Pages

Thursday, January 26, 2012

நார்வே அனுபவம் நமக்கு சரிப்படுமா?


இது ஒரு வித்யாசமான வழக்கு--செய்தி---சம்பவம்

 நார்வே நாட்டில் வாழும் அனுரூப்--சகாரிகா--இந்திய தம்பதிகளுக்கு 3 வயதில் ஒருமகன்.-ஒரு வயதில் ஒரு மகள்.

தாய் தந்தையரின் குழந்தைகள் பராமரிப்பு சரியில்லை ---என சொல்லி குழந்தைகள் இருவரையும் நார்வே அரசு-- இருவேறு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளது.

குழந்தைகள் எங்களோடுதான் இருக்கவேண்டும்-- என்ற பேற்றோரின் மேல்முறையீட்டையும் அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது..

அப்படி என்னதான் அப்பெற்றோர்கள் கொடுமைகள் செய்தார்கள்...

1. குழந்தையின் உள்ளாடையை (டயஃபர்) சரியாக மாற்ற  அம்மாவிற்கு தெரியவில்லை..
2. குழ்ந்தைகளின் விளயாட்டு சாமான்கள் அவர்களின் வயதுக்கேற்ற -- தரமான வகையில் இல்லை
3.அதே மாதிரிதான் உடைகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறதாம்.
4. 3 வயதாகும் மகனுக்கு “தனி படுக்கை அறை இல்லையாம்
5. வீடும் 2 + 2 பேர் வசிக்க போதுமானதாக இல்லையாம்.

ஆகவே  நார்வே நாட்டு குழந்தைகள் நல சட்டப்படி..18 வயதாகும் வரை-- குழந்தைகள்--- காப்பகத்தில் அரசின் செலவில் பராமரிக்கப்படுவர்..

அப்போ காப்பகம் எப்படி இருக்கும்...டிஸ்னி உலகம் போல--சொர்க்கம் போல இருக்குமாம்..

என்ன வேடிக்கை என்றால்..பெற்றோர்கள் ---குழந்தைகளை ஆண்டுக்கு மூன்று மணி நேரம்தான்-- அதுவும் ஒருமணி நேரம் வீதம் மூன்று முறைதான் பார்க்கமுடியுமாம்..

அந்தக்குழந்தைகள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்...

தாய்ப்பால் கொடுக்கத் தெரியவில்லை அந்த அம்மாவிற்கு...அதை இப்படித்தான் கொடுக்கவேண்டும்...இந்தம்மா வேறு மதிரி கொடுக்கிறார்கள்..எனபதும் அந்நாட்டு “போர்டின்” மேலும் ஒரு குற்றச்சாட்டு..இதையெல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டிய வகையில் அந்நாட்டு அன்னையர் இருக்கிறார்களா?--

இப்படி பார்த்துப் பார்த்து--பொத்தி..பொத்தி...வெளிநாடுகளில் குழந்தைகளின்மீது ..அக்கறை செலுத்தப்படுவது எவ்வளவு சந்தோஷமாகவும்..பொறாமையாகவும்--சிலநேரம் நம்நாட்டில் அப்படி இல்லையே என்ற வருத்தமும்..ஏற்படுகிறதே.

இங்கே சாலை தோண்டும் சேலத்து பணியாளர்கள்..குடும்பத்தோடு..”மூக்கு ஒழுகும் கைக்குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு..அல்லது சாலை ஓர மரத்தடியில் --பனியில்--வெய்யிலில்--கிடத்திவிட்டு..ஊட்டி வருக்கியை கையில் திணித்துவிட்டு..மூடிய சேலைக்குள் மூச்சுமுட்ட பாலை கொடுத்துவிட்டு...வளர்க்கிறாளே--வளர்கிறார்களே...இந்தக் குழந்தைக்கெல்லாம் “அந்தக்குழந்தையின் “ சௌகரியம்--சுகம் “எப்போது கிட்டும்?--என மனம் ஏங்குகிறதே.

ஆனால் எவ்வள்வு வசதிகள் கொட்டி கொட்டி கொடுத்தாலும்..அந்த “தாயின் ஸ்பரிஸம்” --அரவணைப்பு--சகல அசௌகரியங்களையும் மறக்கவைக்கும் “சஞ்சீவீ மருந்து ..அதற்குமுன்னே இவ்வசதிகள் எம்மாத்திரம் இதுதானே..நம் அனுபவ மந்திரம் .

Wednesday, January 25, 2012

சல்மான் ரஷ்டியும் வகுப்புவாத காங்கிரஸும்




இந்துக்கள்..------இந்துக்கள்
-என்று சொல்லிக்கொண்டு..இந்துவாக வாழ்வது..வகுப்புவாதம்....முஸ்லீம்--கிறிஸ்தவர்களின் “மத ஆக்ரோஷத்தன்மை”..மதவாதமில்லை..மாறாக அதுதான் மதநல்லிணக்கம்...
காங்கிரஸின் இந்த இரட்டை நிலைப்பாடு..அதோடு பிறந்த “ஊனம்”..

“சாத்தானின் வரிகள் “ என்ற புத்தகம் எழுதிய சல்மான் ரஷ்டியை..ஜெய்ப்பூரில் நடைபெற்ற “கலாச்சார திருவிழாவிற்கு “” வரவிடாமல் தடை செய்த காங்கிரஸின் “அனாச்சாரம் “ வெளியே தெரிந்து விட்டது ..சிமி..டியோபண்ட்....போன்ற “பொடி வன்முறையாளர்கள் “மீது பழியை போட்டு ராஜஸ்தான் அரசும் மத்திய சோனியா அரசும்..சல்மான் ரஷ்டியை--ஒரு வீடியோ கான்ஃப்ரன்ஸில் கூட பேச விடாமல் தடுத்துவிட்டது..

”காங்கிரஸ் அரசு..மத வன்முறையாளர்களோடு ;;;கூடிக்கும்மாளம் போ.டுகிறது...இந்தவன்முறை கும்பலும் காங்கிரஸும்..என் எழுத்தை --பேச்சை--தடுத்து நிறுத்திவிட முடியாது..மத சார்பற்ற ஜனநாயக இந்தியா..முஸ்லீம் மதவாதிகள் கைய்யில் வீழ்ந்து கிடக்கிறது---இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸோ..இந்துமுன்ன்ணியோ..சொல்லவில்லை..முஸ்லீம் அறிஞர்..சல்மான் ரஷ்டிதான் கூறியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு ஆதரவாக..இந்துக்களுக்கு எதிராக மூச்சுமுட்ட ஓடிவரும் அருந்ததி ராயோ..மேதா பட்கரோ..புரட்சிகர முற்போக்கு வாதிகளோ..சல்மான் ரஷ்டிக்கு ஆதரவாக வாயே திறக்கவில்லை. ஏன்?

இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்து மனம் புண்படச் செய்த ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு ஆதரவாக கச்சைகட்டிய லாலுவோ..முலயமோ..”பிக்”விஜயசிங்கோ..மர்க்ஸிஸ்களோ...ருஷ்டிக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை.ஏன்?

கடந்த இரண்டாண்டில் 5..6..முறை இந்தியா வந்த ரஷ்டியை அப்போதெல்லாம் தடைபோடாத காங்கிரஸ் இப்போது தடுப்பது ஏன்?..

எல்லாம் ஓட்டுய்யா..ஓட்டு..5 மாநில சட்டசபை ஓட்டு...15 சதவீத முஸ்லீமகளின் ஓட்டு..

நம் தேசத்தின் “வாழ்வியல் மதிப்புக்களை “ சவக்குழியில் வீசிவிட்டு--பிணத்தோடு உறங்குபவர்கள்தான் காங்கிரஸ்.காரர்கள் என்பதை..சல்மான் ரஷ்டியும் --ஜெய்ப்பூர் சம்பவமும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது

Sunday, January 15, 2012

”ஒன்வே” சிந்தனைகளே ஒழிந்துபோ



தைத் திங்களா தைப் பொங்கலா
உழவர் திருநாளா தமிழர் திருநாளா
மகர சங்கராந்தியா தமிழ் புத்தாண்டா
ஒரேஒரு திருநாள் புயலாய் சுழலுதுபார்

எத்தனை பெயர்களால் சொன்னாலும்
சூரியனுக்கு உகந்த நாள் இது

அறுவடை பார்த்த விவசாயி
ஆண்டவனுக்கு படைக்கும் நாள் இது

அவனுக்கு உழைத்த கால்நடைக்கு
விருந்து படைக்கும் நாள் இது

இதற்குமேல் இதில் ஏதாவது உண்டா
சூரியன் தன் பாதையை மாற்றும் நாளிது

தமிழன் தலைவிதி மாறநினைக்கும் நாளிது
பேஸ்புக் டுவிட்டரில் மற்றவனை திட்டும் நாளிது

தமிழ் எழுத படிக்க தெரிந்துவிட்டால்
தமிழ் கூறும் நல்லுலகு எனக்கே சொந்தமா

மாற்று மொழிகாரனெல்லாம் எதிரியென்ற பந்தமா
சிந்தனையும் பேச்சுக்களும் “வெறிக்குள்ளே” தஞ்சமா

“ஒன்வே” சிந்தனை ”நோஎண்ட்ரி” வாதங்கள்
தமிழனை தளர வைக்கும் அறிவுசேரா கருத்துக்கள்

சித்திரை நித்திரைக்கு போகும்
தையே அரியணை ஏறும்

மார்க்ஸீய பெரியாரீய தமிழீய
இழி(ளி)க்கும் ஈய சிந்தைகள்

ஒருகருத்து ஒருபுறமட்டுமே உடைத்ததா
மறுபுறமும் பார்க்க மறுப்பதேன் நண்பா

எழுத பக்கங்கள் கிடைத்து விட்டால்
படிக்க பாமரன் இருந்து விட்டால்
வாந்தி எடுத்து தள்ளுகிறீர்களே
வயிறு வெந்து பிளிறிரீர்களே

ஊடகங்கள் இணைய தளங்களை உபயோகியுங்கள்
அறிவையும் அன்பையும் குழைத்து ஊட்டுங்கள்

எண்ணங்கள் பேச்சுக்கள் எதிர்கால சந்ததிகள்
இணைந்துவாழ உயர்ந்துநிற்க உதவிபுரியுங்கள்

மகர சங்கராந்தியில் மாற்றி யோசிப்போம்
உழவர் திருநாளில் உயர்ந்து சிந்திப்போம்

சோ--மாரியா?---சோ..மழையா?



பா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா?--தமிழகத்துக்கா?--பா.ஜ.க.விற்கா?
கடைசி இருவரும் அதிர்ஷ்ட கட்டைகள்.

“சோ’ ஒரு நடுநிலையாளர்..மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். உயர்ந்த தேசிய வாதி..இதுதான் பெரும்பாலான மக்களின் அனுமானம்.

தேர்தல் வரும் போதெல்லாம் தன் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பார்..பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் எதிர் கருத்துக்களாகவே அவை இருக்கும்.

ஓட்டுப்போடும்போது அவரது “ரசிகர்கள் “ அவரது கருத்தை செவி மடுப்பார்களா?..என்பது ஒருபுறம் இருந்தாலும்..”சோ’ வின் ஆதரவு பெற்றவர் அரியணை ஏறுவதே இதுவரை அரங்கேறி வந்திருக்கிறது.இம்முறை அவர் ஆதரித்த “ஜெ” அரியணை ஏறியதும் நடந்தேறியிருக்கிறது.

“சோ” பிஜேபியின் ஆதரவாளர் என்பது.. அவரே முழுவதும் ஏற்காவிடினும்..அவரது “கிரிடிக்ஸ்” சொல்லும் விமர்சனம் ஆகும்.
பா.ஜ.க.தலைவர்களில் பெரும்பாலோர் அவர் தங்களது ஆதரவாளர் என நினைக்கும் நிலையும் உண்டு..

இம்முறை இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வண்ணம் “சோ” போற்றும் மோடியும்-- விரும்பும் அத்வானியும்-- அவர் விழாவில் கலந்து கொண்டுரிக்கிறார்கள்.

இதற்கு மேலும் இம்முறை “சனிப்பெயர்ச்சி “ அன்று..”சசிபெயர்ச்சியும் “ நடந்தது “சோ “ வினால் தானென்றும்..இல்லையெனென அவர் மறுத்ததையும் நாடுபார்த்தது.. நாமும் பார்த்தோம்...

“சோ” --”ஜெ”யின் விசுவாசியா?--”ஜெ”--”சோ” வின் விசுவாசியா?---என்று பட்டிமண்டபமே நடத்தலாம் என்னும் வண்னம் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

நான் ஏன் இவ்வளவு முன்னோட்டங்களை தருகிறேன் என்றால் --நேற்றைய விழாவில் “சோ” பேசிய ஒரு கருத்துதான்..

“ஜெ”யை பிரதமராக்க பா.ஜ.க.முன்வரவேண்டும் என்ற “சோ” வின் மையக்கருத்தே வரும் வாரம்--மாதத்தின்..தமிழக பத்திரிக்கைகளின்...அரசியல் விமர்சகர்களின்..வாய்க்கு “அவலாக” போகிறது.

பா.ஜ.க.--அதிமுக..கூட்டு முடிவாகிவிட்டது--என்று..-பா.ஜ. தொண்டன் சந்தோஷப்படபோகிறானா?--

பார்ப்பனீயம் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறது என்று “பெரியாரீயம்”..பொங்கி எழப்போகிறதா?

ஊழல் வாதிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று--- ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் ஒப்பாரி வைக்கப்போகிறதா?

பார்தீர்களா! மதவாதிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று கலைஞரும்---பா.ஜகவால் மெக்காவுக்கும்--ஜெ யால் ஜெருசலத்துக்கும் அரசின் செலவில் புனித யாத்திரை போவோர் புலம்பப்போகிறார்களா?

பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியாது..”சோ” ஆரூடம்--என மார்க்ஸீயம் மருதலிக்கப்போகிறதா?

இவ்வளவு கேள்விகள் கேட்கிறாயே--இத்தனையுமா நடக்கும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..”சோ” வின் கருத்துக்கு இத்தனை பேரும் ஒருசேர புலம்பப்போகிறார்கள் எனபதுதான் உண்மை.

பிரதமாராகும் கனவு--தேவே கவுடாவுக்கும்..ஐ.கே.குஜ்ரலுக்கும் இருந்தபோது---லாலுவுக்கும்..முலையாமுக்கும்...மாயவதிக்கும்...பிரகாஷ் கரத்துக்கும்.....இருக்கும் போது..”ஜெ’ யிக்கு இருக்கக்கூடாதா?

அந்த ஆசையை “ஜெ” பொதுக்குழுவில் தெரிவிப்பதும்..”ஜெ’..யின் விசுவாசிகள் விளம்பரங்களில் தெரிவிப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..

ஆனால் அரசியல் விமர்சகர் “சோ”..வாயில் இப்படி வந்தால்...அவருக்கு “விமர்சகர் “ பட்டம் போய்..வேறு ஏதாவது.. பட்டமல்லவா வந்து சேரும்..

“சோ” கருத்து மழை பொழியும் “மாரி”  எனத்தான் நாங்கள் நினைக்கிறோம்..
சென்னை தமிழின் “மாரி” என மற்றவர்கள்  நினைத்து விடுவார்களோ என அஞ்சுகிறோம்.


Monday, January 9, 2012

நீ மறைந்தாலும்--உன் நிஜம் மறையாது




நேற்று இருந்தவர் இன்று இல்லை
இன்று இருப்பவர் நாளை இல்லை

உலகே மாயமாம் வாழ்வே மாயமாம்

தத்துவம் எல்லாம் சரிதான்
ஏற்க இதயம் மறுக்கிறதே
சுகுமாரை இழந்து நெஞ்சம் தவிக்கிறதே

பதினோறு மணிக்கு சிரித்துப் பேசியவர்
பனிரெண்டு மணிக்கு அழவைத்து விட்டாரே
காலனின் கொடூரம் தவறாக பாய்கிறதே
காவிகளின் கூடாரம் கண்ணீரில் நனைகிறதே

“பிர”முக”ர்கள் “ என்றாலே பலப்பல முகங்கள்
இந்த பிரபுவுக்கு எப்போதும் ஒரேமுகம்

எத்தனையோ வர்ணனைகள் எத்தனையோ புகழாரம்
எத்தனையோ சிறப்பம்சம் எத்தனையோ தனித்துவம்

அத்தனையும் நிறைந்த முழுமனிதன் நீ
அன்பால் உருவான நல்மனிதன் நீ

அந்த மிடுக்கும் கம்பீரமும் உண்மையும்
காட்டில் எரியூட்டப் பட்டதே கடவுளே

“இவன்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்”
  வாலி உன்னை நினைத்துத்தான் பாடினாரோ.

அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை
பாஜகவின் லட்சியத்தை லட்ஷணமாக்கிக் கொண்டவனே

எதிரிகள் நண்பர்கள் என்ற இருகுழுக்கள்
இல்லையென சொன்னவனே செய்தவனே சுகுமாரே

எத்தனையோ நினைவலைகள் நெஞ்சமதில் மோதுது
எண்ணஎண்ண கண்ணிரெண்டும் குளமென நிறையுது

அகண்ட பாரதத்தை உறுதியாக நம்பியவரே
அகங்காரம் தெரியாத மாடிவீட்டு நம்மவரே
புதிய...பார்வை.. பாதை காட்டிய .. நம்பியாரே.
நீ மறையவில்லை..எம் இதயத்தில் வாழ்கிறாய்
..

Saturday, January 7, 2012

”தானே “ புயலும் --”தானேதான் “எழவேண்டிய நிலையில் மக்களும்..



புயலுக்கு “தானே “ எனப்பெயராம்--புரட்டிப்போட்டது புதுச்சேரி--கடலூரை
புயலை முன்கூட்டியே எதிர்பார்த்து “பேரிடர் மேலாண்மை “ செய்யும் நிலையிலா நாம் இருக்கிறோம்.
அடிப்படையான--அத்தியாவசியமான---- தேவைகளை பெறவே அரசிடம் தினம் அல்லாடவேண்டியிருக்கிறது ..

இதை மேலாண்மை செய்யவே --தகுதி--திறமை அற்றதாக அரசு இயந்திரம்...
இயந்திரம் என்றாலே  ‘கன்னாக” இருக்கவேண்டும்--நம்அரசு இயந்திரம் பழுதானது---சீர்கெட்டது--இயந்திரமாக இருப்பதால்..உணர்வும் இல்லை--மூளையும் இல்லை..டீஸல் (காசு ) ஊற்றினல் ஓடும்..இதுவேதான் கடலூரிலும் நடந்தது.

புயல் கரை கடந்து ஒருவாரமாகியும் மக்கள் துயர் கடலூரை விட்டு கடக்கவில்லை..அரசின் மீட்புப் பணிகள் ஆமைவேகம்--7 நாட்களாகியும் மின்சாரம் இல்லை--ஒருவாரமாகியும் “குடிநீர் “கிடைக்கவில்லை.”அரசு அப்படித்தான்” --என குறை சொன்னவர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்...

அரசை குறை சொல்வதற்குமுன் நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்...புயல் உருவாக்கிய இடர்பாட்டில்---செல்போன் சார்ஜ் செய்ய ரூ 5முதல் 50வரை---ஒருகுடம் குடிநீர் ரூ 10முதல் 20வரை---பால் பாக்கட் விலை ரூ50வரை---பெட்ரோல் டீஸல் கிடைக்காமல் அலைமோதிய கூட்டம்..இவை எல்லாம் கடலூரில் நடந்தது..தொலைகாட்சிகள் தோலுரித்து காட்டியது..என்ன அசிங்கம் ?--என்ன அலங்கோலம்?

ஒரு சின்ன “பிளஷ் பேக்”---6 மாதத்திற்கு முன் ஜப்பானில் ஒரு சுனாமி வந்தது...ஊரே நாசம்---அனைத்து பொருளுக்கும் தட்டுப்பாடு---ஒரு ஊரில் ஒரேஒரு கடை தப்பித்தது..அனத்து பொருட்களையும் ஒரு பைசா கூட விலை ஏற்றாமல்..அந்த கடைக்காரர் விற்றார்...ஒரு முட்டல் இல்லாமல் மோதல் இல்லாமல் மக்களும் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வாங்கிச்சென்றனர்..அவ்வளவு பொருளுக்கும் தட்டுப்பாடு---அவ்வளவு கஷ்டம்..ஆனால் மக்கள் காட்டிய பொறுமை--கட்டுப்பாடு அபரிதமானது..ஆனால் கடலூரில் நடந்தது என்ன?--அவர்களால் முடியும் போது நம்மால் முடியாதா?--என மனம் கேட்கிறது..

முல்லை செடிக்கு “தேர் ஈந்தான் “ பாரி--புறாவுக்கு தன் தசையை அரிந்து ஈந்தான் சிபி சக்ரவர்த்தி---இவைகள் கதைதானா?--நடந்ததா?--அதுவும் நம் நாட்டிலா?--பிறகு ஏன் நாம் மாறினோம்?கடலூரில் நம் மக்களிடம் நாமே ஏன் கொள்ளை அடித்தோம்? ஏமாற்றினோம்?----நாம் நல்ல பரமரையில் வரவில்லையா?--நம் “ஜீன்ஸை “நாம் மறந்துவிட்டோமா?

எத்தைநாளைக்கு அரசை சார்ந்த வாழ்க்கை?--அரசியல் கட்சிகள்--சமூக ஆன்மீக அமைப்புக்கள்---கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவிகளை குவிக்கலாம்--நிவாரண பணிகளை போட்டிபோட்டு செய்யலாம்--ஆனால் மனிதனை --மனிதத்தன்மையோடு வாழவைக்க இவர்களால் முடியாதே--அதை நாம்தானே செய்யவேண்டும்..

அப்படி செய்ய நினைத்திருந்தால் “புயல் காலத்தில்”  கடலூர் கலகலத்து போயிருக்காதே..பாலுக்கும் குடிநீருக்கும் பஞ்சமிருந்திருந்தாலும்--விலை ஏறியிருக்காதே...அரசு தரும் நிவாரணத்தில் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் “ சுருட்டும் “ எண்ணம் வந்த்திருக்காதே..

பாரியையும் சிபியையும் உருவாக்கிய நாடு..இன்று அவர்களை “புத்தகங்களுக்குள் புதைத்து “ விட்டதால் ஜப்பானை பார்த்தாவது நினைவலைகளை திரும்பக்கொண்டுவரும் நிலையில் இருக்கிறோம்..

நினைவு திரும்புமா?--நிலமை திருந்துமா?