Pages

Friday, June 20, 2014

மோடியின் புது ராஜ்ஜியம்--4


சரியாக ஆரம்பிக்கபட்ட திட்டம் பாதி முடிந்ததற்கு சமம்”—இது மோடியின் மந்திரம்….அத்ற்கு  ஏற்ப----- மிகவும் அனுபவம் வாய்ந்த நிருபெந்திர மிஸ்ராவை கண்டு பிடித்து தனது முதன்மை செயலாளராகவும்,முன்னாள் உளவுத்துறை தலைவரும்ராணுவத்தில் விருது பெற்ற அதிகாரியுமான அஜித் தோவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்..

அதிகாரிகள் என்னை நேரில் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என்ற மோடியின் செய்தி பத்திரிக்கைகளால் பலவாறு விமர்சிக்க பட்டாலும், ”ஒன்று மந்திரியிடம் கைகட்டி நிற்கும் அதிகாரிஅல்லது அதிகாரியின் பிடியில் சிக்கி தவிக்கும் மந்திரி” என்ற நிலையை மாற்றி. “அதிகாரிகள் மக்களுக்காக செயல் பட வேண்டியவர்கள்” என்ற நிலையை உருவாக்கவே மோடி அதிகாரிகளை தன்னை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தார்..

இந்த சந்திப்புக்கு பிறகு மத்திய அரசின் தொழிற்கொள்கை செயலாளர் அமிதாப் காந்த் என்கிற அதிகாரி” பிரதமரிடம் தைரியமாக மனந்திறந்து என்னால் பேசமுடிந்தது” என வலைதளதில் டுவீட் செய்துள்ளார்..

மோடியின் நிர்வாக வெற்றியின் இன்னொரு ரகசியம்--அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற பயிற்சியை அரசு நிர்வாகத்தில் செயல் படுத்தியது..பண்பட்ட மனிதர்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸின் பயிற்சிகள்அரசு அதிகாரிகளின் திறமைகளை நல் பண்புகளை வெளிக்கொணர்வதற்கு மோடிக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

தன்னுடைய மந்திரிசபை சகாக்களுக்கும்அதிகாரிகளுக்கும் “சிந்தன் ஷிபிர்” என்ற 3 நாள் பண்பு பயிற்சி முகாமை ஆண்டு தோரும் மொடி நடத்தி வருகிறார்..அதில் தானும் கலந்து கொண்டு யோகாதியானம் போன்ற பயிறிசிகளில் தானும் ஈடுபடுகிறார்..

இதை ஒவ்வொரு துறைக்கும் அமுல்படுத்திய பின்பு மானிலம் முழுவதற்குமான 2.25 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும்,  “அரசு நிர்வாக மேலாண்மை பயிற்சி” மற்றும் அவரது உடல் மனம் ஒருங்கிணைப்பிற்கான “யோகா மற்றும் தியான பயிற்சிகளை நடத்தி வருகிறார்..இது ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெரும்..

ஆண்டு தோறும் ஆர்.எஸ்.எஸ்தனது ஊழியர்களுக்கு “தேச நிர்மாண பணிக்காக” 21 நாள் பயிற்சி முகாமை நாடு முழுதும் நடத்தி வருகிறது..இதில் பயிற்சி பெற்ற மோடி--இந்த பயனை தனது அரசு ஊழியர்களுக்கும் நீட்டித்ததன் விளைவே அவருக்கு சிறந்த நிர்வாகமும்நிர்வாகிகளும் கிடைத்தனர்,,

இப்போது சொல்லுங்கள் மோடியின் வெற்றிக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்ஸா?--அதிகாரிகளா?


ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற பயிற்சியால்-- அதிகாரிகளுக்கு கொடுத்த பயிற்சியால் , “செயல்வீரர்களாக “அதிகாரிகள் உயர்ந்ததால்மோடி வெற்றி பெற்றார்..வெற்றி பெற்று வருகிறார்..

Tuesday, June 17, 2014

மோடியின் புது ராஜ்ஜியம்--3

கல்வியில் முன்னேற்றம் காட்டிய முதன்மை செயலாளர் ஆனந்த் மோகன் திவாரி,டெல்லியில் குஜராத் அரசின் தலைமை செயலாளராக இருந்து இன்று பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளராக ஆகியுள்ள இந்திய வனத்துறை அதிகாரி பரத் லால்--மோடியின் நிழலாக அவர் செல்லும் இடமெல்லாம் செல்லும் அவர் நினைப்பதை எழுத்தாக மாற்றி பத்திரிக்கைகளுக்கு கொடுக்கும் 70 வயது ஜகதீஷ் தாக்கர்--இன்று அவர் பிரதமர் அலுவலக பொதுஜன தொடர்பு அதிகாரியாக நியமிக்கபட்டுள்ளார்,.. என ஒரு நீண்ட பட்டியலே மோடியின் வெற்றிப்பதையின் படிக்கல்களாக இருக்கின்றனர்..

இவர்களோடுகூட மோடியின் சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கின்ற இந்திய மேலாண்மை கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்ற 40 வயது இளைஞர் ஹிரேன் ஜோஷி, 25 ஆண்டுகாலமாக மோடியின் கூடேயே இருக்கும் ஆர்.எஸ்.எஸில் பயிற்சிபெற்ற உதவியாளர்கள் ஓபி.சிங்தன்மயி மேத்தாமற்றும் தினேஷ் தாக்கூர்என்ற யாராலும் விலக்கு வாங்கமுடியாத இந்தக்குழு மோடியுடன் டெல்லியில் பணிபுரிய துவங்கி விட்டது....

கடந்த ஆட்சியின் செயலற்ற தன்மையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று மோடியிடம் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள்..அதுவும் “உடனடி தீர்வுகள்”--”அடுக்கடுக்காக--கட்டுகட்டாக---வரிசையாக வரும்” என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்..குறுகிய காலத்திற்குள் “பெரிய பலனை” மக்கள் பெற வேண்டும்--அதுவும் அவர்கள் உணரும் வகையில் இருக்க வேண்டும் --என மோடியும் நினைக்கிறார்..

விலைவாசி உயர்வுபணவீக்கம்--இவைகளை உடனடியாக குறைத்தாக வேண்டும்..மேல்மட்ட ஊழலை அறவே ஒழித்தாக வேண்டும்..கீழ்மட்ட ஊழலை படிப்படியாக குறைக்கவேண்டும்..மொத்தத்தில் ஊழல் முற்றிலும் துவைத்து தூக்கியெரியப்பட வேண்டும்...இவை மோடியின் முதல் அஜண்டா..

பாகிஸ்தானுடன் நல்லுறவுகாஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுஇலங்கை தமிழர்களுக்கு சிங்களவர்களுக்கு சமமான உரிமைசீனாவுடன் நல்லுறவு , அஸ்ஸாம் , மேற்கு வங்கம் எல்லையில் வங்கதேசத்தவ்ர் ஊடுருவல்என்ற அண்டை நாடுகளுடன் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் இது இரண்டாம் அஜண்டா

இதற்கிடையில் வாழையடி வாழையாக முந்தைய அரசுகள் விட்டுச்சென்ற முல்லைபெரியார் பிரச்சினை--காவிரி நதி நீர் தாவா என்பன தீர்வுக்காக காத்திருக்கின்றன..

இவையெல்லாம் ஒரேநாளில் தீர்த்துவிடும் “பரலோகத்திலிருந்து தேவதூதனாக” மோடி வந்திருக்கிறார் என்ற எதிர் பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது..

இவையெல்லாம் தீர்க்க அரசு இயந்திரம் 100 கி.மீ வேகத்தில் இயங்கவேண்டும்..இன்றைக்கு இருக்கும்  “துருபிடித்த” அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு 25 கி,மீ வேகத்தில் கூட போக முடியாதே..

அதனால்தான்..முதலில் அரசு இயந்திரத்தை “பழுது நீக்கி” --மாற்ற வேண்டிய பாகங்களுக்கு “ஒரிஜினல் உதிரி பாகங்களை”-- போட்டு இயக்கும் முயற்சிதான் மோடியினுடைய அரசு அதிகாரிகள் “சந்திப்பு “ நிகழ்ச்சிகள்..

ஆரம்பமே அமர்க்களமான ஆரம்பம்தாந்-வாரணாசியில் “கங்கா ஆரத்தி” நிகழ்ச்சிபாராளுமன்றத்தில் நாட்டுமக்கள் நெஞ்சைத்தொட்ட “ பேச்சுஅரசின் ஆமை வேக “சிவப்பு நாடா” முறையை ஒழிக்க பலதுறைகளை இணைத்து புதிய அமைச்சகங்களை உருவாக்கியது, --”குரூப் ஆஃப் மினிஸ்டர்ஸ்” என்னும் 29 குழுக்களை கலைத்து அதிகாரத்தை பரவலாக்கியது--என்பவன ஒருசில..

மந்திரிகளுக்கு 100 நாள் செயல் திட்டத்தை ஒருவாக்க கட்டளை யிட்டது..சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் உதவியாளர்களாக வைத்துக்கொள்ளக்கூடாது என கட்டளையிட்டது அடுத்த கட்ட நடவடிக்கை
என்ற எடுத்தவுடன் முதல் கட்ட வெற்றிகள்—

தொடரும்----