Pages

Friday, January 4, 2013

இந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..இந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் செய்கைகள்...செயல்பாடுகள்..செய்திகள்...கட்டுரைகள்...தலையங்கங்கள்...அத்தனையும் கடும் விமரசனத்துக்கு உள்ளாகின்ற வகையில் உள்ளது..

பொதுக்கருத்துக்கு எதிராக, இந்து சமுகத்தை அவதூறு செய்யும் முறையில், சிகப்பு சித்தாந்ததின் அடிவருடியாக ”இந்து”உள்ளது.

எவ்வளவோ கண்டனங்கள் வந்த பின்பும் அதன் எழுத்தை மாற்றிக்கொள்ளாதது மட்டுமல்ல...மேலும் மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் முறையை தொடர்கிறது.

அதன் வெளிப்பாடாக நேற்றைய ( 3.1.13.) இதழில், ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது..அதன் ஆசிரியர் பெயர் சஞ்சை ஸ்ரீவத்சவாவாம்..சிகப்பில் ஊறி செஞ்சாயம் ஏறியவர் போலுள்ளது.

இதே மாதிரி “ மண்டபத்தில் திரிந்து கொண்டிருக்கும் பலரை “ விட்டு இந்து விரோத, கலாச்சார விரோத கட்டுரைகளை எழுதி வாங்கி பிரசுரிப்பது இந்துவின் வாடிக்கை ..அப்படி ஒன்றுதான் நேற்றைய கட்டுரையும்..

சரி..அது கிடக்கட்டும் ..விஷயத்துக்கு வருவோம்..

கட்டுரை என்ன சொல்கிறது.

1.டெல்லி மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்காரம்--கொலைக்கு க
ரணம் கண்டு பிடிக்க முயன்றுள்ளது..சட்ட ரீதியாக புலனாய்வு ரீதியாகவோ அல்ல.. கலாச்சார ரீதியாகவாம்..

2.இந்தியாவின் “ஆணாதிக்கம்தான்..” இதற்கு காரணமாம்.

3..போகிற போக்கில் புழுதி ரி தூற்றும் விதமாக.. கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் ..
விவேகானந்தரின் 150 ஆவது ஜெயந்தி ஆண்டில் அவரை அவமான ப்படுத்த முயன்றுள்ளது....

முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் கருத்து சொல்ல தயாரில்லை.. ஏனெனில் அவை முற்றும் உளரல்கள்..

ஆணும் பெண்ணும் சமமென பறை சாற்றும் அமெரிக்கா..பிரிட்டன்..ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளில் பெண்களின் மீது பாலியல் வன்முறை இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகம்..பூகோள பரப்பளவு..மற்றும் மக்கள் தொகையை கணக்கிட்டால் இந்தியாவை விட 16 மடங்கு அதிகம்...
இதைப்பற்றி ”இந்து”மூச்சு விடவில்லையே

ஷரியத் சட்டமான.--.கண்ணுக்கு கண்---கைக்கு கை----என தண்டனையுள்ள அரேபிய நாடுகளின் லட்சணம் என்ன? அங்கு பெண்கள்.”.மனிதர்கள்..அல்ல...ஜடம்...பொருள்கள்...வெரும் போக வஸ்துக்கள்.”.இதைப் பற்றி இவர்க்ளால் எழுத முடியுமா?

”போலீஸ் 15 நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளட்டும்..100 கோடி இந்துக்களையும் வெட்டி சாய்த்து விடுகிறேன்” என் கொக்கரித்த ஆந்திர முஸ்லீம் எம்.எல்.ஏ அக்பருதீன் ஓவாசி பற்றி ஒரு கட்டுரையோ கண்டனமோ எழுதும் “ஆண்மை “ இந்துவுக்கு உண்டா?

இந்து கலாச்சாரத்தை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே “இந்து “ இக்கட்டுரையை இந்த நேரத்தில் வெளியிட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டாவது ----ஆண்களை போற்றும் பண்டிகை ஒன்றை குறிப்பிட்டு ..இந்தியா ஆணாதிக்க நாடாம்...அட ஞானசூனியமே..உன் பெண்டாட்டி ...நீ நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே அதை கொண்டாடுகிறாள்..

நவராத்திரியின் 9 நாளும் நாம் பெண்ணை “சக்தியாக--காளியாக மகிஷாசுரமர்த்தினியாக” வணங்குகிறோமே..அப்படியென்றால் இது பெண்ணாதிக்க நாடா?..மூளையை “சிகப்பில் தோய்த்து “  எழுதினால் இப்படித்தான் எழுத்ததோன்றும்..

இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்கிற ”அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் ”--அறியாத முழு ஞானசூனியம் “ இந்து என்பது இப்போது புறிகிறதா?

பெண்ணுக்கு பண்டிகைள் கொண்டாடுகிறிர்கள்..என்றால் டெல்லி பாலியல் பலத்காரம் நடந்திருக்ககூடாதல்லவா? என்பது இன்னொருவாதம்..

சாராயம் உள்ளே போனால், மகளிராவது..மண்ணாவது...தூணாவது.....துரும்பாவது...எல்லாம் ஒண்ணுதான் என்பது அமெரிக்காவிலிருந்து...அமிஞ்சிக்கரை வரையில் நாம் பார்க்கிறோமே.அான் வெள்ளைக்காரன் கொடத்ுவிட்டுப்போனக்கின் மிமை....டெல்லி முதல் உலகெங்கும் இம்மாதிரி வன்முறைகள் “சரக்கு உள்ளே போனவுடன் தான்  “ நடைபெறுகிறது.இதில் ஆணாதிக்கம் எங்கே வந்தது.. இது உண்மையில் “ஆல்கஹால் ஆதிக்கம் “.

இறுதியாக “ஆண் தன்மைக்கு “ எங்கேயோ தேடிப்பிடித்து ஒரு விவேகானந்தர் படத்தை பிரசுரித்து அதன் கீழ் அவரை அவமதிக்கும் வாக்கியம் வேறு எழுதியுள்ளது “இந்து”--இது கண்டிக்கத்தக்கது.

அட..மர மண்டை “இந்துவே”..அது விவேகானந்தரின் பக்தர் ஒருவர் சுவாமியை “கம்பீரமான காட்சியாக “ வரைந்த ஓவியம்..அது விவேகனந்தர் கொடுத்த “போஸ் “ அல்ல.அது ஆண் தன்மையின் காட்சி அல்ல..சுயகவுரவத்தின்...கம்பீரத்தின் சாட்சி...உன் ஊனக்கண்ணுக்கு --காமாலைக்கண்ணுக்கு மாற்றித்தான் தெரியும்..


அல்லாவும்...யேசுவும்..ஆண்கள்தான்  அல்லவா?.அல்லது .பெண்களா?--அவர் ஸ்தாபித்த மதத்தை கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் வழி படுகிறார்களே..அது என்ன ஆணாதிக்கமா?அை பற்ி எழினால் உக்க என்ன ஆகும் என்றெரியும் என்பால் எழில்லையா?
உங்கள் “எடிட்டர்” சித்தார்த் வரதராசனும்..முன்னாள் எடிட்டர்..ராமும் என்ன “ஜெண்டர்” சொல்வீர்களா?ஆண்களா? பெண்களா?

“இச்சமூகத்தின் முன்னேற்றம்  ஆணும் பெண்ணும் சேர்ந்து முயன்லே சாத்தியப்படும்...பெண்களை விட்டு விட்டு இச்சமூகம் எக்காலத்தும் முன்னேற முடியாது..  பறவை ஒரு சிறகால் பறப்பது எப்படி முடியாதோ அது போல தான் இதுவும்..” என பெண் உயர்வை போற்றியவர்  விவேகானந்தர்..அவருடைய கருத்துக்கள் முழுவதையும் உலகெங்கும் கொண்டு சென்றவர் சகோதரி நிவேதிதை என்ற பெண் தான்.

இவையெல்லாம் தெரியாமலா ஒரு கட்டுரையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் விவேகானந்தர் பெயரை புகுத்தி-- படத்தை போட்டுள்ளது ”இந்து”..அதன் நோக்கம்..இதன் மூலம் இந்து கலாச்சாரத்தை அவமதிக்க வேண்டும் எனபது.மட்டுமே..

.இது இந்தியாவில் இந்து இயக்கங்கள் உள்ளவரை நடவாது...இன்றுமுதல் ..இந்துவுக்கு கண்டனங்களை அனுப்பியவண்ணம் இருப்போம்.

“திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்?”

7 comments:

sakthi said...

சரியான சட்டை அடி

Anonymous said...

I..stopped..hindu..subscription
last...year...my..50..years
reading...HINDU...ENDED..HAPPILU

ttpian said...

i thought u were going to expose the SKIN of The Hindu on their part to support racist srilanka..But it seems,u are worrying for a Bramin girl who got raped!
Everyday,tamil girrls are raped in srilanka by the occupying srilankan army(Training by Indian army still continues),why no tamil guy is not openend their mouth?

Kavin Kamalkumar K.S said...

This is a very good article but, it won't change them. They are like 3monkeys. Dont talk good, Dont hear good, Dont look good. So this is a "Sevidan Kathil Oothiya Sangu"

Karthik said...

"The Hindu" has for long being doing such UnHindu activities. Gail Omdevt wrote an article about Vulgarity in Rig veda. and it has allowed more such nonsense. Need to ask readers to stop subscribing the Hindu

Anonymous said...

ஹைதராபாத்தில் இருக்கும், சார்மினார் அருகில் முளைத்த கோவில் விவகாரம் சம்பந்தமாக கடந்த மாதம் அங்கு பேசிய பிரவீன் தொகாடியா கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால் ஹைதராபாத் இன்னொரு அயோத்தியாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அப்போது அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு பாடம் புகட்டுவோம் என்று கலவர விதை தூவியுள்ளார். அவரின் பேச்சிற்கு பதிலடி கொடுத்த அக்பர்தீன் ஒவைசி என்பவர் கால் மணி நேரம் போலீஸ் ஒதுங்கி கொண்டால் போதும் எல்லோரையும் காலி செய்துவிடுவோம் என்று பேசி தொகாடியா போட்ட விதைக்கு உரமிட்டிருக்கிறார். இப்படியே போனால் இருவரும் மனித உயிர்களை அறுவடை செய்து விடுவார்கள் போல. நாட்டின் ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிராக பிரவின் தொகாடியாவாகட்டும், அக்பர்தீன் ஒவைசியாகட்டும் யார் பேசினாலும் கண்டனத்துக்குரியதுதான் இதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் ஒவேசியையும் மட்டும் கைது செய்துவிட்டு, தொகாடியாவை ஒன்றும் செய்யாமல் விட்டதுதான் கொஞ்சம் நெருடுகிறது.

Gnana Sekar said...

சரியான சட்டை அடி