Pages

Monday, December 30, 2013

போலிசை கைது செய்

போக்குவரத்து போலீசாரின் "அறிவு கெட்டத் தனத்தால்" ( கொஞ்சம் மரபு மீறிய சொல்தான்..ஆனாலும், கோபத்தின்   வெளிப்பாடு)..உளுந்தூர் பேட்டையை  அடுத்த ஷேக் ஹுசைன் பேட்டை அருகே 7 அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாகி இருக்கிறது..

இதை எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை..இப்படி " மடத்தனமாக" ( மீண்டும் மரபு மீறிய சொல்) போக்குவரத்து பொலிசார் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல..

சாலைகள் ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு சொத்து போலவும், 80 கி.மி, 100 கி.மி வேகத்தில் வரும் வாகனங்களை எந்த முன் தடுப்பு நடவடிக்கைகளும், ( வேகத்தடை--செக் போஸ்ட் தடை போல . )இல்லாமல், இடம் பொருள் ஏவல் பாராமல், திடீரென கையை காட்டி, ஓரங்கட்ட சொல்வதும், அதை எதிர் பாராத பின்னால் வரும் வாகனங்களில் உள்ளோர் பரலோகம் போவதும், தொடர்ந்து கொண்டிருப்பது நெஞ்சம் கனக்க  வைக்கிறது,

போக்குவரத்து பொலிசாரின் "வாகனப்பரிசொதனை" என்கிற லஞ்ச நாடகத்தினால், இதுவரை எத்தனையோ, டாக்டர்கள், வக்கீல்கள், கலைஞர்கள், சிறார்கள், பெண்கள், அரசுஅதிகாரிகள், அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்..இரு
ந்தும்கூட போலிஸ் மேலிடத்திலிருந்த, இப்படி  செய்யாதீர்கள்" ..பரிசோதனை இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள், என்ற எந்த வழிகாட்டுதலும், வந்ததாக தெரியவில்லை..
பொலிசார் எந்த காலத்திலும், சொந்த புத்தியோடு செயல் பட்டதாக தெரியவில்லை..வழிகாட்டுதல்கள் வந்தாலாவது மாறுவார்களா? என்கிற ஆதங்கம்தான் இப்படி எழுத துண்டியது..

நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளிலும்,வாகன பரிசோதனைகளுக்கு சரியான இடம் தேர்வு செய்யாமல் , முக்குகளில் மறைந்து நின்று, சினிமா வில்லன் போல திடீரென் தோன்றி, கையைக்காட்டி நிறுத்தி, சாலைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பெரும் இடையுறு செய்து, முடிந்த அளவுக்கு விபத்து ஏற்படுத்தும் பொலிசாரின் செயல்களை யார் தடுப்பது?--அந்த "மரமண்டைகளுக்கு" ( மீண்டும் மறு மீறிய சொல்)யார் புத்திமதி சொல்வது?--

நேற்று முன்தினம் உளுந்தூர் பேட்டை விபத்து, நெஞ்சை உலுக்குகிறது..நெடுஞ்சாலையில் அதிவேக மாக வந்த வாகனத்தை மடக்கி நிறுத்தி, தீவிரவாதிகளை கைது செய்யப்போகிறார்களா?--கொள்ளையனை பிடிக்கப்போகிரார்களா?--மணல் லாரியிலிருந்து 100 ரூபாய் லஞ்சம் வாங்க கையை நீட்டி, 7 அப்பாவி உயிர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே ..

இந்த உயிர்பலிக்கு காரணமான பொலிசார் மிது கொலைவழக்கு போடவேண்டும்..ம்ம்ம்..ஹூம்...ரொ
ம்ப கோபப்படுகிறேன் நான்.----.ஒரு பிஸ்கோத்தும் நடக்காது.."மெமோ" கூட கொடுக்கமாட்டார்கள்..
இதற்க்கு பின் என்னதீர்வு?--ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்...பிளாக்கில்..."பொங்
கி வழியலாம்"..அக்கம் பக்கம் பார்ப்பவரிடம் "குமுறலாம்"'..சொந்தக்காரகளாக இருந்தால் "போலிஸ் ஸ்டேஷனை முற்றுகை " இடலாம்..
வேறென்ன செய்யமுடியும்..எத்தனை "புலம்பினாலும்" எந்த போலீசுக்கும் "புத்தி வரப்போவதில்லை"..எந்த மேலதிகாரியும் ஆணை இடப்போவதில்லை..

நம் தலைவிதி இவ்வளவுதான்...பிரேக் பிடிக்காத  வண்டி  ,  போலிஸ் மேல் மோதினால்தான் திருந்துவார்களோ ?

Friday, December 27, 2013

குப்பையுடன் கூட்டணி சேர்ந்த “துடைப்பம்”


"ஊழலை கூட்டி தள்ளுவேன் "--என "துடைப்பத்தை " எடுத்தார்...அண்ணா ஹஜாரே --ஊழல்--- குப்பைகளை கூட்டி தள்ளும் முன்பே--- துடைப்பத்தை பிடுங்கிக் கொண்டு  ஓடிவிட்டார் ஹஜாரே சிஷ்யர் அரவிந்த் கேஜ்ரிவால்.
.
துடைப்பத்தை காட்டி --ஊழல் குப்பைகளை கூட்டித் தள்ளுவேன்-- என சூளுரைத்து டெல்லி மக்கள் வாக்குக்களை பெற்று, பாஜகவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் கேஜ்ரிவால்..

32 இடங்களை பிடித்த பாஜக மேஜாரிடிக்கு 4 இடங்கள் குறைந்ததால், "ஆட்சி அமைக்க போவதில்லை " என சொல்லியத்தால், 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டது.

10 நாள் அவகாசம் கேட்ட கேஜ்ரிவால், இரண்டு நாளில் முடிவு சொல்வதாக கூறி, ஒரே நாளில் ஆட்சி அமைக்கிறோம் என்று முடிவை வெளியிட்டார்..

நிபந்தனை அற்ற ஆதரவு---நிபந்தனையுடன் கூடிய ஆதரவு--என்று காங்கிரஸ் மாற்றி மாற்றி சொன்னாலும், கடைசியாக "வெளியிலிருந்து" ஆதரவு தந்ததால்,  கேஜ்ரிவால் வரும் 28 ந்தேதி டெல்லி முதல்வராக முடிசூடப்போகிறார்..

"காங்கிரஸ் என்னும் ஊழல் குப்பையை அகற்றுவோம் "--என்று சூளுரைத்த ஆம் ஆத்மியின் "துடைப்பம்" --ஆட்சியை பிடித்தது, ஆனால் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாதததால், 8 சீட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் "குப்பையை" கூட்டு சேர்த்துக்கொண்டது..

ஆக குப்பையை அகற்ற களமிறங்கிய துடைப்பம் கடைசியாக குப்பையுடனேயே கூட்டு சேர்ந்து கொண்ட அவலம் டெல்லியில் நடந்தது.---இது ஒரு புறம்..

இந்த ஆம் ஆத்மி துடைப்பம் உண்மையிலேயே துடைக்குமா/..அல்லது பேப்பரில் இருக்கும் விளம்பர துடைப்பமா? --பார்ப்போம்..

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். வரூமானவரி  அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால், ஊர் ஊர் ஆக மாறிச்செல்ல வேண்டிய பதவியில் இருந்தாலும், அன்னை சோனியாவின் அருளால், எந்த ஊருக்கும் மாறுதல்-- ”ஆக்காமல்”,-- டெல்லிக்குள்ளேயே மாறுதல் ஆகாமல் தொடர்ந்து இருந்தார்..ஆனால் அந்த சோனியாவையே எதிர்த்து பின்னாளில் போராட்டம் நடத்தினார்..

"காங்கிரஸ்--பாஜக எதுவுடன் கூட்டணி சேரமாட்டேன்" என வாக்குறுதி அளித்தார்..ஆனால் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார்..

டெல்லி போலிஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டது..அதன் அனுமதியில்லாமல் ஒரு போலிஸ் காரரைக் கூட மாற்றும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை. இதை நன்றாக.தெரிந்த ஐ,ஆர்.எஸ். அதிகாரி கேஜ்ரிவால், "போலிஸ் சீர்திருத்தம் " கொண்டுவருவேன் என்று  கூசாமல் பொய்சொல்கிறார்..

ஜன்லோக்பால் மசோதா மட்டுமல்ல எந்த சட்டமும் இயற்றுவது சட்டமன்றம்தான்..இது தெரிந்த கேஜ்ரிவால், மக்கள் மன்றத்தில்சட்டமியற்றுவேன் என அடம் பிடிக்கிறார். 

காங்கிரசும் பாஜகவும் பணக்காரர் கட்சி என்று சொல்லும் கேஜ்ரிவாளின் கட்சியில் 28 க்கு 12 எம்.எல்.ஏ க்கள் கோடிஸ்வரர்கள்..

"மக்களை மேலும் பிச்சைக்காரகள் ஆக்கும்  மற்ற அரசியல கட்சிகளுக்கு நான்தான் மாற்று" --என்று தேர்தல் கோஷம் எழுப்பினான்ர். ஆனால் மக்களை கையேந்த வைக்கும் -- இலவச மின்சாரம்--இலவச குடிநீர் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்..

மொத்தத்தில் ஆம் ஆத்மி என்பது காங்கிரசின் "பி" டீம் என்பது வெட்டவெளிச்சமானது..

குப்பையை கூட்டி எரிய வேண்டிய துடைப்பம்-- குப்பையுடன் கூட்டு சேர்ந்தது. .

Tuesday, December 10, 2013

பாஜக திமுகவோடு கூட்டணியா?தமிழக பாஜக சரித்திரத்தில் எத்தனையோ பிரசித்தி பெற்ற மாநில செயற்குழுக்கள் நடைபெற்றுள்ளன..அதில் நவம்பர் 27—28 ந்தேதி பரமக்குடியில் நடந்த மாநில செயற்குழு வித்தியாசமானது.

அங்கு மூன்று வகை வித்தியாசங்களை என்னால் பார்க்கமுடிந்தது..
1 “.பாராளுமன்ற தேர்தலை நாம் எப்படி அணுகவேண்டும்?—கூட்டணி என்று வைத்துக்கொண்டால் அது யாரோடு?---உங்கள் மனந்திறந்த கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.”.—என்று மாநிலத்தலைவர் திரு.பொன்னார் அவர்கள் அழைத்தவுடன் வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களில் பாதிக்குமேல் கருத்து சொன்ன ஆர்வம்.

.2. நம் லட்சியத்தோடும் கொள்கையோடும் என்றும் ஒத்துப்போகாத ..நமக்கு என்றுமே ஒத்துவராத..திமுகவோடு கூட கூட்டணி வைத்துக்கொள்ளலாம்..என நம்மில் சிலரே சொன்ன “ஆச்சரியமான---அதிர்ச்சிகரமான ” கருத்துக்கள்..

3.” வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை ஓட்டம்—மற்றும் கிராம யாத்திரை” பற்றிய விரிவான விபரமான ஆழமான கருத்து பரிமாற்றம் வழங்கிய திருமதி வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கருப்பு முருகானந்தத்தின் விளக்கங்கள்..

செயற்குழுவன்று காலை “தினமலரில்” திமுக கூட்டணிக்கு ஆதரவான முடிவில் பாஜக இருப்பதாக வந்த கட்டுரையும், செயற்குழு முடிந்த அடுத்த நாட்களில், அதே அர்த்தத்தில், வேறு சில பத்திரிக்கைகள் எழுதிய கட்டுரைகளும், என்னைப்போன்ற பாஜக தொண்டனையே உலுக்கியது என்பது உண்மைதான்..

இச்செய்தி பாஜகவின் தொண்டனையும், நமது இயக்க ஆதரவாளர்களையும் பெரும் அதிச்சியில் ஆழ்த்தி வருகிறது என்பதை “முகநூலிலும்” நேரில் என்னிடம் பார்க்கும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்தும், மேலும் உறுதியாகிறது..

செயற்குழுவின் நிறைவுரையில், முதலில் பேசிய திரு எல்.ஜி. அவர்கள், “ஒரே கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் “ இருக்க முடியாது என்பதையும், அடுத்த கூட்டணி..( திமுக பாஜக கூட்டணி)—யின் ரசாயனம் ( கெமிஸ்ட்ரி)..வீழ்படிவுகளைத்தான் (பிரிசிபிடேட்)..உண்டாக்கும் என்பதையும் அழகாக..சிலேடையாக சொல்லி நம் “அதிர்ச்சிக்கு “ முற்றுப்புள்ளி வைத்தார்.

நிறைவுரை ஆற்றிய திரு.பொன்னார் அவர்கள், “ மதுரை தாமரை சங்கமத்தின் மூலம், தமிழகத்தில் பாஜக இருக்கிறது என்று காட்டினோம்..எங்கே இருக்கிறது? என்று கேட்டவர்களுக்கு,..திருச்சி “இளந்தாமரை “ மாநாட்டின் மூலம் “தமிழகம் எங்கும் இருக்கிறது” என்று நிரூபித்தோம்..நாம் கூட்டணிகளை தேடிப்போன காலம் போய் கூட்டணிகள நம்மைத்தேடி வரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.”.

“ .கூட்டணி அமைந்தால் அது நம் தலைமையிலேயே அமையும்..அதற்க்குள் நம் வலிமையை நாம் பெருக்கிக்கொள்வோம்..12500 கிராமங்களிலும் யாத்திரை செய்து மக்களை சந்தித்து புதிய பாஜக கிளைகளை உருவாக்குவோம்..சர்தார் வல்லபாய் பட்டேலின் “ஒற்றுமை ஓட்டத்தை “ பள்ளி கல்லூரி மாணவர்களை திரட்டி நடத்துவோம்.” என்று தெளிவாக தொண்டர்களுக்கு செய்தி சொன்னார்..

தற்போது சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும், “தெளிவான பாஜக தொண்டனையும்” குழப்பத்தில் ஆழ்த்தும் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது..இதை நம்பிய ஒருசில தொண்டர்களும், ஆதரவாளர்களும், “ தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தாக்கிய சண்டாளர்களுடனா கூட்டு?—நாம் சூடு சொரணையை இழந்து விட்டோமா? “என்றவகையில் “முகநூலில்” கொதிப்பதை பார்க்க முடிகிறது..

இப்படி பதட்டப்படவோ இம்மாதிரியான கூட்டணி செய்திகளை நம்புவதோ அவசியமற்றது..நமது தலைவர்கள் தெளிவானவர்கள்…அவர்கள் காங்கிரஸ் கட்சியைப்போல மேலிருந்து திணிகப்பட்டவர்கள் அல்ல..நம்மில் ஒருவராக இருந்து உயர்ந்தவர்கள்தான்…நம் உணர்வுகளை மட்டுமல்ல நாட்டின் சூழ்நிலைகளையும் தெளிவாக புரிந்தவர்கள்..நம் லட்சியம்—கொள்கைக்கு என்றும் வலுசேர்ப்பவர்கள்...

பொய்ச்செய்திகளை படித்து நம்மை நாமே குழப்பிக்கொள்வதை தவிர்ப்போம்..வல்லபாய் பட்டேல் ஒற்றுமை ஓட்டத்தை மாபெரும் வெற்றியுடன் நடத்தி, மக்கள் ஆதரவை திரட்டுவோம்..கிராமங்கள் தோறும் பாதயாத்திரை நடத்தி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே, ஆயிரக்கணக்கான புதிய கிளைகளையும், லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களையும் சேர்த்து, மேலும் வலு பெற்ற தமிழக பாஜகவை உருவாக்குவோம்..

நம் லட்சியம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 20+ எம்.பி.க்களை அனுப்பி மோடி அவர்களை பிரதமராக்குவது மட்டுமல்ல..2016 சட்டமன்ற தேர்தலில்..ஆட்சியை பிடிக்கும் வலுப்பெற்ற கட்சியாக மாறுவதும் ஆகும்…

இதை நிறைவேற்ற… உடனே புறப்படுவோம்..
ஒற்றுமை ஓட்டத்தில் கிராமம் தோறும் செல்வோம்.. .  

Thursday, November 21, 2013

”மோடி மீண்டும் சறுக்கல்”--தி.இந்து..


மோடியின் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் காங்கிரசும் அதன் ஆதரவு மீடியாக்களும் சில நாட்களுகளாக கூறிவருகிரது..அவை:-
1. இந்திய விடுதலைக்காக போராடிய ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவை குறிப்பிடும்போது அதே உச்சரிப்பை கொண்ட ஜனசங்கத்தின் ஸ்தாபகர் ஷியாம் பிரசாத் முகர்ஜியை தவறுதலாக் குறிப்பிட்டுவிட்டார் மோடி..
என்பது....இது எவ்வளவு பெரிய கொலைபாதகம்..
2.ராஜஸ்தானின்..டூடூ என்னுமிடத்தில் பேசிய மோடி..மக்களை பார்த்து “ நீங்கள் மகாத்மாவின் கனவை நிறைவ்ற்றுவீர்களா?--மோகன்லாலின் கனவை நிறைவ்ற்றுவீர்களா?”--என மோகந்தாசுக்கு பதிலாக மோகன்லால் என்று சொல்லிவிட்டார் என்பது..இது எவ்வளவு பெரிய தேசத்துரோகமல்லவா?
சபாஷ் மீடியாக்கலே..காங்கிரஸ்காரர்களே..உங்கள் குற்ற்ச்சாட்டுக்கள் சரிதான்..கண்டுபிடிப்புக்கள் அதைவிட சரிதான்..எவ்வளவு பெரிய குற்றங்கள் இவை?--எவ்வளவு பெரிய தேசதுரோகம் ?..
இதனால் நமது தேசத்துக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் இழப்பு..இதனால் மோடிக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் சொத்து கூடுகிறது..அடப்பாவிகளா..உங்களின் கண்டுபிடிப்பு  எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது..
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..மோடி மிகச்சிறந்த உணர்வு பூர்வமான பேச்சாளர்..மிகவேகமாகவும் பேசுவார்..இதில் ஏற்பட்ட எழுத்துப்பிழை...இதை தேடிக்கண்டு பிடிக்கும் அளவுக்கு----காங்கிரசாருக்கு வேறு வேலை  இல்லை என்பதும்..மோடியின் மீது வேறு குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும்,..மோடியை “பூதக்கண்ணாடி “ போட்டு பார்ப்பதே காங்கிரசாரின் வேலை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இதற்குமேல் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், “பொது அறிவுக்காக” சில வரிகள்..
ஷியாம் பிரசாத் முகர்ஜியை--- ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவுக்கு பதிலாக உச்சரித்த உடனேயே திரும்ப மேடைக்கு வந்து,மோடி  வருத்தம் தெரிவித்து, தன் தவறை திருத்திக்கொண்டதை ஏன் மீடியாக்கள் மறைக்கின்றன..மீடியாக்களின் இந்த உள்நோக்கம் “வெளிப்படை”-யாக தெரிகிறதல்லவா -
அந்தக்காலத்தில் ரிலையன்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தது  நம் ஆடிட்டர் திரு.எஸ் குருமூர்த்தி அவர்கள்தான்..அத்ற்காக சி.பி.ஐ. வைத்து மிரட்டி கைது செய்யமுயன்றது ராஜீவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு..எனவே குருமூர்த்தி எனறால் ராஜீவ் காந்திக்கு சிம்மசொப்பனமாக இருந்தகாலம் அது..
அச்சமயம் சென்னைக்கு விடுதலை போராட்ட வீரர் அமரர்.சத்திய மூர்த்தி அவர்கள் சிலையை திறந்துவைக்க ராஜீவ் வந்திருந்தார்..அவரது பேச்சின் ஒவ்வொரு பகுதியிலும் அமரர்.சத்திய மூர்த்தியை கூரிப்பிடுவதற்கு பதிலாக “குருமூர்த்தி...குருமூர்த்தி..” என்றே குறிப்பிட்டடார்..அந்த அளவுக்கு ராஜிவ் மனதில் நம் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி அவர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினார்..
இதை அன்றைய மீடியாக்கள் பெரிது படுத்தவில்லை..காரணம் ராஜீவை எதிர்க்கும் தையிரியம் அவர்களிடம் அன்று இல்லை..
மூன்றாவதாக..குஜராத் பெண் ஒருவரை மோடி அரசு ரகசியமாக கண்காணித்தது..எனபது.

.குஜராத்தின் உயர் அரசு அதிகாரி..காங்கிரசின் ஆதரவாளர்..அப்பெண்ணை பலவந்தப்படுத்த பின் தொடர்ந்தார்..அப்பெண்ணின் தந்தை மற்றும் அப்பெண்ணின் வேண்டுகோளின் படி  அவர்களுக்கு மோடி பாதுகாப்பு அளித்தார்....
முதலில் மோடி மீது குற்றம் சுமத்திய காங்கிரஸ் இப்போது அமைதியானது ஏன்?--உண்மை வெளியே தெரிந்ததால் எற்பட்ட பயம்.அது...
இம்மாதிரி குற்றச்சாட்டுக்கள் இனி காங்கிரஸ் மற்றும் அதன் அதரவு மீடியாக்களால். தொடர்ந்து எழுப்பப்படும்..இதில் ஆச்சரியம் இல்லை..இவை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்..அப்போதுதான் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களும்
மோடியின் பக்கம் கூண்டோடு வந்துவிடுவார்கள்..
2011 இல் கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம் உருவானது,,35 ஆண்டுகால மார்க்ஸ்சியத்துக்கு மேற்கு வங்கமும், கேரளமும் “குட் பை” சொல்லிவிட்டது..
2014 இல் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாக வேண்டும்..ஆங்கிலேயன் ஆரம்பித்த அக்கட்சியை இத்தாலிக்காரி முடித்து வைப்பார்..அதற்கு மோடி மீது இம்மாதிரி குற்றச்சாட்டுக்கள் அவசியம்..வரவேற்போம்..
காங்கிரசை வேரறுப்போம்....

Wednesday, November 20, 2013

இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,

"இந்தியாவில் சிறுபான்மையினரை காப்பாற்றுங்கள் --அமெரிக்க பிரதிநிதிகள்  வேண்டுகோள் ---"
இப்படி ஒரு செய்தி இன்றைய (21.11.13.) இந்து நாளிதழ்  வெளியிட்டுள்ளது.சித்தார்த் வரதராசனுக்கு பிறகு இந்து மிகவும் முன்னேறியுள்ளது..

ஆர்.எஸ்/.எஸ்.--பாஜக..மோதி, இவர்களை பற்றி அவதூறாக கட்டுரைகளாக வந்தால்தானே   விமர்சனங்கள் வருகிறது..அதே "அவதூறுகளை" செய்தியாக வெளியிட்டுவிட்டால், யாரும் கேட்க முடியாதல்லவா?..

அதோடு கூட ஏதாவது "லெட்டர் பேட்  " அமைப்பு ஒன்றின் மோதி எதிர்ப்பு பேட்டியையும், பிரசுரித்து, தன்  "இந்துத்வா எதிர்ப்பு அஜண்டாவையும்" பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா? .--இதைத்தான் இந்து இன்று செய்துள்ளது..சமீபகாலமாக செய்தும் வருகிறது..

இதுதான் இந்துவின் புதிய "பாலிசி " மாற்றம்..அதுசரி..கிடக்கட்டும்.
.நான் விஷயத்துக்கு வருகிறேன்..
இந்தியாவில் சிறுபான்மை மதங்களுக்கு ஆபத்தாம்..அது பாது காக்கப்படவேண்டுமாம்..இந்து தேசியவாத இயக்கங்களின் வன்முறை திட்டங்களிலிருந்து சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டுமாம்..இப்படி தீர்மானம் போட்டிருக்கிறது அமெரிக்க செனட் சபை..

அட மட  சாம்பிராணிகளே..உங்களுக்கு யாரடா இப்படி  தகவல் கொடுத்தார்கள்..இந்தியாவில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், ஜாலியாக சாப்பிட்டுவிட்டு.."ஹாயாக", தானே இருக்கிறார்கள்...அவர்களுக்கு என்ன ஆபத்து?--எங்கே ஆபத்து?--யாரால் ஆபத்து?--யாராவது சொல்லமுடியுமா?--..

எந்த ஊரிலும், எந்த மாநிலத்திலும், பெரும்பான்மையினர் வம்பு பண்ணுவதே இல்லை..சிறுபான்மையினர் செய்யும் அடாவடிக்கு, வம்புக்கு, குறும்புக்கு பதிலடி கொடுக்கிறார்கள்..அவ்வளவுதான்டா
..
அதுவும் பத்துக்கு ஒரு பதிலடிதான்..அதுகூட கூடாது என்கிறீர்களா?..

2002 இல் ரயில் பெட்டிக்குள், 40 லிட்டர் கெரசினை ஊற்றி, 56  கரசேவகர்களை உயிரோடு எரித்தார்களே..அதில் 41 பெண்கள் மற்றும் சிறுவர்கள் இறந்தார்களே..அதற்க்கு பிறகு தானே குஜராத் அதற்க்கு பதிலடி கொடுத்தது....இது தவறா?
56 பேருக்கு 721 முஸ்லீம்களை கொன்றது ஜாஸ்தி என்கிறீர்களா?அல்லது இதுவரை தொடர்ந்து அடி வாங்கித்தானே வந்துருக்கிறீர்கள்..இப்போது திருப்பி கொடுப்பது எப்படி நியாயம் என்கிறீர்களா?

முசாபர் பூரில் "ஜாட்" இனப்பெண்ணை கேலி செய்து மானபங்க படுத்தியது யார்?இதற்க்கு நியாயம் கேட்டு ஜாட் இனமக்கள், மகாபஞ்சாயத்தை கூட்டியபோது, அதில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்றது யார்?--இதற்க்கு ஜாட் மக்கள் பதிலடி கொடுத்ததில் முஸ்லீம்கள் இறந்தால் அது அநியாயமாம்..இது எந்த ஊர் நியாயம்..

சரி இதையெல்லாம் அமெரிக்கா காரன் கேட்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை..அமெரிக்கா காரனுக்கு நம்மை கேள்வி கேட்க யார் உரிமை கொடுத்தது?..

ஒருவேளை அமெரிக்காவுக்கு வைத்தியத்துக்கு போன சோனியாகாந்தி உரிமை  கொடுத்திருப்பாரோ?.இந்தியா அவரது புகுந்த வீட்டு சொத்தல்லவா?.

அமெர்க்காவே நீ உன் வேலையை பார்..எங்கள் நாட்டில் தலைவிடுவதற்க்கு நீ யார்..உன்னிடம் பற்றவைக்கும் "எட்டப்பன் " யார் என்று சொல்..நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..

ஸ்னோ டேன் --ஸ்னோ டேன் --என்று ஒருத்தன் --நீ இந்தியா உட்பட பல நாடுகளில் உளவு பார்த்தை போட்டு உடைத்தது விட்டு உன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு, ரஷ்யாவில் தஞ்சமடைந்த பிறகும், உனக்கு எங்களை பேச என்ன தகுதி இருக்கிறது..

ஆப்கானிஸ்தானத்திலும், இராக்கிலும், போர் நெறிமுறைகளை உடைத்தெறிந்துவிட்டு, அப்பாவி முஸ்லீம்களை நீ கொன்று   குவித்ததை..விக்கி லீக்ஸ் படம் போட்டு காட்டிய பிறகு..நீ இந்திய முஸ்லீம்களிடம் காட்டும் பரிவு..போலியானது என்று உலகத்துக்கு தெரியாமலா இருக்கும்?

இந்தியாவில் பாதுகாப்பு இந்துக்களுக்குத்தான் தேவை என்ற நிலை இருக்கும் போது அமெரிக்க தீர்மானத்தை படித்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது..

அமெரிக்காவின் அடுத்த தீர்மானம் இப்படித்தான் இருக்கும்

.."உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட சோனியா காந்தியை இந்து தேசியவாதிகள் தோற்கடித்து விட்டார்கள்.".

."மகாத்மா காந்தியே தன அடுத்த வாரிசு நீதான்"-- என்ற ராகுல்காந்தியை ,இந்து தீவிரவாதிகள் தோற்க்கடித்தார்கள்..இது சிறுபான்மையினருக்கு ஏற்ப்பட்ட ஆபத்து.".....

இதுதான் அமெரிக்காவின் அவலட்சணம் ,
..

Tuesday, October 29, 2013

பாட்னா குண்டு வெடிப்பில் மக்கள் உயிரைகாத்த மோடியின் சமயோஜிதம்

தன்னுடைய ஊருக்கு வந்த வேற்று மாநில முதல்வர் நரேந்திர மோடியை வரவேற்றால் “ மதவாதம் தொற்றிக்கொள்ளும்” என நித்தீஷ் குமார் பயந்து ஊரைவிட்டு ஓடியதை புரிந்து கொள்ள முடிகிறது..பிஹாரின் 20 சத முஸ்லீம் ஓட்டை அவர் நம்பி இருப்பதால் வந்த பயம் இது..
ஆனால் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் வளையத்தின் இசட் பிளஸ்--பாதுகாப்பு  பிரிவில் இருக்கும் நரேந்திர மோடிக்கும் அவரது பேச்சு கேட்க வரும் மக்களுக்கும் பாதுகாப்பு மறுத்து ஊரைவிட்டு ஓடிய நித்தீஷ்குமார் போன்ற கோழைகளை பார்க்கமுடியுமா?
10 லட்சம் பேர் கலந்துகொண்ட பாட்னாவின் காந்திமைதான கூட்டத்தின் 8 வாயிலகளிலும், ஒன்றில்கூட “மெட்டல் டிடக்டர்”  சோதனை இல்லை..மேடையை சுற்றிலும், மைதானத்தை சுற்றிலும், “பாம் ஸ்குவாட்” இல்லை..மோப்ப நாய் இல்லை.. போதிய எண்ணிக்கையில் போலீஸ் காரகள்கூட இல்லை..வெடிக்காத குண்டுகளை மக்களே கண்டுபிடித்தபின்பும், அதை “டிஃப்யூஸ்” செய்ய போலீஸ்காரகள் வரவில்லை..ஆக மொத்தம் அரசும் போலீசும் கண்டுகொள்ளாத ஒரு மாபெரும் பேரணி..பாதுகாப்பின்றி நடை பெற்றுள்ளது.
எப்படியாவது..யாராவது,,,ஒருவெடிகுண்டாவது வெடித்துச் சிதறி.. மோடிக்கு ஆபத்து ஏற்படுத்திவிடாதா?அவரை அரசியல் ரீதியாக வீழ்த்தமுடியாததால், குண்டின் மூலமாகவாவது வீழ்த்திவிடலாம்..என்ற நப்பாசையில் நடந்த சம்பவங்களாகவே இவைகள் தெரிகிறது..
இதைவிட கேவலம், காங்கிரஸ்காரர்களின் பேச்சும் நடந்துகொண்ட விதமும்தான்..
“இந்த குண்டுவெடிப்பினால், பா.ஜ.க விற்கு மாபெரும் லாபம்” ...என கோமாளி திக்விஜை சிங் “டுவீட்” செய்ததும்..”குண்டு வெடித்த.. இடமும், நேரமும், பாஜகவிற்கு சாதகம்” என ஐக்கிய ஜனதா தளத்தில் பொதுச்செயலாளர் சபீர் அலி பேட்டி கொடுத்ததும், “மோடியின் பேச்சால்தான், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது” என் காங்கிரசின் பி.சி.சாக்கோ உளரியதும் கேவலத்திலும், கேவலமானது..இதைவிட கேவலம், நம்மூர் பீட்டர் அல்பொன்ஸ் “ குண்டு வெடிக்கும் போது மோடி ஏன் பேசிக்கொண்டிருந்தார்” என்பதும்தான்..
உயிர்ப்பலிகளில் அரசியல் லாபம் பார்க்கும் கேவலமான எண்ணம் காங்கிரசுக்கு மட்டுமே உண்டு..அதனால்தான், தன் பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்கு கண்ணீர் சிந்தி ராகுல் அதை ஓட்டாக மாற்ற முயன்றதை நாடும் நாமும் சில நாட்களுக்கு முன் பார்த்தோம்..
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மொகல் சாராய் ரயில் நிலயத்தில் கொல்லப்பட்டதையும், டாக்டர் ஷாம்பிரசாத் முகர்ஜி காஷ்மீர் சிரையில் ஷேக் அப்துல்லாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டதையும், தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி, என நூற்றுக்கணக்கான பாஜக, இந்து இயக்க சகோதரர்கள் கொல்லப்பட்டதையும், ராகுல் போல நீலிக்கண்ணீர் வடித்து பாஜக என்றும் ஓட்டாக மாற்ற முயற்சித்தது கிடையாது..
ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட அன்று நானும் மறைந்த அகில இந்திய தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி அவர்களும், தென்கனிகோட்டையில் பிரச்சாரம் முடித்து மதுரை திரும்பிகொண்டிருந்தோம்...சேலம் வந்தபோது ராஜீவின் கொலை செய்தி கிடைத்தது..பத்திரிக்கையாளர் ஒருவர் “ராஜீவின் மரணம் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக லாபம்தானே?” எனறபோது கொதிதெழுந்த ஜானாஜி..”ஒருவரின் உயிரிழப்பில் அரசியல் லாபம் தேடும் கேவலமான எண்ணம் பாஜகவிற்கு கிடையாது” என்றார்..இதுதான் பிஜேபி..
சரி..சப்ஜெட்டுக்கு வருகிறேன்...பாட்னாவில் முதல் குண்டு வெடித்தபோதே..மோடி பாட்னா விமான நிலையம் வந்து விட்டார்...அவரது பாதுகாப்பு அதிகாரிகள்(குஜராத்)  மீட்டிங்கை கேன்சல் செய்ய அறிவுறுத்தியும், மோடி அப்படி செய்யவில்லை...மேடையில் பேசிய எந்த தலைவரும் குண்டு வெடிப்பை வெளியடவில்லை..பேச்சை நிறுத்தவில்லை..கொஞ்சம்கூட பதட்டத்தை காண்பிக்கவில்லை..
அவ்வாறு செய்திருந்தால், அடுத்தடுத்து வெடித்த குண்டுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் மாண்டிருப்பர்...பயத்தினால் மக்கள் முண்டி அடித்து ஓடி, ”ஜன நெரிசல் “ ஏற்பட்டு அதிலும் ஆயிரக்கணக்கன அப்பாவிகள் மரணமடைந்திருப்பர்..”அதிமேதாவி பீட்டர் அல்போன்ஸ்சே “ புரிந்து கொள்ளுங்கள்.
மோடியின் தைரியம்..சமயோஜிதத்தினால், அத்தனை பேரும் காப்பாற்றப்பட்டனர்..”எல்லோரும் உடனடியாக  நேராக பத்திரமாக வீடு போய் சேருங்கள்” என்பதைதவிர மோடி வேறு ஏதும் சொல்ல வில்லை..
யார் ராஜதந்திரி...யார் மக்கள் விசுவாசி...யார் சிறந்த நிர்வாகி...யோசியுங்கள்...பயத்
தை விதைத்து, மதத்தை பிரித்து, மக்களை பலிகொள்ளும் காங்கிரசா?..இம்மாதிரி பயங்கரமான நிகழ்ச்சியிலும், சிறந்த முறையில் மக்களை வழிநடத்தி அத்தனை பேரையும் காத்த மோடியா?---

தீர்ப்பு தெரிந்ததுதானே..

Monday, October 28, 2013

”அவா” மீது ப.சிதம்பரத்துக்கு என்ன ஆத்திரம்

ப.சிதம்பரம் சார்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார் இனம்…மிகுந்த பண்பாளர்கள்..சிறந்த தமிழ் பற்றாளர்கள்…ஆன்மீக வாதிகள்..பெருந்தனக்காரர்கள்…கொடையாளிகள்..நிறைந்த இனம்..

எல்லாவற்றிக்கும் விதிவிலக்கு உண்டல்லவா?...அந்த விலக்கு இந்த உலக்கை ப.சிதம்பரம்தான்..

“அவா” பற்றிய அவருடைய பேச்சு அருவருக்கத்தக்கது..ஒருவேளை “சரக்கடித்துவிட்டு” பேசியிருப்பாரோ?—அவர் “சரக்குள்ள” மனிதர் என்பார்களே?—சரக்கு “தீர்ந்ததால்” உளறினாரோ?..

இப்படி எழுதுவதற்கு எனக்கு கூச்சமாக உள்ளது…அது என் எழுத்தின் “அர்த்தம் பற்றியல்ல..என் எழுத்தின் காரணகர்த்தாவான “அந்த அனர்த்தத்தை” பற்றியது....

சிதம்பரத்திற்கு அப்படி என்ன “அவா” மீது ஆத்திரம்--…நிறவேறாத அவரது “அவா”க்களால் கஷ்ட்டப்படும் சிதம்பரம் “உவ்வ்வ்வ்வே” செய்யுமளவு பேசுவது அவரது “அவா”வோ

பிரதமராகும் “அவா” சிதம்பரத்துக்கு உண்டு—காங்கிரஸ்
தலைவராகும் “அவா”வும் சிதம்பரத்துக்கு உண்டு..
இவை புரிந்து கொள்ளமுடிந்த”அவா”க்கள்
காங்கிரசில் நேரு குடும்பத்தை சேர்ந்த “அவா”ளுக்குத்தானே..பிரமர் பதவி…இது தெரிந்தும் சிதம்பரம்..தன் “அவா”வை மாற்றிக்கொள்ளாமல், ஏன் பார்த்த”அவா”ளை..கேட்ட “அவா”ளை எல்லாம் கடிக்கிறார்..அவர் கடிக்க வேண்டியது நேரு குடும்ப “அவா”ளை.—(அதை செய்தால் இவர் பல் மட்டுமல்ல இவரே..தெரித்துப் போவார்.)..

அதை விட்டு விட்டு தினமணியையும், தினமலரையும், கடிப்பது ஏன்?
“அவா” வெகுண்டு எழுந்தால்..”உயரே” போய்விடுவீர்…..புரிந்ததா..சிதம்பரம்?

-- ஆர்.எஸ்.எஸ்.ஐ அவதூறாக பேசி கோர்ட்டை அவமதித்த ..ப.சிதம்பரத்தை கைது செய்

இளவரசர் ராகுல் காந்தியின் தவறான  பேச்சால், கொள்கையால், செய்கையால், கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமானது.

ஆனாலும்..
அந்த தொடரும் உளறல்களால், நாடு நன்மை அடையப்போகிறது இன்று..

ஆம்..முசாபர்பூரில் அவரது "ஐ.எஸ்.ஐ." உளறல்கள், ராஜஸ்தானில், அவரது, பாட்டி இந்திராகாந்தி, அப்பா ராஜீவ் போல நானும் கொல்லப்படுவேன் " என்ற ஒப்பாரிகள், இன்று மக்களிடையே அவரது "அசல் முகத்தை காட்டி". நரேந்திர மோடிக்கு  மேலும் ஆதரவை கூட்டி வருகிறது..

அதே மாதிரி இன்று ராகுலின் ஒப்பாரி கூட்டத்தில்  மேலும் ஒருவர் சேர்ந்திருக்கிறார்..அவர்தான் செட்டிநாட்டு மக்களின் பெயரை கெடுக்க வந்த ப.சிதம்பரம் அவர்கள்.

வல்லபாய் பட்டேலும் சரி, கபூர் கமிஷனும் சரி, பிற்காலத்தில் ஜவர்ஹர்லால் நேருவும் சரி, காந்திகொலைக்கும் ஆர்.எஸ். எசுக்கும்,எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தீர்ப்பளித்த பின்பும், இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதை உறுதி செய்தபின்பும், "சிறுமதி " படைத்த ப.சிதம்பரம் மீண்டும் ஆர்.எஸ்.எச்சை,, தொடர்பு படுத்தி பேசுவது, சட்டவிரோதம், மட்டுமல்ல..கோர்ட்டை அவமதித்ததும் ஆகும்...

எனவே அவர்மீது "கோர்ட் அவமதிப்பு வழக்கு மற்றும் மான நஷ்ட்ட வழக்கும் " தொடரவேண்டும்..

அவரது சிந்தனைகள் (அப்படி ஒன்று இருந்தால் ) செத்துப்போய்விட்டது...மண்டை கனத்துப்போய் விட்டத்து..மனம் மற(ந )த்துப்போய் விட்டது....அதனால்தான் திருச்சி பொது கூட்டத்தில் வல்லவன் வாஜ்பாயை அமரராக்கி ஆனந்தம் கண்டிருக்கிறார்..

யார் இருக்கிறார்...இல்லை..என்பதைக்
கூட நினைவில் வைக்க முடியாதவர் இந்தியாவின் "பொக்கிஷ" மந்திரி..நேற்று திருச்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் "அமரரான வாஜ்பாயை பற்றி பேசுவது சரியாகாது" என "தவறாக " பேசியுள்ளார்..மேடையில் இருந்த நம் முன்னாள் சகா ..இந்நாள் காங்கிரஸ் ..திருநாவுக்கரசரும், சிதம்பரத்தின் மைந்தர் கார்த்தியும், தலையில் கைவைத்துகொண்டனராம்..நாட்டு மக்களும், ப.சிதம்பரத்தின் இந்த பயித்தியக்காரத்தனமான பேச்சால், தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கின்றனர்..
நேற்று திருச்சி கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஐ வரிக்கு வரி திட்டி தீர்த்த இதே சிதம்பரம்தான், 2001 ஆம் ஆண்டு இரும்பு மனிதர் அத்வானியின் வீட்டுக்கு சென்று என்னை பாஜகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..என மன்றாடியதும், இளகிப்போன அத்வானி அங்கிருந்து இதே திருச்சியில் இருந்த இல.கணேசனிடம் கருத்து கேட்டதும், தலைவனின் கருத்துக்கு முதன்முறையாக எதிர்கருத்து தெரிவித்து "இந்த புல்லுருவியை சேர்க்கவேண்டாம்" என தெரிவித்ததும், அப்படி விரட்டி விடப்பட்டவர்தான் இந்த ப.சிதம்பரம் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இந்திய அரசியல் இப்போது ஒரு புதிய பரிணாமத்தில் செல்கிறது..கடந்த 10 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரத்தால்" கடுமையாக விமர்சிக்கப்பட்டு, மிகப்பெரும்புகழ்  பெற்ற ஒரு "பாசிட்டிவ் மனிதர்" வளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடி ..

அதேபோல் கடந்த 88 ஆண்டுகளாக "நெகட்டிவ் பிரச்சாரங்களை" கண்டு கவலைப்படாத.. மிகவேகமாக வளர்ந்து ..உயர்ந்த "பாசிட்டிவ்" இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.மாளிகைகளை உருவாக்கும் மகாபாரத "மயன்" போல மனிதர்களை உருவாக்கி வருகிறது..

ஆக பதவியை விட்டு ஆட்சியை விட்டு நாட்டை விட்டு போகின்ற காலத்தில், காங்கிரசும், ராகுலும், சிதம்பரமும், தங்கள் தவாறன பேச்சினால், மோடியையும், ஆர். எஸ்,எஸ்.ஐயும் வளர்த்துவிட்டு செல்கின்றனர்..தவறிலும் ஒரு நல்லது செய்வதால், நரகத்தில் அவர்கள் கழிக்கும் காலத்தை குறைத்து விடுமாறு  எல்லாம் வல்ல எமதர்ம ராஜனை பிராத்திக்கிறேன்

Monday, October 14, 2013

சிறைச்சாலைகளில் முஸ்லீம்கள் எண்ணிகை உயர்வுக்கு யார் காரணம்?

கடந்தவாரம், புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் என்னோடு கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் --ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்..டாக்டர்.ஜஹருல்லா..இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்கள் தொகையைவிட சிறைச்சாலைகளில் அவர்களின் சதவீதம் அதிக மாக உள்ளது..என்றார்..வேண்டுமென்றே அரசு பொய்வழக்கு போட்டு முஸ்லீம் இளைஞர்களை சிறையில் அடைப்பதாக குற்றஞ்சாட்டினார்..
நான் அவரிடம் கேட்கும் கேள்வி இதுதான்...மேற்குவங்க மக்கள் தொகையில் முஸ்லீகள் 25 சதவீதம் உள்ளார்கள்..மேற்கு வங்க சிறைச்சாலைகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை 46 சதவீதம்..மேற்கு வங்கத்தை இதுவரை 35 ஆண்டுகாலமாக ஆண்டது இவர்களுடன் நெருக்கமாக்--ஒட்டி உறவாடிய இடது சாரி--வலதுசாரி கம்யூனிஸ்ட்கள்..இப்போது சொல்லுங்கள் ஜவஹருல்லா சிறைச்சாலைகளில் முஸ்லீம் எண்ணிகையை பெருக்கியது யார் .?
உ.பி.யின் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 20 சதவீதம்..உத்திரப்பிரதேச சிறைச்சலைகளில் முஸ்லீம்கள் 27 சதவீதம்..உ.பி.யை அப்போது காங்கிரசும், இப்போது முஸ்லீம்களின் பெருவாரியான ஆதரவோடு ஆண்டுகொண்டிருப்பது முலயாம் சிங்கின் சமாஜவாடி கட்சியும் தான்...இப்போது சொல்லுங்கள் ஜவஹருல்லா..முஸ்லீம்களின் இந்த நிலக்கு யார் காரணம்?
மராட்டிய மக்கள் தொகையில் 10 சதவீதம் முஸ்லீம்கள்..சிறைச்சாலைகளில் அவர்களின் தொகை 32 சதவீதம்..மராட்டியத்தை அன்றும் இன்றும் யார் ஆளுகிறார்கள்..உங்களின் தயவோடு..ஆதரவோடு காங்கிரசும், சர்த்பவார் கட்சியும் ஆளுகிறார்கள்..ஜவஹருல்லாவிற்கு சிறைச்சலைகளில் முஸ்லீம்கள் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்..
நீங்கள் ஆளும் குஜராத் பற்றி மட்டும் நீகள் ஏன் சொல்ல வில்லை  என்று நீங்கள் கேட்டு விடக்கூடாதல்லவா? சொல்கிறேன் கேளுங்கள்..குஜராத் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 9 சதவீதம்..
.குஜராத் சிறைச்சலைகளில் அவர்கள் 18 சதவீதம்.

.இப்போது சொல்லுங்கள் எஸ்.ஆர்.சேகர்..முஸ்லீம்கள் மீது மோடி அரசு பொய் வழக்கு போட்டதால்தானே எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது..என்று நீங்கள் கேட்க நினைப்பது என் காதில் விழுகிறது..
குஜராத்தில் மோடிக்கு இது 4 வது முறை..பாஜகவிற்கு 5 வது முறை..1995 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே இதே சதவீதம் தான் அங்கு தொடர்கிறது என்ற உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்..
பாகிஸ்தான் எல்லை பகுதியில் குஜராத் இருப்பதால், கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை காலம் காலமாக முஸ்லீம்கள் செய்து வருவது சரித்திர பூர்வமான உண்மை...அதனால் வந்த உயர்வு இது..
இப்போது மோடி காரணம் என்று நீங்கள் கூறினால், மோடிக்கு முன் யார் காரணம்?
ஜவஹருல்லா பதில் சொல்வாரா? .

காங்கிரசின் “பலவேஷம்”

1853 ஆம் ஆண்டு தொடங்கிய ராமஜன்மபூமி பிரச்சனை---1857 ஆம் ஆண்டு “பிரச்சனைக்குறிய பகுதிகளை “ வேலிபோட்டு பிரித்தது...பிரிட்டிஷ் அரசு..பிறகு நாட்டையே பிரித்தது..அதுவேறு விஷயம்..

1949 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேரு ஆட்சியில் அதாவது காங்கிரஸ் ஆட்சியில், ராமர் கோயிலுக்குள் இந்துக்கள் ராமபிரானின் விக்கிரஹத்தை கொண்டுபோய் வைத்தனர்..பிரச்சனை வெடித்தது..நேருவின் காங்கிரஸ் அரசு, இந்து ,முஸ்லீம் இரண்டு பக்கத்தையும் கோர்ட்டுக்கு போகச்சொல்லி, கோயிலுக்கு பூட்டு போட்டது..
ஆக 90 ஆண்டுகாலமாக பூட்டிக்கிடந்த கோயிலுக்குள் ராமர் விக்கிரத்தை வைக்க ஆதரவு தந்தது பண்டித நேருவின் அரசு..
அதற்குப்பிர்கு பல்வேறு போராட்டங்கள்...1984 க்கு பிறகே விஷ்வஹிந்து பரிஷத் களத்தில் இரங்குகிறது..
1986 இல் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் அரசு கோயிலின் பூட்டை திறந்து வழிபாட்டுக்கு வழிவிட்டது.--.ஷாபானு என்கிற முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக ஜீவனாம்சம் கொடுக்கவேண்டிய தீர்ப்பை மாற்றியெழுத, இந்திய தண்டனை சட்டத்தை மாற்றி எழுதியதற்கு பரிகாரமாக கோயிலை திறந்துவிட்டார் ராஜீவ்காந்தி.
மறுபடியும் பற்பலபோராட்டங்கள்.....1992 டிசம்பர் 6 ந்தேதி, 1.5 லட்சம் கரசேவகர்கள் ஒரே நேரத்தில் தொட்டதால், பாழடைந்த அந்த பழைய கட்டிடம் இடிந்து வீழ்ந்தது சரித்திரம்...அது தரைமட்டமானதை உறுதி செய்து கொண்ட பிறகே..அங்கு ராணுவத்தை அனுப்பி தன் ”ஸ்ரீ ராமர் பக்தியை” காட்டிக்கொண்டார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்..அப்போது உள்துறை மந்திரியாக இருந்த எஸ்.பி.சவாணிடம்  இது பற்றி கேட்ட போது பாப்ரி மஜ்ஜித் கட்டடம் இடிக்கப்பட்டதே தனக்குத்தெரியாது என்றார்...
காங்கிரசுடன் முஸ்லீம் லீக்கும் சரி, மற்ர முஸ்லீம் இயக்ககங்களும் சரி, இஸ்லாமிய வாக்களார்களும் சரி, இக்காலகட்டங்களில், நட்பாகவும் விசுவாசமாக வும் இருந்துள்ளார்கள் என்பது நன்றாக தெரிந்த ஜவஹருல்லா..பி.ஜே.பி.யை குற்றஞ்சாட்டுவது என்ன நியாயம் என்பது புரிய வில்லை....

பேப்பரை கிழித்து சட்டத்தை காப்பாற்றிய பலவான் --ராகுல் காந்திநமக்கெல்லாம் தெரியும்--உழல் வாதிகளை காப்பாற்றும் அவசர சட்டத்தை ராகுல்காந்தி எப்படி தாக்கல் நிலையிலேயே தாக்கி அழித்தார் என்பது....

"பேப்பரை கிழிப்பேன் " என்கிற ஒரே ஒரு வாசகமும், "நான் சென்ஸ்" என்கிற அவரது ஒரே ஒரு வார்த்தையும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபை, கூடி விவாதித்து, எடுத்த, முடிவை மாற்றக்கூடிய வல்லமை பெற்று இருக்கிறது என்றால், ராகுல் காந்தி ஒரு " ராம்போ" தானே..

இதே மாதிரி ஒருசில பேப்பரை கிழித்து போட்டால், 2 ஜி முடிந்தது--ஆதர்ஸ் ஒழிந்தது--நிலக்கரி ஊழல்  போயே .."போயிந்தி"--அல்லவா..

சி.பி.ஐ டைரக்டர் சும்மா உட்கார்ந்திருப்பார்..சி.பி.ஐ. கோர்ட்டுகள் விடுமுறையில் பூட்டியிருக்கும்..சுப்ரீம் கோர்ட்டுக்கு ஊழல்களில் தலையிட்டு தீர்ப்புவ்ழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...கஷ்ட்டப்பட்
டு பிரதமர் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம், ராகுல், ஒரேநாளில் முடித்து விட்டுரிப்பார் அல்லவா?
ராகுல்ஜி உங்களுடைய இவ்வளவு பெரிய பலத்தை இவ்வளவு நாள்--வருடங்கள்-- ஏன் மூடி மரைத்திர்கள்?--உங்களிடம் ஒரே ஒரு கேள்வி ராகுல்..இவ்வளவு நாள்  இந்த பலத்தை எங்கு மறைத்தி  வைத்திருந்திர்கள்,என்ற ரகசியத்தை சொல்விர்களா...ராகுல்ஜி..

இன்னொரு உபகெள்வி ராகுல்ஜி ...இந்த பலத்தை மன்மோகன் சிங்கை மிரட்ட மட்டும்தான் பயன் படுத்துவிர்களா?---அல்லது உங்கள் மச்சான் ராபர்ட் வதேராவுக்கு, எதிராகவும் பயன்படுத்தும் "தகிரியம் "--உங்களுக்கு உண்டா ராகுல்ஜி..

ஏதாவது தப்பா கேட்டிருந்தா...வருத்தப்படாதீங்
க ராகுல்ஜி..இன்னும் 6 மாதத்தில் நீங்கள் பிரதமர் ஆகிவிடுவீங்க ராகுல்ஜி...இத்தாலிக்கா?--இல்ல..வேறு வெளினாட்டுக்கா..என்பதை அப்புறம் சொல்றேன் ராகுல்ஜி...

Saturday, October 12, 2013

காற்றில் பறக்கும் இந்தியாவின் மானமும், ரூபாய் மதிப்பும்

ஆகஸ்ட் 2013 இல் முடிந்த 20 மாதத்துக்குள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.45 லிருந்து ரூ.70 ஆனது..இது வரலாறு காணாத வீழ்ச்சி..
கொந்தளிக்கும் நிலையிலும், “அமைதி காக்கவும், பதட்டப்படாதீர்கள்”--என பதபதைக்காமல் கூறியவர் நமது நிதி மந்திரி--ப.சிதம்பரம் அவர்கள்.
இந்த கஷ்ட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை வேறு ஏற்றினார்கள் என்பது வேறு விஷ்யம்.
இந்நிலைக்கு காரணம் என்ன? இதை சீர் செய்ய முடியுமா/--எப்படி என்பதற்கு சிறந்த பொருளாதார மேதையும் சிதனையாளருமான..ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி அவர்கள்,,தினமணியில் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்..

இன்றைய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்மற்றும் தங்கம்.. இறக்குமதிதான்..அதுமட்டுமல்ல நடப்புக்கணக்கு பற்றாக்குறையும் ஒரு காரணம்..இவை பொருளாதார புலிகள் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தரப்பில் வைக்கப்படும் வாதம்..

உண்மைக்காரணம் என்ன?

நடப்புக்கணக்கு பற்றாக்குறை இன்ரைக்கு நேற்றைக்கு உண்டான பிரச்சினை அல்ல..ஆட்சியை விடும் போது 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு ரூ.2200 கோடி உபரி வைத்துவிட்டு போனது..அதற்கு பிரகு தொடர்ந்து இறங்கு முகம்தான்..217 கோடியில் ஆரம்பித்த பற்றாக்குறை கடந்த 9 ஆண்டுகளில் பெருகி 33900 கோடியனது..இந்த பற்றாக்குறையும் காரணமும் திடீரென முளைத்தல்ல..

இறக்குமதி வாயிலை எந்த கட்டுப்பாடுமில்லாமல் திறந்து விட்டு கடந்த 10 ஆண்டுகளில், உள்நாட்டில் தயாரிக்கும், தயாரிக்க முடிந்த மூலதபொருட்களை கட்டுக்கோப்பில்லாமல் இறக்குமதி செய்ததன் விளைவு..தொழில் உற்பத்தி 56 சதவீதம் வீழ்ச்சி--ஆனால் இறக்குமதி பொருட்கள் 79 சதவீதம் வளர்ச்சி..ஆபரேஷன் சக்சஸ்..பேஷண்ட் மரணம்..இது பெரிய முரண்பாடு..மூலதனபொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தாதும், ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்..இது மரைக்கப்படுகிறது..

அரசின் மோசமான திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடின்மை காரண்மாக வருவாயைவிட செலவு மும்மடங்கு அதிகமானது..கண்டிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஆளில்லாத காரணத்தால், ஐ.மூ.கூ அரசின் முதல் ஐந்தாண்டை விட இரண்டாவது ஐந்தாண்டு,செலவினம் மும்மடங்கு அதிகமாகி, மோசமானது..இதுவும் ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமானது..

வருமான வரும் வழிகளை அரசெ அடைத்த ஆச்சரியம் ஐ.மூ.கூ ஆட்ட்சியில் நடந்தது..சுங்க வரி உட்பட பல்வேறு வரிகள் குறைக்கப்பட்டன..சிலவை விலக்களிக்கப்பட்டன..சாதாரண மக்களுக்கல்ல..கார்ப்பரேட் என்னும் பண முதலாளிகளுக்கு..இதனால் அரசுக்கு 25 லட்சம் கோடி வருவாய் இழப்பு..16 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை..இது ரூபாயின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று..

ஆண்டுக்கு ஆண்டு போடும் பற்றாக்குறை பட்ஜெட்டும் அதை சரிகட்ட “கந்து வட்டி போடும் நாடுகளில் கடன் வாங்கியதும் “ ரூபாயின் வீழ்ச்சிக்கு மேலும் ஒரு காரணம்..இதனால் நம் வெளிநாட்டுக்கடன் மெலும் 21.6 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகியது..இதுவும் ஒரு காரணமாகும்..

எரியும் நெருப்பில் எண்ணெய் சேர்த்த மாதிரி, நம் எதிரி நாடான சீனாவிடமிருந்து, ஏராமாளமான பொருட்களை இந்த ஆட்சியில் இறக்குமதி செய்யப்படுகிறது..எந்த அளவிற்கு என்றால் நாட்டின் மொத்த இறக்குமதியில் 25 சதம் அதாவது கால் பங்கு..அதுவும் மிகக்குறைந்த சுங்கவரியில்..சீனாவின் “குப்பைக்கிடங்காக” இந்தியாவை ஆக்கியது ஐ.மு.கூ அரசாங்கம்..இத்னால் மிகப்பெரிய வர்த்தக நிதி பற்றாக்குறை ஏற்பட்டது

..இதுவும் ஒரு பெரும் காரணம்..
இப்படி அடுக்கப்பட்ட காரணங்கள் அரசுக்கும் அடியாளர்களுக்கும் தெரியாததல்ல..தங்கள் தோல்வியை ஏற்க மறுக்கும் இந்த பொருளாதார புலிகள், கச்சா எண்ணெய்--தங்கத்தின் மீது மட்டும் பழியை போட்டு தப்பிக்க நினைக்கின்றனர்..
இந்தியாவையும் ரூபாயையும் காப்பாற்ற முடியுமா?..நமது இயற்கையான கலாச்சார அமைப்பு முறை ஒன்று நம்மை அறியாமலே--நமக்கு தெரியாமலே நம்மை காப்பாற்ரிக்கொண்டிருக்கிறது..
அதுதான் நம் குடும்ப அமைப்பும் அதன் சேமிக்கும்
பண்பும்..அதன் காரணமாக நம் வங்கிகளில் 10 லட்சம் கோடி ரூபாய் ஆண்ட்தோறும் சேமிப்பில் இருக்கிறது..வெளிநாடு வாழ் உள்ளிட்ட நம் இந்திய குடும்பங்கள் அந்நிய செலாவணியில் சுமார் 330 லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு வைக்க காரணமாக இருந்து வருகிறது..இன்று நம் நாட்டை காப்பாற்றிக்கொண்டிருப்பது இந்த அரசும் ஆட்சியும் அல்ல.
இன்னும் இந்தியாவை சோமாலியா போல் கடன்கார நாடாக மாற்றாமல் காப்பது நம் அரசும் ஆடியாளர்களும் அல்ல..

.நம் குடும் அமைப்பும் அதன் சேமிக்கும் பண்பும்தான்..
   

"தி இந்து" வில் வந்த ஞானியின் கட்டுரைக்கு பதில்

"கடந்தகாலத்தை" மறந்துவிடும்..."ஞாபகமறதி "--வியாதி இந்தியர்களுக்கு அதிகம் என்பதால், ஞானி போன்றவர்கள் "ஞானோபதேசம் " செய்கிறார்கள்...

"தனி நபர் வழிபாடு " என்பதும், "தனிநபர் துதி" என்பதும், இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது..என்பது ஞானிக்கு தெரியாதது அல்ல..

நேருவுக்கு பிறகு ( சாஸ்திரி தவிர )..இந்திரா--ராஜீவ்---சோனியா (நிழல் பிரதமர் )---ராகுல் என குடும்ப அரசியல், தனிக்குடும்ப அரசியல்,...ஒரே குடும்ப அரசியல் என்ற் காங்கிரசை விமர்சனம் செய்வதை ஞானியின் மனம் ஏற்காது..ஏனெனில் அது பாஜக ஆதரவு நிலைப்பாடு ஆகிவிடும் அல்லவா?

1966 இல் லால்பஹதூர் சாஸ்திரி மறைந்த போது அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த மொரார்ஜி தேசாயை ஓரங்கட்டிவிட்டு நேருவின் புதல்வி இந்திராகாந்தியை பிரதமராக்கியது மாபெரும் ஜனநாயக பின்னணியோ ?

இந்திராவிற்கு சமமாக காங்கிரசில் யாருமே இல்லாததால், 20 ஆண்டுகாலம் அவரும் அவரது மகன் ராஜீவ் காந்தியும், பிரதமர் பதவியை வகித்தார்கள் என்பதும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் மாபெரும் பனி என்பது ஞானியின் வாதமோ? 

1980இல் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்த போது பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கோஷம் என்ன தெரியுமா? உங்களில் யார் பிரதமர் ( ஜனதா கட்சியில் )--எங்களில் ( காங்கிரசில் )இந்திரா காந்தி பிரதமர் ..ஸ்திரமான ஆட்சி--வலுவான பிரதமருக்கு காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற காங்கிரசின் பிரச்சாரம் ஞானிக்கு தெரியாதா?

"நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக" என் கருணாநிதியும்  --தன பங்குக்கு காங்கிரசுக்கு அடித்த ஜால்ரா ஞானிக்கு நினைவில்லையோ --இப்படி 33 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் யார் என்பதை சொல்லி காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை விட முன்னணியில் உள்ளது என்று பறை சாற்றியது அன்றைக்கு நல்லது  இன்றைக்கு கெட்டதோ..

1989 இல் எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததை சுட்டிக்காட்டி, அவர்களால் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூ ற முடியுமா என்று காங்கிரஸ் கட்சி கேட்டதை ஞானி ஏன் சவுகர்யமாக மறந்து விட்டார்..

1996 இலும் 1998 இலும் பிரதமர் வேட்பாளர் யார் என்று பெயரை அறிவித்தாலேயே காங்கிரசுக்கு பதில் தரமுடியும் என்ற நிலையில், வாஜ்பாய் அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்தது..அப்போது நேரு குடும்பத்திலிருந்து பிரதமர் பதவிக்கு சோனியாவோ ராகுலோ முன்வராத காரணத்தால் காங்கிரஸ் பின்வாங்கியது ஞானிக்கு நினைவில்லையா?( இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பயங்கர வாதிகளுக்கு இரையான பயத்தால் )  

2004 ஆம் ஆண்டு கூட மாப்பிளை தோழனாக வந்தவர் மாப்பிள்ளை ஆன கதையும், 2009 இல் அவரே மாப்பிள்ளையாக வேறு வழி இன்றி தொடர்த்தும் அப்போது பாஜக சார்பில் அத்வானி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடு அறிந்த கதை ..நிலைமை இப்படி இருக்க இப்போது புதிதாக பிரதமர் வேட்பாளர் என்று உண்டா என்று ஞானி ஏன் கேள்வி கேட்கிறார் என்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.. 

பாஜக சார்பில் மோடி அறிவிக்கப்பட்டு விட்டார்...காங்கிரஸ் சார்பில் ராகுலை மட்டுமே அறிவிக்க முடியும் அதுதான் காங்கிரசின் கலாச்சாரம்..நேரு குடும்பத்தை விட்டு பிரதமர் பதவி யாருக்கும் கிடையாது.. ஆனால் ராகுலால் மோடியோடு போட்டியிடும் நிலை இன்று இல்லை ஆகவே இப்போது பிரதமர் பதவிக்கு முன் கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நியாயமா என ஞானி போன்றவர்களை விட்டு காங்கிரஸ் குடும்பம் எழுதவைத்துள்ளது..

எப்படி தூற்றினாலும், எவ்வளவு அநியாயமாக எழுதினாலும், பிரச்சாரம் செய்தாலும், மோடியின் எழுச்சியை வருகையை யாராலும் தடுக்க முடியாது..இது காலத்தில் கட்டாயம்..

இந்தியா வளர --மீண்டும் எழ ---மோடியே வா ..என்பதே கோடிக்கணக்கான இந்திய இளைனர்களின் கோஷம்--நம்பிக்கை --எதிர்பார்ப்பு---இதை யாராலும் தடுக்க முடியாது..

Wednesday, October 9, 2013

”இந்து”-வித்யா சுப்ரமணியத்தின் 8.10.13.கோயபல்ஸ் பிரச்சார கட்டுரைக்கு பதில்

தி.இந்துவிற்கு பதிலளிப்பதே அவசியமற்றது..ஆனால் அதன் தொடர்ந்த பொய் கட்டுரைகள், ஆர்.எஸ்.எஸ்.—பாஜக—மோடிமீது அமிலம் கொட்டும் வார்த்தைகள், முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்..

இதற்கு வழி என்ன..--இந்து திருந்தாது…--அது திருந்த வேண்டியது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை..ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரம் முழுக்க முழுக்க இந்துவால் “அப்யூஸ்” செய்யப்பட்டு வருகிறது.
 
வித்யா சுப்ரமணியத்தின் இன்றய கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை…இடை இடையே ஓரிரு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தன் சொந்தசரக்கால் “மேனுபிலேட்” செய்யப்பட்டு எழுதப்பட்ட  கட்டுரை இது..

உண்மையிலேயே இதற்கு பதில் சொல்லவேண்டியதில்லை..ஏனெனில் இதில் ஒன்றுகூட உண்மையில்லை..இந்துவிற்கு பையித்தியம் பிடித்துவிட்டது…தொடர்ந்து “மோடி ஜுரம் “ உச்சத்தில் இருக்கிறது....மோடி ஜுரம் என்பதைவிட “மோடி பயம் “ என்பதே சரியாக இருக்கும்..

64 ஆண்டுக்கு முன்பான சரித்திரத்தை எடுத்து எழுதினால், யாருக்கு உண்மை தெரியப் போகிறது?..யார் ஆதாரங்களை “வெரிஃபை” செய்ய போகிறார்கள்?...என்ற அசட்டுத்தனதில் எழுதியிருக்கிறார்..வித்யா..

திருமதி வித்யா அவர்களுக்கு ஒரு வார்த்தை…..தொடர்ந்து எழுதுங்கள்….இப்படியே எழுதுங்கள்…அப்போதுதான்..நீங்கள் சரித்திரத்தின் பக்கங்களில், ஒரு “ மூன்றாம் தர எழுத்தாளர்—காழ்ப்புணர்ச்சி களஞ்சியம்”—என்று வர்ணிக்கப்பட்டு காணாமல் போவீர்கள்..உங்களின் நோக்கங்களிலும் சரி..எழுத்திலும் சரி…உண்மையும் நேர்மையும் இல்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது…

ஒருவேளை உங்கள் உள் உணர்வில் அது கொஞ்சமாவது இருக்குமானால், நேராக ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், அது எந்த ஊரில் இருப்பதானாலும், அதற்கு செல்லுங்கள்…ஓரிரு நாள் தங்கிய பின் மீண்டும் எழுதுங்கள்..அப்போது உண்மையை உணர்வீர்கள்…

அன்பிற்கினிய இந்து ஆசிரியர் அமெரிக்க குடிமகன்…சித்தார்த் வரத ராசனுக்கு ஒரு வேண்டுகோள்…பாஜக..ஆர்.எஸ்.எஸ்..”வெறுப்பே” உங்கள் பிறவி லட்சியமானால், உங்கள் எழுத்தில் அது தொடருமானால், வாசகர்களுக்கு அது சலித்துப்போகும்..வெறுத்துப்போகும்…ஏனெனில் வாசகர்களுக்கு உண்மை தெரியும்,…
உங்களின் மூதாதையர்கள் கட்டிக்காத்த நடுவு நிலைமை..நாவடக்கம்..( எழுத்தடக்கம்)..இவைகளை நீங்கள்..காப்பற்ற முடியாவிட்டாலும், காற்றில் பறக்க விடாதீர்கள்..

மண்டபத்தில் உள்ளோரையும் ரோட்டில் போவோர் வருவோரையும் தேடிக்கண்டு பிடித்து, பி.ஜே.பி –ஆர்.எஸ்.எஸுக்கு எதிராக எழுதவைத்து வரும், உங்களை பார்க்கும் போது எனக்கு பரிதாபமாக இருக்கிறது..தயவு செய்து ஒரு “சைக்கியாடிரிஸ்டை” …கன்சல்ட் செய்து கொள்ளுங்கள்..

தொடர்ந்து அவதூராக எழுதிவரும் இந்து பத்திரிக்கைகளுக்கு..( தமிழ் பதிப்பையும் சேர்த்து)…எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக…தயவு செய்து அவதூறை நிறுத்தி விடாதீர்கள்…நீங்கள் எழுத எழுதவே…மக்கள்..”இவர்களை பார்க்க வேண்டும்” என எங்களை நோக்கி வருகிறார்கள்..நேரில்  பார்த்ததும்..நேர்மையானவர்கள்” என்பதை புரிந்து எங்களோடு இணைந்து கொள்கிறார்கள்…

செலவில்லாமல்..எங்களுக்கு மிகப்பெரிய  அளவில்..விளம்பரமும்..ஆதரவும்..தேடித்தரும் இந்து குழுமத்திற்கு எங்கள் “நன்றி” உரித்தாகுக…

இத்தனை நாள் உங்களின் அவதூறு பிரச்சாரமே…எங்கள் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய மக்கள் ஆதரவை தேடித்தந்தது..அதே போன்ற ஆதரவை ஆர்.எஸ்.எஸுக்கும் தேடித்தர ஒற்றைக்காலில் நிற்கும் உங்களுக்கு மீண்டும் நன்றி..

சுசில் குமார் ஷிண்டே பேப்பர் படிக்கிறாரா...


“அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை விடுதலை செய்க”--என மத்திய உள்துறை மந்திரி சுசில் குமார் ஷிண்டே...மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது...மாநில உரிமைகளில் குறுக்கீடு செய்வதாகும்..

அப்பாவியா..அடப்பாவியா..என்பது தீர்ப்பு வெளிவரும்போதுதான் தெரியும்..ஷிண்டேயின் இந்த பேச்சு..நீதிபதிகள் மீது “தீர்ப்பை..திணிப்பது” போலாகும்..

சரி..இந்த சுசில்குமார் ஷிண்டே யார்..அவரது நதிமூலம் என்ன?--கர்னாடகதில் வேலை பார்த்த அஸ்ஸாமியர் சிலர் சென்ற ஆண்டு தாக்கப்பட்டதும்,அதனால் ஏற்பட்ட புரளியில் அவர்கள் அஸ்ஸாமுக்கு திரும்ப ரயிலகளில் முண்டியடித்து ஏறி பதட்டப்பட்டது, அந்த பதட்டத்தை தணிக்கவேண்டிய உள்துறை மந்திரி, நிறைய ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று சொல்லி பதட்டதை அதிகப்படுத்தியதும் நாடறிந்ததே..

நம்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 60 சதவீதத்திற்குமேல் ”விசாரணைக்கைதிகள்”...இதில் இந்து முஸ்லீம்--கிறிஸ்தவர் என எல்ல மதத்திலும் அப்பாவிக்கைதிகல் இருக்கிறார்கள்..இதில் முஸ்லீம்களுக்கு மட்டும் சலுகை என்றால்...மற்றமத கைதிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படாதா?--இதனால் ஜெயிலுக்குள்ளே மதக்கலவரம் வெடிக்காதா?

காங்கிரசுக்கு இதைப்பற்றியெல்லாம் என்ன கவலை?..ஆந்திரா பற்றி எரிந்து கொண்டிருப்பதை 5 வருடமாக பார்த்துக்கொண்டு சும்மாதானே இருக்கிறார்கள்..

போலீஸ் மதம் பார்க்கிறது..முஸ்லீம்களை குறிவைக்கிரது என்கிறார்கள்......ஆந்திராவில் பிடிபட்ட பயங்கரவாதிகள்..போலீஸ் பக்ரூதீன்.-பன்னா இஸ்மாயில் வீட்டிலிருந்து கோடிக்கணக்கில் பணமும், டன்..-டன்ன்னாக வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுருக்கிறதே...ஆதா
ரம் இருப்பதால்தானே.போலீஸ் பிடிக்கிறது என்பதை உணரமறுப்பது மதவாதம்தானே...
ஆந்திரா..ஹைதிராபாத்..ஜும்மா மஸ்ஜித் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான 75 முஸ்லீம் இளைஞர்கள் ஆந்திர அரசு தண்டத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர ஹைகோர்ட் தள்ளுபடி செய்திருக்கிறது..

நமது உள்துறை மந்திரி ஷிண்டே பேப்பர் படிப்பதில்லை போலிருக்கிறது..அதனால்தான் மாநிலங்களுக்கு எழுதிய தனது கடிதத்தில்..முஸ்லீம் இளைஞர்களுக்கு தண்டத்தொகையும், நிவாரணமும் வழங்கவேண்டும் என கட்டளையிட்டுருக்கிறார்.ஆந்திர ஹைகோர்ட் உத்தரவை அவரது உதவியாளர்கள் அவருக்கு படித்து சொல்லவில்லை போலும்...

பல்வேறு வழக்குகளில் முஸ்லீம் இளைஞர்கள் தவறாக கைது செய்யப்படுகிறார்கள்..என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது ..இதற்கு யார் காரணம்?

குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க நம்நாட்டில் மேலை நாடுகள் போல் வசதிகள் இல்லை.அஅர்களின் உறவினர்கள், நண்பர்களை அள்ளிப்போட்டு “கவனித்து”-குற்றவாளிகள் தானாக சரணடைய செய்வதுதான் போலீஸ் டெக்னிக்..
ஆனால் முஸ்லீம்களை பொருத்தமட்டில் இந்த டெக்னிக் செல்லுபடியாவதில்லை..

அவர்கள் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து சிறப்பு மரியாதை செய்து, ஹீரோவாக்கி --காட்டிக்கொடுக்க மறுப்பதால்..அதற்கு ஆளும் காங்கிரஸ் அரசும் ஆதரவாக இருருப்பதால் போலீஸ் வேறு என்னதான்  செய்ய முடியும்?

ஆக இது முஸ்லீம்கள் மத்தியிலுள்ள குறைபாடு மட்டுமல்ல..குற்றவியல் நீதி பரிபாலனத்திலும், உள்ளது..லட்சக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன..லாலு பிரசாத்தின் வழக்கு “விரைவு கோர்ட்டிலேயே” 14 ஆண்டு நடந்தபின்பே தீர்ப்பு வெளியாகியுள்ளது..

ஆக முஸ்லீம்கள் நடைமுறை திருந்த வேண்டும்..குற்றவியல் நடைமுறை நீதிபரிபாலத்தில் திருத்தம் வேண்டும்....காங்கிரஸ் “நாகாக்க” வேண்டும்.குற்றவாளிகள் குற்றவாளிகளாக மட்டுமே பார்க்கப்படவேண்டும்.அப்போதுதான்
உண்மையான மதசார்பற்ற தன்மை தழைக்கும்..

Monday, August 12, 2013

டெல்லி எப்போது “டெல்லாஸாக”—(அமெரிக்காவின் ஒரு நகரம் ) மாறியது..?

 
விமான பயணங்களை விட விமான பயணிகள் நம்மை—”நாம் வெளிநாட்டில் இருக்கிறோமா”  ? என்ற நினைப்பை உண்டு பண்ணி விடுகிறார்கள்.

நேற்று டில்லி விமான நிலயத்தில் என் ஊருக்கு செல்லும் இண்டிகோ விமானத்திற்காக அரைமணி நேரம் முன்னதாக வந்து காத்திருந்தேன்.

நேரத்தை பிரயோஜனமாக செலவிட “எழுதலாம்” என்று நினைத்த போது பேனாவைத் தேடினேன்..காணவில்லை…எனவே ‘பறவைகள்..வாட்சிங் “—போல..”மனிதர்கள் வாட்சிங்கில்” ஈடுபட்டேன்.

மனிதர்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ..( ஒவ்வொருவரும்..அல்ல.) ஒருவிதம்..என்பது உண்மையாகவே தெரிந்தது..பஞ்சாபி—மராட்டி—தெலுங்கு—அரேபி—அரியானி—என விதவிதமான..மொழிகள்..மனிதர்கள்—உருவங்கள்..ஆடைஅலங்காரங்கள்..

இவர்களில் சில மனிதர்களின்..மனுஷிகளின்.-ஆடைகளும்—உருவங்களும்,,சில வினோதமாகவும்—சில அருவருப்பாகவும் இருந்தது..

பெண்களுக்கு உரிமைகள் வேண்டும்..சுதந்திரம் கட்டாயம் வேண்டும்..அது வீடுகளிலும்,,அலுவலங்களும்—நடையிலும்..மட்டுமே.(.உடையில் அல்ல ) இருக்க வேண்டும்..

அங்கங்களை “அளந்து காட்டும் “உடைகளை அம்மாக்களும், அச்சன்களும், அகத்துக்காரர்களும்,..எப்படி அனுமதிக்கிறார்கள்..சகித்துக்கொள்கிறார்கள்..”இப்படி உடுத்தக்கூடாது” என்று ஆலோசனை சொல்லாமல் இருக்கிறார்கள்..என்பது புரியாத புதிராகவே இருந்தது..

இது நாகரீகம் என்று சொல்லமாட்டேன்…சுதந்திரம் என்ற பெயரில் இந்த அசிங்கங்கள் எப்படி அரங்கேறுகிறது..என்பது எனக்கு புரிய வில்லை..
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்..உடைகள் மனிதனின்.-மனுஷிகளின் முழுச்சுதந்திரம்..என்பது வாதத்திற்காக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்..ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அது வீட்டுக்குள்ளே மட்டுமே செயல் படுத்தமுடியும்..

நாட்டுக்கு நாடு உடைச்சுதந்திரம் வேறு படுகிறது..மேலை நாடுகளில் உடை வழக்கங்கள்..அவர்கள் நாட்டுக்கு ஒத்துவருவது..பழக்கமானது..அதனால் சமூக பாதிப்போ..உடையினால் பெண்கள் மீது பாலியல் வன்முறையோ நிகழ்த்தப்பட்டதில்லை..
தற்போதைய “நம்மூர்” “ஸ்கின் டைட் “ உடைகள்..இது எவ்வளவுஆபாசத்தை உண்டுசெய்கிறது…பெற்றோர்களோ..கணவன்மார்களோ..நினைத்துப்
பார்க்கிறார்களா?

இதை பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது..உங்கள் பார்வை சரியில்லை என்கிற ஒரு குரலும் என் காதில் விழுகிறது..

நம் தேசத்து உடை அலங்காரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது..உள்ளூர் உடைகள் நாம் எந்த ”சைசில்” இருந்தாலும், நம்மை அசிங்கமாக --அருவ்ருப்பாக-- காண்பிப்பதில்லை..ஜீன்ஸ்களும், டைட்ஸ்களும் இதற்கு நேர் எதிமாராக இருக்கிறது..

இந்த அரிச்சுவடியை ஏற்க ஏன் பெண்ணினம் தயாராக இல்லை…

ஆடைகள் நாகரீகத்தின் அடிப்படை..அது அநாகரீகத்தின் வெளிப்பாடானால், வணங்க வேண்டிய பெண்..சுணங்கிப் போவாள்...ரசிக்கவேண்டிய அழகு--விரசமாகிப்போகும்....இது அபாயமல்லவா?...

Sunday, August 11, 2013

தொண்டர் தலைவன் அத்வானி


வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் ஆசை என்று ஒன்று இருக்கும்...அதுபோல ஒவ்வொரு கட்சித் தொண்டனுக்கும் ஒரு ஆசை இருக்கும்..

நம்மைப்போல பாஜக தொண்டனுக்கும், வாழ்நாள் ஆசை அத்வானி, வாஜ்பாய் போன்ற தலைவர்களை நேரில் பார்த்து பேச வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

என்போன்ற சாதாரண தொண்டனுக்கும் அதே ஆசைதான்..வாஜ்பாய் அவர்களை 1995--96 களில் பெங்களூரு தேசிய கவுன்சில் கூட்டத்தில், அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று, பார்த்தேன்..பேசினேன்..உள்ளம் பூரிப்படைந்தேன்..

அத்வானிஜி அவர்களை 1977 மதுரையில் கூடலழகர் பெருமாள் கோயில் திடலில் அவர் ஐ.& பி. மினிஸ்டராக இருந்தபோதுபேசிய கூட்டத்தில்,  நானும் திரு.எல்.ஜி. அவர்களும் கலந்து கொண்டோம்..பின்னர் மதுரை சர்க்யூஸ்ட் ஹவுசில் நேரில் சந்தித்து பேசினோம்.

அதற்கு பிறகு பல கூட்டங்கள் , பல யாத்திரைகள், பல மாநாடுகளில் அத்வானிஜி அவர்களை சந்தித்திருக்கிறேன்.

1998 கோவைகுண்டு வெடிப்பன்று, கோவை ஏர்போர்ட்டில் சந்தித்து, அவருடன் அரசு மருத்துவமனையில், குண்டடி பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னதுமுதல், மீண்டும் ஏர்போர்ட்டில் திரும்ப அனுப்பும் போது , “குண்டு வெடிக்கப்போவது அரசுக்கு முன்னமே தெரியும்”, என்பதுவரை அவரிடம் விவரித்திருக்கிறேன்.

எதற்கு இவ்வளவு பீடிகை என்றால், எவ்வளவு முறை சந்தித்திருந்தாலும்,1984, அவரை டெல்லியில் அவரது  வீட்டில் சந்தித்தற்கு பிறகு இம்முறை நேற்றுதான், ( பொருளாளர் கூட்டத்திற்க்காக டெல்லி வந்தேன்) அவரை வீட்டில் சந்திக்கும் மாபெரும் பாக்கியம் கிட்டியது..

ஆம்..பாஜகவின் ஒவ்வொரு சாதாரண தொண்டனின் ஆசை போல என்னுடைய ஆசையும் நேற்று நிறைவேறியது....

ஒரு தொண்டன் எளிதாக சந்திக்கும் தூரத்தில் ஒரு தலைவன் இருந்தாலே அவன் உண்மையான தலைவன்...நரேந்திர மோடியை போல அத்வானிஜி அவர்களையும் எளிதாக சந்திக்க முடியும்..ஒரு போனிலேயே எனக்கு அப்பாயின்மெண்ட் கிடைத்தது..அவரே எடுத்தார்..அவரே கொடுத்தார்.. 15 நிமிடத்தில் அவர் வீட்டில் இருந்தேன்....”இசட் பிளஸ்” பாதுகாப்பு பிரிவின் கீழ் அவருக்கு பாதுகாப்பு இருப்பதால்தான் அவரை வெளியூர்களில் சந்திப்பது கடினமாக இருப்பதை புரிந்து கொண்டேன்..

நான் போனபோது அவரின் வீட்டின் அலுவலக அறையில், பாரளுமன்ற குறிப்புக்களை படித்து அடிக்கோடு இட்டுக்கொண்டிருந்தார்..வணக்கம் தெரிவித்து அமர்ந்த பிறகு, கடந்தகால நிகழ்வுகள் பலவற்றை நினைவு கூர்ந்தார்..சாப்பிட என்னவேண்டுமென கேட்டு.. கொண்டு வரச்சொன்னார்..

அவரது அறையில், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள் அனைத்தும் அத்வானிஜி படித்தது..அத்வானிஜி ஒரு புத்தகப்பிரியர்..அவருக்கு எதிரே கம்பீரமான வீரசாவர்க்கர் படம் பிரமாதமாக ...பிரதானமாக ....மாட்டப்பட்டிருந்தது..கண்னைக் கவர்ந்தது..

பாராளுமன்றம் மட்டுமல்ல, அவரது ஒவ்வொரு பேச்சுக்கும் மத்தியில் அதற்கான அவரது கடுமையான தயாரிப்பும் இருக்கிறது என்பதை பார்த்தேன்..கோவை குண்டுவெடிப்பில் நான் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தது முதல் கடைசியாக அப்துல் நாசர் மதானியின் “கொலை மிரட்டல் கடிதம் “ வரை விசாரித்தார்..அவரது ஞாபக சக்தியும், அன்றளவு நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்கும் ஆற்றலும் வியக்கவைத்தது...

டீ வந்தது..மிகச்சூடாக இருந்தது..ஆற நேரமாகும் என்பதால், டீ வேண்டாமென்றேன்..உணர்ந்து கொண்ட அத்வானிஜி, பரவாயில்லை..மெதுவாக குடியுங்கள்..நான் வெயிட் பண்ணுகிறேன். என்றார்.1984 இல் அவர் இல்லத்துக்கு சென்ற போது அவரே டீ போட்டு கொண்டுவந்து கொடுத்ததை நினைவு கூர்ந்தேன்..அவரும் அது பழைய வீடு தற்போது இருப்பது அல்ல என்பதை நினைவு படுத்தினார்..

உலகம் வியக்கும் ஒரு மிகப்பெரிய தலைவன், தன் கட்சி தொண்டனை தனக்கு சமமாக மதிப்பதும் நடத்துவதும், ஒரேஒரு அரசியல் கட்சியில்தான் நடக்கும் ..அது பாஜக மட்டுமே என்பதை நமது அத்தனை தலைவர்களும், குறிப்பாக அத்வானிஜியும், மோடியும், நிரூபித்து வருகிறார்கள்.என்பதை நான் 2012 தேர்தலுக்கு குஜராத் போனபோதும் சரி நேற்று டெல்லி போனபோதும் பார்த்தேன்.

பல்வேறு சம்பாஷணைக்கு பிறகு, வருகின்ற பொதுத்தேர்தலில், தமிழக பாஜக சார்பில் அதிக எம்.பி.க்களை பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்..இதற்காக தமிழக பாஜக எடுத்திருக்கும் முயற்சிகளையும், அமைப்பு ரீதியாக அதன் வெற்றிகரமான செயல்பாடுகளையும் நான் அவரிடம் விவரித்தேன்...

இந்தியாவின் துணைப் பிரதமர்.---உள்துறை அமைச்சர்---இரண்டாம் வல்லபாய் பட்டேல், என்ற பெருமைகளை பெற்ற ஒருதலைவனின் எளிமை--அன்பு---கனிவு--தொண்டனை நடத்திய விதம்...உண்மையில் நெஞ்சம் இனித்தது..இதுதான் பாஜகவின் அடிப்படை தன்மை என்பதை அவரும் நடந்து காட்டி நிரூபித்தார்..

பாஜகவின் ஒரு சாதாரண தொண்டனை மதித்து இவ்வளவு நேரம் பேசியமைக்கு நன்றி என்றேன்..நானும் ஒரு சாதாரண தொண்டந்தான் என அவர் கூறியதும் என் கண்கள் பனித்தது..எளிமைக்கு இதைவிட ஒரு உதாரணம் எந்த கட்சியில் சொல்லமுடியும்..இவ்வளவு தூரத்திலிருந்து ..தமிழ்நாட்டிலிருந்து... நீங்கள் வரும் போது.. என் நேரம் ஒன்றும் பெரிதில்லை, என்ற அவரின் வாக்கியங்கள் என் மனதை இன்னும் சுற்றி சுற்றி வருகிறது.

நம் தலைவர்கள், எளிமையனவர்கள், இனிமையனவர்கள், அறிவு ஜீவிகள், தொண்டர்களை மதித்து கௌரவிப்பவர்கள், என்பதை நான் அத்வானிஜி அவர்களிடம் பார்த்தேன்..அவரிடம் பேசிய அந்த பொன்னான 40 நிமிடங்கள், என் வாழ்வின் மறக்கமுடியாத நிமிடங்கள்..அம்  மாமனிதனின் பாதம் தொட்டு வணங்கி விடை பெற்றேன்..

Tuesday, June 4, 2013

”யூ ஆர் லையிங்”---சோனியா


சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 காங்கிரஸ் காரர்கள் பலியாயினர்..
அதற்கான காரணத்தை அறியும் மேல்மட்ட கூட்டம் ஒன்று தலைநகர் ராய்புரில் கவர்னர் சேகர் தத்தா  இல்லத்தில் நடைபெற்றது.

இதில் கவர்னர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்  பட்டத்து ராஜா ராகுல் காந்தி, மாநில டி.ஐ.ஜி. ராம்நிவாஸ், மந்திரிசபையில் இரண்டாவது இடம் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால், மற்றும் முதல்வர் ராமன் சிங் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்..

அப்போது அதிகாரிகள் அளித்த தகவல்களை கேட்டு’’கொதித்துப்போன” சோனியா..அதிகாரிகளை பார்த்து கத்தியதுதான்..இந்த வாசகம் --”யூஆர் லையிங்”

 சோனியா காந்தி  “கொதித்துப்போனார்”
 சோனியா காந்தி  “ நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் “ என்று கத்தினார்..

இப்படித்தான் “இந்து” பத்திரிக்கை எழுதியுள்ளது....குஜராத்தில் கோத்ரா ரயில் நிலயத்தில் அயோத்திக்கு சென்று திரும்பி வந்துகொண்டிருந்த 56 அப்பாவி கரசேவகர்களை 40 லிட்டெர் பெட்ரோல் கொண்டு உயிரோடு எரித்தார்களே..அப்போது சோனியா ஏன் “கொதித்துப்போகவில்லை”?

சோனியா தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சி பீடம் ஏறிய பிறகு 9 ஆண்டில் 27 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 525 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்களே அப்போது இவர் ஏன்” கொதிக்கவில்லை”??

டெல்லி சீக்கியர்கள் “இனப்படுகொலை” செய்யப்பட்டபோது இவருக்கு கொதிப்பு ஏன் வரவில்லை?

இலங்கையில் ஆயிரக்கணக்கில் நம் தமிழ்மக்கள்  இவரது நண்பர் ராஜபக்‌ஷேவினால் கொன்று குவிக்கப்பட்டபோது..இவரது “ கொதிப்பு “ எந்த ஊருக்கு போயிருந்தது??

நாட்டின் 75  சத மதக்கலவரங்கள் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதை மறைத்து நரேந்திர மோடியை “ மரண வியாபாரி” என்றாரே அது பொய்யில்லையா?

2ஜி ஊழலில் “பிரதமருக்கு தெரிந்துதான் செய்தேன்” என்று ஆ.ராஜா சொன்னபிறகு பிரதமர் குற்றமற்றவர் என சர்டிஃபிகேட் கொடுத்தாரே அது பொய்யில்லையா??

போஃபர் ஊழலில் தனது சொந்தக்காரர் “குட்ரோச்சியை”’தேடப்படும் குற்றவாளி இல்லை” என்று இண்டர்போலிடம் பொய்யாக அறிவிக்க செய்து அவரது முடக்கப்பட்ட வங்கிக்கணக்கை திறந்துவிட்டாரே-- இது துரோகமும் ஏமாற்றுதலும் சேர்ந்த பொய்யில்லையா??

தனது மருமகன் ராபர்ட் வத்ரா சேர்த்த 11000 கோடி பணத்தை “ரியல் எஸ்டேட் “ ஊழலில் சம்பாதிக்க வில்லை நேர்மையான சம்பாதிப்பு அது என மத்திய மந்திரிகளை விட்டு சொல்லச்சொன்னாரே அது
ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யில்லயா?

உண்மையில் சோனியா அவர்களே நீங்கள் சொன்ன “ பொய் சொல்லுகிறீர்கள்” என்ற வாசகம் முழுமையாக உங்களை நோக்கித்தான் கை காட்டுகிறது..ஏனெனில நீகள்தான் பொய் சொல்லி வருகிறீர்கள்---தொடர்ந்து....


சோனியா-----யூ ஆர் லையிங்..

Friday, May 31, 2013

மன்மோகன் சிங்கை தூங்கவைத்த ஐ.பி.எல்.சீனிவாசன்


கடந்த ஒருவாரகாலமாக மன்மோகன் சிக்கும் சோனியா கந்தியும் நன்றாக தூங்குகிறார்களாம்..
”தேங்க்ஸ் கோஸ் டூ பி.சி.சி.ஐ”--.தலைவர் இண்டியா சிமெண்ட் சீனுவாசன்.

நிலக்கரி ஒதிக்கீட்டு வழக்கில் திக்குமுக்காடிய காங்கிரஸ், சோனியா, மன்மோகன் சிங்குக்கு ஒருவாரகாலமாக ஓய்வு..இவர்களை துரத்திய மீடியாவுக்கு இவர்களது ஏவலாள், சி.பி.ஐ, போட்ட பிஸ்கட் தான் ”ஐ.பி.எல், ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங்...”

இந்த பிஸ்கட்டுகளை சி.பி.ஐ. மெதுவாக நிதானமாக, ஒவ்வொன்றாக, போடுவதால், மீடியாக்களும் “லபக்--லபக்” என்று பிடித்து ஏமாளி சீனுவாசனை ஒரு “கை” பார்க்கிரது,

பி.சி.சி.ஐ. சேர்மன் பதவியில் இருந்து துரத்தப்பட்ட சர்த்பவாரில் இருந்து...எல்லா அரசியல், அரசியல் அல்லாதவாதிகளும், மீடியாவும் ஒன்று சேர்ந்து சீனுவாசன் மீது கங்கணம் கட்டி, இப்ப்ரச்சனையை எவ்வளவுநாள் இழுக்கமுடியுமோ அவ்வளவுநாள் இழுத்து காங்கிரசுக்கு ஊழல்புகார்களிலிருந்து மூச்சுவிட “டைம்” தந்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசிடம் கப்பம் வாங்கிவரும் மீடியாக்களும், தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்ட தினசரி ஒரு “லைவ்” கவரேஜ் போட்டு டி.வி. பார்க்கவே விடாமல் மக்களை   வெறுப்பேற்றிக்கொண்டிருக்கீரார்கள்.

விடாப்பிடியாக சேர்மன் நாற்காலியை பிடித்துக்கொண்டு, தனி ஆளாக..மீடியாக்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவரும்..பி.சி.சி.ஐ. சேர்மன் சீனுவை உள்ளபடியே பாராட்டுகிறேன்..

ஆனால் அவரது மருமகன் செயல்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..ஒருகோடி ரூபாயை பிடிக்கிறேன் என சி.பி.ஐ விரித்தவலையில் விழுந்துவிட்டாரே...சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா மாட்டிக்கொள்ளாமல் ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில்11000 கோடி ரூபாய் சம்பாத்திதாரே “@@@”
ராபர்ட் வத்ரா பற்றிய செய்திகளை குருநாத் மெய்யப்பன் படிக்கவில்லையோ..

சி.பி.ஐ. கையில் இருப்பது காங்கிரஸ் “கை”க்கு எவ்வளவு நன்மை பார்த்தீர்களா?..குருநாத் மெய்யப்பன், ஐ.பி.எல்.சீனு என்ற குட்டியோண்டு மீனை பிடித்துவிட்டு, சோனியா, வத்ரா என்கிற பெரிய திமிலங்களை தப்பவிட்டு, மீடியாமூலம் நாட்டை திசை திருப்புவதை பார்த்தீர்களா?

நான் கேட்பது இதுதான்..
1. சீனுவாசனை ராஜினாமா செய்யச்சொல்பவர்கள், நிலக்கரி ஊழலுக்கு மன்மோகன்சிங்கிடமும் ராஜினாமா கேட்பார்களா?
2..ஒரு கோடி ரூபாய்க்கு குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை கோருபவர்கள் 11000 கோடி ஏய்த்த ராபர்ட் வத்ராவிடமும் விசாரணை கோருவார்களா?
3.ஸ்ரீசாந்த்தையும், அனில் சவுஹானையும் கைது செய்தவர்கள், அஸ்வினிகுமாரையும், பன்சாலையும் கைது செய்வார்களா?


”முதலில் அவனை நிறுத்தச்சொல்லு---பிறகு நான் நிறுத்துகிறேன் “ எனபது நாயகன் திரைப்பட வசனம்

“ முதலில் காங்கிரஸ்காரனை கைது செய்--பிறகு கிரிக்கட் காரங்களை கைது செய்யலாம் “ இது பொதுஜனம் பேசும் வசனம்..

@@@--விளக்கம்
வீடுபுகுந்து திருடினால்..அது திருட்டு

ரோட்டில் வருபவனிடம் திருடினால் அது வழிப்பறி

வங்கியில் புகுந்து திருடினால் அது கொள்ளை

அரசியலில் சேர்ந்து திருடினால்...அது “சம்பாத்யமாம்”

தாகூரும் இடதுசாரிகளும்ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் மன்னர் தூக்கி எறியப்பட்டு "போல்ஷ்விக்குகள்" என்ற கம்யுனிஸ்ட்கள் புகழ் பரவத்துவங்கிய நேரம்..
ரவீந்திர நாத் தாகூர் ரஷ்யாவிற்கு சென்றார்..அங்கு நடந்த ரஷ்ய புரட்சியின் தாக்கத்தை கண்ணுற்றார் ..

உலகமே ஒரு புதிய சித்தாந்தத்தை பார்த்து வாய்பிளந்து நின்ற போது  தாகூர் அதை வேறுவிதமாக பார்த்தார்..

தாகூர் எழுதினார்..

1..கருத்துசொல்லும் சுதந்திரமும் உரிமையும் பறிக்கப்பட்டபோது ஜார்மன்னர் தூக்கி எறியப்பட்டார்.கம்யுனிச்ட்களும் தங்களுக்கு எதிரான கருத்துக்களின்  குரல்வளையை நசுக்கும்போது இதே விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்...

2..ஜார்மன்னர் போன்று அரசே கட்டவிழ்த்துவிடும் வன்முறையையும், சர்வாதிகாரத்தையும், இந்த புரட்சியாளர்கள் செய்ய வாய்ப்புள்ளது..அப்போது இவர்களுக்கும் ஜார்மன்னருக்கு ஏற்பட்டகதிதான் ஏற்படும் ..

தாகூருக்கு என்னே ஒரு தீர்க்கதரிசனம்..உலகம் முழுவதும் வளைத்துபோடவேண்டும் என்ற ஆசையோடு வன்முறையில் பரவிய கம்யுனிசம், அது தொடங்கிய  நாட்டிலேயே 70 ஆண்டுகளுக்குள் முடிந்தது.

தகவல் தொடர்புத்துறையில் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கும் இந்திய கம்யுனிஸ்ட்களுக்கு இது எப்போது தெரியுமோ..தெரியவில்லை..

"டிரேட்யூனியன்" வசூலிக்கும் சந்தாவும் --கோடிக்கணக்கான அசையா சொத்துக்களும், 80 வயது சூபர்சீனியர் சிடிசன் " காம்றேடுக்களும்தான் இந்தியாவில் கம்யுனிஸ்ட்கள் இருந்ததற்கான கடைசி ஆதாரங்கள்.

Wednesday, May 29, 2013

மாவோயிஸ்டுகள்..வர்க்கப் போராளிகளா?—தேசவிரோதிகளா?---பயங்கரவாதிகளா?
மே மாதம் 25 ந்தேதி சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் ஜில்லாவில் “பரிவர்த்தன் யாத்திரை “ சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சார குழு மீது , நக்சலட்டுகள் தாக்குதல் நடத்தி 27 பேரை கொன்றனர்..அவர்களில் முக்கியமானவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன், எதிர்கட்சி தலைவர் மகேந்திரகர்மா, மற்றும் உயிருக்கு போராடிவரும் மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் வி.சி.சுக்லா அடங்குவர்.

இந்த கொடூர தாக்குதல் நமக்கு பல முக்கிய விஷயங்களை வெளிப்படுத்துகிரது..

1.சுக்மா மாவட்ட தமிழ் கலக்டரை கடத்திய பின்பு நக்சலைட்டுகள் மறுபடியும், “ஒன்று கூடிவிட்டார்கள்” என்பது புரிந்தது.

2..”வர்க்க விரோதி” என தாங்கள் அடையாளப்படுத்திய காங்கிரசின் தலைவர்கள்..”நந்தகுமார் படேல், மற்றும் மகேந்திர கர்மா” ஆகியோரை தனிமைப்படுத்தி கொன்றிருக்கிறார்கள்.

3...மிகவும் ஆபத்தான நக்சலைட்டுகள் நடமாடும் பகுதியில், பெரிய விளம்பர தம்பட்டம் அடித்துக்கொண்டு, தங்கள் வருகையை காங்கிரஸ்  முன்கூட்டியே தெரிவித்தது, நக்சலைட்டுகளுக்கு வசதியாய் போய்விட்டது..

4..மாநில உளவுப்பிரிவு போலிசாரின் தோல்விகள் என்ன…பாதுகாப்பில் ஓட்டைகள் எங்கெங்கு..என்பதை கண்டுபிடிக்க கமிஷன் அமைத்து, தைரியமாக ..வெளிப்படையாக அறிவித்த சத்தீஷ்கர் முதல்வர் ராமன் மாறுபட்டவர்..

5..இவைகள் ஒருபக்கம் இருந்தாலும், “இதை அரசியல் ஆக்கவேண்டாம்…” என்ற கோரிக்கையோடு, காங்கிரஸ் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முதல்வர் ராமன் சிங்..அவரது கட்சிதலைவர் ராஜ்நாத் சிங் ஒருபடி மேலே போய் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு சென்று இரங்கல் கேட்டது நம் தமிழ்நாட்டு அரசியலை உற்றுப்பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..

மறு பக்கம், சரியான பாதுகாப்பு தராததால்தான் தங்களது தலைவர்கள் கொல்லப்பட்டனர், என்ற கோஷத்தோடு, சட்டீச்கர், ம.பி.யில் பந்த் நடத்திய காங்கிர்ஸ்..சோக மூஞ்சியோடு பத்திரிக்கைகளில் வெளிவந்த ராகுல், சோனியா படங்கள்,  என வருந்துதலுக்குறிய நிகழ்வுகள்..

நக்சலைட்டுகளின் இந்த திடீர் எழுச்சிக்கு காரணம் என்ன?
மலை வளங்களியே நம்பியிருக்கும், மலைவாழ் மக்களுக்கு கடந்த 60 ஆண்டுக்ளாக ஆட்சிபுரியும் காங்கிரஸ் அர்சு செய்யத்தவறிய முன்னேற்ற திட்டங்களால் நக்சலைட்டுகள் கிராமங்களை கைய்யிலெடுத்துள்ளனர்.

மலைகளிலும் காடுகளிலும் கொழிக்கும் இயற்கை வளங்கள், தாதுக்கள், இரும்பு, தாமிரம், அலுமினியம், நிலக்கரி, போன்றவற்ரை, ஏகபோகமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி, காடுகளையே நம்பி இருக்கும், வனவாசிகளை வஞ்சிக்கும், ஆளும் அரசின் செயல்களே,”” நக்சலைட்டுகளை வளர்த்திவிடும்” “மய்யங்கள்”..

மலைவாழ் மக்களை ஒரு சிறு புழு அளவுக்குக்கூட ஆளும் அரசு மதிக்காத காரணத்தால், அவர்கள் ”நக்சல்கள் “பாதையில் பயணிக்க “ சம்மதிக்கின்றனர்..

இந்த 2013 ஆம் ஆண்டில்,ஆயுதம் ஏந்திய போராட்டத்தால், ஆட்சிமாற்ரம் செய்யமுடியும், என்ற தத்துவத்தை உலகின் எந்த நாடும், எந்த பகுதியும் ஏற்றுக்கொள்ளவில்லை..என்பதே இன்றைய சூழல்..

1920 இல், ரஷ்யாவில் தோன்றிய கம்யூனிசம், அது தோன்றிய நாட்டிலேயே அது அழிந்துவிட்டது..அதை தீவிரமாக அனுசரித்த, சீனாவிலும் அது நீர்த்துப்போய்விட்டது..அதனாலேயே சீனா உலகின் வளர்ச்சியடைந்த முதல்நிலை நாடாகிவருகிரது..

மாற்ரத்தை வரவேற்கும் இந்தியாவில், உலகம் ஏற்கமறுத்த “ஆயுத புரட்சி தீவிரவாத கம்யூனிசம்” இன்னும் இந்திய காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிரது..அதற்கு காரணம் இதுவரை இந்தியாவை ஆண்ட—ஆளும் கட்சிதான்..

“இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பேன்” என்ற திராவிட இயக்கங்களின் கோஷம் தோற்றுவிட்டது…ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை, நக்சல்பாரிகளும், மாவோயிஸ்டுகளும், நம் காடுகளில் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்..


1962 ஆம் ஆண்டு இந்தியா—சீனா போரில் இந்திய பக்கம் நின்ற கம்யூனிஸ்டுகள் ஒருபுரம்

சீனாவின் பக்கம் நின்ற கம்யூனிஸ்டுகள் மறுபுரம்
இந்த கொள்கை போரில் கம்யூனிஸ்ட்கட்சி சிதருண்டு…சி.பி.ஐ---சி.பி.எம்..என இரண்டாக பிளந்தது..

1967 இல் சி.பி.எம் உடைந்து, சி.பி.ஐ.எம் எல் ஆனார்கள்..அதாவது மார்க்சிஸ்ட் என ஆனது.

2004 இல் மர்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் உடன் மக்கள் போர்க்குழுவும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டரும் இணைந்து மாவோயிஸ்ட்—லெனினிஸ்ட்—மார்க்சிஸ்ட்…என்ர “மாவோயிஸ்ட்” பிறந்தது..

இந்திய அரசு நக்சல்பாரிகள் மற்றும் மாவோயிஸ்ட்களை டஹ்டை செய்துள்லது..பி.வி.ரமணா என்னும் ஆராய்ச்சியாளர்..கணக்குபடி. தற்போது இந்தியாவில் 9000 முதல் 10,000- நக்சல்பாரிகள் இருக்கிறார்கள்..ஆனால் இந்திய உளவுப்பிரிவு கணக்குபடி சுமார் 20,000- ஆயுதம் எந்திய நக்சல்களும், 9 மாநிலத்தின் 85 ஜில்லாக்களின் பரவி உள்லனர்..

பாராளுமன்ற ஜனநாயகம் பொய்யானது..ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் அடையும் ஆட்சியே வர்க்கபேதத்தை அகற்றும் “ என்பது இவர்களது நம்பிக்கை..ஆனால் எல்.டி.டி.ஈ போல இவர்களும், “காட்டிக்கொடுப்பவர்கள்”—”வர்க்க எதிரிகள்”—என்று பெயர் சூட்டி சிரச்சேதம் செய்வதும் நடந்து வருகிரது.

இவர்களது கொள்கை குளறுபடிகளில் வேடிக்கையான விஷயங்களும் உண்டு..கடவுளுக்கும் மதங்களுக்கும் விரோதிகளான இவர்கள், “இஸ்லாத்தின் வளர்ச்சி” என்பது காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலையெ தவிர மனித நாகரீகத்துக்கு இடையேயான சச்சரவல்ல”—என்பது விந்தை—வேடிக்கை வினோதமான நிலப்ப்பாடுகளின் கோர்வையும் உண்டு.

இயக்க வளர்ச்சிக்கான பணம் ஆள் கடத்தல் ஆயுதகடத்தல், வெளிநாட்டு கள்ள நோட்டை புழக்கத்தில் விடுதல், கஞ்சா, அபின், போதைப்பயிர் விவசாயம் செய்தல் என்பன என்றாலும் இவர்கள் இதை முழுதும் பறுக்கிறார்கள்.
 மாவொயிஸ்டுகள்…
நக்சல் வர்க்கத்தின் போராளிகளா?
ஆயுதம் வாங்க –பொருள்-சேர்க்க..ஐ.எஸ்.ஐ..மற்றும் சீனாவுடன் கைகோர்க்கும் தேசவிரோதிகளா?
வர்க்க போராட்டத்தில்..வர்க்க எதிரிகளை அழிக்க தன் வர்க்கத்தையெ அழிக்கும் பயங்கரவாதிகளா?

பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்..