Pages

Friday, August 22, 2014

"இந்தியா--இந்து நாடு”--மோகன் ஜி பகவத் சொன்னது சரியா?


இந்தியா இந்து நாடு…இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே..இஸ்லாம்—கிறிஸ்தவர்கள்..உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்…இதுதான் ஆர்.எஸ்ஸின் அகிலபாரத தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் பேசியதன் சுருக்கம்..

இதை மோகன் ஜி இப்போதுமட்டும் சொல்லவில்லை..இதற்குமுன் பலமுறை பேசியிருக்கிறர்..ஆர்.எஸ்ஸில் மோகன் ஜி மட்டுமல்ல –பல தலைவர்கள் இதே கருத்தை பல இடங்களில் பேசியிருக்கிறார்கள்…

“நான் பிறப்பால் இஸ்லாமியன்..கலாச்சாரத்தால்..இந்து..”—என்று முன்னாள் மத்திய கல்வி மந்திரியும், அறிஞருமான முகம்மது கரீம் சாக்ளா கூறியுள்ளார்..

கோவாவின் தற்போதைய துணை முதல்வர் “நான் பிறப்பால் கிறிஸ்தவன்..பண்பாட்டால்..இந்து” என கூறியுள்ளார்..

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் மந்திரி, ஆரியத்தான் முகம்மது..”நாம் (முஸ்லீம்கள்) இந்நாட்டில், மதம் மாற்றப்பட்டு இஸ்லாமியர்கள் ஆனவர்கள்..இங்குள்ள மசூதிகள் எல்லாம் முன்பு கோவிலாக இருந்தவைகள்..இந்துக்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்..அதனால்தான் நம் இங்கு வாழ முடிகிறது..””—நாம் பிறப்பால் முஸ்லீம்கள் ஆனலும் நமது கலாச்சாரம் “இந்துவே”—என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்..

1947 பிரிவினைக்கு முன் இந்தியா..பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது..பிரிவினைக்குப் பின், பாகிஸ்தான் என்னும் இஸ்லாமிய குடியரசாகவும், இந்தியா என்னும் பாரதம் ..ஜனநாயக குடியராசாகவும் பிரகடன படுத்தப்பட்டது..

1971 இல் இந்திரா காந்தி, கத்தோலிக்க கிறிஸ்தவ சபையினர் உபயோகிக்கும், “மதசார்பற்ற—செக்குலர்”—என்ற புதிய—இந்தியாவிற்கு அன்னியப்பட்ட..வாக்கியத்தை சேர்த்து, “மதசார்பற்ற ஜனநாயக—சோசியலிச குடியராசாக” இந்தியாவை பிரகடனம் செய்தார்..

மோகன் ஜி அவர்களின் வார்த்தை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது”—போல உள்ளது..வலிதாங்காமல் அவர்கள் அலறுகிறார்கள்..ஏதேதோ பிதற்றுகிறார்கள்..”ஆர்.எஸ்.எஸ். இந்தியாவை இந்து தேசமாக்க முயல்கிறது” என்கிறார்கள்..”பாஜகவின் சாயம் இப்போது வெளுத்து விட்டது..மதவாதம் தொடங்கி விட்டது..” என பிதற்றுகிறார்கள்..

கம்யூனிஸ்டுகள் ஒருபடி மேலே போய் “புதிய புரட்டு சரித்திரத்தை “ புகுத்த நினைக்கிறார்கள்..இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது இந்தியாவிற்கு மூன்று விதமான பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாம்..அவை “இந்தியா..இந்துஸ்தானம்—பாரதம்” என்பவனவாம்…
அம்பேத்காரும் மற்றவரும் இந்துஸ்தானம் என்ற பெயரை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ”இந்தியா..என்னும் பாரதம்” என்ற பெயரை சூட்டினார்களாம்….இது எப்பிடி இருக்கு..

முதலில் அப்படிப்பட்ட விவாதமே வரவில்லை..மாறாக நாடு சுதந்திரம் அடைந்தபோது துவக்கப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு “இந்துஸ்தான் “ என்று பெயர் சூட்டப்பட்டது..1..இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்—2.இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்—3..இந்துஸ்தான் போட்டொ ஃபிலிம்ஸ்..

ஏன்..பன்னாட்டு கம்பெனியான “லீவர் பிரதர்ஸ்”—இந்துஸ்தான் லீவ்ர் என்றும், கிறிஸ்தவ பைபிள் சபை..”இந்துஸ்தான் பிபிளிகல் சொசைட்டி “ என்றும், பெயரை வைத்துக்கொண்டது கம்யூனிஸ்டுகளுக்கு தெரியவில்லை போலும்,,

எனவே “இந்து..இந்துத்வா…இந்துஸ்தன்..” என்பவை..ஒரு நிலப்பரப்பையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையுமே குறிப்பிடுவனவாக இருந்தது..அது மதத்தை குறிப்பிடவில்லை..ஏனெனில், “இந்து” என்ற மதமே நம் பிரயோகத்தில், 18 ஆம் நூற்றாண்டு வரை இல்லை..
சிந்து நதிக்கு தெற்கே இருந்தவர்களை “சிந்தியர்” என்றும், அதுவே திரிந்து “ இந்தியர்” என ஆங்கிலேயர்களால் குறிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்த கிறிஸ்தவர்—இஸ்லாமியர் அல்லாத, இந்திய மதங்களை அடையாளபடுத்த “இந்து மதம்” என குறிப்பட்டது ஆங்கிலேயர்கள்தாம்..
இந்து என்பது வாழ்க்கை முறை---”வழிபாட்டு முறை அல்ல”—”பண்பாடு—கலாச்சாரம்—நாகரீகத்தை குறிப்பது---மதத்தை அல்ல.. பின் ஏன் மோக்ன் ஜி அவர்கள் பேச்சு காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.?

பண்பாடு கலாச்சாரம் என்றால் கம்யூனிஸ்ட்களுக்கு என்னவென்று தெரியாது..ஏனெனில், அவர்களிடம்….அவ்ர்களின் கட்சியும் ..சித்தாந்தமும், எந்த..நல்ல..உயரிய பண்பாட்டையும் பதிக்கவில்லை—எனவே பண்பாடு பற்றி கம்யூனிஸ்ட்கள் அறியாததால், அவர்களுக்கு புரியும் வண்ணம், “வாழ்க்கை முறை’ என்பதை எடுத்துக்கொள்வோம்..

இந்தியாவில் வாழும் மதம்மாறிய பூர்வகுடிகளான, இஸ்லாமிய. கிறிஸ்தவர்கள், இந்நாட்டின் பல நல்ல அம்சங்களை, தங்கள் வாழ்க்கைமுறையில் பயன்படுத்டுகிறார்கள்..பின்பற்றுகிறார்கள்..

நாகூர் மசூதியில் கொண்டாடும் “சந்தனகூடூ திருவிழா”—வேளாகன்னி மற்றும் மதுரை செயிண்ட்மேரிஸ் ஆலயம் உள்ளிட்ட பல சர்ச்சுகளில் மேரிமாதா “ரத ஊர்வலத்தில் பவனி”—கேரளாவில் ஓணம் பண்டிகை—வங்காளத்தில் துர்க்காபூஜா கொண்டாடல்,--வீட்டின் முன் சாணம் தெளித்தல், கோலமிடல், நெற்றியில் திலகம் வைத்தல், பெண்கள் தாலிகட்டிக்கொள்ளுதல்,, புடவை, வளையல் அணிதல், தேங்காய் உடைத்து நற்காரியங்களை துவக்குதல், என்பவனவெல்லாம், இந்து வாழ்க்கைமுறையிலிருந்து, மற்ற மதத்தினர் எடுத்து கொண்டனர்.

.இப்படி இந்து வாழ்வியல் நெறிகளை பின்பற்றுபவர்களை “இந்து” என சொல்லுவதில் என்ன தவறு உள்ளது?

பாகிஸ்தன் டி.வி., மற்றும் ரேடியோவில், இந்தியாவை பற்றி குறிப்பிடும்போது, “இந்துஸ்தான்” இந்துஸ்தனிகள்,”, என்ற்தான் குறிப்பிடுகிறார்கள்.—இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களை, அரேபிய முஸ்லீம்கள், “இந்து—இந்துஸ்தனி” என்ற்தான் அழைக்கிறார்கள்..சீனா பயணம் மேற்கொண்ட டெல்லி இமாம் புகாரியை, “இந்து—முஸ்லீம்”—என்றுதான் வரவேற்றார்கள்..

ஆக உலகம் முழுதும் உள்ளவர்கள், இந்தியாவில் இருந்து எவர் வ்ந்தாலும், “ இந்து—இந்துஸ்தனி”—என குறிப்பிடும் போது மோகன் ஜி குறிப்பட்டதில் ஏன் காங்கிரசும், இடதுசாரிகளும் தவறு கண்டு பிடிக்கிறார்கள் என்பது புரியவில்லை..

மோகன் ஜி பேச்சுக்கு மோடி விளக்கம் தந்தாக வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ( அப்படி ஒருவர் இருக்கிறரா?)ஞானதேசிகன், அறிக்கை விடுவது உளரலின் உச்சகட்டம்..

நாம் அடிக்கடி குறிப்பிடும் “இந்தோனேசியாவின்.-கருடா ஏர்லைன்ஸ்--,குபேரா பாங்க்---ராணி சுகர்ணோ புத்ரி---பாங்காக் விமானநிலையத்தின் முன் உள்ள மிகப்பெரிய “ பாற்கடலை கடையும் சிலை”—ஆண்டுமுழுதும் நடக்கும் “ராமாயண நாடகம்”—என “இஸ்லாத்தை தேசிய மதமாக” வைத்திருக்கும் நாடு, தன் மூதாதையர்களான இந்துக்களின் கலாச்சாரத்தை கைவிடாத காட்சியையே… மோகன் ஜி பாகவத் இந்தியாவிற்கும் பொருந்தும் வண்ணம் கூறியுள்ளார்.

இந்து வாழ்க்கை நெறியில் ஏற்கனவே முப்பத்தி முக்கோடி தேவர்கள் உண்டு…அவ்ர்களில் அடுத்தடுத்து ஒருவராக யேசுவையும் அல்லாவையும், ஏற்பதில் நமக்கொன்றும், ஆட்ஷேபம் இல்லை.

நம்மிடம் தெய்வ நம்பிக்கை உடையவனும் உண்டு, நாத்திகனும் உண்டு….கடவுளை கல்லாக பார்ப்பவனும் உண்டு, கடவுளை கல்லால்—செருப்பால்-- அடித்த கி.வீரமணி..ஈ.வெ.ராக்களும் உண்டு..காற்றையும் நீரையும் நெருப்பையும் நிலத்தையும், ஆகாயத்தையும் பஞ்சபூதங்களாக வழிபடுவதும் உண்டு..

இஸ்லாமியருக்கு குர்-ஆனும்---கிறிஸ்தவருக்கு பைபிள் மட்டுமே “வேத நூல் “ என்பது போல நம்மிடம் ஒரே ஒரு வேத நூல் மட்டுமே உண்டு என்னும் நிலை இங்கில்லை..ஒராயிரம் வேதங்கள் இங்குண்டு…புதிது புதிதாக தினசரி ஒன்று தோன்றினாலும் நாம் ஏற்றுக்கொள்ள தயார் என்னும் மனநிலை நமக்குண்டு..

இந்த பன்முகத் தன்மையே பாரதத்தின் சிறப்பு..இந்து தர்மத்தின் மாண்பு…இது இருந்ததால்தான் 3 ஜனாதிபதிகள்---30 கவர்னர்கள்---300 எம்.பிக்கள்—3000 எம் எல் ஏக்கள்—30 லட்சம் அரசு அதிகாரிகள் என முஸ்லீம்கள் இந்தியாவில் பதவி சுகத்தை அனுபவிக்க முடிந்தது..

இப்படி பதவி தந்து, பவிஷு தந்து, எல்லோரையும் அன்பாய் அரவணைக்கும் “இந்துத்வாவை” குற்றங்காண்பவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும்..
“இந்து மெஜாரிட்டியாக” இருக்கும்வரையே இந்நாட்டில் “மைனாரிட்டிகள்—பாதுகாப்பாக” இருக்க முடியும்..

“இந்துத்வா “ வலிமை பெற்று இருந்தால் மட்டுமே இந்நாட்டில் “மைனாரிட்டிகள் உரிமைகள்” காக்கப்படும்..

இது புரியாமல் குரல் கொடுப்போர் பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான்-ஈராக், சிரியா போன்ற நாடுகளில் முஸ்லீம்கள் படும் அவதிகள் போல இந்தியாவிலும் அவஸ்தை படவேண்டும் என்று விரும்புகிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது…..

“இந்து—இந்துத்வா---இந்தியா—இந்துஸ்தான்..—” இவை அனைத்தும் ஒன்றுதான்…”இந்தியா—பாரதம்—இந்துஸ்தான் –இவற்றில் இருக்கும் அனைவரும் “இந்துக்கள்தான்”—

இதை ஏற்றால்---வாழ்வு----மறுத்தால்—தாழ்வு..வீழ்வு…
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி…

4 comments:

நேர்கோடு said...


Contradicting views within the article.

I agree that "Hinduism" is not a religion rather a way of life.

While you call everyone as Hindus, where do "majority" and "minority" come from?

குலவுசனப்பிரியன் said...

ஒரு பக்கம் இந்து என்பது மதமல்ல வாழ்வுமுறை என்பது. மறுபக்கம் கருவாடு விற்காதே, அவ்வையார் மது உண்டார் என்று படிக்காதே என்று தொட்டதெற்கெல்லாம் தடைபோடுவது, இதுதான் ஆர் எஸ் எஸ்ஸின் இந்துத்துவத் தள்ளாட்டம்.

இந்த ஆசாமிகள் ஒன்றும் நாத்திகர்கள் உட்பட அனைவரையும் சமமாக மதிக்ககூடிய பேர்வழிகள் அல்லர்.

மாநகரன் said...

இது மிகவும் குழப்பமான ஒரு அரசியல் பதமாகிவிட்டது என்பதே உண்மை. இந்துத்வா அரசியலை முன்னெடுப்போரும், அவர்களது ஆதரவாளர்களும் இடத்துக்கு தக்கவாறு இந்து என்ற பதத்தை திரித்தும், குழப்பியும் பேசி வருகின்றனர்.

HIND என்ற சொல் SIND என்ற நதியினையும் அந்நதியோரம் வாழ்ந்த மக்களையும் குறிக்க ஐரானியர்களால் வழங்கப்பட்ட சொல்லாகும். பண்டைய ஐரானிய மொழியில் S என்ற சொல் மொழி முதலில் வருவதில்லை. அதற்கீடாக H என்ற ஒலி வரும். இது வரலாறு.

ஆனால் கடந்த ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக இந்திய வரலாற்றில் முகாயலர்களின் வருகையின் வரை இந்தியாவோ, இந்திய துணைக்கண்டமோ இந்தியா என்றோ இந்து என்றோ இங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டதில்லை.

மாறாக ஐரானியர்கள் HIND என்றும், கிரேக்கர்கள் INDICA என்றும் அழைத்தனர். ஆகையால் மத்திய கிழக்கிலும், ஐரோப்பாவிலும் இந்த பெயரைக் கொண்டு இங்குள்ள ஒட்டு மொத்த மக்களை அழைக்கத் தொடங்கினார்கள்.

இந்த HIND என்ற சொல்லையே பின்னாளில் இங்கு வந்த அரேபிய வணிகர்கள், முகாலயர்கள் உட்பட பலரும் உபயோகித்தனர். HIND மக்கள் வாழும் நாடாக HINDUSTAN எனவும், HIND மக்கள் பேசும் மொழிகளை HINDUSTANI என்றும் அழைத்தனர்.

அதே போல ஐரோப்பியர்களான போர்த்துகேயர்கள் INDIES எனவும், பிரித்தானியர், INDIA என்றும் அழைத்தனர். இங்குள்ள மக்களை INDIANS எனவும் அழைத்தனர்.

பிற்காலங்களில் ஆங்கிலேயேர்களின் ஆட்சி ஏற்பட்ட பின்னர், அவர்கள் இங்கு இங்கிலாந்தில் உள்ளது போல சட்டங்களை இயற்றினார்கள். இதில் சிவில் சட்டங்களை இங்கு வாழ்ந்த மக்களின் மத நம்பிக்கைகளை உள்வாங்கி எழுத முற்பட்டனர். கிறித்தவர்கள் விவிலியத்தை அடிப்படையாக கொண்டும், முஸ்லிம்களுக்கு ஷரியாவை அடிப்படையாக கொண்டும் சிவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. இங்கு சிக்கல் என்ன என்றால், இந்தியாவிலேயே பின்பற்று வந்த வேதங்களைச் சார்ந்த சைவம், வைணவம், சாக்தம், தாந்திரிகம் உட்பட பல மதங்களுக்கும், வேதங்களைச் சாராத நாஸ்திக சமயங்களான சமணம், பவுத்தம் உட்பட மதங்களுக்கும், வேதங்களை ஏற்காமல் கடவுள் நம்பிக்கைகளைக் கொண்ட சீக்கிய, லிங்காதய உட்பட எண்ணற்ற மதங்களுக்கும், மேலும் பழங்குடிகள், நாடோடிகளின் நாட்டார் சமயங்களுக்கும் என தனித்தனியாக பல வாழ்வியல் சட்டங்கள் இருந்தன. அவை அனைத்துக்கும் தனித் தனி சட்டம் இயற்றுவு தேவையற்ற குழப்பங்களையும், நிர்வாகச் சிக்கலையும் தரும் என்பதால் அப்போதைய வங்காளத்தில் இருந்த பார்ப்பனர்களிடம் ஆலோசித்தார்கள். அப்போதிருந்த பார்ப்பனர்களோ, கிறித்தவம், பார்சி, இஸ்லாம் ஆகிய மூன்று மதமும் வெளியே இருந்து வந்தவை. ஆகையால் அவை தவிர்த்து ஏனைய இந்திய மதங்கள் அனைத்தையும் ஒரே இந்து மதம் என்ற போர்வைக்குள் கொண்டு வந்து சட்டம் இயற்ற வைத்தனர்.

அவற்றுக்கு அடிப்படையாக பகவத் கீதையையும், மகாபாரதம் போன்ற வைணவ நூல்களையும் பரிந்துரைத்தனர். படிப்பறிவு இல்லாத ஏனைய சமூகங்களும் இவற்றை பற்றி அறியாமல் விட்டு விட்டனர்.

இவ்வாறு கிறித்தவம், இஸ்லாம், பார்சி சாராத நூற்றுக்கணக்கான இந்திய மதங்களை பொதுப் பெயராக HINDU என்றழைக்கவும் செய்தனர். காலப் போக்கில் பல பார்ப்பனியர்கள் இந்திய மதங்களை அனைத்தும் HINDU என்ற போர்வைக்குள் தந்திரமாக கொண்டு வந்தும் விட்டனர்.

இவ்வாறே HINDU என்ற சொல்லும், மதமும் உருவானது. இதே சட்டமும் திட்டமும் தான் இன்று வரை தொடர்கின்றது.

மாநகரன் said...

ஆனால் உண்மையில் பின்னாட்களில் பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் உச்சநீதி மன்றத்தின் மூலம் தாம் இந்து மதத்தவர் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டதோடு சிறுபான்மை மதத்தினர் என்ற அடையாளத்தையும், உரிமைகளையும் வாங்கிக் கொண்டனர்.

ஏனைய மதங்கள் பலவும் இந்து மதம் என்ற போர்வைக்குள்ளேயே புதைந்துவிட்டது. அதனால் தான் கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை ஒரே போல வழிப்பாட்டு முறைகளை இந்து மதம் கொண்டிருக்கவில்லை.

இன்றைய சூழலில் இந்து என்ற சொல் சிவில் சட்டப் புத்தகத்தின் பிரகாரம் இஸ்லாமியர், கிறித்தவர் சாராத மற்ற அனைவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதே சொல், இஸ்லாமியர், கிறித்தவர், பார்சி, பவுத்தர், சீக்கியர், சமணர் சாராத மற்றவர்களின் வழிப்பாட்டு முறைக்கு சமூக அளவில் வழங்கப்படுகின்றது.

அதே சமயம் சனாதன தருமம் எனப்படும் வேதங்களை ஏற்றுக் கொண்ட சைவ, வைவண, சாக்தம் உட்பட மதங்கள் தான் இந்து என்ற தோற்றம் உருவாக்கப்பட்டும் விட்டது.

இந்து என்பதும் இந்துத்வம் என்பதும் வேறு வேறு என்பதைக் காட்டவே நாத்திகரான சவர்கர் இந்துத்வம் என்ற சொல்லை உருவாக்கினார். அதாவது இந்திய கலாச்சாரங்களில் எதோ ஒன்றை பின்பற்றுவோர் இந்துத்வாக்கள். அதே சமயம் வெளிநாட்டு கலாச்சாரங்களை பின்பற்றுவோர் அந்நியர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில்.

இப்போது இந்த HINDU என்ற சொல் எப்படி மாற்ற் மாற்றி பயன்படுத்தப்பட்டு அரசியலாக்கப்படுகின்றது என்பதை சீர்தூக்கி பார்ப்போம்.

BJP உட்பட இந்துத்வா கொள்கையுடையோர் HINDU, HINDUTVA, INDIAN என்ற எல்லா சொல்லும் ஒன்றே என வாதிடுகின்றனர்.

CONGRESS, LEFT கொள்கையுடையவர்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர், நாத்திகர்கள் அனைவரும் இதனை ஏற்பதில்லை. INDIAN என்ற சொல் இந்திய தேசத்தில் உள்ள அனைவரையும், HINDU என்ற சொல் சனாதான தருமம் எனப்படும் வைதிக மதத்தை பொதுவாகவும், அதே HINDU என்ற சொல் கிறித்தவ, இஸ்லாமிய மக்கள் அல்லாத ஏனைய இந்தியரை சிவில் சட்டத்துக்காகவும் குறிப்பாதகவும், HINDUTVA என்ற சொல் இந்து அடிப்படைவாதத்தைக் குறிப்பதாகவும் கூறுகின்றார்கள்.

THE HINDU, HINDUSTAN TIME, HINDUSTAN MOTORS என நிறுவனங்களில் காணப்படும் HIND என்ற சொல் மதத்தையோ, கலாச்சாரத்தையோ குறிப்பிடுவது அல்ல இந்திய விடுதலைக்கு முன் INDIA என்ற சொல்லின் வடமொழி வடிவமான HIND என்ற பொருளில் தேசத்தின் பெயராகவே வைக்கப்பட்டது.

இத்தகைய குழப்பங்களை நீக்க வேண்டுமானால். இந்திய சட்டத்தில் HINDU ACTS என்பதின் பெயரை INDIAN ACTS என மாற்றம் செய்ய வேண்டும். HINDU என்ற சொல்லை இடத்துக்கோ, சட்டத்துக்கோ பயன்படுத்தாமல் வெறும் மதத்துக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லது HINDU மதத்துக்கு சனாதன தருமம் என பெயர் மாற்றியும் விடலாம்.

அதே போல இந்தியாவில் ஒரே கலாச்சாரம் என்பது என்றுமே இருந்தது இல்லை. ஐந்து பேரை மணக்கும் தொதவா கலாச்சாரத்துக்கும், ஒரே ஒருவரை மணக்கும் பிற சாதிக் கலாச்சாரத்துக்கும் வேறுபாடு உண்டு, மாட்டுக்கறி தின்னும் கேரள இந்துக்களுக்கும் மாமிசமே தின்னாத வடநாட்டு பார்ப்பனர்களுக்கும் வித்தியாசம் உண்டு. இவ்வாறு ஒவ்வொரு சாதி, சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழுவுக்கும் இங்கு பல கலாச்சாரங்கள் இருக்கின்றன. ஆகையால் ஒற்றைக் கலாச்சாரம், அது இந்துக் கலாச்சாரம் என்பது எல்லாம் சுத்தப் பேத்தல்.

இங்கு இருப்பது இந்திய கலாச்சாரங்கள், அதாவது INDIAN CULTURES என பல கலாச்சாரங்களை தொகுத்துக் கூறலாமே ஒழிய அவற்றை HIND கலாச்சாரம் என கூற முயன்றால் அது நாட்டைக் குறித்ததா, மதத்தைக் குறித்ததா என குழப்பும் வாய்ப்புள்ளது.

ஆனால் HIND என்ற பெயருக்கு மல்லுக்கட்டும் இந்துத்வாக்களிடம் ஒரு கேள்வி, HIND என்ற பெயரை ஐரானியரும், அரேபியரும் வைத்தது அவற்றை ஏன் பயன்படுத்துகின்றீர்கள். அவற்றை தங்கள் வழியில் SIND என மாற்றுவது தானே மிகச் சரியானது. நான் சொல்வது சரிதானே.