Pages

Sunday, September 28, 2014

”ஜெ”--வழக்கு---தண்டனை---நீதிபதி

அப்பாடா--கடைசியாக “ஜெ”  வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது..18 ஆண்டுகாலங்கள் நடந்த வழக்கு..12 ஆண்டு காலத்தை “ ஒரு மாமாங்கம்” என்பார்கள்..அப்படியானால், ஒண்ணரை மாமாங்கம் நடந்த வழக்கு..இதை எதற்கு சொல்கிறீர்கள் என்கிரீர்களா?

லாலு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சௌவுதாலா, செல்வகணபதி இவர்களெல்லாம் “உள்ளே” போகவில்லையா?--”ஜெ” உள்ளே  போனதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா?

பல புதுமைகளின் புகலிடம் இந்த வழக்கு..பல தீர்ப்புகளின் “தெளிரல்” இந்த வழக்கு.

1996 இல் தொடங்கிய வழக்கு...நூற்றுக்கணக்கான “வாய்தாக்கள்”---அதே அளவு அப்பீல்கள்---உயர்நீதி மன்றம் உச்சம்---உச்சநீதி மன்றம் மிச்சம்---என் அப்பீல்கள அளவு கடந்தன..

குற்றப்பத்திரிக்கை பல ஆயிரம் பக்கங்கள்..ஆங்கிலத்தில்...மொழி தெரியாது என தமிழில் மாற்றச்சொல்லி பலகாலம் இழுத்தடிப்பு...செய்த மொழிமாற்ரம் தவறு என இன்னும் கொஞ்சம் காலம் மேலும் இழுத்தடிப்பு..

நேரடி “ஆஜருக்கு” வரமுடியாது-- என பல ஆயிரம் பெட்டிஷன்கள்..செப்டம்பர் 20ந்தேதி தீர்ப்பை தள்ளிவையுங்கள் என “கடைசி “ வாய்தா...தீர்ப்புதேதியை 27 க்கு மாற்றிய பிறகும் உச்சநீதி மன்றத்தில் 27 ந்தேதி தீர்ப்பை நிறுத்தி வைக்க பெட்டிஷன்..

“ஜெ” மந்திரிகளை நம்புவதில்லை --”ம்ந்திரங்களை “ நம்புவார்..கோர்ட்டின் மீது இருந்த அவநம்பிக்கையால், 250 மாந்திரீகர்ளுடன் நள்ளிரவு யாகம்...,வீடிந்ததும் பெங்களூர் புறப்பட்டார்.என செய்திகள்..

இதற்கிடையே வக்கீல்கள் மாற்றம்.--.நீதிபதிகள் தூக்கியடிப்பு,-- என்ற நாடகங்கள்..தற்போதைய நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவும் இந்த அழுத்தங்களுக்கு தப்பவில்லை.”.27 ந்தேதியை நான் மாற்ற மாட்டேன்..வேண்டுமென்றல் நீங்கள் என்னை மாற்றிக்கொள்ளுங்கள்.”--.என்றா
ர், குன்ஹா.
தீர்ப்பு விவரங்கள் “கசிந்து விடக்கூடாது” என்பதால், தானே கைப்பட எழுதினார்..தானே தட்டச்சு செய்தார்..காலை 8 மணிக்கு அலுவலகம் வந்து மாலை 6 மணிக்கே வீடு திரும்புவார்..

தீர்ப்பு நாளில் கூட பல “சஸ்பென்ஸ்” 11 மணிக்கு தீர்ப்பு--அது 1.00 மணியானது..பிறகு 3. மணியானது..ஆனாலும், நமக்கு தெரிய 5.00 மணியானது..

யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு..சாதா--ரணமாக--த்தான் இருக்கும் என “ஜெ” உட்பட அனைவரும் நினைத்த தீர்ப்பு..”ஜெ” யின் ஆஸ்தான தமிழக “நுண்ணரிவு” போலிஸ் --மோப்ப சக்தி இழந்த -துப்பறியும் நாயானது.--

பகல் ஒரு மணிக்கு “குற்றவாளி” என்ற தீர்ப்பு--மாலை 5.மணிக்கே 4 வருட சிறைத்  தண்டனை--100 கோடி ரூபாய் அபராதம் என்கிற விஷயங்கள் வெளியிடப்பட்டன..6..மணிக்கே பக்கத்தில் இருந்த பரப்பனங்காடு அக்ரஹார சிறையில் ”ஜெ” அண்ட் கோ--அடைக்கப்பட்டனர்.... ஜெ யின்  மருத்துவ சிகிச்சை கோரிக்கைக்கு வெளி மருத்துவ மனைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு--என பலபுதுமைகள்..

66.6 கோடிரூபாய் ஊழலுக்கு இந்திய நீதிமன்றங்கள் கண்டிராத ரூ.100 கோடி அபராதம்..இதில் நீதிபதியின் கணக்கும் உள்ளது..66.6 கோடி ரூபாய்க்கு. 18 ஆண்டுகால “சாதா” வட்டி போட்டாலும், அது 350 கோடியை தாண்டுகிறது .. எனவே 100 கோடி ‘நியாயப்படி” குறைவுதான்..இதிலும் கர்நாடக அரசுக்கு இந்த வழக்கினால் ரு. 5. கோடி செலவு ஏற்பட்டதால், அதை கர்னாடக அரசு எடுத்துக்கொள்ளவும் --என உத்தரவு வழங்கிய நிதிபதி.. புதுமை--புதுமை--புதுமையோ புதுமைகள் என பல புதுமைகளை அரங்கேற்றியுள்ளார்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இப்படி ஒரு தெம்பு, தைரியம், ஒரு நீதிபதிக்கு எப்படி வந்தது?--நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் செயலுக்கு முக்கிய காரணம் “நீதியையும் நீதிமன்றங்களையும் விலைக்கு வாங்கமுடியாது” என்ற உறுதி கொண்ட மாமனிதர் மோடியின் அரசின் செயல்பாடுதான் காரணம்..

இதே மதிரி எத்தனையோ தீர்ப்புக்கள் கடந்த காலங்களில்  எழுதப்பட்டிருக்கின்றன ..அவைகள் ஆட்சியாளர்களின் “நெருக்குதல்களால்” திருத்தப்பட்டிருக்கின்றன.....
நீதித்துறையில் அரசியல் குருக்கீடுகள் இருக்காது என்கிற பாஜக அரசின் உறுதி மொழி காப்பற்றபட்டிருக்கிறது..அதன் விளைவே இத்தகைய தீர்ப்புக்கள்..
சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் நேரில் வந்து பார்த்ததில் நம்பிக்கையுடன் இருந்த “ஜெ”--”மந்திரி வந்தாலும்--மந்திரம் செய்தாலும்”--நீதியின் ஆட்சியை” யாராலும் தடுக்க முடியாது என்ற பாஜக வின் நேர்மைக்கு இது ஒரு சாட்சி..

நீதியை நிலைநாட்டிய நீதிபதி டிகுன்ஹாவுக்கு மீண்டும் ஒரு சபாஷ்--நிதிமன்றங்களில் குறுக்கீடு செய்யமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தொடர்ந்து காப்பாற்றிவரும் மோடி அரசுக்கு ஒரு சபாஷ்..

இனி என் கவலையெல்லாம் அதிக நம்பிக்கையில் இருந்த ஆ.ராசா--கனிமொழி--தயாநிதி,கலநி
தி மாறன்களின் நிலையை நினத்துத்துதான்..66.கோடிக்கே 4 வருஷம் என்றால், 176000 கோடிக்கு எத்தனை வருஷம்..சொன்னாலே தலை சுத்துதே....

Friday, September 26, 2014

பிலாவலின் பேச்சு--மிரட்டலா?--"சும்மாவா?"அரசியலில் அம்மாவும் பாட்டியும் கொள்ளு தாத்தாவும் பதவி சுகம் கண்டார்கள் என்பதால் பேரனும் “பவிஷாக பதவியை” அனுபவிக்க போட்டி போடுவது இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தனிலும் உள்ளது. 

தாத்தா ஜீல்பிகர் அலி பூட்டோ, யாஹயாகானுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரை பிரிக்க முயற்ச்சி செய்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த கிழக்கு வங்கத்தை (வங்காள தேசம்)  1971-ல் இழந்தார்கள்.

அம்மா பெனசீர் பூட்டோவும், அப்பா சர்தாரியும், பதவி அனுபவித்த்தோடு முடித்துக் கொண்டார்கள். சண்டை போட அவர்களுக்கு நேரமில்லை! ஆம்! அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை!

இன்னிலையில் தான் பெனசீர் பூட்டோ-சர்தாரி தம்பதியரின் அன்பு மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான “பிலாவல் பூட்டோ” என்கிற 24 வயது “வாரிசு ” இந்தியாவிற்கு எச்சரிக்கை விட்டிருக்கிறது !

ஆம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் “முல்த்தான்” பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய “பிலாவல்” “காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலத்தையும்” இந்தியாவிடம் இருந்து மீட்பேன் என வீராவேசமாக பேசியுள்ளார்.

பிலாவின் இந்த பேச்சுக்கு இரண்டு காரணம் உள்ளது. (1) அவர் பேசிய “முல்த்தான்” - தாலிபன்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி! அங்கு ஆவேச பேச்சுக்களே எடுபடும் (2) நவாஸ் செரீப்பின் கட்சிக்கு மாற்றாக இப்போது இம்ரான்கானின்  கட்சியே வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறை தேர்தலில் PPP மரண அடி வாங்கியுள்ளது. எனவே கட்சியை தூக்கி நிறுத்த ஒரு அசத்தலான, ஆர்ப்பாட்டமான புல்லரிக்கும் பேச்சு தேவைப்பட்டது. அதன் விளைவே இந்த ஆக்ரோஷம்!

இரண்டாவது பாகிஸ்தானில், இந்தியாவை பற்றி 14 சதவீதம் மக்களே நடு நிலை கருத்துக்களை  கொண்டுள்ளனர். 53 சத மக்கள்  இந்திய எதிர்ப்பு கொள்கையே கொண்டவராக உள்ளனர். பாக் ராணுவமும் ISI-யும் தாலிபான்களும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், எவ்வளவு மெஜாரிட்டியுடன் வந்தாலும், பாகிஸ்தானில் ராணுவம் வைத்தது தான் சட்டம் இதை மீற பாக், கோர்ட், பார்லிமெண்ட் மற்றும் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. பிலாவலின் தாத்தா பூட்டோவை தூக்கில் போட்டவர், நவாப் ஷெரிப்பை   பர்வேஷ் முஷ்ரப்...ன்கிற  ராணுவ தளபதி நாடு கடத்தினார்.

இப்படி உள்ள நாட்டில், இந்திய எதிர்ப்பு கருத்தை பேசினாலேயே “பிழைக்க முடியும்” என்று பிலாவல் கருதியதால் வந்த விளைவு தான் காஷ்மீர் பேச்சு.

அது மட்டுமல்ல காஷ்மீரை துண்டாட வேண்டும் என்கிற, காஷ்மீருக்குள் உள்ள யாசின் மாலிக், கிலாணி போன்ற தேச விரோத சக்திகள், பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பில்  உள்ளது. காந்தஹார் விமானகடத்தல், மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த ரசூல் மசூத்தை பாகிஸ்தனில் அடிக்கடி இவர்கள் சந்திக்கின்ற்னர். மும்பை குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அஜ்மல் கசாப்பின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியில் பாகிஸ்தானில் யாசின் மாலிக் கலந்து கொண்டார்.

இது மாதிரி இந்தியாவை “சீண்டும்” பல விஷயங்களை இந்த தீவிரவாதிகள் செய்து வருகின்றனர். பிலாவலின் இந்த “காஷ்மீரை கைபற்றும்” பேச்சு தனி காஷ்மீர் கேட்கும் பிரிவினைவாதிகளுக்கு ஒரு டானிக் தான் இதனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக “மார் தட்ட முடியும்”

இந்த இரண்டு கருத்து தவிர மூன்றாவது ஒரு கருத்தும் பரவலாக பேசப்படுகிறது!

பிலாவலுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையது அவர் ஒரு “பிளே பாய்” அதனால்தான் தன்னை விட 20 வயது மூத்த மூன்று குழந்தைகளுக்கு தாயான முன்னாள் வெளியுறவு மந்திரி திருமதி  ரப்பானியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்பது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

புதிய அரசு தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சத்தில் அதிகமாக துபாயிலும், லண்டனிலும் வசித்து வருகிறார் பிலாவல்.

பிலாவல் பாகிஸ்தானின் “ராகுல் காந்தி” --எந்த ”கமிட் மொண்டும்;” கிடையாது --ராகுலின் கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா  பிரதம மந்திரியாக இருந்தது போல, பிலாவலின் தாத்தா, அம்மா, அப்பா, பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்துள்ளனர் வருகின்ற 2017 தேர்தலில் போட்டி பிரதமர் ஆவேன் என்கிறார்.பிலாவல் பூட்டோ 

இப்படி பட்ட பாரம்பரியத்தில் வந்த பிலாவனின் பேச்சை சாதாரண பேச்சு என்று “ஒதுக்கித்தள்ள முடியாது”

சரி! "காஷ்மீரின்  ஒரு அங்குலத்தை கூட விட்டுத்தர மாட்டேன்"-- என்று சொல்லும் பிலாவலின் “ஸ்டேட்மொண்ட்” எவ்வளவு வீரியம்  இருக்கிறது? காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தமா? காஷ்மீர் பிரிவினைவாதிகள் தவிர நடுலை காஷ்மீர் மக்கள் என்ன விரும்புகிறார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்!

முதலில் ஒரு சிறிய “பிளாஷ் பேக்”கிற்கு போவோம்! தொடர்ந்து எத்தனையோ “கருத்தரங்களிலும் களிலும் பல்வேறு புத்தக்ங்களிலும், " காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி "--என்றாலும் மீண்டும் இதை  மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதற்கு சுருக்கமாக மூன்றே மூன்று ‘பாயிண்டுகள் மட்டும்” வைக்கிறேன்.

1. 1947 - ல் இந்திய - பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது, இந்த இரண்டு நாடுகளிடமும் சேராமல் தனியாக “ஒதுங்கி நின்றது” காஷ்மீர் --பாகிஸ்தான் நேரடியாகவும், பழங்குடியினரை தூண்டிவிட்டும்  , காஷ்மீரை கொள்ளையடிக்க வைத்தும் --- மறைமுகமாகவும்-- காஷ்மீர் மீது படையெடுத்தது.

ராஜா ஹரிசிங், பிரதமர் நேருவுக்கு ஓலை அனுப்பி, ”இந்தியாவுடன் இணைவதாக” கையொப்பமிட்டு உறுதி மொழி பத்திரம் அனுப்பினார்-- இது சாட்சி ஒன்று

கலகம் ஓய்ந்த பிறகு  “வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைக்கு பதிலாக காஷ்மீருக்கு “சிறப்பு அந்தஸ்த்து Article 370 மூலம் கொடுக்கப்பட்டு ஷேக் அப்துல்லா பிரதமரானார் எனவே “வாக்கெடுப்பு மறக்கப்பட்டது---” Article 370ன் ஒரு அம்சமே ARTICLE 1 ன்   பகுதியான “இந்திய யூனியனின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கு” என்று தான் தொடங்குகிறது. எனவே காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான் இது சாட்சி 2.

1952 முதல் 2014 வரை சட்ட சபை /பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் மக்கள் பெருமளவில் கலந்து வாக்களித்ததன் மூலம் அங்கு “வாக்கெடுப்பு” வேண்டாம் என்பதும் , காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான் என்பதும்  புலனாகிறது.

ஆக இந்தியவிற்குள், இந்திய மண்ணை தின்று பொன்னை அணிந்துவரும், சில தேச விரோதிகள், காஷ்மீர் பிரிவனைவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக பேசும் எந்த பேச்சுக்கும் துரும்பளவு கூட ஆதாரமில்லை என்பதை உணர வேண்டும்.

இதற்கெல்லாம் முன்பாகவே, சட்டமேதை, அம்பேத்கர்  ARTICLE 370-ஐ எதிர்த்தார் அவரோடு சேர்ந்து அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் ”மெனலானா ஹஸ்ரத் மொகானியும்” எதிர்த்தனர். ஜனசங்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதற்கெல்லாம் மேலாக, புதிய பிரதமர் 370 காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.!
காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்படவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. சமூக நீதியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்!


காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் சகோதரி, காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட்டை திருமணம் செய்து கொண்டதால் தனது சொத்துரிமையை இழந்தார்! 

ஆக திருமணமாகி வெளி மாநிலத்திற்கு செல்லும் பெண்கள் சொத்துரிமை இழக்கிறார்கள். இதற்கு “பெண்ணுரிமைவாதிகள்” என்ன தீர்வு சொல்லப்போகிறர்கள்!

டெல்லி" நிர்பயா" “பாலியல் கொலைக்கு பிறகு “பாலியல் வன் கொடுமை சட்டம் ” திருத்தப்பட்டுள்ளது. இது காஷ்மீரத்தில் செல்லுபடி  ஆகாது. இதனால் “ரேப்” கேசில் குற்றம் புரிந்த காஷ்மீர் மந்திரி ஒருவர் மீது வழக்கு தொடர முடியவில்லை! இதற்கு சமூக சிந்தனையாளர்கள் என்ன கூறப் போகிறார்கள்.

ஆக காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று ஆன பின்பும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்புகிறார்க்ளே! அவர்களை எந்த சட்டத்தில் தண்டிப்பது ?

இவ்வளவும் 370 ஐ நீக்கச் சொல்பவர்கள் உண்மையிலேயே காஷ்மீர் மக்களுக்கு நன்மை செய்பவர்கள் தானா?

பிலாவல் பூட்டோவின் “சிறுபிள்ளைத்தனமான” காஷ்மீர் பற்றிய பேச்சு “பெரிய மனிதத்தனமாக” நாம்  காஷ்மீரைப் பற்றி விரிவாக சிந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தது என்பது கெட்ட விஷயத்தி லும் ஒரு நல்ல செய்தியாகும்.

Sunday, September 21, 2014

இந்தியத்துவாவும்---இந்துத்துவாவும் ஒன்றுதான்--தி.இந்து தமிழ் நாளிதழில் பீட்டர் அல்போன்ஸ் கட்டுரைக்கு பதில்

இன்றைய 21.9.தி.இந்து தமிழ் நாளிதழில் காங்கிரஸ் முன்னாள் எம்பி.யும், எனது இனிய நண்பருமான திரு பீட்டர் அல்போன்ஸ் “இந்தியத்துவாவும், இந்துத்துவாவும் வேறு வேறு..” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்..
திரு பீட்டர் அவர்களுக்கு அவர் வணங்கும் ஏசுபிரான் ஒரு அபார ஆற்றலை. தந்துள்ளார்..அலங்கரமான வார்த்தைகளை வைத்து ஒரு இறந்துபோன பொருளுக்கு உயிர் கொடுக்க முயலுவார்..பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டும் நபர் போல , ஒத்தை வெடி வெடித்து அதை அணுகுண்டு சத்தம் என்று சொல்லி ஆர்ப்பரிப்பார்..
அப்படித்தான் இக்கட்டுரையும் உள்ளது.முதலில் “லவ் ஜிஹாத்” இருக்கிறதா?--இல்லையா? என்பதற்கும், அதைபற்றி யார் என்ன சொன்னார் என்பதற்கும்  பீட்டருக்கு பதில் சொல்வது “தூங்குவது மாதிரி நடிப்பவனை..எழுப்பும்” முயற்சியாகும்..அதனால் பதில் சொல்லப்போவதில்லை..
“லவ்ஜிஹாத்” வைத்து அரசியல் செய்வது பீட்டரின் கட்சியும்  அவரின் கூட்டணியும்தான்...”லவ்ஜிஹாத்” என்று ஒன்று நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள்,.யோகி ஆதித்யநாத் மற்றும் சாஷி மஹாராஜை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?--ஒருவேளை அவர்களின் பிரச்சாரம் பீட்டர் அவர்களின் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று நினைத்தால், உஇ.பி.யில் காங்கிரஸ் கட்சியே இல்லையே..
அகிலேஷ் யாதவின் ஆட்சி பற்றிய நல்ல அபிப்ராயமும் அண்ணன் பீட்டருக்கு இல்லை..இப்படி “இல்லாத விஷயங்கள்”.ஏராளமாக இருக்கும்போது, பீட்டரின் கூற்றுப்படி இல்லாத “லவ்ஜிஹாத்” பற்றி பீட்டர் ஏன் கவலைப்படுகிறார் என்பதுதான் புரியவில்லை..
மாநில இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய ஆட்சிக்கு எப்படி “எடைபோடும் “ அம்சமாகும் என்பது புரியவில்லை..அதுவும் உ.பி.யை ஆளும் சமாஜ்வாடி கட்சி, ஊழலிலும், தேர்தல் தில்லு முல்லுகளிலும், தமிழக “கழகங்களுக்கு” கொஞ்சம்கூட குறைந்ததில்லை” என்பதை நாடறியும்..இந்த முடிவுகளை வைத்து மோடி ஆட்சியை எடைபோடச்சொல்லும் பீட்டரின் நடுநிலை எடைதான்  குறைந்துள்ளது..
110 நாள் மோடியின் ஆட்சியின் “செயல் திறனில்” குறைகாண முடியாதவர்களும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ச்சிக்குறியீடு எண் 5.7ஆக உயர்ந்தும், பணவீக்கம் 3.7 ஆக குறைந்தும், இருப்பதால் ஏற்பட்ட “மன உளைச்சல்--மற்றும் மன அழுத்தம்” காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை சொல்லி தங்களுக்கு தாங்களே ஆறுதல் அடைந்து கொள்கிறது.
இடிவிழுந்தபோதும், இழவு விழுந்தபோதும் பேசாமல் இருந்துவிட்டு, ஊழல் குற்றச்சாட்டில் ஆ.ராசாவை காப்பாற்ற வாய்திறக்கும், “பேசாமடந்தை” மன்மோகன் சிங் போலல்லாது, பேச வேண்டிய நேரத்தில் மோடி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்...அண்ணன் பீட்டர் நினைக்குபோதெல்லாம் எப்படி மோடி  பேச முடியும்?
கலாச்சார ரீதியில் இந்நாடு ஒரேநாடு என்றால், நீங்கள் எங்கள் மதத்தில் கைவைக்கிறீர்கள் என்கிறார்கள்.இந்து என்பது மதமல்ல--அது கலாச்சாரம்--வாழ்க்கைமுறை,,இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் எம்மதமானாலும், தங்களது தினசரி வாழ்வில்..அதை கடை பிடித்து வருகிறார்கள்..என்று சொன்னல் அது மதவாதம் என்கிறார்கள்..
பீட்டர் அவர்கள் அவர் சொல்லும் “இந்தியத்துவாவை” ஏற்றுக்கொண்டாலே போதும்.. அண்ணன் என்றாலும் மூத்த சகோதரன் என்றாலும் ஒன்றுதான்..இந்துத்துவாவும், இந்தியத்துவாவும் ஒன்றுதான்.
இனி தன்னை அண்ணன் என்று பீட்டர் அவர்களை அழைப்பதை  விரும்பாவிட்டால், மூதத சகோதரன் என்று அழைக்கிறேன்..என்ன சரிதானே..

” ஜெ” யின் உள்ளாட்சி இடைத்தேர்தல் தகிடுதத்தங்கள்தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதின ஆரம்பமே ஒரு குழப்பம் தான். ஆகஸ்டு 6 ஒரு முறையும் ஆகஸ்டு 28 ஒரு முறையும் அறிவிக்கப்பட்டது ஆனால், இரண்டிலும் செப்டம்பர் 18-தான் தேர்தல்.

கடந்த 15 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், கூட்டுறவு சங்க தேர்தல்களிலும், ஆளுங்கட்சியே தன் அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி மாநில தேர்தல் கமிஷனை "டம்மியாக்கி " வெற்றி பெற்று வந்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்தது அ.தி.மு.க... தொடர்ந்தது திமுக
 .
இதில் பங்கு பெற்ற இரண்டு கழகங்களும், எதிர் கட்சியாக இருக்கும் போது "நிற்காமல் ஒதுங்கிக் கொள்ளும்" அளவு ஆளும் கழகம் "உக்கிரமாக" நடந்து வந்துள்ளது* இம்முறையும் ஆளும் அ.தி.மு.க தன் முழு வலிமையை காட்டியது.

எப்போதும் போல, எல்லாக்கட்சிகளும், தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட பெருங்கட்சிகள், உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்வுடன் ஒதுங்கிக் கொண்டன. தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துவிட்டன. இந்நிலையில் "முடிவு எதுவும் அறிவிக்காமல் இருந்த" பாஜக தன் மௌனம் கலைத்து "ஜனநாயகத்தை காப்பாற்ற " தேர்தலில் போட்டி இடப்போவதாக அறிவித்தது.

அதுவரை "சந்தோஷமாக" இருந்த அதிமுக லேசாக "உதர" ஆரம்பித்தது... கண்ணுக்கெட்டிய தூரம் வரை "எதிரிகளையே காணவில்லை" என கொக்கரித்த "ஜெயலலிதா"பாஜக விலகிக் கொள்ளும் என்றுதான் நினைத்தது.

டெல்லியிலுள்ள பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் சென்னை வரும் போது "அம்மாவை" பார்த்துவிட்டு போவதால், "தான் கேட்காமலே" பாஜக போட்டியிடாது" என்கிற முடிவுக்கு "ஜெ" வந்திருக்கலாம்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் தான் பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். "Prevention is better than cure" என்பது ஒரு மருத்துவப் பழமொழி. போட்டியிட அனுமதித்து பாஜகவிடம் தோற்றுப் போவதை விட, பாஜக வேட்பாளர்களை போட்டியிட அனுமதிக்காமல் செய்து விட்டால் ஆரம்பத்திலேயே வெற்றி உறுதியாகிவிடும் என்று அதிமுக கணக்குப் போட்டது.

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் அதை "நிராகரிப்பது" வேட்பாளர்களை கடத்திச் சென்று "காசு கொடுத்து" விலகல் கடிதம் பெறுவது மிரட்டி அடிபணிய வைப்பது, போன்ற திமுகவும், அதிமுகவும் உருவாக்கிய "புதிய அரசியல் ஜனநாயக நெறிமுறைகளைத் தவிர" இது வரை இவர்களே நினைத்திராத புதிய "யுக்தி" ஒன்றை ஆளும் அதிமுக புதுக்கோட்டை நகராட்சி தலைவருக்கான தேர்தலில் அரங்கேற்றியது.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் காலை 10.00 மணிக்கு பாஜக வேட்பாளர் பழ. செல்வம் "வேட்புமனு" வாங்க சென்ற போது அங்கு ஆயிரம் பேர் ஏற்கனவே "வேட்புமனு" பெற வரிசையில் நின்று கொண்டிருந்த அதிசயம், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நேரமாக மாலை 3.00 மணி வரை அந்த வரிசை "நகராமலே நின்று கொண்டிருந்த" வேடிக்கை, எல்லா வகையிலும் முட்டி முட்டி முடிந்தவரை எட்டி குதித்த வேட்பாளர் பழ. செல்வத்தை உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்ட ஆளுங்கட்சியினர், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த போலீசும், தேர்தல் அதிகாரிகளும் என ஒரு புதுக்கோட்டை பார்முலாவை அதிமுக இம்முறை அறிமுகப்படுத்தியது.

தேனி நகராட்சி வார்டு உறுப்பினர்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், நகராட்சி கடை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் அதை காலி செய்யச் சொல்லி அவரை மிரட்டியும் வேட்பு மனுவை நிராகரித்த கொடுமைகள் என புதிய புதிய அராஜக பார்முலாக்களை அதிமுக அறிமுகப்படுத்தியது.

தெலுங்கு சினிமா போல அரங்கேறிய இன்னொரு கதைதான் குன்னூர் நகராட்சி சேர்மன் பாஜக வேட்பாளரின் மனு நிராகரிப்பு "அபிடவிட்" என்பது இதுவரை "நோட்டரி பப்ளிக்" இடம் பெற்று சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இம்முறை மாநில தேர்தல் கமிஷனை "அபிடவிட்டுகளை" வழங்கியது அதில் தலைப்பு "அபிடவிட்" என்று இருக்கும். உள்ளே ஒரு இடத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு "LOCAL BODY" என்றும் நகராட்சி தேர்தலுக்கு "MUNICIPALITY" என்றும் எழுதியிருக்கும்.

இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றே நகராட்சி அபிடவிட்டுகளையும், நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றே உள்ளாட்சி அபிடவிட்டுகளையும் மாற்றி தந்து வேட்பு மனு செய்யும் வரை காத்திருந்து நிராகரித்திருக்கிறார்கள். இது மிகமிக சிறிய ஒரு "டெக்னிகல்" Error இப்படி சிறு குறுந்தவறுகளை செய்ய விட்டு "நிராகரிப்புகளை" செய்து அதிகாரிகள் தங்கள் ஆளும் கட்சி விசுவாசத்தை காண்பித்திருக்கிறார்கள்.

ஆக சர்க்காரியா கமிஷன் கூறியது போல திமுக விஞ்ஞான ரிதியாக ஊழல் செய்தது. அதிமுக "டெக்னிகல் ரிதியாக" வேட்புமனுக்களை நிராகரிக்கும் உத்திகளை கையாண்டது இத்தேர்தலில் புதிய அம்சமாகும்.

இப்படி ஒரு வழியாக பல பாஜக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்த பின்பு ஏற்பட்ட மக்களின் அதிருப்தி ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்தது. இதன் முத்தாய்ப்பாக, தோற்றுவிடலாம் என்ற அச்சத்தால் நெல்லை மாநகராட்சி பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் கடத்தப்பட்டு விலை பேசப்பட்டு வாபஸ் வாங்க வைக்கப்பட்டார். இது மக்கள் மத்தியில் அதிமுக மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியது கோவையில் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் பேச்சில் இது வெளிப்பட்டது.

"உட்கட்சி பூசலால் வெள்ளையம்மாள் வாபஸ் வாங்கிக் கொண்டார்" என புதிய அஸ்திரத்தை "ஜெ" ஏவினார். வாபஸ் வாங்க வைக்கப்பட்டதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை இல்லாத உட்கட்சி பூசல் திடீரென எங்கிருந்து முளைத்தது என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள் இதுவரை எந்தகட்சியும் நடத்திராக, அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் ஆளும்கட்சியையும், தேர்தல் கமிஷனையும் கண்களில் விரல் விட்டு ஆட்டிய  விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு புது நம்பிக்கை கொடுத்தது. அதிமுக இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவும் "மோடி அவர்களை ஆதரித்த போது" தமிழகம் மட்டும் தனித்து விடப்பட்டது போல 'ஜெ' வை ஆதரித்து பெரும் ஆச்சரியமாக இருந்தது. மின்வெட்டு சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, இந்து இயக்க தலைவர் கொல்லப்படுவது தொடர்ந்தது, குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது, ஊழல் என மக்கள் அதிருப்தியில் "ஊதிப் பெருத்திருந்த" அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
அந்தகேள்விக்கு உள்ளாட்சி இடைத்தேர்தலில் விடை தெரிந்துவிட்டது.
.
 கோவையில் 16 அமைச்சர்கள் 3 எம்.பிக்கள், 12 எம்.எல்.ஏக்கள், 22 மாவட்ட செயலாளர்கள் முகாமிட்டு வீடு வீடாக பணப்பட்டுவாடா உள்ளுர் கவுன்சிலர், எம்.எல்.ஏக்கள் போய் மக்களை சந்தித்தால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தால் வெளியூரிலிருந்த "ஆட்கள்" வரவழைக்கப்பட்னர்". 50 வாக்காளர்களுக்கு ஒரு மாவட்ட நிர்வாகி என பிரிக்கப்பட்டு 35 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டது. இதேபோல் தான் பார்லிமெண்ட் தேர்தலும் நடந்தது.

முன்பெல்லாம், வீடு வீடாக, பதுங்கிப் பதுங்கி திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் தான் இந்த பண பட்டுவாடா நடக்கும். "டோக்கன்" கொடுப்பார்கள். அதை கொண்டு சென்று "குறிப்பிட்ட இடத்தில்" கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். இந்த இடைத் தேர்தலில் நட்டநடு ரோட்டில், பட்டப்பகலில், வெளிப்படையாக பண வினியோகம் செய்தார்கள் ஆளும் கட்சியினர்.

கோவையில் பாஜகவினர் பல இடங்களில் பணம் கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்து, போலீசிடமும், தேர்தல் ஆணைத்திடமும் ஒப்படைத்தும் எந்த வழக்குமில்லை, உடனடி விடுதலைதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

இதில் வேடிக்கை என்னவென்றால் "investigation Jurnalisam" செய்யும் தமிழக "கிசு கிசு" பத்திரிக்கைளும், 'டெகல்கா ஆபரேஷன் நடத்திய ஆங்கில பத்திரிக்கை, ஊடகங்களும், வாய்மூடி கைகட்டி "கப்சிப்" என இதை பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கெடுத்தாலும் கூக்குரல் எழுப்பும் "இடது சாரிகளும்" அவர்கள் அலுவலகத்தின் "வலது ஓரமாக" வாய்மூடி அமைதிகாத்தார்கள். பாஜக மட்டும் அராஜக போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்தது.

இந்த அராஜகங்களை பார்த்து வெறுத்துப் போன நல்லவர்கள் நடுநிலையாளர்கள், முணு முணுப்பதும் குற்றஞ்சாட்டுவதோடும் சரி, ஓட்டுப் போட வரவில்லை என்பதால் அதிமுக எப்போதும் போல "விலைக்கு வாங்கிய வாக்குகளையும்" அதிகாரிகளையும் பணிய வைத்து ஆளில்லாத போது போட்ட "சிறப்பு வாக்குகளையும்" பதிவு செய்தது.

தேர்தல் முடிவுகள் ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனாலும், எளிதாக வென்றுவிடலாம், எதிரிகளையே காணவில்லை என்று எக்காளமிட்ட ஆளும் கட்சியை தமிழக பாஜக "தண்ணி காண்பித்தது" என்பதுதான் இத்தேர்தலின் சிறப்பம்சம்.