Pages

Saturday, January 7, 2012

”தானே “ புயலும் --”தானேதான் “எழவேண்டிய நிலையில் மக்களும்..



புயலுக்கு “தானே “ எனப்பெயராம்--புரட்டிப்போட்டது புதுச்சேரி--கடலூரை
புயலை முன்கூட்டியே எதிர்பார்த்து “பேரிடர் மேலாண்மை “ செய்யும் நிலையிலா நாம் இருக்கிறோம்.
அடிப்படையான--அத்தியாவசியமான---- தேவைகளை பெறவே அரசிடம் தினம் அல்லாடவேண்டியிருக்கிறது ..

இதை மேலாண்மை செய்யவே --தகுதி--திறமை அற்றதாக அரசு இயந்திரம்...
இயந்திரம் என்றாலே  ‘கன்னாக” இருக்கவேண்டும்--நம்அரசு இயந்திரம் பழுதானது---சீர்கெட்டது--இயந்திரமாக இருப்பதால்..உணர்வும் இல்லை--மூளையும் இல்லை..டீஸல் (காசு ) ஊற்றினல் ஓடும்..இதுவேதான் கடலூரிலும் நடந்தது.

புயல் கரை கடந்து ஒருவாரமாகியும் மக்கள் துயர் கடலூரை விட்டு கடக்கவில்லை..அரசின் மீட்புப் பணிகள் ஆமைவேகம்--7 நாட்களாகியும் மின்சாரம் இல்லை--ஒருவாரமாகியும் “குடிநீர் “கிடைக்கவில்லை.”அரசு அப்படித்தான்” --என குறை சொன்னவர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்...

அரசை குறை சொல்வதற்குமுன் நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்...புயல் உருவாக்கிய இடர்பாட்டில்---செல்போன் சார்ஜ் செய்ய ரூ 5முதல் 50வரை---ஒருகுடம் குடிநீர் ரூ 10முதல் 20வரை---பால் பாக்கட் விலை ரூ50வரை---பெட்ரோல் டீஸல் கிடைக்காமல் அலைமோதிய கூட்டம்..இவை எல்லாம் கடலூரில் நடந்தது..தொலைகாட்சிகள் தோலுரித்து காட்டியது..என்ன அசிங்கம் ?--என்ன அலங்கோலம்?

ஒரு சின்ன “பிளஷ் பேக்”---6 மாதத்திற்கு முன் ஜப்பானில் ஒரு சுனாமி வந்தது...ஊரே நாசம்---அனைத்து பொருளுக்கும் தட்டுப்பாடு---ஒரு ஊரில் ஒரேஒரு கடை தப்பித்தது..அனத்து பொருட்களையும் ஒரு பைசா கூட விலை ஏற்றாமல்..அந்த கடைக்காரர் விற்றார்...ஒரு முட்டல் இல்லாமல் மோதல் இல்லாமல் மக்களும் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருந்து வாங்கிச்சென்றனர்..அவ்வளவு பொருளுக்கும் தட்டுப்பாடு---அவ்வளவு கஷ்டம்..ஆனால் மக்கள் காட்டிய பொறுமை--கட்டுப்பாடு அபரிதமானது..ஆனால் கடலூரில் நடந்தது என்ன?--அவர்களால் முடியும் போது நம்மால் முடியாதா?--என மனம் கேட்கிறது..

முல்லை செடிக்கு “தேர் ஈந்தான் “ பாரி--புறாவுக்கு தன் தசையை அரிந்து ஈந்தான் சிபி சக்ரவர்த்தி---இவைகள் கதைதானா?--நடந்ததா?--அதுவும் நம் நாட்டிலா?--பிறகு ஏன் நாம் மாறினோம்?கடலூரில் நம் மக்களிடம் நாமே ஏன் கொள்ளை அடித்தோம்? ஏமாற்றினோம்?----நாம் நல்ல பரமரையில் வரவில்லையா?--நம் “ஜீன்ஸை “நாம் மறந்துவிட்டோமா?

எத்தைநாளைக்கு அரசை சார்ந்த வாழ்க்கை?--அரசியல் கட்சிகள்--சமூக ஆன்மீக அமைப்புக்கள்---கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவிகளை குவிக்கலாம்--நிவாரண பணிகளை போட்டிபோட்டு செய்யலாம்--ஆனால் மனிதனை --மனிதத்தன்மையோடு வாழவைக்க இவர்களால் முடியாதே--அதை நாம்தானே செய்யவேண்டும்..

அப்படி செய்ய நினைத்திருந்தால் “புயல் காலத்தில்”  கடலூர் கலகலத்து போயிருக்காதே..பாலுக்கும் குடிநீருக்கும் பஞ்சமிருந்திருந்தாலும்--விலை ஏறியிருக்காதே...அரசு தரும் நிவாரணத்தில் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் “ சுருட்டும் “ எண்ணம் வந்த்திருக்காதே..

பாரியையும் சிபியையும் உருவாக்கிய நாடு..இன்று அவர்களை “புத்தகங்களுக்குள் புதைத்து “ விட்டதால் ஜப்பானை பார்த்தாவது நினைவலைகளை திரும்பக்கொண்டுவரும் நிலையில் இருக்கிறோம்..

நினைவு திரும்புமா?--நிலமை திருந்துமா?

2 comments:

Anonymous said...

Good article and stunning writing. Karu, UAE

எஸ்.ஆர்.சேகர் said...

புதிய தலைமுறை (19.1.2012) வார இதழ் 30 ஆம் பக்கத்தில் “இன்பாக்ஸ்” பகுதியில் “அவர்களும் நாமும் “ என்னும் தலைப்பில் இந்த கட்டுரையை பிரசுரித்தமைக்கும் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி...