Pages

Monday, February 10, 2014

மோடி என்னும் இணைப்புச் சங்கிலி

பிப்ரவரி 8 சென்னை மாநகரின் சரித்திரத்தில் பொன்னாள்..பொன்னாரின் முயற்சியால் “கண்ணான தலைவன்” நரேந்திர மோடியை மீண்டும் “காணக்கிடைத்த” நாள்.

தங்களுக்கு “மாற்று”இல்லை..எனவே தமிழகத்தில் “மாற்றம் “இல்லை--என ..தமிழ் மக்களை “ஏமாற்றி” வந்த திராவிட கட்சிகளுக்கு “பேதி மருந்து” கொடுக்க மோடி சென்னை வந்த நாள்..

வங்கக்கடல் “வண்டலூருக்குள்” புகுந்ததோ என லட்சக்கணக்கான மனித தலைகள் “அலையென” ஆர்ப்பரித்து வந்த நாள்.

திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்குப் பிறகு, தமிழக அரசியலை புரட்டிப்போட்டது பாஜக..திராவிட கட்சிகளின் வயிற்றில் “புளியை கரைத்தது “ பாஜக..

கூட்டம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சி தனது போலீசையும் ,போக்குவரத்து அதிகாரிகளையும், முடுக்கிவிட்டு, மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது முதல், பஸ்களுக்கு பர்மிட் கொடுப்பது வரை, ”மறுப்பு” செய்தும், தொந்தரவு கொடுத்து பிறகும் --மாநாட்டில் கூட்டம் லைமோதியது.

மதுரை தாமரை சங்கமத்துக்கு செய்தது போல மாநாட்டு பந்தலுக்கு 15 கி.மீ தூரத்திலேயே தொண்டர்களை  போலீஸ்இறக்கி விட்ட பிறகும், ”நாளைக்கு நாட்டை வழி நடத்த” --இன்றைக்கே 20 கி.மீ தூரம் ஒவ்வொரு பாஜக. தொண்டனும்,  “நடை பயிற்சி.”-செய்ததை பார்க்க முடிந்தது.

திருவாரூர்--வாணியம்பாடி, வேலூர் ,ஆம்பூர்..சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த இஸ்லாமிய சகோதரர்கள், மதுரை, குமரி, கோவை பகுதிகளில் இருந்து வந்த கிரிஸ்தவ சகோதரர்கள், சேலம் ,சென்னை , மதுரை பகுதிகளில் இருந்து வந்த வடமாநில அன்பர்கள், என கூட்டம் “நெட்டித்தள்ளியது”

ஐ.ஜே.கே--புதிய நீதிக்கட்சி, மற்றும் மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி என கூட்டணிக்கட்சிகளின் கொடிகட்டிய வகனங்களின் அணிவகுப்பு கண்களை கொள்ளை கொண்டது..

மாநாட்டு மேடையின் ஏற்பாடு எப்போதும் போல் பிர்மாண்டத்தையும், அடுத்த “ஆளும் கட்சி “ யின் “களை “ வந்துவிட்டதையும் பறைசாற்றியது..

மதிமுகவின் மல்லை சத்யாவும் ஐஜெகே யின் பாரிவேந்தரும் சிறப்பாக உரையாற்றினர்..கொங்குவின் ஈஸ்வரனின் பேச்சு புதிய தேர்தல் கோஷத்தை முன்வைத்தது..

“மதத்தை பற்றி பேசாமல் வளர்ச்சியை பற்றி மட்டுமே பேச மற்ற கட்சிகளுக்கு தைரியம் உண்டா?”--என்ற அவரின் கேள்வியே தேர்தல் பிரச்சாரத்தின் மையக்கருத்தாக உருவெடுக்க போகிறது..

வெங்கையா நாயுடுவின் “சரவெடி” அனைத்து கட்சியின் தொண்டர்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது..

“மறு எண்ணிக்கை மந்திரி” சிதம்பரத்துக்கு சவுக்கடி---”ஹார்வெடா?--ஹார்ட்
வொர்க்கா”?என்ற  மோடியின் இதயம் தொட்ட வார்த்தைகள்  தமிழ் மக்களை சிந்திக்க வைத்தது..
மாநாடு முடிந்ததும் மாநாட்டு பந்தலில் “சாரய பாட்டில்கள் இல்லை “ என்னும் செய்திக்கு பதிலாக இம்முறை வண்டலூரை சுற்றிய பகுதிகளில் “டாஸ்மாக்கில்” அதிக விற்பனை என்னும் தினமலர் செய்தி எனக்கு சந்தோஷத்தையே தந்தது..

ஆம்..ஒருபுறம் சாரய விற்பனை  செய்தி “சங்கடத்தை” தந்தாலும், அதுவே பாஜக மாநாட்டில் கூட்டணி கட்சிகள் அதிக அளவில் கலந்து கொண்டதற்கான  ”அத்தாட்சி” என்று எடுத்துக்கொள்ளலாம்.

பொதுக்கூட்டத்தில் “விசில்” சத்தம் வருவதும்..தலையில் கட்சிக்கொடியை தொண்டன் கட்டிக்கொண்டு வருவதும், பாஜக அடித்தட்டு மக்களிடமும் சென்று விட்டது என்பதற்கு அர்த்தம்..

தமிழ்நாட்டில், பாஜக மாநாடு நடந்த பகுதியில், டாஸ்மாக்கில் விற்பனை அதிகம் என்றால், கூட்டணிக்கட்சி தொண்டர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்று அர்த்தம்..

அது இப்போது நடந்திருக்கிறது..பாஜக கூட்டணிகட்சிகளை அதிகம் ஈர்த்திருக்கிறது..என்ன சரிதானே..

ஆக காங்கிரஸ் நாட்டு மக்களை வறுமை--ஊழல், வளர்ச்சியின்மை என்னும் அடிமை சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தது.
பாஜகவின் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து,தமிழ்நாட்டு மக்களை, தேசிய நீரோட்ட்த்தில், வளர்ச்சிப்பாதையில், சகோதரத்துவத்தில், ஒற்றுமை  “சங்கிலியால்” இணைத்து விட்டார்..
மோடியின் “அன்புச்சங்கிலியில்” தமிழகம் கட்டுண்டது..ஆம்...சென்னையில்..