Pages

Sunday, January 20, 2013

நேற்று ராகுலுக்கு முடி சூட்டு விழா

நேற்று ராகுலுக்கு முடி சூட்டு விழா---ஆனால் அது கட்சிக்குள் மட்டுமே

நாட்டுக்கே முடிசூட்டவேண்டும் என்னும் ஆசையில் அது நடத்தப்பட்டது..ஆனால் அது நடக்குமா?

எந்த ஒரு “நிறுவனத்திலும்” “அப்பாயிண்ட்மெண்ட்” கடிதம் “இண்டர்வியூவுக்குப்” பின்பே கிடைக்கும்

ராகுலுக்கு என்ன தகுதியென யாருக்கும் தெரியாது..ஏற்கனவே வைத்த “சோதனைகளில்” எல்லாம் அவருக்கு தோல்வியே..

அவ்ருடைய குடும்ப நிறுவனம் என்பதால்..தோற்றுப்போனவருக்கு “அப்பாயிண்ட்னெண்ட்” கடிதம் (துணைத்தலைவர்)கொடுத்துள்ளனர்..

நாட்டுக்கு முடிசூடவேண்டும் என்றால் ...நம் ..நாலு கேள்விக்கு மட்டும் அவர்பதில் சொல்வாரா?

1.நாற்பத்தி நான்கு வயதாகும் ராகுல் காந்தி..தனது 16 வயதிலிருந்து 32 வயதுவரை எந்த நாட்டில் என்ன செய்து கொண்டிருந்தார்?( 16 ஆண்டு தனது “டீன் ஏஜ் உட்பட ” அவர் இந்தியாவில் இல்லை )

2.பிரதமராகும் கனவில் உள்ள இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார்?

3.இங்கிலாந்திலும்..அமெரிக்காவி
லும் படித்ததாக சொல்கிறார்களே..அங்கு என்ன எங்கு எப்போது படித்தார்..என்னென்ன பட்டங்கள் பெற்றார்?

4..இந்தியாவின் --பத்து மாநிலங்கள்,-- பதினைந்து மொழிகள், --இருபது நதிகள்,-- இருபத்தைந்து ஜாதிகள் --பெயரை இவரால் யாரிடமும் கேட்காமல் சொல்லமுடியுமா?

நிர்வாக அனுபவம் ,
தேசத்தை பற்றிய தொலை நோக்கு கண்ணோட்டம்,
கரைபடாத கைகள், என்ற தகுதிகளை எல்லாம் விட்டுவிடுவோம்...
கடந்த 9 ஆண்டுகளில் பார்லி.மெண்ட்டில் என்ன பேசினார்..எவ்வளவு நாள் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்?
இதை வைத்தாவது அவரது குறைந்த பட்ச தகுதி--திறமை--இவைகளை தெரிந்துகொள்ளலாமல்லவா?

அவர் சாதித்தது ஒன்றுமில்லை---
அவர் கலந்து கொண்டது 50 சதவீத வேலை நாட்களுக்கும் குறைவு

முடிவுகளை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

காங்கிரசுக்கு ஒரு கேள்வி

இப்போது காங்கிரஸ் தலைவர்---சோனியா காந்தி
காங்கிரஸ் துணைத்தலைவர்---ராகுல் காந்தி

பொதுச்செயலாளருக்கு--பிரியங்கா காந்தி
பொருளாளருக்கு --ராபர்ட் வதேதரா---வை எப்போது நியமிக்க போகிறீர்கள்..

ஆவலோடு காத்திருக்கிறோம்.

Saturday, January 19, 2013

பெட்ரோல்--டீஸல்--கேஸ் --விலை ஏற்றம்..-ஏன்?--உண்மை காரணம் என்ன?



நான் ஒருபொருளாதார நிபுணர் அல்ல...கணித மேதையும் அல்ல..ஒரு சாமானிய “பாமரன்”--

ஆனால் ஏமாறுவதும் ஏமாற்றப்படுவதும் என்னை அறியாமல் நடவாது என்பதை உணர்ந்தவன்.

இப்போது சோனியாவின் காங்கிரஸ் அரசு நம்மை எப்படி ஏமாற்றுகிறது..என்பதை புரிந்துகொள்வோமா?

பெட்ரோல்...டீசல்--கேஸ் விலைகளை தாறுமாறாக ஏற்றும் காங்கிரஸ் அரசும்அதன் “ஜால்ராக்களும்” விலை ஏற்றத்தை நியாப்படுத்தும் “காரணிகள்” என்ன?

1..உலகச்சந்தையில் “ எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு “இவ்வளவு டாலர்” ஏறிவிட்டது..இது அரசுக்கு பெரும் சுமை..இதை தொடர்ந்து சுமக்கமுடியாது.. விலை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை..என  ஒரு காரணம்..

2..பெட்ரோல்--டீசலுக்கு அரசு கொடுக்கும் “மானியம்” பலஆயிரம் கோடிகளை தாண்டுகிறது..இந்த பணத்தை “நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு “ பயன் படுத்தினால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் உயரும்..என  மற்றொரு காரணம்..

நான் நான்கு காரணிகளை எடுத்துக்கொண்டு இதை ஆராய்ந்தேன்..

1..உலக சந்தையில் எண்ணெய் விலை.---இந்திய ரூபாய் மதிப்பு-----பணவீக்கம்.
கடந்த 2003 முதல் 2012 ஆம் ஆண்டுவரையிலான விலை நிலவரம்
ஆண்டு...........விலை டாலர்களில்---------ரூபாய் மதிப்பு-----------பண வீக்கம்
2003.................29...........................................44.6...............................3.7
2004..               30+                                         45.34   ...........................3.7
2005                  55+                                        44.11..............................5.5
2006                  60+                                        45.39..............................6.5
2007                  90+                                        41,35..............................7.5
2008                  140                                        43.81..............................9.7
2009                   70+                                        51.16                            14.9
2010                    80+                                       46.70                              9.7
2011                    107                                       55.22                              6.49
2012                   108                                        55.90                              7.4

நான்காவது காரணி...இந்திய “ஆட்டோமோபைலின் வளர்ச்சி”

இந்தி அரசின் “ஆயத்தீர்வு” ( Excise .Duty.)வரியில் 20 சதவீதத்துக்கு மேல் “ஆட்டோமோபைல்” தொழிலில் இருந்து கிடைக்கிறது.

உலக “ஆட்டொமோமைல் தயாரிப்பில் இந்தியா ஆறாவது இடம் வகிக்கிறது.

இந்திய சாலைகளின் பரப்பளவை விட நம்மிடம் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்

பெட்ரோலியப் பொருட்களின் தேவையில் 70 சதம் இறக்குமதி செய்கிறோம்.

மொத்த எண்ணெய் செலவில் 60 சதம் வாகனங்களுக்கு போகிறது

இப்ப ஓரளவுக்கு உங்களுக்கு காரணம் என்னவென்று புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

வரூமானத்திற்காக “சாரயக்கடைகளை “ திறந்துவைத்து மக்களை “சீரழிப்பதுபோல”--ஆட்டோமொபைல் வரியை நம்பி ..கார் உற்பத்தியை பெருக்கவிட்டு ...எண்ணெய் இறக்குமதி அதிகம் செய்து ..பழியை உலகசந்தையின் மீது அரசு தூக்கிப்போடுகிறது ..

பெற்றோலிய பொருட்கள் விலை உயர்த்துவதால்
மீண்டும் விலைவாசி உயர்வு--
பணவீக்கம் உயர்வு...
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ...என மீண்டும் அதே சுழல்

அரசின் கட்டுப்பாடற்ற செலவினங்கள் ..
நிர்வாக சீர்கேடு ..ஊழல்..
இவைகள் அனைத்தும் சேர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திவிட்டு ...
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வையும்.
உள்நாட்டு  கட்டமைப்பையும் பற்றி பேசுவதும்
 ஏமாற்றுவேலைதானே

Thursday, January 10, 2013

இந்திய ராணுவவீரர்கள் “தலை கொய்து” படுகொலை…

இந்திய –பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகில், காஷ்மீரின் “பூஞ்ச்” பகுதியில், கடந்தவாரம் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து, இரண்டு இந்திய ஜவான்களை சுட்டுத்தள்ளி, தலையை கொய்துக்கொண்டு போயிருக்கிறது.

இது ராணுவத்தில் அடிக்கடி நடக்கும் செய்கைதானே..இதிலென்ன புதிது இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நமது எல்லைக்குள் புகுந்து, நமது வீரர்களைக்கொன்று, அவர்களின் தலையைக் கொய்து, உடலை சின்னாபின்னமாக சிதைத்து, சென்றுள்ளது பாகிஸ்தான் ராணுவம்..

கொல்லப்படுவது ராணுவத்தில் சகஜம்..
கொடூரக்கொலைகள் பாகிஸ்தானுக்கு சகஜம்..
எதிர்ப்புதெரிவிக்கக் கூட தயங்குவது இந்தியாவுக்கு சகஜம்..
“மானங்காக்க போராடு” வது பா.ஜ.க.வுக்கு சகஜம்..
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு சகஜமாக இருக்கக்கூடாது…

உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்று இந்திய ராணுவம்..15 நிமிடம் இந்தியப்பிரதமரும்—ராணுவ மந்திரியும் கண்ணை மூடிக்கொண்டால், பாகிஸ்தானையும், பங்களாதேஷையும், பர்மாவையும், ஸ்ரீலங்காவையும், நேபாளத்தையும், பூடானையும், சுற்றிவளைத்து இந்தியாவோடு சேர்த்துவிடும் வல்லமை இந்திய ராணுவத்திற்கு உண்டு.

சர்வதேச விதிமுறைகளை மீறி..பாகிஸ்தான் செய்வது இது முதல் முறையல்ல..பாகிஸ்தான்மீது நடவடிக்கை எடுக்கக்கோருவது ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் மீது தவறு இருப்பதுபோல், எழுதியுள்ள “தி இந்து” பத்திரிக்கைமீதும்,  அதன் ரிப்போர்ட்டர் “ப்ரவீண் சாமி” மீதும் சட்டப்படி  மத்திய அரசு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும..

டெல்லி மாணவிமீது பாலியல்வன்கொடுமை “நிகழ்த்தப்பட்டத்தற்கு மாபெரும் எதிர்ப்பு தெரிவித்த நாம் , பாகிஸ்தானின் இக்கொடூரத்திற்கு நாடு முழுதும் மிகப்பெரிய ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், நடத்தி கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்..

கோவையில் நேற்று நாங்கள் “மெழூகுவர்த்தி அஞ்சலியும்—கண்டனமும் “ தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளோம்..

முஸ்லீம்கள் உயிரின் மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமா?


” எல்லோரும் இன்புற்று இருப்பதைத்தவிர வேறொன்றரியேன் பராபரமே—தாயுமானவர்..”


“எல்லோரையும் துன்புறுத்துவதைத் தவிர வேரொன்றரிவேன் பராபரனே”—காங்கிரஸ் கட்சி..


எல்லா உயிர்களும் சமமானது..விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்..


இப்போது விஷயத்துக்கு வருவோம்..

காங்கிரஸ் ஆளும் மராட்டிய மாநிலம் “தூலே “ என்னும் ஊரில் 3 நாளைக்கு முன் நடந்த கலவரத்தில், போலீஸ் துப்பாக்கி சூடூ நடத்தியதில், 5 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.70 போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இந்த துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆதரவாக எந்த “போலி மதசார்பற்ற கட்சிகளும்’ கண்டனமோ இரங்கலோ தெரிவிக்கவில்லை.


காரணம் கொன்றவர்க்ள் காங்கிரஸ்காரர்கள்..காங்கிரசால் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால்..அது உயிரில்லையா? அதற்கு மதிப்பில்லையா?


ஏன் ..ஒரு இரங்கல்…கண்டனம் கூட இல்லையா?..இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லீம்கள்.. நிலை..எப்போதும் வெறும் வாயை மெல்லும் கருணாநிதியும், லாலுபிரசாத்தும், பிரகாஷ்கரத்தும், வாய்மூடி மவுனியாய் இருப்பது ஏன்?


போட்டிபோட்டுக்கொண்டு விவாதம் நடத்தும், என்.டி.டி.வி. பர்க்காதத்தும், சி..என்.என்.ஐ.பி.என்…ராஜ்தீப் சர்தேசாயும், ஏன் விவாதம் நடத்தவில்லை?..ொன்றன் காங்கிரஸ்காரன் என்போ?


குஜராத்தோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயோ, இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தால்தான், கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என கருதப்படுவர்களோ?
அங்குதான் அவர்களின் உயிரின் மதிப்பு உயர்ந்ததோ?
அப்போதுதான் கண்டனங்களும், விவாதங்களும், இரங்கல் அறிக்கைகளும் வருமோ?


நான் ”தூலே” துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, January 4, 2013

இந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..



இந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் செய்கைகள்...செயல்பாடுகள்..செய்திகள்...கட்டுரைகள்...தலையங்கங்கள்...அத்தனையும் கடும் விமரசனத்துக்கு உள்ளாகின்ற வகையில் உள்ளது..

பொதுக்கருத்துக்கு எதிராக, இந்து சமுகத்தை அவதூறு செய்யும் முறையில், சிகப்பு சித்தாந்ததின் அடிவருடியாக ”இந்து”உள்ளது.

எவ்வளவோ கண்டனங்கள் வந்த பின்பும் அதன் எழுத்தை மாற்றிக்கொள்ளாதது மட்டுமல்ல...மேலும் மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் முறையை தொடர்கிறது.

அதன் வெளிப்பாடாக நேற்றைய ( 3.1.13.) இதழில், ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது..அதன் ஆசிரியர் பெயர் சஞ்சை ஸ்ரீவத்சவாவாம்..சிகப்பில் ஊறி செஞ்சாயம் ஏறியவர் போலுள்ளது.

இதே மாதிரி “ மண்டபத்தில் திரிந்து கொண்டிருக்கும் பலரை “ விட்டு இந்து விரோத, கலாச்சார விரோத கட்டுரைகளை எழுதி வாங்கி பிரசுரிப்பது இந்துவின் வாடிக்கை ..அப்படி ஒன்றுதான் நேற்றைய கட்டுரையும்..

சரி..அது கிடக்கட்டும் ..விஷயத்துக்கு வருவோம்..

கட்டுரை என்ன சொல்கிறது.

1.டெல்லி மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்காரம்--கொலைக்கு க
ரணம் கண்டு பிடிக்க முயன்றுள்ளது..சட்ட ரீதியாக புலனாய்வு ரீதியாகவோ அல்ல.. கலாச்சார ரீதியாகவாம்..

2.இந்தியாவின் “ஆணாதிக்கம்தான்..” இதற்கு காரணமாம்.

3..போகிற போக்கில் புழுதி ரி தூற்றும் விதமாக.. கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் ..
விவேகானந்தரின் 150 ஆவது ஜெயந்தி ஆண்டில் அவரை அவமான ப்படுத்த முயன்றுள்ளது....

முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் கருத்து சொல்ல தயாரில்லை.. ஏனெனில் அவை முற்றும் உளரல்கள்..

ஆணும் பெண்ணும் சமமென பறை சாற்றும் அமெரிக்கா..பிரிட்டன்..ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளில் பெண்களின் மீது பாலியல் வன்முறை இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகம்..பூகோள பரப்பளவு..மற்றும் மக்கள் தொகையை கணக்கிட்டால் இந்தியாவை விட 16 மடங்கு அதிகம்...
இதைப்பற்றி ”இந்து”மூச்சு விடவில்லையே

ஷரியத் சட்டமான.--.கண்ணுக்கு கண்---கைக்கு கை----என தண்டனையுள்ள அரேபிய நாடுகளின் லட்சணம் என்ன? அங்கு பெண்கள்.”.மனிதர்கள்..அல்ல...ஜடம்...பொருள்கள்...வெரும் போக வஸ்துக்கள்.”.இதைப் பற்றி இவர்க்ளால் எழுத முடியுமா?

”போலீஸ் 15 நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளட்டும்..100 கோடி இந்துக்களையும் வெட்டி சாய்த்து விடுகிறேன்” என் கொக்கரித்த ஆந்திர முஸ்லீம் எம்.எல்.ஏ அக்பருதீன் ஓவாசி பற்றி ஒரு கட்டுரையோ கண்டனமோ எழுதும் “ஆண்மை “ இந்துவுக்கு உண்டா?

இந்து கலாச்சாரத்தை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே “இந்து “ இக்கட்டுரையை இந்த நேரத்தில் வெளியிட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டாவது ----ஆண்களை போற்றும் பண்டிகை ஒன்றை குறிப்பிட்டு ..இந்தியா ஆணாதிக்க நாடாம்...அட ஞானசூனியமே..உன் பெண்டாட்டி ...நீ நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே அதை கொண்டாடுகிறாள்..

நவராத்திரியின் 9 நாளும் நாம் பெண்ணை “சக்தியாக--காளியாக மகிஷாசுரமர்த்தினியாக” வணங்குகிறோமே..அப்படியென்றால் இது பெண்ணாதிக்க நாடா?..மூளையை “சிகப்பில் தோய்த்து “  எழுதினால் இப்படித்தான் எழுத்ததோன்றும்..

இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்கிற ”அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் ”--அறியாத முழு ஞானசூனியம் “ இந்து என்பது இப்போது புறிகிறதா?

பெண்ணுக்கு பண்டிகைள் கொண்டாடுகிறிர்கள்..என்றால் டெல்லி பாலியல் பலத்காரம் நடந்திருக்ககூடாதல்லவா? என்பது இன்னொருவாதம்..

சாராயம் உள்ளே போனால், மகளிராவது..மண்ணாவது...தூணாவது.....துரும்பாவது...எல்லாம் ஒண்ணுதான் என்பது அமெரிக்காவிலிருந்து...அமிஞ்சிக்கரை வரையில் நாம் பார்க்கிறோமே.அான் வெள்ளைக்காரன் கொடத்ுவிட்டுப்போனக்கின் மிமை....டெல்லி முதல் உலகெங்கும் இம்மாதிரி வன்முறைகள் “சரக்கு உள்ளே போனவுடன் தான்  “ நடைபெறுகிறது.இதில் ஆணாதிக்கம் எங்கே வந்தது.. இது உண்மையில் “ஆல்கஹால் ஆதிக்கம் “.

இறுதியாக “ஆண் தன்மைக்கு “ எங்கேயோ தேடிப்பிடித்து ஒரு விவேகானந்தர் படத்தை பிரசுரித்து அதன் கீழ் அவரை அவமதிக்கும் வாக்கியம் வேறு எழுதியுள்ளது “இந்து”--இது கண்டிக்கத்தக்கது.

அட..மர மண்டை “இந்துவே”..அது விவேகானந்தரின் பக்தர் ஒருவர் சுவாமியை “கம்பீரமான காட்சியாக “ வரைந்த ஓவியம்..அது விவேகனந்தர் கொடுத்த “போஸ் “ அல்ல.அது ஆண் தன்மையின் காட்சி அல்ல..சுயகவுரவத்தின்...கம்பீரத்தின் சாட்சி...உன் ஊனக்கண்ணுக்கு --காமாலைக்கண்ணுக்கு மாற்றித்தான் தெரியும்..


அல்லாவும்...யேசுவும்..ஆண்கள்தான்  அல்லவா?.அல்லது .பெண்களா?--அவர் ஸ்தாபித்த மதத்தை கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் வழி படுகிறார்களே..அது என்ன ஆணாதிக்கமா?அை பற்ி எழினால் உக்க என்ன ஆகும் என்றெரியும் என்பால் எழில்லையா?
உங்கள் “எடிட்டர்” சித்தார்த் வரதராசனும்..முன்னாள் எடிட்டர்..ராமும் என்ன “ஜெண்டர்” சொல்வீர்களா?ஆண்களா? பெண்களா?

“இச்சமூகத்தின் முன்னேற்றம்  ஆணும் பெண்ணும் சேர்ந்து முயன்லே சாத்தியப்படும்...பெண்களை விட்டு விட்டு இச்சமூகம் எக்காலத்தும் முன்னேற முடியாது..  பறவை ஒரு சிறகால் பறப்பது எப்படி முடியாதோ அது போல தான் இதுவும்..” என பெண் உயர்வை போற்றியவர்  விவேகானந்தர்..அவருடைய கருத்துக்கள் முழுவதையும் உலகெங்கும் கொண்டு சென்றவர் சகோதரி நிவேதிதை என்ற பெண் தான்.

இவையெல்லாம் தெரியாமலா ஒரு கட்டுரையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் விவேகானந்தர் பெயரை புகுத்தி-- படத்தை போட்டுள்ளது ”இந்து”..அதன் நோக்கம்..இதன் மூலம் இந்து கலாச்சாரத்தை அவமதிக்க வேண்டும் எனபது.மட்டுமே..

.இது இந்தியாவில் இந்து இயக்கங்கள் உள்ளவரை நடவாது...இன்றுமுதல் ..இந்துவுக்கு கண்டனங்களை அனுப்பியவண்ணம் இருப்போம்.

“திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்?”

Wednesday, January 2, 2013

1.1/2--ஆண்டுக்கு முன்பே உண்மையை உரைத்த அம்மாவுக்கு நன்றி



ஆங்கில புத்தாண்டு அருமையாகவே தொடங்கியுள்ளது..பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது,..

”ஊன்றுகோல்லில்லாமல் நம் வெற்றிப் பயம் ொடும் “ என்று சென்னை கூட்டத்ில் சூளுரத் நம் ைவர் பொன்னாரின் வாக்கு உண்மையாகிவிட்டு.

மின்வெட்டினாலும், பஸ்கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் மக்கள் செல்வாக்கை இழந்த அம்மாவை ...எப்படி தூக்கிுமக்க   முடியும் என கவலை பட்டுக்கொண்டிருந்த பாஜகவிற்கு அம்மாவின் அறிவிப்பினால் ஏக குஷி..

அம்மா திமுகவோடு கூட்டணி வருமா? வராதா? என தினம் தினம் பத்திரிக்கைகளில் தொடர்ந்த விவாதத்தினால், “மண்டை குடைச்சலில் “ இருந்த பாஜக தொண்டனுக்கு பெரும் நிம்மதி..

டெல்லியிலிருந்து சென்னை வரும் நம் தேசிய தலைவர்களெல்லாம் மாற்றி மாற்றி மரியாதை நிமித்தமாக போயஸ் தோட்டத்துக்கு செல்வதும்......கமலாலயம் அதை ”வெறுமனே “ பார்த்துக்கொண்டு இருந்ததற்கும் முற்றுப்புள்ளி வைத்த அம்மாவுக்கு நன்றி

எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத “அமைப்புச்செயலாளர் “ எனற “பொறுப்பு” போட்டு, அவருக்குக்கீழ் ஆயிரக்கணக்கானோர் ராப்பகலாக, வேலை பார்த்து, தொண்டர்களை தூங்க விடாமல், “இதைச்செய்---, அதைக்கொடு, “ என அமைப்பு, ரீதியாக வேலைவாங்கி,கட்சி தன் காலில் நிற்க,பயிற்சிகளும், பௌதிக்களும், கொடுத்த பிறகு,எங்கே நமது வெற்றியை அம்மா அபகரித்து விடுவாரோ என நாம் பயந்தபோது ....தானாக விலகிக்கொண்ட  அம்மாவிற்கு நன்றி..

நல்ல வேளை அம்மா பெரிய மனது பண்ணி ஒண்ணரை வருடத்திற்கு முன்பே உண்மையை போட்டு உடைத்தார்கள்..இதனால்,மின்வெட்டிற்கெதிரான போராட்டம் முதல் பல போராட்டங்களை நடத்த பாஜகவிற்கு வாய்ப்பளித்த அம்மாவிற்கு சிறப்பு  நன்றி.

காங்கிரசோடு சேர்வதற்கு அம்மாவிற்கு தயக்கம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.செல்லாக்காசாகிப்போன காங்கிரஸ் ஊழல்களின் மகாயக்ஞத்தினால், தோற்று துவண்டு போய் விட்டது.என்பதை புரிந்து கொண்ட அம்மாவின் முடிவு சரிதான்...

பாஜகவின் மீது அம்மாவிற்கு காவிரிதான் கோபம் என்றால்.... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து ஷெட்டர்..ஷட்டரை திறந்து விட்டாரே..ஆர்ப்பாட்டம் நடத்தி கெடுத்தது யார் ?...கவுடாவும் காங்கிரசும்தானே.

இந்த உண்மை  அம்மாவிற்கு தெரியாமலா இருக்குமா?..பின் ஏன் இந்த அறிக்கை?...தமிழினத்தலைவர் சும்மாவா இருப்பார்?..தமிழனுக்கு தண்ணீர்தராத பாஜகவோடு கூட்டா? என அம்மாவை “ஐய்யா” கிழித்தெடுத்துவிடுவார்..என்ற பயமும் இருக்குமோ?

அல்லது மோடி பிரதமாவது நிச்சயம்...தன்னைப்போல ஒரு தாரண மாநில முதல்வருக்கு இந்த அந்தஸ்தா?...எதுவாக இருந்தாலும்..அது தனக்கு...தனக்குமட்டுமே...வரவேண்டும்...என்ற அம்மாவின் மனநிலையால்தான்   இந்த அறிக்கையோ?

அல்லது...அம்மாவுக்கு துதிபாடி, இப்போதே, கூட்டணி பஸ்ஸில் இடம் பிடிக்க, “துண்டு போட்டு விட்ட” தா.பாண்டியன்...ஜி.ராமகிருஷ்னன். போன்ற மார்க்ஸிஸ்ட்களை, விலக்க வேண்டி வருமோ என்கிற அச்சமோ?

எதுவாக இருந்தாலும் “வெகுவாக மக்கள் விரோதத்தை “ சம்பாத்தித்த அம்மாவை....வெகுவாக மக்கள் ஆதரவை சம்பாதித்த பாஜக தூக்கி சுமக்க வேண்டி ய சூழலை உருவாக்காமல் ....நம்மை காப்பாற்றிய  அம்மாவிற்கு மீண்டும் நன்றி..,