Pages

Sunday, May 5, 2013

அடேங்கப்பா--சி.பி.ஐ.க்கு என்ன ஆச்சு?

பவன் குமார் பன்சால் ..முன்னாள் பாராளுமன்ற விவகார இணை அமைச்சர்..இன்னாள் ரயில் மந்திரி...
அவருடைய முன்னாள் உதவியாளரும்..உறவினருமான..விஜய் சிங்கலா என்பவர், ரயில்வே போர்ட் உறுப்பினர் மகேஷ்குமார் என்பவரிடமிருந்து பதவி உயர்வு கொடுக்க ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றுக்கொண்டார்..என்று சி.பி.ஐ.அவரை கைது செய்துள்ளது.மகேஷ்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
நல்ல “பசையுள்ள பதவி பெற “ மகேஷ்குமார்-- திரு.சிங்கலாவிடம் 10 கோடி பேசி--அதை ரெண்டுகோடியாக குறைத்து, ரூ.90 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கும்போது சி.பி.ஐ.பிடித்ததாம்..
கடந்த 24 ஆம் தேதி, சட்ட அமைச்சரிடம் சுப்ரீம் கோர்ட்டின் “நிலக்கரி பேர ஊழல் “ ஆவணங்களை காட்டி, திருத்தம் செய்ததாக சி.பி.ஐ.யை, சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது நமக்கு நியாபகம் இருக்கும் என நம்புகிறேன்.
அதே சி.பி.ஐ., சட்ட அமைச்சரிடம் ஆவணங்களை காட்டி, தவறு செய்ததற்கு பரிகாரமாக, சுப்ரீம் கோர்ட்டிடம் தன் தவறை ஒத்துக்கொண்டிருக்கிறது..
இதோடுகூட ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறது.”.தான் சுதந்திரமான அமைப்பல்ல.---.அரசின் அங்கம்---ஆவணங்களை காட்டியது தவறில்லை”--எனவும், ஆனாலும், சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுகிறேன் எனவும், அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்திருக்கிறது.
இடையில், மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் உறவினரை லஞ்ச வழக்கில் பிடித்து, “தன் அதீத கடமை உணர்ச்சியை” சி.பி.ஐ.ஏன் காட்டிக்கொண்டது, என்று என் மண்டையை குடைகிறது.
ஆஹா..சி.பி.ஐ.மாறிவிட்டது என்பதா?--”எவ்வளவு நாளைக்குத்தான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது?--வயசுக்கு வந்துட்டா பொறுப்பு தானா வந்துடும் “ என்பார்களே அதுபோல, சி.பி.ஐ. வயசுக்கு வந்துடுச்சா>--பொறுப்பு வந்துட்டுதா?
அப்படியெல்லாம் சந்தோஷப்படுவதற்கு அவசியமில்லை..சம்பவம் நடந்தது உண்மைதான்..சி.பி.ஐ. கைய்யும் களவுமாக பிடித்ததும் உண்மைதான்..பிடித்ததற்க்கான காரணம் தான் வேறு.
இன்றுவரை “நிலக்கரி ஊழலில்” மன்மோகன் சிங்தான் முதல் குற்றவாளி..அவரை காப்பாற்றப் போய்தான் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் மாட்டிக்கொண்டார்.இந்த இருவரையும் காப்பாற்ற சி பி ஐ வீசிய வலையில் சிக்கிய மீன்தான் பவன்குமார் பன்சால் உறவினர் சிங்க்லா..
இப்ப புரியுதா..மன்மோகன் சிங் விவகாரத்தை திசைதிருப்ப, காங்கிரஸ் அரங்கேற்றிய புதிய காட்சிதான் .பவன்குமார் பன்சால்.உறவினர் கைது...
சி.பி ஐ வயசுக்கும் வரல..சி.பி.ஐக்கு புத்தியும் தெளியலை..

பொறுப்பு மட்டும் எப்பவும் உண்டு...அதுவும் காங்கிரசை காப்பாற்றும் பொறுப்பு சி.பி.ஐ.க்கு எப்பவுமே ரொம்ப அதிகம் தான்..
அடேங்கப்பா...சி.பி.ஐ.க்கு என்ன ஆச்சு..ஒண்ணும் ஆகலை.நமக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரிதான்....





No comments: