Pages

Friday, June 20, 2014

மோடியின் புது ராஜ்ஜியம்--4


சரியாக ஆரம்பிக்கபட்ட திட்டம் பாதி முடிந்ததற்கு சமம்”—இது மோடியின் மந்திரம்….அத்ற்கு  ஏற்ப----- மிகவும் அனுபவம் வாய்ந்த நிருபெந்திர மிஸ்ராவை கண்டு பிடித்து தனது முதன்மை செயலாளராகவும்,முன்னாள் உளவுத்துறை தலைவரும்ராணுவத்தில் விருது பெற்ற அதிகாரியுமான அஜித் தோவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்ததில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்..

அதிகாரிகள் என்னை நேரில் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்” என்ற மோடியின் செய்தி பத்திரிக்கைகளால் பலவாறு விமர்சிக்க பட்டாலும், ”ஒன்று மந்திரியிடம் கைகட்டி நிற்கும் அதிகாரிஅல்லது அதிகாரியின் பிடியில் சிக்கி தவிக்கும் மந்திரி” என்ற நிலையை மாற்றி. “அதிகாரிகள் மக்களுக்காக செயல் பட வேண்டியவர்கள்” என்ற நிலையை உருவாக்கவே மோடி அதிகாரிகளை தன்னை நேரடியாக சந்திக்க அழைப்பு விடுத்தார்..

இந்த சந்திப்புக்கு பிறகு மத்திய அரசின் தொழிற்கொள்கை செயலாளர் அமிதாப் காந்த் என்கிற அதிகாரி” பிரதமரிடம் தைரியமாக மனந்திறந்து என்னால் பேசமுடிந்தது” என வலைதளதில் டுவீட் செய்துள்ளார்..

மோடியின் நிர்வாக வெற்றியின் இன்னொரு ரகசியம்--அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற பயிற்சியை அரசு நிர்வாகத்தில் செயல் படுத்தியது..பண்பட்ட மனிதர்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸின் பயிற்சிகள்அரசு அதிகாரிகளின் திறமைகளை நல் பண்புகளை வெளிக்கொணர்வதற்கு மோடிக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

தன்னுடைய மந்திரிசபை சகாக்களுக்கும்அதிகாரிகளுக்கும் “சிந்தன் ஷிபிர்” என்ற 3 நாள் பண்பு பயிற்சி முகாமை ஆண்டு தோரும் மொடி நடத்தி வருகிறார்..அதில் தானும் கலந்து கொண்டு யோகாதியானம் போன்ற பயிறிசிகளில் தானும் ஈடுபடுகிறார்..

இதை ஒவ்வொரு துறைக்கும் அமுல்படுத்திய பின்பு மானிலம் முழுவதற்குமான 2.25 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும்,  “அரசு நிர்வாக மேலாண்மை பயிற்சி” மற்றும் அவரது உடல் மனம் ஒருங்கிணைப்பிற்கான “யோகா மற்றும் தியான பயிற்சிகளை நடத்தி வருகிறார்..இது ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெரும்..

ஆண்டு தோறும் ஆர்.எஸ்.எஸ்தனது ஊழியர்களுக்கு “தேச நிர்மாண பணிக்காக” 21 நாள் பயிற்சி முகாமை நாடு முழுதும் நடத்தி வருகிறது..இதில் பயிற்சி பெற்ற மோடி--இந்த பயனை தனது அரசு ஊழியர்களுக்கும் நீட்டித்ததன் விளைவே அவருக்கு சிறந்த நிர்வாகமும்நிர்வாகிகளும் கிடைத்தனர்,,

இப்போது சொல்லுங்கள் மோடியின் வெற்றிக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்ஸா?--அதிகாரிகளா?


ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற பயிற்சியால்-- அதிகாரிகளுக்கு கொடுத்த பயிற்சியால் , “செயல்வீரர்களாக “அதிகாரிகள் உயர்ந்ததால்மோடி வெற்றி பெற்றார்..வெற்றி பெற்று வருகிறார்..

No comments: