Pages

Monday, November 21, 2011

கட்டண உயர்வுக்குப்பின் நிலமை சீரடையுமா?--”ஜெ”க்கு ஒரு ஏமாந்த சோணகிரியின் யதார்த்த கடிதம்பால் விலை உயர்வு!--பஸ் கட்டண உயர்வு--காத்திருக்கும் மின் கட்டண உயர்வு--தமிழ்நாடே “அல்லொஹல்லோல” பட்டுகொண்டு இருக்கிறது..

அத்தனை எதிகட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு முதல்வர் ஜெய லலிதாவை வாட்டி வதைத்து வருகின்றனர்..விஜய் காந்த்துக்குக் கூட கோபம் பொத்துக்கொண்டு வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆர்ப்பாட்டங்கள்--சாலை மறியல்--ஓரிரு மாதங்களுக்கு கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான்..-பத்திரிக்கை--
டி.வி களுக்கு பெரும் தீனி..
விலை உயர்வை ஆதரித்து சொல்லுகின்ற வாதங்கள் என்னென்ன?


1.பஸ் கட்டணம்--கடைசியாக உயர்த்தப்பட்டது 2001 ஆம் வருடம்தான்
2.மற்ற மநிலங்களை காட்டிலும் நம் கட்டணம் மிகக் குறைவு
2.உதிரி பாகங்கள்--தொழிலாளர் சம்பளம் உயர்ந்து விட்டது..
எப்போது சொல்கின்ற
“எல்லாவற்றிக்கும் திமுகவே காரணம் --கருணாநிதியே காரணம்”--
என்கின்ற பாயிண்டையும் சேர்த்து வாசித்துக்கொள்ளவும்
எனவே விலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயாம்.


ஜய லலிதாவின் டி.வி உரை--மற்றும் அறிக்கையில் மனம் மாறி --ஒரே வரியில் சொல்வதானால்--”கட்டண உயர்வை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”-என 6 1/2 கோடி தமிழ் மக்களின் சார்பாக” ஜெ” யிடம் நான் உறுதி கூறுகிறேன்..( நீ யார் எங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ள என என் மனைவி மகனே கேட்கின்றது காதில விழுகிறது)--


கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டாகிவிட்டது..

எந்த கால கெடுவும் கொடுக்காமல் கட்டண உயர்வு உடனே அமுலுக்கு வந்து விட்டது..

ஒரு நாள் எக்ஸ்ட்ரா கூட அரசு தாங்காது என்பதால் மக்கள் உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்..
சென்ற ஆண்டு 6150 கோடி ரூபாய் நஷ்ட்டம் அடைந்த போக்குவரத்து துறையை எப்போது தூக்கி நிறுத்துவீர்கள். (எப்படி என்று கேட்கமாட்டோம்--நீங்கள் தான் நிர்வாகத்தில் புலியே--நாங்கள் வெறும் எலியே )
ஓட்டை உடைசல் பஸ்கள் எப்போது சரியாகும் ?--மூட்டை பூச்சிகள் எப்போது நாடுகடத்தப்படும் ?-பஸ்கள் எப்போது நேரத்துக்கு வரும் --போகும் ?--தனியார் பஸ்களின் --சுகம்--தரம்--சேவை--போல எப்போது கிடைக்கும் ?--இவைகளுக்கு எத்தனை மாசகாலம் தங்களுக்கு வேண்டும்?-- இந்த கேள்விகளேல்லாம் சரியா?--தவறா ?--அல்லது இவைகளெல்லாம் “சிலபஸ்ஸில் “   ( out of syllabus ) இல்லையா?


சீர் படுத்த முடியாத “லெவலை “ நோக்கி போக்குவரத்து துறையும் --மின்வாரியமும் போய்க்கொண்டுரிக்கிறது..கட்டண உயர்வால் வெறும் 2100 கோடி ரூபாய் வருவாய் வரப்போகிறது. 


.உங்கள் கூற்றுப்படி மத்திய அரசு உதவி செய்யாது.. உங்கள் தேவையோ மிகப்பெரிது..எற்கனவே சாராயத்தில் “ஃபுல் “ வருவாய் வருகிறது..இதற்குமேல் வேண்டுமென்றால் வீட்டிற்கு ஒரு --பாக்ஸ்-- விஸ்கி கட்டாயம் வாங்கவேண்டும் என்று உத்தரவு போட்டு நாட்டு மக்கள் அனைவரையும் குடிகாரகள் ஆக்கினால் தான் உண்டு.இந்த கட்டண உயர்வு உங்களுக்கு என்ன பேருதவியை செய்து விட முடியும் ?."QUALITY HAS NO PRICE "- தரத்துக்கு விலை கிடையாது..மக்கள் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வார்கள்--( நாம் ஏற்கவில்லையென்றால் நீங்கள் விட்டு விடவா போகிரீர்கள் ).உங்களால் தரமும் -சேவையும் தரமுடியுமா ?.இதுவரை அரசு இதை செய்ததாக வரலாறில்லையே ?.
நீங்கள் இவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் உங்கள் வார்த்தையை மக்கள் ஏன் நம்ப மறுக்கிறார்கள்.?.ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் ?.


கருணாநிதியின் “ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு” எதிரான வடிகால் தான் உங்களுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால் “ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு பதிலாக “கும்பல் ஆட்சி “-”ஆகிவருகிறதே உங்கள் ஆட்சி--பொதுப்பணித்துறை--போக்கு
வரத்து--மின்சாரம்--போலிஸ்--கல்வி--என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் “தலைவிரித்து “ ஆடத்துவங்கி விட்டதே..


கலக்டர்-- போலீஸ் அதிகாரி-- மாநாடு போட்டு கம்பீர்த்தை காட்டும் நீங்கள்--ஊழல்--கும்பல் ஆட்சியில் ஏன் ஒளிந்து மறைகிரீர்கள்.?--இதை சரி செய்ய முடியவில்லையா ?--அல்லது உங்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ?.

மின் வெட்டு இதுவரை சரி செய்யப்படவில்லை--நிபுணர்களையு
் அதிகாரிகளையும் கேட்டால்..--நீண்ட கால திட்டம் ஏதும் அரசிடம் இல்லை..உடனடியாக மின் வரத்துக்கு-- சமீபத்தில் முடியும்--என்ற-- எந்த திட்டமும் அரசின் கைவசம் இல்லை---அடிக்கடி அதிகாரிகள் மாற்றம்-- திறமையற்ற நிர்வாகம் காரணமாக மின்வெட்டு ரத்தாகாது--வேண்டுமானால் கருணாநிதி மீது பழியை போட்டு --கொஞ்சம் காலத்தை ஓட்டலாம்--என்கின்றனர்.


பால் விலை உயர்வு ஓ.கே..குடி தண்ணீரே ரூபாய் 16 விற்கிறது என காரணம் சொல்லிக்கொள்ளலாம்.--ஆவின் --எப்போது சரியாகும்--நிர்வாக சீர்கேடு--லஞ்சம்--அரசியல் தலையீடு இல்லா “ஆவின் “ எப்போது பிறக்கும்?.விலை உயர்வு உங்களுடைய நஷ்ட்டத்தை சரி கட்ட மட்டும் இருக்கக்கூடாது..நுகர்வோருக்கு
இதனால் பயன் வரவேண்டும் அல்லவா ?.உங்களுடைய லாபம் ---மக்களுக்கு நஷ்டமாக இருக்கலாமா ?.”பயன்கள் “ இருவழிப்பாதையாக இருக்க வேண்டுமல்லவா ?..


சரி.. முதல்வர் ஜெ அவர்களே..தெரியாமல் கேட்கிறேன்..அரசின் வேலை “பஸ் ஓட்டுவதா “ ?.ராமன் & ராமன்..-எஸ்.ஆர்.வி.எஸ்---டி.வி
.எஸ்..போன்ற பஸ் முதலாளிகளை ஒழிக்கவே 1971 இல் கருணாநிதி பஸ் களை தேசிய மயமாக்கினார்..இதனால் போக்குவரத்து சீரானது--மக்கள் சேவை பெருகியது என வரலாறு கூறவில்லையே ?.மக்களுக்கு தேவை--சேவை---அதை அரசுத்துறையால் தரமுடியவில்லையே ?--இன்றைய நிலையில் போக்கு வரத்து கழகங்களின்  நஷ்டத்தை உங்களால் சீராக்க முடியாது..அப்படி ஒருவேளை நடந்தாலும் அது தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே ?...


நீங்கள் தான் புரட்சி தலைவி ஆயிற்றே--உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...அரசுத்துறையின் தோல்வியை ஒத்துக்கொண்டு ( சாரி உங்கள் மனசாட்சி இடக்கொடுக்காது--அப்படி வேண்டாம் )--எதாவது ஒரு காரணத்தை சொல்லி---பஸ் போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்த்து விடுங்களேன்.முதலில் ஒரு பெரிய தொகையை உங்களின் ரத்தத்தின் ரத்தங்கள் பார்க்கலாம்--அவ்வப்போது வசூல் நடத்த “அக்‌ஷய பாத்திரமாகவும் “ பஸ் முதலாளிகள் இருப்பார்கள்..எங்களுக்கும் ஓட்டை உடைசல்கள் பஸ்ஸிலிருந்து விடுதலை கிடைக்கும்..

ஒவ்வொரு விலை உயர்வும்--கட்டண உயர்வும் ---ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு-- மக்கள் அனுபவிக்கும் தண்டனையாக இருக்கிறது..5 வருடத்திற்கு ஒருமுறைதான் அரசியல் வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்..மக்களின் கோபத்தை சம்பாதித்ததனால் தான் திமுக ஆட்சி தண்டிக்கப்பட்டது..

உங்கள் ஆட்சியும் சம்பாத்யத்தில் (மக்கள் கோபம் உட்பட ) இறங்கிவிட்டது..சம்பாத்யத்தின் அளவை பொறுத்து தண்டனை நிச்சயம்--இதை உணர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவாவது..”ஊழலற்ற நிர்வாகம்--திறமையான நிர்வாகம் “ நடத்துவீர்களா ?--அதை இந்த விலை உயர்விலிருந்து தொடங்குவீர்களா ?.

Wednesday, November 16, 2011

சீமான்களுக்கு சீமைசரக்கு தரும்--—சீஃப் மினிஸ்டர்

சீமான்களுக்கு சீமைசரக்கு தரும்--—சீஃப் மினிஸ்டர்

ரேடியோ மிர்ச்சியில் இன்றுகாலை “சீமை சரக்குக் கடைகள் “( ELITE WINE SHOPS) பற்றி ஒரு கேலி விமர்சனம் கேட்டேன்.
“ஜெ” ஒரு controversy யின் கட்டாகவே ( bundle ) மாறி வருகிறார்..சமச்சீர் கல்வி---சட்டசபை கட்டிடம்—அண்ணா நூலகம்—இப்போது புதிதாய் 200+600—புதிய சாராயக்கடைகள்..திறப்பு அறிவிப்பு..


கீழ்த்தட்டு மக்களுக்கும் நடுத்தட்டு மக்களுக்கும் “டாஸ்மாக் “ மூலம் ”சாராய சேவை”—நடந்து வருகிறது..நடுமேல் தட்டு மற்றும் மேல்தட்டு மக்களுக்காகவே சீமைசரக்குக் கடைகளை அம்மா திறக்க இருக்கிறார்..
இவை முடிந்தவுடன் அடுத்த கட்டமாக..பெண்கள் குழந்தைகளுக்கான “சிறப்பு சாராய கடைகளை “ திறக்க அம்மா உத்தரவிடுவார்..
இது ரொம்ப “ ஓவராக “ இருப்பதாக நினைக்கவேண்டாம்—இந்த அரசின் “பணப்பசிக்கு “இது மட்டுமல்ல—இதற்கு மேலும் நடந்தாலும் நடக்கும்.

ஒரு அரசாங்கத்தின் கடமைகள் மூன்று—
1—ஒழுங்குபடுத்தல்—(REGULATORY )

தொலை தொடர்பு—வர்த்தகம்—போக்குவரத்து போன்ற துறைகளில் செயல்பாடுகளை நெறிமுறை படுத்தும்—ஒழுங்கு படுத்தும் வேலைகளை அரசு செய்ய வேண்டும்—செய்கிறதா?

2—வளர்ச்சி—( DEVELOPMENT)
1991 ஆம் ஆண்டுவரை நாட்டின் மொத்த வருமானத்தை ஜி.டி.பி.ஆல் வகுத்தால் தனி மனித வருமானம் என்றிருந்தது..இது உண்மையில் எல்லாதரப்பு மக்களின் வருமனத்தையும் பிரதிபலிக்க வில்லை.(.இன்று கூட நம் நாட்டின் தனிமனித வருமான்ம் ரூ.30 என மாண்டேக் சிங் அலுவாலியாவும்..இல்லை என வேறு சிலரும் கூறுவதை நாம் கேட்க முடிகிறது)..

ஆகவே பாகிஸ்தானின் பொருளாதார மேதை “மெஹ்பூப் உல் ஹக் “—அவர்களின் மனித வளர்ச்சிக்கான சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு—உண்மையான வளர்ச்சி எது என்பது மாற்றி அமைக்கப்பட்டது..

இன்று மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி—ஒரு பக்கம் அம்பானிக்கள்—அஜிஸ் பிரேம்ஜிக்கள்—மறு பக்கம் அன்னாடம் காய்ச்சிகள்—தினசரி கூலிகள்—என ஏற்ற தாழ்வுகள் “மலைக்கும் மடுவுக்கும் “ உள்ள இடைவெளியாகிவருகிறது..

இச்சூழலில் 10 ஆம் வகுப்பு பெயிலான ராமசாமியால்—எம்.பி.ஏ.பாஸ் செய்த ரமேஷோடு எப்படி போட்டியிடமுடியும்..ஆண் –பெண் பாகுபாட்டினால் எற்படுத்தபட்ட போட்டி—படிப்பு—அந்தஸ்து—ஜாதி—மதத்தால்—எற்படுத்தப்பட்ட போட்டி—இவைகளால் “வளர்ச்சி “ எல்லோருக்கும் எப்படி சமமாக போய்ச்சேர முடியும்.... இதை சரிப்படுத்துவதே அரசின் கடமை—வேலை—பணி—இதைச் செய்கிறதா நம் அரசு?

3—மக்கள் நலன்,,-(WELFARE )
அரசின் மிக முக்கிய பணி மக்கள் நலன்--..வளர்ச்சியை முக்கிய அங்கமாக செய்யும் அரசு –அதை முழுவதும் சமமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் காலம் வரை “வீழ்ந்து கிடக்கும் குடிமகனை “—தூக்கிவிட ஏதுவாக –இலவசங்கள்—கல்வி..வேலை வாய்ப்பில் இடஒதிக்கீடு—மான்யங்கள்—தர வேண்டும்..

இதில் அரசின் –பங்காக—பணியாக—வேலையாக—கடமையாக—”சாராயம் “ எங்கே வந்தது?—

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் குடிமகனை சாராயத்தினால் வீழ்த்தி—நிரந்தரமாக “வீழ்ந்து கிடக்கும் “”குடி “ மகனாக “அரசு ஏன் ஆக்கவேண்டும்?—

நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிப்பாதையில் செல்லவேண்டிய திட்டங்களுக்கும்,,பணம் திரட்ட வேறு வழியே கிடையதா?—

ஆம்—உண்டு—இருக்கு—எஸ்---

பின் ஏன் முந்தைய கருணா அரசும் இன்றைய “ஜெ” அரசும் சாராயத்தை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்கிறது?
மதுவிலக்கு இருந்தும் கூட பொருள் திரட்டும் “குஜராத்தை பாருங்கள் “ என்று நாம் அடிக்கடி சொல்லவேண்டுமா?

3 நாளைக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு புள்ளிவிவரம் வெளிவந்தது..அதில் 2011—அக்டோபர்-- நவம்பர் –மாத “டாஸ்மாக்’ விற்பனை உயர்வு---16.78-சதம்----டாஸ்மாக்குக்கு சப்ளை-செய்யும் “டிஸ்லரிகள்”—அவைகளில் “பேராசைகாரன் “—தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்னும் வரம் கேட்ட  “மிடாஸ் “என்ற மைதாஸ் பெயர் கொண்ட டிஸ்ட்லரி—ஜெ வுக்கு சொந்தம்—(இதை ஜெ பலமுறை மறுத்திருக்கிறார்.இருந்தாலும் உண்மை ஊரறியும்.).இதன் விற்பனை உயர்வு 34 சதவீதம்---இப்போது புரிகிறதா சாராயம ஏன் தொடர்கிறது என்று..-

இந்த லாபங்கள் யாருக்கு போகிறது---ஜெ யிக்கு..

மக்கள் நல திட்டங்களை செயல் படுத்த அரசுக்கு வருவாய் ஈட்ட—வேறு வழி தெரியவில்லை—எனவேதான் சாரயங்கள் தொடர்கிறது..”டாஸ்மாக்” திறந்திருக்கிறது..பெருந்தனக்காரர்கள்—சீமான்களுக்காக---சீமை சரக்கு கூடங்களை சீஃப்மினிஸ்டர் திறக்க இருக்கிறார்..இதன் மூலம் அதிக வருவாய் வருமல்லவா?—அதன் மூலம் அரசு--- நலத்திட்டங்களை செயல் படுத்தலாமல்லவா?—
இது உண்மையா?—

அரசுக்கு வருவாய் எனபதை விட அம்மாவுக்கு வருவாய்—ஆள்பவர்களுக்கு வருவாய்—எனபதே உண்மை..

மாறாக இந்த சாராய வியாபாரத்தால் சந்திக்கும் சமூக கொடுமைகள் என்ன என்ன??—மாற்ற முடியா பாதிப்புக்கள் என்னென்ன?

ஓட்டுரிமை வயது 18—ஆனால் குடிமகனின் வயது 13 ஆக குறைந்துள்ளது..(என்னே சாதனை )..
ஆண்டுக்கு 18 சதவீதம் புதுக்குடிகாரகள் உருவாகிறார்கள்..( என்னே வளர்ச்சி )—
தமிழக ஜனத்தொகையில் இன்று பாதிபேர் “குடிகாரர்கள்” –

விளைவு?
மனைவியை—குழந்தைகளை—அடித்து துன்புறுத்தும் “குடிகார “கணவன்கள் எண்ணிக்கை “விர்” ரென உயர்ந்து வருகிறது..

சம்பளம் முழுவது சரக்குக்கே செலவிடுவதால்—குடும்பச்சுமையை தாங்க வேலைக்கு போகும் சிறுவர்கள்..

குடும்ப அமைதி சீர்குலைவால் “விவாக ரத்து “கேட்கும் மனைவிமார்கள்—

நிரந்தர குடியால் உடல்நிலை கெட்டு சீக்கிரமே சிவலோக பதவி அடையும் கணவன் மார்கள்.—
அதனால் இளம்விதவைகள்..பெருகும் அபாயம்..

சாரயம் கொடுத்த தையிரியத்தால் –வழிப்பறி—கொள்ளை—கொலை—என பெருகி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு..( இதை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் திருமதி.ஹேமா கருணாகரன் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்)..

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் பெருகி வரும் சாலை விபத்து மரணங்கள்—

இவ்வளவு நன்மைகள் இருப்பதால்தான் அரசு “சீமான்களுக்காக”—புதிய சீமை சரக்கு கடைகளை திறக்கிறதோ?

இப்போது ஆரம்பித்தால் கூட மதுவை ஒழிக்கவும்---மது தங்களை ஒழிப்பதற்க்குள் அவர்களை காப்பாற்றவும்—அதற்கான சிகிச்சைகளை ஏற்படுத்தி—மறுவாழ்வு இல்லங்களை ஏற்படுத்தி—மக்களை ஆரோக்கிய பாதைக்கு கொண்டுவரவும் –இன்னும் 20திலிருந்து 30 ஆண்டுகள்வரை  ஆகும்.

இந்நிலையில்..சீமை சரக்கானாலும் சரி—நாட்டுச்சரக்கானாலும் சரி—சீமானுக்காகவும் சரி—சாமான்யனுக்காகவும் சரி—மேலும் மதுக்கடைகளை திறக்கக் கூடாது---மது விற்பது அரசின் வேலை அல்ல..

 

Tuesday, November 8, 2011

தமிழ் நாடும் தாய்லாந்துமஒருவாரம் பெய்தமழை தமிழ் நாட்டை உலுக்கி விட்டது..அப்படியானால் பேய் மழையா?—வரலாறு காணாத மழையா?—ஆண்டு சராசரியை தூக்கியடித்து “சிரபுஞ்சி நிலையா”?—ஊம்…ஹூம்…ஒன்றும் இல்லை..

பின் ஏன் இந்த நிலை?—தினசரி செய்தியில் வானிலை ஆராய்ச்சி மைய டைரக்டர் ரமணன் என்ன சொல்கிறார் என் எல்லோரும் ஆவலோடு பார்த்தனர்…

சென்னைக்குள் “ஆயிரம் குளங்கள் “—அம்பத்தூர் போன்ற “அவுட்டர் ஏரியாக்களில்”-சில இடம் “கடலாக காட்சி “—”நீ வரவேண்டாம் நானே வருகிறேன் “—என் சில தாழ்வுப் பகுதிகளில் வீட்டுக்குள் வந்த வெள்ளம்—தண்ணிக்கு அல்லாடும் திருப்பூர் பகுதியில் “ஆறு—ஊருக்குள் “ புகுந்து அழித்த அவலம்..

வேட்டியை மடித்துக்கட்டி..குடை சகிதமாக “மேயர்களும்—ம்ந்திரிகளும்”—தண்ணீருக்குள் மக்கள் படும் அவலத்தை பார்த்த  காட்சி..படங்களுடன் செய்தி..

இப்படி மக்கள் அல்லாட காரணம் என்ன?—அளவான் மழையே அளவில்லா சேதம் ஏற்படுத்த காரணம் என்ன?—இப்படி ஆயிரம் “என்னக்கள் “ உள்ளனவே இதற்கெல்லாம்.பதில்தான் என்ன..என்ன...

ரொம்ப சிம்பிள்—எதையும் திட்டமிட்டு செய்தால்…எந்த பேரிடரும் தீங்கிழைக்க முடியாமல் ஓடி ஒளியும்..
கோவையில் நிரஞ்சன் மார்டி என்பவர் கமிஷனராக இருந்தார்..பருவ மழை காலத்திற்கு முன்பே ஓடைகளை, கழிவுநீர் பாதைகளை, தூர்வாரி, சாலைக்குழிகளை செப்பனிட்டு விடுவார்..இதுதான் வருமுன் காத்தல்.இதை கடந்த முறை கமிஷனாராக இருந்த அன்சுல் மிஸ்ராவும் செய்தார்..அதை முடிக்குமுன்னே அவர் தூக்கியடிக்கபட்டார்..

இவைகளை செய்திருந்தால் “மழையால் மரணமடைந்தவர்” யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.ஒரு லட்சம் உதவி அவசியமாய் இருந்திருக்காது  .சென்னை தி.நகரில் சாலைக்குழிக்குள் ஆசிரியை விழுந்து அநியாயமாக பலியாகி இருக்க மாட்டார்கள். கருப்பு பேண்ட் போட்டுக்கொண்டு கணுக்கால் தண்ணியில் ஸ்டாலின் “பிரெட்” வினியோகித்திருக்க மாட்டார்..

நமக்கருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டிலும் வரலாறு காணாத மழை..4 தலைமுறையாக இதுபொன்ற மழையை மக்கள் பார்த்ததில்லையாம்.உலகின் மிகப்பெரிய கம்யூட்டர் ஹார்டுவேர் பொருட்களும்—கார் உதிரி பாகங்களும் தயார் செய்யும் நிறுவனங்கள்..இங்குதான் இருக்கின்றன.

ஒருசில உதிரி பாகங்கள் –உலகில் தயாரிக்க படுவதில் நான்கில் ஒரு பகுதி இங்குதான் தயாரிக்க படுகிறது என்றால் எவ்வளவு பெரிய தொழிற்சாலைகள் இங்கிருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்..

நம்மூரில் தண்ணீர் வடிந்து விட்டது..அங்கு மூன்று வாரமாகியும் தண்ணீர் வடிந்த பாடில்லை….ராட்ஷ்ச மோட்டார்கள் 24 மணிநேரமும் வேலை செய்தும் நீர் குறைந்த பாடில்லை..அரிக்கும் அமிலத்தன்மையில் தண்ணீர் இருக்கிறதென்றால் எவ்வளவு “மாசு “பாருங்கள்..நாம் தேவலாமோ?

ஆம்..அவர்களும் சில விஷயங்களில் நம்மோடு போட்டி போடுகிறார்கள்..வடக்கு பாங்காக்கில் தான் இவ்வளவு சேதம்..காரணம்—விளை நிலங்கள் அழிக்கப்பட்டு—நம்மைப்போல் ரியல் எஸ்டேட்—ஷாப்பிங் மால்—தொழிற்சாலை கட்டப்பட்டதால்..நீ உறிய—வடிய வழியில்லாமல் போனதாம்..

இதற்குக் காரணம் நில உடமைதாரர்களுன் பேராசைதான் காரணம் என்கின்றனர் அங்குள்ளவர்கள்..எப்படி தாய்லாந்தும் நம் தாய்நாடு தமிழ்நாடும் ஒரே மாதிரி இருக்கிறதல்லவா?

அது கிடக்கட்டும்..இந்த மழையை தாங்கி விட்டோம்—அடுத்த ஆண்டு வரும் மழையை தாய்லாந்து தாங்க முடியுமா? என்றால்..நிச்சயமாக தாங்கமுடியாது..என்கிறார்கள் தாய்லாந்துகாரர்கள்..ஆனால் அதற்குள் வடிகால் உருவாக்கி விடிவு காண்போம் என்றும் சொல்கிறார்கள்.

நம்மால் அப்படி சொல்ல முடியுமா?—எத்தனை ஆண்டுகளாக மழை பெய்கிறது..வெள்ளம் வருகிறது—குடில்கள் சேதம்—சாலை சேதம்—பொருள் சேதம்—உயிர் சேதம் ஏற்படுகிறது--.விடிவு உண்டா?—ஆட்சி மாறுகிறது—காட்சிகள் மாறுவதில்லையே?—கஷ்ட்டப்படுவது எங்கள் விதி—தலை எழுத்து—இது எப்போதும் மாறாது-----இதுதானே சரி…

Monday, November 7, 2011

அம்மாவுக்கு ஒரு சொல்

அம்மாவுக்கு ஒரு சொல்

வீட்டை   இடி   மாளிகை  கட்டு
காரை  மாற்று  கடனை  வாங்கு

ஒருவாய்   சோற்றுக்கே
ஊசல்   ஆடும்போது
இவைபோல்   ஆர்ப்பாட்டங்கள்
அவசியமா   அம்மா

செயலகம்   கட்டி
செயலற்றுப்  போச்சு
நூலகம்  கட்டி
படிப்பற்று  போச்சு

ஒருவர்  கட்டுவதும்
வருபவர்  அழிப்பதும்
யார்வீட்டு  சொத்திது
ஒங்கப்பனா  எங்கப்பனா

ஆக்கபூர்வமாக  செயல்  பட
ஆயிரம்  இருக்குதே அம்மா
அதை  செய்யுங்க  அம்மா
மற்றதை  மறங்க  அம்மா..

Sunday, November 6, 2011

நல்ல மாப்பிள்ளை--நல்ல மாமனார்

முத்து வேலருக்கு மூன்று மருமகன்கள்---மனைவி ராசாத்திக்கு மகள்கள் மீது அதீத பாசம்..மகள்களை...மருமகன்கள் நன்றாக வைத்துக்கொள்கிறார்களா? என்கிற சந்தேகம் மாமியாருக்கு நீண்ட நாட்களாக இருந்தது.ஒரு “டெஸ்ட்” வைக்கத்தீர்மானித்தாள்..

ஒரு நாள் முதல் மருமகனை அழைத்துக்கொண்டு ”போட்டில்”-- கடலுக்கு போனாள்..திடீரென தண்ணீரில் குதித்து “காப்பாற்று--காப்பாற்று” --என சத்தமிட்டாள்..மருமகன் பதறிப்போய்...மாமியாரை காப்பாற்றி வீடுவந்து சேர்ந்தான்..ராசாத்திக்கு ஒரே சந்தோஷம்--முதல் மருமகனுக்கு ஒரு “இன்னோவா கார் “ பரிசளித்தாள்.

ஒருமாதம் சென்று இரண்டாவது மருமகனுக்கும் இதே “டெஸ்ட் “டை வைத்தாள்..அவனும் காப்பாற்றி கரை சேர்ந்தான்..இரண்டாவது “இன்னோவா” வீட்டில் காத்திருந்தது..

இன்னொரு மாதம் சென்று மூன்றாவது மருமகனுக்கும் இதே “டெஸ்ட்”--ராஜாத்தி நீரில் குதித்தாள்..காப்பாற்று காப்பாற்று என கதரினாள்.மருமகன் கண்டுகொள்ளவில்லை..”ஒரு ராட்சசியை மகளாக பெற்று என் தலையில் கட்டிவிட்டாய் அல்லவா?”--செத்து மடி--அதான் உனக்கு தண்டனை--என அவளை சாகடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்..

அங்கே அவனுக்கு “ஒரு பென்ஸ் கார் “ காத்திருந்தது...ஆம்..ராசாத்தியிடமிருந்து தன்னை காத்ததற்காக--முத்துவேலரின் அன்புப் பரிசு...

புரட்சித் தலைவியின் “சீட்டுகட்டு ராஜாக்கள் ”—பாகம் 1இடம் –போயஸ் தோட்டம் –கான்ஃபரன்ஸ் ஹால்

“ ஜெ “ –சசி—சோ—இளவரசி---வளர்மதி—பேசிக்கொண்டிருக்கிறார்கள்..

ஓ.பன்னீர் செல்வம் சோகமாக உள்ளே நுழைகிறார்..

ஜெ---ஏன்யா..மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டுருக்க…உன்னதான் ..மாத்தல்லியே.

ஓபி---அதான்மா பயமா இருக்கு---அடுத்து நான் தானோ.ன்னு.

சசி—சேச்சே—அக்கா அப்பிடி செய்யமாட்டாங்க---செங்கோட்டையன பாத்து பயந்துட்டுங்கிளா-----பெங்களுரு கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு நீதான்யா சிஎம்..

ஜெ----(-சசியை முறைத்துப் பார்த்து…)---அப்பிடி எதுவும் நடக்காது---நம்ம ஜோசியர் சொல்லிட்டார்---

சசி-----அதுக்கில்லக்கா---ஓபிஎஸ்..மாதிரி நல்ல ”எந்திரன் “ நமக்கு யார் கிடைப்பாங்க அக்கா..

ஜெ----ஆமான்..ல்..ல..

வளர்மதி---அம்மா..என்ன..கொஞ்சம்..கவ…னிங்க..ம்மா----…(என இழுக்க..)

சசி---நீ 25 வது ரீஷஃப்ல இருக்க..வளர்..

வளர்மதி----அம்மா அவ்வ்ளவு நாளாகுமா..

ஜெ----அது ஒன் அதிர்ஷ்டத்தை பொறுத்தது..அடுத்த மாசமே வந்தாலும் வரலாம்..

சோ---அதிருக்கட்டும் அம்மு---( சோ--—ஜெயை அப்படித்தான் அழைப்பாராம் )—இந்த லைப்ரரியை மாத்தரது எனக்கு சரியாப்படல்லை..

ஜெ-----எனக்கும்தான்-இந்த “பெரிசு “சும்மா இல்லாமல் என்ன சீண்டிகிட்டே இருக்கே----அப்ப நான் மாத்துரத தவிர வேறு என்ன செய்ய—

சோ-----இவ்வளவு ..மக்கள் ..எதிர்ப்பு இருக்கே----

ஜெ------எந்த மக்கள் எதிர்ப்பும் இல்லை—கருணாநிதி மக்கள் மட்டும்தான் எதிர்க்கிறார்கள்ளுன்னு..உளவுத்துறை டி.ஐ.ஜி.யே சொல்லிட்டார்..ஜோசியர் பணிக்கரும்..லைப்ரரி குள்ள..கண்ணகியோட புக் ஒண்ணு இருக்காம்—அது எனக்கு ஆகாதாம்—

சோ---அதுக்காக…லைப்ரரியவே மாத்தணூமா---

ஜெ-------லைப்ரரிய மாத்தரப்ப அந்த புக்க தூக்கி எரிஞ்சுடுவேன்..இல்ல

இந்நேரம் பார்த்து ஐ.ஏ.எஸ்—ஐ.பி.எஸ்----ஆஃபிஸர் அச்சோசியேஷன் சேர்ந்தவர்கள் உள்ளே வந்து ஜெ யிடம் ஒரு மகஜர் தருகிறார்கள்..
அதில் அடிக்கடி “மாற்றல்கள்” சிரமமாக உள்ளது என்று இருக்கிறது

ஜெ---அதுக்கு நான் என்ன செய்யணும்---

ஆஃபிசர்கள்---   மேடம்—நீங்க—பதவியையும்—ஊரையும் மாத்துங்க—ஆனால்..நாங்க உக்காந்திருக்கிற சீட்டை மட்டும் மாத்தாதீங்க..எங்களால அலைய முடியலை..

சோ---அது எப்பிடி முடியும்—

ஜெ---சோ..நீங்க சும்மா இருங்க---( ஆஃபிசர்களை பார்த்து ஜெ )நீங்க அதே சீட்ல அதே ஊர்ல இருங்க---டிபார்ட்மெண்ட் அங்கேயே வரும் –நான் பார்த்துக்குரேன்..

அப்போது செங்கோட்டையன் உள்ளே நுழைகிறார்..

செங்----அம்மா—ஐ.டி—பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதேம்மா—

ஜெ-----ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்கரது..எனக்கு தெரியும் –அதனால தான் போட்டேன்..

செங்—இன்னும் எவ்வளவு நாள் நான் கஷ்ட்டப்படணூம் அம்மா

ஜெ----ஜஸ்ட்—25 அவர்ஸ்

சோ---அதென்ன 25 மணி நேரம்..அம்மு

ஜெ-----எத செஞ்சாலும் 16—25---34—லதான் செய்யணுமாம்—ஜோசியர் சொல்லியிருக்கார்..

சோ—அப்ப மந்திரி மட்டும் எப்பிடி 6 மாத்தின

ஜெ---இந்த மாசம் 6 தான் நல்ல நம்பர்

சோ---நீங்க போர போக்க பாத்தா..எல்லாருக்கும் மந்திரி பதவி கொடுத்துடுவீங்க போல இருக்கே அம்மு

சசி---துக்ளக் ஸார்..( சோவை சசி அப்படித்தான் அழைப்பாராம் )ஒருசில பேருக்கு ஒருதடவைக்கு மேல் சான்ஸ் கிடைக்கலாம்

சோ----அடுத்தடவை மந்திரிங்களை எப்பிடி செலெக்ட் பண்ணுவீங்க சசி—

சசி—செலக்‌ஷனாவது மண்ணாவது---முதல்ல அக்காவோட---,என்னோட ஜாதகத்தோட ஒத்து போகணும்---குடுக்குர பொட்டிய திறக்காம கொண்டு குடுப்பார்ன்னு உளவுத்துறை டி.ஐ.ஜி.சொல்லணும்..அப்புறம் அக்கா சீட்டு குலுக்கி போடும்—நான் எடுப்பேன்..

சோ---மொட்டை தலையை தடவியபடி---இப்பவும் நம் செலக்‌ஷன் தப்புதான் போலிருக்கிறது--என முணுமுணுத்தபடி நடையை கட்டுகிறார்..

அப்ப நாமும் தலைப்ப மாத்துவோம்—சீட்டுகட்டு ராஜா இல்ல—சீட்டுகுலுக்கல் மந்திரிகள்..

இலவச இணைப்பு:-----