Pages

Saturday, February 25, 2012

என்கவுண்டர்களும் ...எதிர்ப்புக்களும்”பாதுகாப்பு என்பது பகல் கனவாகிவிட்டதா
போலீஸ் எனபது பொறுப்பற்றதாகி விட்டதா
மனித உரிமைகள் மாசுபட்டுவிட்டதா
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதா”

சென்னையை சுற்றியுள்ள இரண்டு வங்கிகளில் கொள்ளை அடித்த வடமாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்களை போலீஸ் போட்டுத்தள்ளியுள்ளது..

இதை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் ஒலித்தவண்னம் உள்ளது.

“தவறுகளை முளையிலேயே கிள்ளி எரிந்தால்தான் மற்றவர்களுக்கு தவறு செய்யும் எண்னமே வராது..அரபுநாடுகளிலுள்ள கடுமையான தண்டனைகள்தான் அங்கு குற்றங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது.”.என்கின்றனர் இதை ஆதரிப்போர்..

இதை எதிர்ப்போர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்...”தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும் எனபதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.அதை முறையாக விசாரித்து நீதிமன்றம் தான் தண்டிக்கவேண்டும்..எனகவுண்டர் மூலம் போலீஸ் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.”.என்கின்றனர்..

இப்படி விவாதங்கள் நீண்டுகொண்டே போனாலும் இதற்குள் பொதிந்திருக்கின்ற விஷயங்கள்தான் என்ன?

வங்கிகள் கிளைகள் விஸ்தரிக்கப்படுகிறது..தனியார் நகை..பணம்..அடகுக்கடைகள்..புற்றீசல்போல் பெருகிவருகிறது..

தங்கவிலை வானத்தை தொட்டாலும்....பெரிய குழுமங்கள் ஊர்தோரும் பிர்மாண்டமான சைஸ் கடைகளை திறந்து வருகிறது..

சென்னையை போன்ற “மெகா சிட்டியின் “ அதிரும் பொருளாதார வளர்ச்சி...கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி ஈர்க்கப்படும்  மக்கள் கூட்டம்..இதனால் போலீஸ் ஸ்டேஷனின் எல்லை விரிவடைந்து வருகிறது...போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய துறைகளின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது..ஆனால் போலீஸ் ஸ்டேஷனின் எண்ணிக்கையோ..போலீஸ்காரர்களின் எண்ணிக்கையோ இதேவைகளின் அடிப்படையில் உயரவில்லை.

சரி..ஒரு குற்றம் நிகழ்ந்து விட்டால்..அதுவும் உடனடியாக குற்றவாளிகள் பிடிபடாவிட்டால்...போலீஸுக்கு கொடுக்கப்படும் “நெருக்கடிகள்”..அதுவும் பத்திரிக்கைகள்..ஊடகங்கள்..எதிர்கட்சிகள்..தொடுக்கும் விமர்சனங்கள்...போலிஸின் பணிகளை விரைவுபடுத்துவதற்கு உதவுவதில்லை..மாறக சோர்வடையச் செய்கிறது.

குற்றச்செயல்களுக்கான காரணங்கள் பலப்பல..பாதுகாப்பு குறவினால் நிகழும் குற்றங்களுக்கு போலீஸை மட்டுமே பொறுப்பாக்க முடியாது..அத்தனை பேருக்குமே போலீஸ் பாதுகாப்பு தரமுடியும்... எனபது நடைமுறை சாத்தியமல்ல..

வங்கிகளும்..வட்டிக்கடைகளும்.. நகைமாளிகைகளும்..தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் குற்றம் நடந்த இடங்களில் பாதுகாப்பு வசதிகளை ( CC.TV...BURGLAR ALARM...ARMED SECURITY GUARD ETC.) இவர்கள் செய்துகொள்ளவில்லை..என்பதும் ஒரு செய்தி..

சென்னை என்கவுண்டரில் ஏராளமான “முரண்பாடுகள்” இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன..அவை என்னவாக இருந்தாலும் அரசே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது..ஒரு ஆறுதல்..
..
ஒரு ஜனநாயக நாட்டில் போலீஸே சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு..தீர்த்துக்கட்டுவதும்...கொல்லப்பட்டவர்கள் மீது கண்டுபிடிக்கப்படாத மற்ற கேஸ்களை போட்டு..’”ஃபைலை குளோஸ்” செய்வதும்..ஆரோக்கியமான செயலகள் அல்ல.

எனகவுண்டரை ஆதரித்து பொதுமக்கள் சொன்ன கருத்துக்கள் ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை..ஆனால், வழக்குகளில் விரைவான தீர்ப்புக்கள் மற்றும் தண்டனை இல்லாததும்.....குற்றவாளிகள் தப்பிப்பதை.. பார்த்துப்பார்த்து வெறுத்துப்போன மக்களுக்கு ஏற்பட்ட கோபம்தான் இந்த குரல்கள்...

எங்ஙெங்கு காணினும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போலிஸ் பந்தோபஸ்து கோரப்படுகிறது..இப்படி போலீஸ் பாதுகாப்பை நம்பியே ஒரு சமூகம் வாழ்முடியுமா? என்பதும் சிந்தனைக்குரிய கேள்வி.


மனித உரிமைக்கு ஆதரவான குரல்.வரவேற்கப்படுகிறது..அது குற்றவாளிகளை பாதுகாக்க பயன்படாமல் இருக்கும் வரை..
போலீஸ் செயலபாடுகளில் உள்ள குறைகள் களையப்படவேண்டும்..
குற்றவாளிகள் தப்பிக்காமல்..விரைவாக தண்டனை பெற்றுத்தரவேண்டும்..
“நமக்கு நாமே” பாதுகாப்பை  ஏற்படுத்தி நம்மையும்..சமூகத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்...

அப்போதே என்கவுண்டரும் நடக்காது..எதிர்ப்பும் கிளம்பாது..

Thursday, February 23, 2012

அறியாமல் இழக்கும் பிர்மாண்டங்கள்அமெரிக்காவின் வாஷிங்கன் டி.சி...ரயில் நிலயம் ..காலை 9.00 மணி..”பீக் ஹவர் “ என்னும் கூட்ட நெரிசல் நேரம்..

ஒரு இளஞர் வயலினை எடுத்து மிக அருமையான பாடல் ஒன்றை வாசிக்கிறார்.அது அமெரிக்காவின் டாப் டென் பாடல்களில் ஒன்று..

கூட்டம் சட்டை செய்ததாக தெரியவில்லை..ரயிலை பிடிக்க அவசரமாக ஓடிய வண்ணமே இருந்தனர்..

3வது நிமிடம் ...தூரத்திலிருந்து ஒரு அம்மணி.. ஒருடாலரை வீசி எரிந்தார்..7வது நிமிடம் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு..வந்த ஒருசிறுவன் ..வைத்தகண் வாங்காமல் இசை பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான்..அவனது அம்மா தரதரவென இழுத்துக்கொண்டு போனதுதான் மிச்சம்.

10வது நிமிடம் ஒருவர் வந்தார்..இசையை ஒருநிமிடம் கேட்டார்.வாட்சை பார்த்தவண்ணம் வேகமாக நடையை கட்டினார்..
 மொத்தம் 45 நிமிடம்.. 7 டாப் பாடல்களை பாடினார்..1100 பேர் கடந்து சென்றனர்..முடிக்கும் போது கைத்தட்டல் இல்லை ஆரவாரம் இல்லை..பாராட்ட யாருமே இல்லை..

அந்த கலைஞ்னின் பெயர் ஜொஹுவா பெல்..அமெரிக்காவின் மிகப்பிரபலமான இசைஞன்...அவன் வாசித்த  இசைக்கருவியின் மதிப்பு 35 லட்சம் டாலர்..2 நாளைக்குமுன் போஸ்டன் நகரத்தில் அவன் நிகழ்த்திய நிகழ்ச்சி “ஹ்வுஸ்புல்” ஆனதுமட்டுமல்ல ஒரு டிக்கட் விலை 100 டாலர்..

மக்களுடைய சமூக கண்ணோட்டம்---ரசனை மற்றும் முன்னுரிமை பற்றி அறிய ...அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை “வாஷிங்டன் போஸ்ட்” ஆய்வுக்காக நடத்திய ஒரு சாம்பிள் தான் இந்நிகழ்ச்சி.

இதுபோல எத்தனையோ நல்ல விஷயங்கள்--இதமான ...வாழ்க்கைக்கு தேவையான... விஷயங்களை நாம் தாண்டிப்போகிறோம்..அல்லது நம்மை வை தாண்டிப்போகிறது..

.நாம் அறியாமலே...நம்மை அறியாமலே..... நாம் இதை அனுபவிக்காமல்... இழக்கிறோம்.....

 இயந்திரமாக வாழும் ........மரத்துப்போன....பழக்கத்தாலே.....


Sunday, February 19, 2012

சோனியா கப்பலுக்கு சோனியாவே சிறையா?—சிரிப்புத்தான் வருகிறது..
இந்திய மீனவர்கள் இருவரை  கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற இத்தாலிய எண்ணெய் கப்பல் “என்ரிகா லெக்ஸி”..சிறை (….இல்லை..இல்லை… மரியாதையாக அழைத்து வரப்பட்டு ) பிடிக்கப்பட்டு கொச்சி துறைமுகத்துக்குள் கொண்டுவரப்பட்டுரிக்கிறது..செய்தியை படித்தவுடனே சந்தேகப்பட்டேன்..இலங்கை காரனையே ஒன்றும் செய்யமுடியாத நாம்..இத்தாலிய “காட்டுராணி” சோனியா மெய்னோ நம்மை ஆள்கிறபோது..இத்தாலிய கப்பல் சிறை பிடிப்பா?—சிரிப்புத்தான் வந்தது..இந்திய கடற்படை அதிகாரியின் வேகவேகமான அறிக்கை…புத்திசாலித்தனமாக இத்தாலிய கப்பலை துறைமுகத்துக்கு கொண்டுவந்ததாக பேட்டிகள்…”இது மிருகத்தனமான கொலை”—என கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சண்டியின் அறிக்கை..கடல் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன---என சோனியாவின் அடிவருடிகள் பாதுகாப்பு மந்திரி அந்தோணியும் கப்பல் மந்திரி வாசனும் பேட்டிகள்..தீவிர நடவடிக்கையில் இறங்கிவிட்டோம்—என எஸ்.எம்.கிருஷ்ணா பேச்சு…

கப்பல் கைது செய்யப்பட்டுவிடும்..சுட்டவனுக்கு தண்டனை கிடைத்து விடும் ..நீதிதேவதையே உனக்கு நன்றி..என சொல்லவாயெடுத்தபோது…சூது வெளியெ தெரிய ஆரம்பித்தது..இவ்வளவு வேகமாக காங்கிரஸ்காரன் பேசுகிறானே…இந்தியாவையே இத்தாலிகாரியிடம் அடகுவைத்த பிறகு ஒரு “ஜுஜுபி” கப்பலை கைது செய்ய நாம்மாள் இவ்வளவு பரபரப்பு காட்டுகிறானே என்ற சந்தேகம் மட்டும் தொடர்ந்து மனதை வாட்டிக்கொண்டிருந்தது..

தனது குடும்ப நண்பர் கொள்ளைக்காரன் “குவட்ரோச்சியை” விடுவித்து இத்தாலிக்கு அனுப்பிவைத்த சோனியாவாவது கப்பலை கைது செய்வதாவது…என்று நினைத்தது உண்மையாகிவிட்டது..

கப்பலை விடுவிக்க காரணம் கண்டுபிடித்து விட்டர்கள்…இத்தாலியன் ..இந்திய மீனவர்களை சுட்டது “இந்திய கடல் எல்லையில் “ இல்லையாம்..அதாவது 12 கடல் மைலகளுக்குள் இல்லையாம்..

இந்தியர்கள் சுடப்பட்டபோது இத்தாலிய கப்பல் 18முதல் 20 கடல் மைல்களுக்கு அப்பால் இருந்ததாம்..அப்பாடா …சூப்பர் காரணம் கண்டு பிடித்து விட்டார்கள்..இந்திய சட்டம் அங்கு செல்லாதாம்.. இனி விடுதலைதான்…காட்டுராணிக்கு ஜெ…காங்கிரஸுக்கு ஜெ…இத்தாலிக்கு ஜெ…

Saturday, February 11, 2012

ஒரு “செக்யூலர் மர்டர்”சென்னை பாரீஸ் கார்னர்..ஆர்மீனியன் தெரு..செயிண்ட்மேரிஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி ஆசிரியை உமாமகேஸ்வரி--முகமது இர்ஃபான் என்கிற 9ஆம் வகுப்பு மாணவனால் கொல்லப்படிருக்கிறார்..

இதில் கவனிக்க வேண்டியது இரண்டு விஷயங்கள்...
ஒன்று..கொலையில் பத்திரிக்கைகள்...ஊடகங்கள்..இணையதளங்கள்..மூடிமறைத்த விஷயம்..அதுதான் கொலையாளி..மாணவனின்..பெயர்...அவன்.இஸ்லாமியன்..அதை குறிப்பிடுவதில் ஊடகங்களுக்கு என்ன தயக்கம்?--ஏன் தயக்கம்?--ஒருவேளை பெயரைக்குறிப்பிட்டால்....யார் எனத்தெரிந்தால்...மற்றவர்கள் படையெடுத்துப்போய்..ஏதாவது செய்துவிடுவார்களா?--

இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டுவிடுமா?--இல்லை அமைதியை போதிக்கும்  இஸ்லாத்திற்கு பெரும் களங்கம் ஏற்பட்டுவிடுமா?--

இதையே இந்து மாணவன் செய்திருந்தால்...அவனுடைய பெயர்--படம்--அவனுடைய குடும்பம் முழுவதுமான பேட்டி..படங்களோடு சந்திக்கு இழுக்கப்படிருக்குமல்லவா?

ஏன் இந்தக்கொலையை--கொலையென மட்டும் கருதாமல்..மதத்தை பாதுகாக்கும் பணியில் ஊடகங்களும்..பத்திரிக்கைகளும் ஈடுபட்டன?--யார் இந்த ஆலோசனையின் பின்னணியில் இருந்தவர்?--

இணையதளங்களில்..மதசார்பற்றவாதிகள்...இடதுசாரி புரவலர்கள்..தமிழ் ஆர்வலர்கள்...பெண்ணியவாதிகள்...மாணவனுக்கு ஆதரவாக எழுதும் கருத்துக்கள்..”அவசர சிகிச்சை பிரிவில் “--”அட்மிட்” பண்னவேண்டிய அவர்களது மூளையை அம்பலப்படுத்துகிறது..

அட முட்டாள்களா--மாணவனுக்கு ஆதரவாக போகும் --உங்களுக்கு ஆதரவான “பாயிண்ட்” ஒன்று அதில் இருக்குதடா...ஆம்..கொலையுண்ட ஆசிரியை இந்து...கொலை நடந்த பள்ளி..கிறிஸ்தவம்--கொலைபுரிந்த மாணவன் இஸ்லாமியன்..ஆகவே இது உங்களின் கணக்குப்படி..”மதசார்பற்ற தன்மைக்கு “ ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாமா?..ஆம் இது ஒரு “செக்யூலர்  கொலை”

இரண்டாவது விஷயம் --பெருகிவரும் “மனநிலை பாதிப்புக்கள்.”
இதில் மாணவர்--ஆசிரியர் உறவுகளும் அடங்கும்..

“பெற்றோர் எங்கள் கருத்தை கேட்பதில்லை..அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகவே நடந்து கொள்கின்றனர்..”--இது ஒரு ஆசிரியர் அமைப்பு நிர்வாகியின் கருத்து..

சமீபத்தில வெளிவந்த “அக்கினிபத்” இந்தி திரைப்படத்தில வந்த “ பழிக்குப்பழியே”..என்னை கொலை செய்யத்தூண்டியது...இது மாணவனின் வாக்குமூலம்..சினிமாவின் தேசசேவை..

தினசரி ரூ.100 --கைச்செலவுக்கு மாணவனுக்கு ”செல்லமாக “ கொடுத்து சீரழித்த  பெற்றோர்..

இப்படி காரணங்கள் அடுக்கப்பட்டாலும்..சினிமா--பெற்றோர்...சமூகம்...என அவரவர் பங்களிப்பை  “கண்ணும் கருத்துமாக” செய்துள்ளனர்.
இந்த  மாணவனுக்கு ...ரத்தம்--கத்தி..கழுத்தறுதுக் கொலை.-- பயத்தை உருவாக்கவில்லை--அன்னியமாகத் தெரியவில்லை..ஏன்? வளர்ப்பா? சூழலா?..


இனி ஆசிரியர்களும் டாக்டர்களைப்போல பாதுகாப்பு கோருவார்கள்..இது “மதசார்பற்ற கொலை “ என்பதால் அரசு மறுத்துவிடும்...