர்ச்சி---
அன்புமணி மாற்றம் தருவாராம்----பிறகு முன்னேற்றமாம்..
இவர்மீதான மருத்துவ கல்லூரி ஊழல் இன்னும் நடந்து வருகிறது..அதிலிருந்து முதலில் இவர் ”வெளியே”- வரட்டும் --அப்புறம் முதல்வராக “உள்ளே” வர முயற்சிக்கலாம்..
ராமதாசுக்கு மகன் மீது ஆசை--மகன் அன்புமணிக்கு பணம் மீது ஆசை---
தமிழக மக்களுக்கு ஏற்றம் தருபவர் மீது ஆசை--ஏமாற்றம் தருபவர் மீது அல்ல

ஏற்றம் தருபவர் ---ஒருவரே...அது மோடிமட்டுமே--