Pages

Wednesday, July 15, 2015

சல்மான் குர்ஷித்தின் “தெனாவட்டு”

"இந்திரா காந்தி போட்ட "எமர்ஜென்சி" சரியானதே!மன்னிப்பு எதற்கு கேட்க வேண்டும்?"-சல்மான் குர்ஷித்
1975 ஆம் ஆண்டு --இந்திராவை காக்க --"எமெர்ஜென்சி" கொண்டு வந்தது காங்கிரஸ் !
1.5 லட்சம் பேர் எந்த குற்ற பத்திரிக்கையும்--வாய்தா நீட்டிப்பும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்
21 மாதம் கருப்பு நாட்கள்.--ஜனநாயகம் புதைகுழியில்--.சுதந்திரம் சவகிடங்கில்...பேச்சுரிமை தொண்டைக்குழிக்குள்--."இந்திராவே இந்தியா" என்றார் காங்கிரஸ் தலைவர் DK.பரூவா
இந்தக்காலத்தில் சித்திரவதைக்குள்ளான எதிர்க்கட்சி காரர்கள் எத்தனை பேர்?கொன்று குவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எத்தனை பேர்?.கருத்தடை ஆபிரேசன் செய்யப்பட்ட முஸ்லிம் ஆண்/பெண் எத்தனை பேர்?இதில் வயோதியர்/வயதுக்கு வராத முஸ்லிம்கள் எத்தனை பேர்?
கணக்கு தெரிந்தால் மக்கள் விடும் கண்ணீரில் காங்கிரஸ் கரைந்து போகும்!

இவ்வளவு தவறையும் செய்த காங்கிரஸ் , முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் மிகவும் "தெனாவட்டாக"பேசி உள்ளார்.
"இந்திரா அறிவித்த அவசர நிலை சரியானது தான் .அது சரி என்பதால் தான் 1980 இந்திராவை மக்கள் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தினர்.மக்கள் ஆதரித்த பின் மன்னிப்பு எதற்கு கேட்க வேண்டும்?"
இது தான் சல்மான் குர்ஷித் உதிர்த்த முத்துக்கள் ..
அடப்பாவிகளா !மக்கள் ஆதரித்தார்கள் என்றால் 1977இல் ஏன் இந்திரா,சஞ்சய் இருவரையும் சேர்த்து காங்கிரஸ்சை மக்கள் தோற்கடித்தார்கள் -

ஒருவேளை 1980 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருந்ததை வைத்து "எமெர்ஜென்சியை" நியாயப்படுத்தினால் ,2002 கோத்ரா கலவரத்துக்கு பிறகு மோடியை மூன்று முறை குஜராத் மக்கள் 3இல் 2 பங்கு மஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்தினார்களே ! அப்போது நீங்கள் ஏன் மோடியை குற்றம் சொல்வதை நிறுத்தவில்லை .

டில்லி துர்க்மான் கேட்டில் முஸ்லிம் பெண்கள்/வயோதிகர்கள் கதறக்கதறக் குடும்பகட்டுப்பாடு ஆபரேசன் செய்து,வீடுவாசலை விட்டு விரட்டிய நீங்கள் ,குஜராத் முஸ்லிம்களுக்காக "நீலிக்கண்ணீர்" வடிப்பது எதனாலே?
சல்மானின் "தெனாவட்டு" இதோடு நிற்கவில்லை."1975இல் எமெர்ஜென்சி அணிவிக்கும் நிலைக்கு காரணமாக இருந்த எதிர்கட்சிகள் தான் மன்னிப்பு கோர வேண்டும்" என்று போட்ட  குண்டுதான் மிகுந்த ஆச்சரியமானது
உன்னை அடித்து துவைத்தால் உனக்கு ஏற்பட்ட காயங்கள்,ரணங்களுக்காக நீ என்மீது வழக்கு தொடுப்பாயானால் உன்னை அடித்ததால் ஏற்பட்ட என் "கைவலிக்கு" நான் உன் மீது வழக்கு தொடுப்பேன்”-- என்பது போலுள்ளது சல்மானில் குற்றச்சாட்டு
இந்த சல்மான் குர்ஷித் ரொம்ப விசிதிரமானவர்.

 மும்பை, ஆக்ரா, ஐதராபாத், டில்லி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடந்து ஆயிரகணக்கானோரை கொன்று குவித்த "சிமி" என்ற இயக்கத்திற்கு மத்திய அரசு தடை செய்தது
அந்த தடையை எதிர்த்து சிமிக்கு ஆதராவாக கோர்ட்டில் ஆஜரானவர் தான் இந்த சல்மான் குர்ஷித்
அவர் திருவாய் மலர்ந்தருளியதோ அல்லது அவர் சார்ந்த காங்கிரஸின் நிலைப்பாடோ ஆச்சரியமானதில்லை
ஆனால் சரித்திரத்தை மறந்துவிட்டு "அவசரநிலையின் அட்டூழியங்கள்" வெளிவராமல் பார்த்துக்கொள்ள அல்லது மக்களுக்கு நினைவுபடுத்தாமல் மோடியை மட்டுமே குறிவைக்கும் இன்றைய மீடியாகளின் நிலைப்பாடு தான் ஆச்சரியமளிக்கிறது !

No comments: