Pages

Sunday, September 21, 2014

இந்தியத்துவாவும்---இந்துத்துவாவும் ஒன்றுதான்--தி.இந்து தமிழ் நாளிதழில் பீட்டர் அல்போன்ஸ் கட்டுரைக்கு பதில்

இன்றைய 21.9.தி.இந்து தமிழ் நாளிதழில் காங்கிரஸ் முன்னாள் எம்பி.யும், எனது இனிய நண்பருமான திரு பீட்டர் அல்போன்ஸ் “இந்தியத்துவாவும், இந்துத்துவாவும் வேறு வேறு..” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்..
திரு பீட்டர் அவர்களுக்கு அவர் வணங்கும் ஏசுபிரான் ஒரு அபார ஆற்றலை. தந்துள்ளார்..அலங்கரமான வார்த்தைகளை வைத்து ஒரு இறந்துபோன பொருளுக்கு உயிர் கொடுக்க முயலுவார்..பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டும் நபர் போல , ஒத்தை வெடி வெடித்து அதை அணுகுண்டு சத்தம் என்று சொல்லி ஆர்ப்பரிப்பார்..
அப்படித்தான் இக்கட்டுரையும் உள்ளது.முதலில் “லவ் ஜிஹாத்” இருக்கிறதா?--இல்லையா? என்பதற்கும், அதைபற்றி யார் என்ன சொன்னார் என்பதற்கும்  பீட்டருக்கு பதில் சொல்வது “தூங்குவது மாதிரி நடிப்பவனை..எழுப்பும்” முயற்சியாகும்..அதனால் பதில் சொல்லப்போவதில்லை..
“லவ்ஜிஹாத்” வைத்து அரசியல் செய்வது பீட்டரின் கட்சியும்  அவரின் கூட்டணியும்தான்...”லவ்ஜிஹாத்” என்று ஒன்று நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள்,.யோகி ஆதித்யநாத் மற்றும் சாஷி மஹாராஜை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?--ஒருவேளை அவர்களின் பிரச்சாரம் பீட்டர் அவர்களின் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று நினைத்தால், உஇ.பி.யில் காங்கிரஸ் கட்சியே இல்லையே..
அகிலேஷ் யாதவின் ஆட்சி பற்றிய நல்ல அபிப்ராயமும் அண்ணன் பீட்டருக்கு இல்லை..இப்படி “இல்லாத விஷயங்கள்”.ஏராளமாக இருக்கும்போது, பீட்டரின் கூற்றுப்படி இல்லாத “லவ்ஜிஹாத்” பற்றி பீட்டர் ஏன் கவலைப்படுகிறார் என்பதுதான் புரியவில்லை..
மாநில இடைத்தேர்தல் முடிவுகள் மத்திய ஆட்சிக்கு எப்படி “எடைபோடும் “ அம்சமாகும் என்பது புரியவில்லை..அதுவும் உ.பி.யை ஆளும் சமாஜ்வாடி கட்சி, ஊழலிலும், தேர்தல் தில்லு முல்லுகளிலும், தமிழக “கழகங்களுக்கு” கொஞ்சம்கூட குறைந்ததில்லை” என்பதை நாடறியும்..இந்த முடிவுகளை வைத்து மோடி ஆட்சியை எடைபோடச்சொல்லும் பீட்டரின் நடுநிலை எடைதான்  குறைந்துள்ளது..
110 நாள் மோடியின் ஆட்சியின் “செயல் திறனில்” குறைகாண முடியாதவர்களும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு வளர்ச்சிக்குறியீடு எண் 5.7ஆக உயர்ந்தும், பணவீக்கம் 3.7 ஆக குறைந்தும், இருப்பதால் ஏற்பட்ட “மன உளைச்சல்--மற்றும் மன அழுத்தம்” காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை சொல்லி தங்களுக்கு தாங்களே ஆறுதல் அடைந்து கொள்கிறது.
இடிவிழுந்தபோதும், இழவு விழுந்தபோதும் பேசாமல் இருந்துவிட்டு, ஊழல் குற்றச்சாட்டில் ஆ.ராசாவை காப்பாற்ற வாய்திறக்கும், “பேசாமடந்தை” மன்மோகன் சிங் போலல்லாது, பேச வேண்டிய நேரத்தில் மோடி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்...அண்ணன் பீட்டர் நினைக்குபோதெல்லாம் எப்படி மோடி  பேச முடியும்?
கலாச்சார ரீதியில் இந்நாடு ஒரேநாடு என்றால், நீங்கள் எங்கள் மதத்தில் கைவைக்கிறீர்கள் என்கிறார்கள்.இந்து என்பது மதமல்ல--அது கலாச்சாரம்--வாழ்க்கைமுறை,,இந்நாட்டு மக்கள் அனைவரும் அவர்கள் எம்மதமானாலும், தங்களது தினசரி வாழ்வில்..அதை கடை பிடித்து வருகிறார்கள்..என்று சொன்னல் அது மதவாதம் என்கிறார்கள்..
பீட்டர் அவர்கள் அவர் சொல்லும் “இந்தியத்துவாவை” ஏற்றுக்கொண்டாலே போதும்.. அண்ணன் என்றாலும் மூத்த சகோதரன் என்றாலும் ஒன்றுதான்..இந்துத்துவாவும், இந்தியத்துவாவும் ஒன்றுதான்.
இனி தன்னை அண்ணன் என்று பீட்டர் அவர்களை அழைப்பதை  விரும்பாவிட்டால், மூதத சகோதரன் என்று அழைக்கிறேன்..என்ன சரிதானே..

No comments: