Pages

Friday, October 28, 2016

நிழல் யுத்தம் செய்யும் கழகங்கள்

காவிரி நதிநீர் பிரச்சனை
செப்டம்பர் 27ந்தேதி முதல் அக்டோபர் மாதம் இன்றுவரை காவிரி நதிநீர் விவகாரம், குறிப்பாக சுப்ரீம் கோர்ட் தமிழகத்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என கர்நாடகாவிற்கு உத்தரவு போட்டது முதல், தமிழக அரசியல் கட்சிகள், குறிப்பாக தி.மு.க மற்றும் விவசாய சங்கம் என்ற பெயரில் ஒளிந்து கொண்டுஇருக்கும் கம்யூனிஸ்டுகள் அயோக்யத்னமானது.
குறிப்பாக கர்நாடகா வன்முறைக்கும், சுப்ரீம் கோர்ட்டில், அட்டர்னி ஜெனரலின் அபிடவிட் தாக்கல் செய்ததற்கும், இக்கட்சிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, ஒப்பாரி இட்டு, பாஜக மற்றும் மோடி அரசின் மீது அவதூறு பரப்பிய அபாண்டம், அற்பத்தனமானது, கீழ்த்தரமான அரசியல் செயல் என கண்டிக்கத் தக்கது
முதலில் ஓன்றை மட்டும் ஆணித்தரமாக தெரிவித்து விடுகிறேன். 41 ஆண்டுகால காவிரி நதிநீர் விவகாரத்தில் தெளிவான, தீர்க்கமான, நிரந்தமான தீர்வை பெற்றுத் தந்திருப்பது பாஜகவின் மோடி அரசுதான்.
எப்படி எல்லாம் அரசியல் செய்தார்கள்?
எப்படி எல்லாம் தமிழக விவசாயிகளை கழகங்கள் வஞ்சித்தன?
எப்படி எல்லாம் இவர்கள் இந்த வழக்கை இழுத்தடித்தார்கள்?
எப்படி எல்லாம் வெறும் கடிதங்களை மட்டும் எழுதி வெறும் வாயை மென்று கொண்டிருந்தார்கள்?

என்பதை நாம் உற்று நோக்கினால் இவர்களை ரயில் மறியல் போராட்டம் ”பாஜகவின் நிரந்தரதீர்வு தந்ததால்”, ”இவர்களது முகத்திரை கிழிந்துவிட்டதால்” ஏற்பட்ட” பயம்” என்பது நமக்குப் புரியும்.
இதை அறியாமல் தமிழ்நாட்டு மக்கள் இருப்பார்களே யானால், அவர்கள் தலையில் கழகங்கள், குறிப்பாக திமுக தொடர்ந்து ”மிளகாய் அரைத்துக் கொண்டு” தான் இருக்கும்.

இவர்கள் மத்திய பாஜக அரசின் மீது வைக்கும் குற்றச் சாட்டுக்கள் இரண்டு தான். ஒன்று மத்திய அரசு வழக்கறிஞர் ரோஸ்தகி, முதல் நாள் சுப்ரீம் கோர்ட்டில், காவிரி மேலாண்மை வாரீயம்" அமைப்பதாக கூறிவிட்டு மறுநாள் அதற்கு பாராளுமன்றத்தில் நடுவர்மன்ற தீர்ப்பை வைத்து சட்டமாக்கினாலே முடியும்" எனக் கூறியதை பெரிய குற்றசாட்டாக கூறுவது.

இதற்கு அவரே பதிலளித்து விட்டார்.தன் தவறுக்காக வருத்தமும் தெரிவித்து விட்டார்.
இரண்டாவது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு" சட்ட பூர்வ அந்தஸ்து" வேண்டுமென்பதை மறைப்பது.

இதற்கு சரித்திரத்தை ஒருமுறை லேசாக திரும்பிப் பார்ப்போம். மிக நீண்ட நெடிய சரித்திர காலத்திற்கு நாம் போக வேண்டாம். அதையெல்லாம் மறப்பது நான் நமக்கு பழக்கப்பட்டு போன தாயிற்றே!

இல்லாவிடில் 1996ல் இருந்து 20 வருடகாலம் மத்திய அரசில் அனையான" வல மந்திர பதவிகள் அனுபவித்து அங்கம் வகித்து ஒன்றுமே செய்யாத திமுக" இப்படி போராட்டம் நடத்துவதை நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா! அவர்களுக்கு காவிரி" பற்றி பேச எந்த அருகதை இல்லாதபோதும் அதை நாம் அனுமதித்து வாளாயிருப்போமா?

சரி சப்ஜெட்டுக்கு வருகிறேன்.

10.5.2013 அன்று நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு போட்ட S.L.P.க்கு 22.5.15. அன்று சுப்ரீம் கோர்ட் இடைக்கால’ சூப்பர் வைசரி கமிட்டி" போட வேண்டுமென உத்தரவிட்டது.
மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இக்கமிட்டி இடைக்காலமாக பணிபுரியும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது
.
சரி! இதிலென்ன விசேஷம் என நீங்கள் கேட்டதுபுரிகிறது.
பிப்ரவரி மாதம் 21ந்தேதி 2013ல் வெளிவந்த இந்து நாளேட்டில் இப்படி குறிப்பிட்டிருக்கிறது.
இத்திட்டத்தில் உருவாக்கப்படும் முறைப்படுத்தல்கள் 30 நாட்களுக்குள் பார்லிமெண்டின் இருசபைகளிலும் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படல் வேண்டும்" என காவிரிநீர் டிரிப்யூனல் கொடுத்த அவார்டில் குறிப்பிட்டிருக்கிறது என எழுதியுள்ளது.

இதையே தான் மாநில நதிநீர் தாவா சட்டம் 1956ல் செக்ஷன் 6ஏ(7) லும் பார்லிமெண்ட் approval வேண்டும் என உறுதி செய்திருக்கிறது.
இதைத்தான் மேற்கோள் காட்டி டிரிப்யூனல் அவார்டிலும் சொல்கிறது இன்று அதாவது...’’பக்ரா-பியாஸ்" மேலாண்மை வாரியம் போல அவார்டை செயல்படுத்த வேண்டும்" என்பதாகும்.
நான் மேலே சொன்ன செய்திகள் யாவும் இணைய தளத்திலுள்ள 1956 சட்டத்திலும், இந்து பத்திரிக்கை செய்திலும் உள்ளது. இந்த உண்மைகள் எதிர்கட்சியினருக்கு தெரியாமலா இருந்திருக்கும். இருப்பினும் அவர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?

அதுதான் அரசியல்.
ஜஸ்டிஸ் ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட நர்மதா டிரிப்யூனல், குஜராத், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் இவைக்களுக்கிடையே யான தாவாவை 1969லிருந்து 1979வரை 10 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டு இதே மாதிரிதான் தீர்த்திருக்கிறது. அம்மாநிலங்களில் கூச்சலில்லை குழப்பமில்லை... அப்போது ஆண்ட ஜனதா கட்சி மீது அபாண்டங்களை மாநில கட்சிகள் அள்ளி வீசவில்லை.

ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்ட்ரங்களுக்கிடையேயான கோதாவரி நதிநீர் தாவாவை 11 ஆண்டுகாலம் எடுத்துக்கொண்டு நீதிபதி பச்சாவத் கமிட்டி இப்படித்தான் சரிசெய்திருக்கிறது. இதே கர்நாடகம் அங்கு புகைச்சல் இல்லாமல் தீர்ப்பை நிறைவேற்றி வருகிறது.
நீதிபதி பிரிஜேஸ் குமார் தலைமையிலான இரண்டாவது கிருஷ்ணா டிரிப்யூனால், 6 ஆண்டு எடுத்துக்கொண்டு, தாவாவிற்கு தீர்ப்பு தந்திருக்கிறது.

பின் தமிழகத்தில் மட்டும் ஏன் உண்மைகள்
மறைக்கப்படுகின்றன.
2007லிருந்து 2013 வரை அதாவது காவிரி டிரிப்யூனல் அவார்டு கொடுத்த 7 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் அங்கம் வகித்த திமுகவால் ஒரு கெஜட்" Notification ”கூட கொண்டுவர முடிய வில்லையே ஏன்?
மீத்தேன் எரிவாயு திட்ட குழாய் பதிக்கும் ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் கையெழுத்தை யார் போட்டது?

அப்போது துணை முதல்வராக இருந்த திமுக பொருளார் ஸ்டாலின் தானே? இது பச்சை துரோகம் அல்லவா?
இவர்களுடன் இன்று விவசாயிகள் கைகோர்த்து இருப்பது, சரித்திரத்தை மறந்த துரோகமில்லையா?

அதெல்லாம் இருக்கட்டும் மேலாண்மை வாரியத்துக்கு பார்லிமெண்ட் ஒப்புதல் பெறவேண்டும் என பாஜக சொல்வது ஏன்?
சுப்ரீம் கோர்ட் தமிழகத்து இவ்வளவு, இவ்வளவு தண்ணீர், இந்த இந்த அளவு, இந்த இந்த நாட்களில் தரவேண்டும்" என உத்தரவு கிட்டது அல்லவா? முதலில் ‘தரமுடியாது’ என அடம்பிடித்த கர்நாடகா, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட அளவை" கொடுக்கவில்லையே ஏன்?.

இதற்கு காரணம் என்ன?
சூப்பர்வைசரி கமிட்டி கொடுத்த ஆர்டர் மற்றும் டெக்னிகல் கமிட்டி கொடுத்த அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டது எதனால்?

அதற்கு அவ்வளவு வலு" இல்லை என்பது மட்டும் புரிகிறதல்லவா?
இதனால் தான் மேலாண்மை வாரியம்" பார்லிமெண்ட் ஒப்புதலோடு அமைக்கப்படவேண்டும் என்றும், அதை மறுக்க இரண்டு மாநிலத்துககுமே அதிகாரமில்லை என்றும், அப்படி ஒரு அமைப்பு வருமானால் அந்த பெருமை முழுதும் பாஜக தட்டிக் கொண்டு போய் விழும் என்ற காரணத்தினால் இந்த ரயில் மறியல்கள்" நடத்துகிறார்கள்.

மோடி அரசு பதவியேற்றவுடன் எந்த விஷயத்தையும் ”தற்காலிக" முறையில், தற்காலிக தீர்வுகள், அரசியல் லாபம் கருதும் செயல்கள் செய்வதில்லை என்பதை நாடறியும்

இதனால்தான், முல்லைப் பெரியாரில் தமிழகத்து வெற்றி கிடைத்தது, மேகதாது அணைக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி மறுத்தது.

மீத்தேன் குழாய் பதிப்புக்கு சுப்ரீம் கோர்ட் ஓகே" சொன்ன பிறகும் விவசாயிகள் நலன் கருதி பாஜக அரசு குழாய் பதிப்பு செயயவில்லையே.
இதையெல்லாம் மறைத்துவிட்டு கபடநாடகம்" ஆடும் திமுக அண்ட்கோவை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதாவின் உடல்நிலையில்" அரசியல் செய்த திமுக இப்போது காவிரியிலும் செய்ய முயற்சிப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.