Pages

Friday, May 31, 2013

மன்மோகன் சிங்கை தூங்கவைத்த ஐ.பி.எல்.சீனிவாசன்


கடந்த ஒருவாரகாலமாக மன்மோகன் சிக்கும் சோனியா கந்தியும் நன்றாக தூங்குகிறார்களாம்..
”தேங்க்ஸ் கோஸ் டூ பி.சி.சி.ஐ”--.தலைவர் இண்டியா சிமெண்ட் சீனுவாசன்.

நிலக்கரி ஒதிக்கீட்டு வழக்கில் திக்குமுக்காடிய காங்கிரஸ், சோனியா, மன்மோகன் சிங்குக்கு ஒருவாரகாலமாக ஓய்வு..இவர்களை துரத்திய மீடியாவுக்கு இவர்களது ஏவலாள், சி.பி.ஐ, போட்ட பிஸ்கட் தான் ”ஐ.பி.எல், ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங்...”

இந்த பிஸ்கட்டுகளை சி.பி.ஐ. மெதுவாக நிதானமாக, ஒவ்வொன்றாக, போடுவதால், மீடியாக்களும் “லபக்--லபக்” என்று பிடித்து ஏமாளி சீனுவாசனை ஒரு “கை” பார்க்கிரது,

பி.சி.சி.ஐ. சேர்மன் பதவியில் இருந்து துரத்தப்பட்ட சர்த்பவாரில் இருந்து...எல்லா அரசியல், அரசியல் அல்லாதவாதிகளும், மீடியாவும் ஒன்று சேர்ந்து சீனுவாசன் மீது கங்கணம் கட்டி, இப்ப்ரச்சனையை எவ்வளவுநாள் இழுக்கமுடியுமோ அவ்வளவுநாள் இழுத்து காங்கிரசுக்கு ஊழல்புகார்களிலிருந்து மூச்சுவிட “டைம்” தந்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசிடம் கப்பம் வாங்கிவரும் மீடியாக்களும், தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்ட தினசரி ஒரு “லைவ்” கவரேஜ் போட்டு டி.வி. பார்க்கவே விடாமல் மக்களை   வெறுப்பேற்றிக்கொண்டிருக்கீரார்கள்.

விடாப்பிடியாக சேர்மன் நாற்காலியை பிடித்துக்கொண்டு, தனி ஆளாக..மீடியாக்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவரும்..பி.சி.சி.ஐ. சேர்மன் சீனுவை உள்ளபடியே பாராட்டுகிறேன்..

ஆனால் அவரது மருமகன் செயல்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..ஒருகோடி ரூபாயை பிடிக்கிறேன் என சி.பி.ஐ விரித்தவலையில் விழுந்துவிட்டாரே...சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா மாட்டிக்கொள்ளாமல் ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில்11000 கோடி ரூபாய் சம்பாத்திதாரே “@@@”
ராபர்ட் வத்ரா பற்றிய செய்திகளை குருநாத் மெய்யப்பன் படிக்கவில்லையோ..

சி.பி.ஐ. கையில் இருப்பது காங்கிரஸ் “கை”க்கு எவ்வளவு நன்மை பார்த்தீர்களா?..குருநாத் மெய்யப்பன், ஐ.பி.எல்.சீனு என்ற குட்டியோண்டு மீனை பிடித்துவிட்டு, சோனியா, வத்ரா என்கிற பெரிய திமிலங்களை தப்பவிட்டு, மீடியாமூலம் நாட்டை திசை திருப்புவதை பார்த்தீர்களா?

நான் கேட்பது இதுதான்..
1. சீனுவாசனை ராஜினாமா செய்யச்சொல்பவர்கள், நிலக்கரி ஊழலுக்கு மன்மோகன்சிங்கிடமும் ராஜினாமா கேட்பார்களா?
2..ஒரு கோடி ரூபாய்க்கு குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை கோருபவர்கள் 11000 கோடி ஏய்த்த ராபர்ட் வத்ராவிடமும் விசாரணை கோருவார்களா?
3.ஸ்ரீசாந்த்தையும், அனில் சவுஹானையும் கைது செய்தவர்கள், அஸ்வினிகுமாரையும், பன்சாலையும் கைது செய்வார்களா?


”முதலில் அவனை நிறுத்தச்சொல்லு---பிறகு நான் நிறுத்துகிறேன் “ எனபது நாயகன் திரைப்பட வசனம்

“ முதலில் காங்கிரஸ்காரனை கைது செய்--பிறகு கிரிக்கட் காரங்களை கைது செய்யலாம் “ இது பொதுஜனம் பேசும் வசனம்..

@@@--விளக்கம்
வீடுபுகுந்து திருடினால்..அது திருட்டு

ரோட்டில் வருபவனிடம் திருடினால் அது வழிப்பறி

வங்கியில் புகுந்து திருடினால் அது கொள்ளை

அரசியலில் சேர்ந்து திருடினால்...அது “சம்பாத்யமாம்”

No comments: