Pages

Monday, November 21, 2011

கட்டண உயர்வுக்குப்பின் நிலமை சீரடையுமா?--”ஜெ”க்கு ஒரு ஏமாந்த சோணகிரியின் யதார்த்த கடிதம்பால் விலை உயர்வு!--பஸ் கட்டண உயர்வு--காத்திருக்கும் மின் கட்டண உயர்வு--தமிழ்நாடே “அல்லொஹல்லோல” பட்டுகொண்டு இருக்கிறது..

அத்தனை எதிகட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு முதல்வர் ஜெய லலிதாவை வாட்டி வதைத்து வருகின்றனர்..விஜய் காந்த்துக்குக் கூட கோபம் பொத்துக்கொண்டு வருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆர்ப்பாட்டங்கள்--சாலை மறியல்--ஓரிரு மாதங்களுக்கு கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான்..-பத்திரிக்கை--
டி.வி களுக்கு பெரும் தீனி..
விலை உயர்வை ஆதரித்து சொல்லுகின்ற வாதங்கள் என்னென்ன?


1.பஸ் கட்டணம்--கடைசியாக உயர்த்தப்பட்டது 2001 ஆம் வருடம்தான்
2.மற்ற மநிலங்களை காட்டிலும் நம் கட்டணம் மிகக் குறைவு
2.உதிரி பாகங்கள்--தொழிலாளர் சம்பளம் உயர்ந்து விட்டது..
எப்போது சொல்கின்ற
“எல்லாவற்றிக்கும் திமுகவே காரணம் --கருணாநிதியே காரணம்”--
என்கின்ற பாயிண்டையும் சேர்த்து வாசித்துக்கொள்ளவும்
எனவே விலை உயர்த்தியாக வேண்டிய கட்டாயாம்.


ஜய லலிதாவின் டி.வி உரை--மற்றும் அறிக்கையில் மனம் மாறி --ஒரே வரியில் சொல்வதானால்--”கட்டண உயர்வை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”-என 6 1/2 கோடி தமிழ் மக்களின் சார்பாக” ஜெ” யிடம் நான் உறுதி கூறுகிறேன்..( நீ யார் எங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ள என என் மனைவி மகனே கேட்கின்றது காதில விழுகிறது)--


கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டாகிவிட்டது..

எந்த கால கெடுவும் கொடுக்காமல் கட்டண உயர்வு உடனே அமுலுக்கு வந்து விட்டது..

ஒரு நாள் எக்ஸ்ட்ரா கூட அரசு தாங்காது என்பதால் மக்கள் உடனே ஏற்றுக்கொண்டு விட்டனர்..
சென்ற ஆண்டு 6150 கோடி ரூபாய் நஷ்ட்டம் அடைந்த போக்குவரத்து துறையை எப்போது தூக்கி நிறுத்துவீர்கள். (எப்படி என்று கேட்கமாட்டோம்--நீங்கள் தான் நிர்வாகத்தில் புலியே--நாங்கள் வெறும் எலியே )
ஓட்டை உடைசல் பஸ்கள் எப்போது சரியாகும் ?--மூட்டை பூச்சிகள் எப்போது நாடுகடத்தப்படும் ?-பஸ்கள் எப்போது நேரத்துக்கு வரும் --போகும் ?--தனியார் பஸ்களின் --சுகம்--தரம்--சேவை--போல எப்போது கிடைக்கும் ?--இவைகளுக்கு எத்தனை மாசகாலம் தங்களுக்கு வேண்டும்?-- இந்த கேள்விகளேல்லாம் சரியா?--தவறா ?--அல்லது இவைகளெல்லாம் “சிலபஸ்ஸில் “   ( out of syllabus ) இல்லையா?


சீர் படுத்த முடியாத “லெவலை “ நோக்கி போக்குவரத்து துறையும் --மின்வாரியமும் போய்க்கொண்டுரிக்கிறது..கட்டண உயர்வால் வெறும் 2100 கோடி ரூபாய் வருவாய் வரப்போகிறது. 


.உங்கள் கூற்றுப்படி மத்திய அரசு உதவி செய்யாது.. உங்கள் தேவையோ மிகப்பெரிது..எற்கனவே சாராயத்தில் “ஃபுல் “ வருவாய் வருகிறது..இதற்குமேல் வேண்டுமென்றால் வீட்டிற்கு ஒரு --பாக்ஸ்-- விஸ்கி கட்டாயம் வாங்கவேண்டும் என்று உத்தரவு போட்டு நாட்டு மக்கள் அனைவரையும் குடிகாரகள் ஆக்கினால் தான் உண்டு.இந்த கட்டண உயர்வு உங்களுக்கு என்ன பேருதவியை செய்து விட முடியும் ?."QUALITY HAS NO PRICE "- தரத்துக்கு விலை கிடையாது..மக்கள் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வார்கள்--( நாம் ஏற்கவில்லையென்றால் நீங்கள் விட்டு விடவா போகிரீர்கள் ).உங்களால் தரமும் -சேவையும் தரமுடியுமா ?.இதுவரை அரசு இதை செய்ததாக வரலாறில்லையே ?.
நீங்கள் இவ்வளவு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தும் உங்கள் வார்த்தையை மக்கள் ஏன் நம்ப மறுக்கிறார்கள்.?.ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் ?.


கருணாநிதியின் “ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு” எதிரான வடிகால் தான் உங்களுக்கு கிடைத்த வெற்றி.

ஆனால் “ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு பதிலாக “கும்பல் ஆட்சி “-”ஆகிவருகிறதே உங்கள் ஆட்சி--பொதுப்பணித்துறை--போக்கு
வரத்து--மின்சாரம்--போலிஸ்--கல்வி--என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் “தலைவிரித்து “ ஆடத்துவங்கி விட்டதே..


கலக்டர்-- போலீஸ் அதிகாரி-- மாநாடு போட்டு கம்பீர்த்தை காட்டும் நீங்கள்--ஊழல்--கும்பல் ஆட்சியில் ஏன் ஒளிந்து மறைகிரீர்கள்.?--இதை சரி செய்ய முடியவில்லையா ?--அல்லது உங்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா ?.

மின் வெட்டு இதுவரை சரி செய்யப்படவில்லை--நிபுணர்களையு
் அதிகாரிகளையும் கேட்டால்..--நீண்ட கால திட்டம் ஏதும் அரசிடம் இல்லை..உடனடியாக மின் வரத்துக்கு-- சமீபத்தில் முடியும்--என்ற-- எந்த திட்டமும் அரசின் கைவசம் இல்லை---அடிக்கடி அதிகாரிகள் மாற்றம்-- திறமையற்ற நிர்வாகம் காரணமாக மின்வெட்டு ரத்தாகாது--வேண்டுமானால் கருணாநிதி மீது பழியை போட்டு --கொஞ்சம் காலத்தை ஓட்டலாம்--என்கின்றனர்.


பால் விலை உயர்வு ஓ.கே..குடி தண்ணீரே ரூபாய் 16 விற்கிறது என காரணம் சொல்லிக்கொள்ளலாம்.--ஆவின் --எப்போது சரியாகும்--நிர்வாக சீர்கேடு--லஞ்சம்--அரசியல் தலையீடு இல்லா “ஆவின் “ எப்போது பிறக்கும்?.விலை உயர்வு உங்களுடைய நஷ்ட்டத்தை சரி கட்ட மட்டும் இருக்கக்கூடாது..நுகர்வோருக்கு
இதனால் பயன் வரவேண்டும் அல்லவா ?.உங்களுடைய லாபம் ---மக்களுக்கு நஷ்டமாக இருக்கலாமா ?.”பயன்கள் “ இருவழிப்பாதையாக இருக்க வேண்டுமல்லவா ?..


சரி.. முதல்வர் ஜெ அவர்களே..தெரியாமல் கேட்கிறேன்..அரசின் வேலை “பஸ் ஓட்டுவதா “ ?.ராமன் & ராமன்..-எஸ்.ஆர்.வி.எஸ்---டி.வி
.எஸ்..போன்ற பஸ் முதலாளிகளை ஒழிக்கவே 1971 இல் கருணாநிதி பஸ் களை தேசிய மயமாக்கினார்..இதனால் போக்குவரத்து சீரானது--மக்கள் சேவை பெருகியது என வரலாறு கூறவில்லையே ?.மக்களுக்கு தேவை--சேவை---அதை அரசுத்துறையால் தரமுடியவில்லையே ?--இன்றைய நிலையில் போக்கு வரத்து கழகங்களின்  நஷ்டத்தை உங்களால் சீராக்க முடியாது..அப்படி ஒருவேளை நடந்தாலும் அது தொடர்ந்து இருக்குமா என்பது சந்தேகமே ?...


நீங்கள் தான் புரட்சி தலைவி ஆயிற்றே--உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...அரசுத்துறையின் தோல்வியை ஒத்துக்கொண்டு ( சாரி உங்கள் மனசாட்சி இடக்கொடுக்காது--அப்படி வேண்டாம் )--எதாவது ஒரு காரணத்தை சொல்லி---பஸ் போக்குவரத்தை தனியாருக்கு தாரை வார்த்து விடுங்களேன்.முதலில் ஒரு பெரிய தொகையை உங்களின் ரத்தத்தின் ரத்தங்கள் பார்க்கலாம்--அவ்வப்போது வசூல் நடத்த “அக்‌ஷய பாத்திரமாகவும் “ பஸ் முதலாளிகள் இருப்பார்கள்..எங்களுக்கும் ஓட்டை உடைசல்கள் பஸ்ஸிலிருந்து விடுதலை கிடைக்கும்..

ஒவ்வொரு விலை உயர்வும்--கட்டண உயர்வும் ---ஆட்சியாளர்கள் செய்யும் தவறுக்கு-- மக்கள் அனுபவிக்கும் தண்டனையாக இருக்கிறது..5 வருடத்திற்கு ஒருமுறைதான் அரசியல் வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்..மக்களின் கோபத்தை சம்பாதித்ததனால் தான் திமுக ஆட்சி தண்டிக்கப்பட்டது..

உங்கள் ஆட்சியும் சம்பாத்யத்தில் (மக்கள் கோபம் உட்பட ) இறங்கிவிட்டது..சம்பாத்யத்தின் அளவை பொறுத்து தண்டனை நிச்சயம்--இதை உணர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவாவது..”ஊழலற்ற நிர்வாகம்--திறமையான நிர்வாகம் “ நடத்துவீர்களா ?--அதை இந்த விலை உயர்விலிருந்து தொடங்குவீர்களா ?.

No comments: