Pages

Sunday, January 15, 2012

சோ--மாரியா?---சோ..மழையா?பா.ஜ.க.வின் மாபெரும் தலைவர்கள் இருவர் நேற்று “சோ’ வின் ஆண்டு விழாவில் சங்கமம்..இதன் பயன் “சோ’ வுக்கா?--தமிழகத்துக்கா?--பா.ஜ.க.விற்கா?
கடைசி இருவரும் அதிர்ஷ்ட கட்டைகள்.

“சோ’ ஒரு நடுநிலையாளர்..மனதில் பட்டதை தைரியமாக பேசுவார். உயர்ந்த தேசிய வாதி..இதுதான் பெரும்பாலான மக்களின் அனுமானம்.

தேர்தல் வரும் போதெல்லாம் தன் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிப்பார்..பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் எதிர் கருத்துக்களாகவே அவை இருக்கும்.

ஓட்டுப்போடும்போது அவரது “ரசிகர்கள் “ அவரது கருத்தை செவி மடுப்பார்களா?..என்பது ஒருபுறம் இருந்தாலும்..”சோ’ வின் ஆதரவு பெற்றவர் அரியணை ஏறுவதே இதுவரை அரங்கேறி வந்திருக்கிறது.இம்முறை அவர் ஆதரித்த “ஜெ” அரியணை ஏறியதும் நடந்தேறியிருக்கிறது.

“சோ” பிஜேபியின் ஆதரவாளர் என்பது.. அவரே முழுவதும் ஏற்காவிடினும்..அவரது “கிரிடிக்ஸ்” சொல்லும் விமர்சனம் ஆகும்.
பா.ஜ.க.தலைவர்களில் பெரும்பாலோர் அவர் தங்களது ஆதரவாளர் என நினைக்கும் நிலையும் உண்டு..

இம்முறை இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வண்ணம் “சோ” போற்றும் மோடியும்-- விரும்பும் அத்வானியும்-- அவர் விழாவில் கலந்து கொண்டுரிக்கிறார்கள்.

இதற்கு மேலும் இம்முறை “சனிப்பெயர்ச்சி “ அன்று..”சசிபெயர்ச்சியும் “ நடந்தது “சோ “ வினால் தானென்றும்..இல்லையெனென அவர் மறுத்ததையும் நாடுபார்த்தது.. நாமும் பார்த்தோம்...

“சோ” --”ஜெ”யின் விசுவாசியா?--”ஜெ”--”சோ” வின் விசுவாசியா?---என்று பட்டிமண்டபமே நடத்தலாம் என்னும் வண்னம் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

நான் ஏன் இவ்வளவு முன்னோட்டங்களை தருகிறேன் என்றால் --நேற்றைய விழாவில் “சோ” பேசிய ஒரு கருத்துதான்..

“ஜெ”யை பிரதமராக்க பா.ஜ.க.முன்வரவேண்டும் என்ற “சோ” வின் மையக்கருத்தே வரும் வாரம்--மாதத்தின்..தமிழக பத்திரிக்கைகளின்...அரசியல் விமர்சகர்களின்..வாய்க்கு “அவலாக” போகிறது.

பா.ஜ.க.--அதிமுக..கூட்டு முடிவாகிவிட்டது--என்று..-பா.ஜ. தொண்டன் சந்தோஷப்படபோகிறானா?--

பார்ப்பனீயம் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறது என்று “பெரியாரீயம்”..பொங்கி எழப்போகிறதா?

ஊழல் வாதிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று--- ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் ஒப்பாரி வைக்கப்போகிறதா?

பார்தீர்களா! மதவாதிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று கலைஞரும்---பா.ஜகவால் மெக்காவுக்கும்--ஜெ யால் ஜெருசலத்துக்கும் அரசின் செலவில் புனித யாத்திரை போவோர் புலம்பப்போகிறார்களா?

பா.ஜ.க.வால் ஆட்சி அமைக்க முடியாது..”சோ” ஆரூடம்--என மார்க்ஸீயம் மருதலிக்கப்போகிறதா?

இவ்வளவு கேள்விகள் கேட்கிறாயே--இத்தனையுமா நடக்கும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..”சோ” வின் கருத்துக்கு இத்தனை பேரும் ஒருசேர புலம்பப்போகிறார்கள் எனபதுதான் உண்மை.

பிரதமாராகும் கனவு--தேவே கவுடாவுக்கும்..ஐ.கே.குஜ்ரலுக்கும் இருந்தபோது---லாலுவுக்கும்..முலையாமுக்கும்...மாயவதிக்கும்...பிரகாஷ் கரத்துக்கும்.....இருக்கும் போது..”ஜெ’ யிக்கு இருக்கக்கூடாதா?

அந்த ஆசையை “ஜெ” பொதுக்குழுவில் தெரிவிப்பதும்..”ஜெ’..யின் விசுவாசிகள் விளம்பரங்களில் தெரிவிப்பதும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..

ஆனால் அரசியல் விமர்சகர் “சோ”..வாயில் இப்படி வந்தால்...அவருக்கு “விமர்சகர் “ பட்டம் போய்..வேறு ஏதாவது.. பட்டமல்லவா வந்து சேரும்..

“சோ” கருத்து மழை பொழியும் “மாரி”  எனத்தான் நாங்கள் நினைக்கிறோம்..
சென்னை தமிழின் “மாரி” என மற்றவர்கள்  நினைத்து விடுவார்களோ என அஞ்சுகிறோம்.


1 comment:

Anonymous said...

இந்த சோமாரிய பற்றி பேசி ஏன் உங்க டைம வேஸ்ட் பண்றீங்க. நீங்க நல்ல வழியில் போகும்போது இதுபோல நிறைய சொமாரிங்க, பேமானிங்க எல்லாம் வருவாங்க போவாங்க ஆனா அதையெல்லாம் கவனிச்சா, நீங்க போக வேண்டிய பாதை உங்களுக்கு தெரியாது. நல்லவரோட சேருங்க நல்லபடியா வாழுங்க - azifair-sirkali.blog