Pages

Sunday, July 31, 2011

” எடி “ செய்தது சரியா?..அல்லது “எடி” செய்த “ராவடி..

கடைசியாக எடியூரப்பா ராஜினாமா செய்து விட்டார்...இதை செய்ய அல்லது செய்விக்க...எத்தனை நாள்..எத்தனை தலைவர்கள் போராட்டம்...

ஒரு சட்டபூர்வ அமைப்பினால் குற்றம் சாட்டப்படுபவர்கள்..அரசியலில் பதவி விலகுவது என்பது...சகஜம் என்பது..அந்தக்காலம்..

இப்போது எந்த கட்சியிலும் அப்படி இல்லை...காங்கிரஸும் திமுகவும் மாறி..மாறி..”மரபையும்...மாண்பை
யும்”...காலில் போட்டு மிதித்ததை நாம் பார்த்து பெரு மூச்சு விட்டதை மறந்துவிட முடியாது,,

அந்த வகையில் பண்டித தீனதயாள் உபாத்யாயாவிடம் பாடம் கற்ற பாஜக தலைவர்கள்...”எடியை” வீட்டுக்கு அனுப்பியதுபோல் எந்த கட்சியிலும் நடக்காது... ...பாஜக...தவிர..

“எடி”யை வீட்டுக்கு அனுப்பினால் குற்றத்தை ஒத்துக்கொண்டது போல் ஆகும்....”எடி” யை பதவியில் தொடர வைத்தால்...குற்றத்தை அங்கீகரித்தது போல் ஆகும்....இவற்றில் எது சரி என்பதற்கு சரியான பதில் தந்த பாஜக தலைவர்களுக்கு பாராட்டுக்குரியவர்கள்...

இந்த பாராட்டுக்கு பின்னாலே பல சோகங்களும் இருக்கத்தான் செய்கிறது..ஏற்கனவே “எடி’ கட்சிக்கு மூன்றுமுறை தர்ம சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கிறார்....அப்போதெல்லாம் பாஜக..”தும்பை தொடர்ந்து””விட்டது...விளைவு “மலை முழுங்கி மஹாதேவன்”..காங்கிரஸின் ஊழலை “உரக்ககூற” பாஜகவால் முடியவில்லை...

இதனால் காங்கிரஸ் “கேம்ப்” கொஞ்ச காலம் வெகு சந்தோஷத்தில் இருந்தது..

கர்னாடகா..பாஜவிற்கு “ எடி “ அரும்பணி ஆற்றினார்...என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை..தென் மாநில பாஜக ஆட்சிக்கு “பிள்ளையார் சுழி “ போட்டவர் “எடி” எனபதையும் மறுக்க முடியாது...

ஆனால் கட்சி தலைமைக்கு சவால் விடும் சக்தி அவருக்கு எங்கிருந்து வந்தது?...முதல் மூன்று நாட்கள் அவர் பதவி விலக மறுத்ததும்...தனது “கோஷ்டி” பலத்தை காட்டி கட்சியை மிரட்டியதும் எதனால்?....

இதே மிரட்டலை சென்றமுறை எம்.எல்.ஏக்களை...கடத்தி ஊர்..ஊராக..கூட்டிச்சென்ற போதும்.. செய்தது பத்திரிக்கைகள் சொல்லும் உண்மை...

இப்போதுகூட..அடுத்த முதல்வரை “எடியே” தேர்வு செய்வேன் என்று அடம் பிடிப்பதும்...கட்சியின் அடுத்த மாநில தலைவர் நான்தான் என்று சொல்வதும்...எதை காட்டுகிறது...கட்சிதலைமை பலவீனமாக இருக்கிறதென்றா?...அல்லது “எடி” அதிபலசாலி என்றா?...

கட்சிதான் ஒருவரை முன் நிறுத்துகிறது...போராடி...வேலை செய்து..வெற்றி பெற செய்கிறது...அதுவரை தொண்டனாக இருந்தவன் தலைவனாகிறான்....தலைவானதுதான் தாமதம்..கட்சியை தள்ளிவைக்கிறான்...கட்சியைவிட உயர்ந்தவானாக நினைக்க தொடங்குகிறான்...

அப்போது கட்சி என்ன செய்யவேண்டும்...பார்த்துக்கொண்டிருந்தால்...”எடி” மாதிரி ஆட்கள்தான் உருவாவார்கள்...

அதிகாரம் வந்த பிறகு கட்சியின் அமைப்பு பின்னுக்கு தள்ளபடுகிறது...பலவீனமாக்கப்படுகிறது....

அமைப்பிருந்தால் தானே..அதிகாரம் வரமுடியும்..பெறமுடியும்...

இவ்வகையில் கம்யூனிஸ்டுகள்..சரியாக இருக்கிறார்கள்..அதுவும் கூட பிரகாஷ் கரத் வந்த பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே மோதல்..விளைவு..இரண்டு மாநில ஆட்சி பறிபோனது...

பாஜக வரலாற்றில் “எடியின் “ செயல்பாடுகள் ஒரு கரும்புள்ளி...இனி வருங்காலத்தில் “ கரும்புள்ளிகள்”..உருவாவதும் ...”பெரும் புள்ளிகள்”.. உருவாவதும் “கட்சியின்..தலைமையின் கைய்யில் தான் உள்ளது...

“விண்டோ மேனேஜ்மெண்ட்”..என்னும் முதல் தவறையே திருத்தினால்...கண்டித்தால்...அடுத்த தவறுகள் அஞ்சி ஓடும்...செய்வார்களா?..

” ஜெ ”-- மேனகையிடம் மயங்காதே...


“COMMUNAL VIOLENCE BILL "..வகுப்புவாதம்...மற்றும் வன்முறை தடுப்பு மசோதா....

இதை சட்ட வடிவமாக்க கடுமையான எதிற்பு தெரிவித்து “ஜெ”..இன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

ஆஹா..என்ன அற்புதமான அறிக்கை...என இதை பார்த்தவுடனே...படித்தவுடனே.காவித் தலைவர்கள் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப்..எரியும்

லட்சக்கணக்கானவர்களை திரட்டி போராட்டம் நடத்தி பெற்றிருக்க வேண்டிய வெற்றியை “ஜெ”..தனது ஒரே அறிக்கையில் பெற்றுத்தந்து விட்டார்..என சந்தோஷப்படும் தலைவர்களும் இருக்கலாம்..

நாம் போய் பார்க்காமலே ( அனுமதி கேட்டிருந்தால் கிடைக்க 6 மாதம் ஆகியிருக்கும் என்பது வேறு விஷயம். )...மசோதவிற்கு எதிற்பு தெரிவித்து..அம்மா இந்துக்களின் ஏகோபித்த தலைவி “...ஆகிவிட்டாரே..என “புளங்காகிதம் “ அடையும் “ “பெருசுகளும் “..ஏராளம்..

“ஜெ” தான் இந்து என்பதாலோ...இந்துமத ஆதரவாளர் என்பதாலோ...இந்து மதத்தை பின் பற்றுவதாலோ...இம்மசோதாவிற்கு எதிற்பு தெரிவிக்கவில்லை.காவித்தலைவர்ள் காலம் காலமாக...உழைத்து ஓடாய் போய் சேர்த்துவைத்திருக்கிற..”இந்து வாக்கு வங்கி “..மீது வைத்த குறிதான் இந்த எதிற்பு அறிக்கை..

அதனாலென்ன...கருணாநிதி என்னும் இந்து விரோதி...சோனியா என்னும் இந்து வைரி...இவர்களுக்கு மத்தியில்...அம்மாவின் அறிக்கையை நாம் வரவேற்பதுதானே முறை..அவரை ஆதரிப்பது தானே சரி..இப்படி சில குரல்கள்..

“ஜெ” க்கு ஆதரவு தெரிவிக்கவா இந்து இயக்கங்கள்..தோற்றுவிக்கப்பட்டன..”ஜெ” அறிக்கை வெளியிட்டதால் மசோதா தாக்கல் ஆகாமல் போகுமா?...அறிக்கை வெளியிடாமல் இருந்திருந்தால் காவிப்படை போராடாமல் போத்திப் படுத்திருக்குமா?....

அம்மாவின் நெஞ்சுரத்திற்கு..ஆடு..கோழி..பலி வாபஸும்..

கட்டாய மதமாற்ற தடை சட்ட வாபஸுமே சான்று


அயோத்திக்கு ஏன் அம்மா ஆதரவு தெரிவித்தார்?...நாம் ஏற்படுத்திய அலை...இந்து அலை...வாக்கு வங்கி அலை...அதில் பங்கு பெற்றால் அதன் ஆதரவு அவருக்கு கிடைக்கும் விலை....அதனால் நாளை கிடைக்கும் நல்ல நிலை..அதரவு தெரிவித்தார்..அறுவடை செய்தார்..ஆட்சியில் அமர்ந்தார்..

வல்லவன் வாஜ்பாயின் ஆட்சியை...நள்ளிரவில் தோற்கடித்தாரே...அது என்ன இந்த்துவாவிற்கு ஆதரவா?...வகுப்பு வாததிற்கு எதிற்பா?...தேச பக்தியின் உச்ச நிலையா/...

2006 இல் காங்கிரஸோடு கூட்டணி சேர பகீரத பிரயத்தனம் செய்தாரே...காங்கிரஸ் மாறிவிட்டதா?...சோனியா புனிதமாகிவிட்டாரா?....இது இந்துவை வளர்க்கும் முயற்சில் “ஜெ’ யின் ஒரு படிமுன்னேற்றமா?....

2010 இல் காங்கிரஸுடன் கூட்டணிக்கு தவமிருந்தாரே...தூது விட்டாரே...

கங்கிரஸுடன் “ஜெ” யின் கூட்டுக்கும்..இம்மசோதாவிற்கும் என்ன சம்பந்தம் என கேட்கலாம்....

அயோத்திக்கும்..ராமஜன்ம பூமிக்கும்...இந்த்துவாவிற்கும்...ஏன் இந்தியாவிற்கும் எதிரானது காங்கிரஸ்...அதோடு கூட்டணிக்கு ஆலாய் பறந்த “ சந்தர்ப்பவாத...ஒரு சாதாரண அரசியல் வாதி ஜெ”....

இவர்களுக்கு எதிராக நாம் நடத்தி வருவது “தர்ம யுத்தம் “...அது நீண்ட கால யுத்தம்...தொடர் யுத்தம்...நாம் தியாகம் செய்து...உருவாக்கி..கட்டிக்காக்கும்...வாக்கு வங்கியை...ஒரே நாளில் ‘இம்மேனகையிடம்” யிடம் அடகு வைக்கலாமா?....இம்மோகினியிடம் தானம் செய்யலாமா?....

நான் வணங்கும் சிறூவாச்சூர் மதுர காளி வடிவிலிருக்கும் அன்னை பாரதமாதாவே...இந்து ஓட்டு வங்கியை காப்பாற்றும் மன உறுதியை..இவர்களுக்கு“தா”...என வேண்டுகிறேன்..
.

Saturday, July 30, 2011

குஞ்சப்புடுச்சுட்டு…கோழியை விட்டுடாதீங்க..ஜெ..




ஏதோ ஒரு திருப்பூர் காரர் புகாருக்காக சென்னையில் தூங்கிக்கொண்டிருந்த ஜெ.அன்பழகன்..திமுக எம்.எல்.ஏ.கைது..

சந்தோஷமாக சேலம் காவல் நிலயத்திற்கு “நிபந்தனை..ஜாமீனுக்கு” கையெழுத்து போட வந்த “வீரபாண்டியார்” திடீர் கைது..

திருவாரூர் மாவட்ட செயலாளர் கலைவாணனை பிடித்து வைத்துருந்தாக,,,அதாவது தேடப்படும் குற்றவாளியை…எதற்காக எனபதெல்லாம்..யாருக்கும் தெரியாது…..சுற்றுப்பயணத்திலிருந்த ஸ்டாலினை நடுரோட்டில் வழிமறித்து கைது…

இவையெல்லாம் ரொம்ப “சீப்பா “ தெரியல்லியா..ஜெ. .இவர்களெல்லாம்  பரம பிதாக்கள்.”……பால் குடிக்கக்கூட தெரியாதவர்கள்……பரம சாதுக்கள் என்று சொல்ல நான் வரவில்லை..“

திடீர்..திடீர் என .இவர்களை கைது செய்து அல்ப.சொல்ப.” செக்ஷனில்”…இவர்களை பிடித்து போட்டால்…அடுத்த நிமிஷமே வெளியில் வந்து விடுவார்கள்..அந்த ஒர் நிமிஷத்துக்குள்..ஊரையே கூட்டி…ரகளை செய்து “பப்லிசிட்டி” வாங்கிக்கொண்டு விடுவார்கள்…இது ஏன் உங்களுக்கு தெரியவில்லை..ஜெ..

போன தடவை கூட ராத்திரியில் கலைஞரை கைது செய்யப்போய்…..உங்கள் நம்பிக்கையான போலிஸ்…முரசொலி மாறனுக்கு போன் பண்ணி…அவர் சன் டி.வி. கேமராவுடன் வந்து……ரசாபாசமாகி…கடைசியில..கெட்ட பேரு..உங்களுக்குத்தானே..ஜெ..
ஏது செஞ்சாலும் திமுக மாதிரி “கீளீனா”..ஸ்கெட்ச்..போட்டு செய்யுங்க ஜெ….
2-ஜி..ல பாத்தீங்களா…சிங்ஜி யக்கூட சந்திக்கு இழுத்துட்டாங்க..பாத்தீங்களா?

ஆனால்,,நீங்க ….ஒரு முதல் மந்திரி…… அரசு சொத்த வாங்கக்..கூடாதுங்ற..பால பாடம் கூட தெரியாமல்…”டான்சி..நிலத்த..வாங்கி…6 மாதம் “அக்ஞாதவாசம்…..இருந்தீங்க…ஒங்க தயவால..சைபர்..பன்னீர்செல்வம்..6 மாசம் முதலமைச்சரா இருந்தாரு…

இந்த தடவையாவது..பதட்டப்படாம..பக்காவா…
ஸ்கீம்..போட்டு…இவர்களை உள்ள தள்ளுங்க…உங்களை..பல வருஷமா..பெங்களூரூ..கோர்ட்டுக்கு அலைக்கழிக்கிறதை..மறந்துடாதீங்க..

முதல்ல மின்சாரம்…அப்புறம்..கல்வி….அப்புறம்..
விலைவாசி…அப்புறம் சட்டம் ஒழுங்கு…கடைசியா இவங்க மேல கைவய்யுங்க..

எல்லாம் பிஜேபி காரன் சொல்லிக்குடுக்க வேண்டி இருக்கிறது..திருப்பூர் சாயபட்டறை தீர்வுக்கு குஜராத்துக்கு போறீங்க.. மின்சார தட்டுப்பாட்டை சீர் செய்ய குஜராத் உதவுகிறது.

நாடு செழிக்க எல்லா உதவியும் செய்வோம் நாங்கள்..ஜெ…..

நீங்களும் அப்படி இருந்தால் நல்லது… ..ஜெ..

Thursday, July 21, 2011

படங்கள்....சொல்லும் ..கதை...அல்லது...... பேசும் படங்கள்




Hillary Clinton and Sonia Gandhi


சோனி....இத்தாலிலேயிருந்து இங்க வந்து ......இந்த ஆட்டம் போடுற.....இதுல பொடவ வேற....ங்...



Hillary Clinton and Sonia Gandhi




இப்பிடியே மெயிண்ட்டன் பண்ணு...ரொம்ப ஆடாத.......வெரட்டீடுவாங்க









Sushma Swaraj and Hillary Clinton

P.M..ஆக இதான் “ஸ்கெட்ச்”..கரக்டா..பாத்துக்கங்க.. சுஷ்மா........ஓக்கேயா

Hillary Rodham Clinton, J. Jayalalithaa Pictures & Photos

அமெரிக்காவே என் கைல.....ஜாக்ரதை..அப்பிடி...இப்பிடின்னு பேசிடாத.. ஜெ....ங்.....

Wednesday, July 20, 2011

அமெரிக்காவை..ரஷ்யாவை பார்த்தது போதும்..இனியாவது ஜப்பானை பார்ப்போம்

அமெரிக்காவை..ரஷ்யாவை பார்த்தது போதும்..இனியாவது ஜப்பானை பார்ப்போம்
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜப்பான் தூதரின் பேட்டி வெளியாகி உள்ளது..நிச்சயமாக அது நம் கண்களை திறக்கும் என்று நம்புகிறேன்.

***.   பௌத்தம் எங்கள் நாடி நரம்புகளில் ஓடுகிறது...
இந்த்துத்வா..நம் நாடி நரம்புகளில் ஓடவேண்டுமே..ஓடுகிறதா...ஓடுகிறது என்று சொன்னால் அது வகுப்புவாதமா...ஓட்டுக்காக பேசிப்பேசியே எவளவு நாள் உண்மையை மறைக்கப் போகிறோம்

***   அரசின் செயல்பாடுகள் பற்றிய “அதிக விமர்சனம் “..ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட சிறந்ததுதான்.
அரசை விமர்சிப்பதை இங்கு ஆட்சியாளர்கள் ரசிப்பதில்லையே..ஏன் ...விரும்புவதே இல்லையே..அவர்கள் மீது “கருப்பு முத்திரை “ குத்தப்படுகிறதே...பிரதமரும்..ஆட்சியின் “நிழல் தலைவரும்”..பதில் தரா..”பேசா மடந்தைகளாய்”..இருக்கிறார்களே..

***  சீனாவின் வளர்ச்சி அபாரமானது..ஆனால் அதன் “எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும் “ என்னும் ஆசை அநியாயமானது..
அருணாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு எல்லைப்புர மாகாணங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பை இனியாவது இந்திய அரசு கண்டுகொள்ளுமா?..உஷாராய் இருக்குமா?..

***  இந்தியாவில் 4500 ஜப்பானியர்கள் தொழில் செய்கின்றனர்..அவர்களிடம் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள்..ஜப்பானிய தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் “கடுமையன கட்டுப்பாடுகளை “..கடைபிடித்து சிறந்த முறையில் செயல் படுகின்றனர்..
இதையே நம் இளைஞர்கள் நம் தொழிற்சாலைகளிலும் கடைபிடித்தால் நாடு எங்கோ போய் விடுமே..செய்வார்களா?

***  இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் இருப்பதே..இந்தியாவோடு நிரந்தரமான நீண்டகால முதலீடுகளை செய்யத்தடையாக இருக்கிறது..
இதுதான் மன்மோகன் சிங்கின் பொருளாதார புரட்சியா...சீர்திருத்தமா?...காகித ஓடம் ஆடலாம்..காந்தி நோட்டு ஆடலாமா?

***  ஜப்பான் அணு உலை கசிவுகள் இன்னும் நின்ற பாடில்லை

இந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் ( நடக்கவேண்டாம்..நடக்கக் கூடாது ) ஆட்சியாளர்களுக்கு இப்படி ஒத்துக்கொள்ள தைரியம் வந்திருக்குமா?

கடுமையான உழைப்பு
வேலையில் முழு ஈடுபாடு
போலி மதசார்பின்மை
ஆட்சின் குறைபாடுகளை ஒத்துக்கொள்ளும் நெஞ்சுரம்


இவை ஜப்பானுக்கு மட்டுமே சொந்தமா...நம்மிடமும் இருக்கவேண்டாமா?

Sunday, July 17, 2011

காப்பாற்றப்படவேண்டியது---- மக்களா?.....மின்வாரியமா?..

குதிரை குப்புற தள்ளியது மட்டுமல்ல..குழியும் பரித்ததாம்…
பேய்க்கு பயந்து கோயிலுக்குப் போனால் அங்க..5..6..பேய்கள் அரக்க பரக்க ஆடியதாம்..

”அய்யா”....ஆண்டு அழிச்சார்ங்கிறதால ..ஆட்சிய ”அம்மா” கிட்ட ஒப்படைச்சா……எதுல வரிய ஏத்தலாம்....எந்த கட்டணத்த..ஒசத்தலாம்னு சிந்திச்சா……செயல்பட்டா……அப்புறம் ஆட்சி எதுக்கு..,,,அரசாங்கம் எதுக்கு…

நாம ஓட்டுப்போட்டது…..மாறுதலுக்காக……ஆட்சி மாறுதலுக்காக மட்டுமல்ல….அவலங்கள் மாறுதலுக்காக…..அநியாங்கள்..அக்கிரமங்கள்..அராஜகங்கள்…...மாறுதலுக்காகவே..

திமுக ஆட்சிக்கும் “ஜெ” ஆட்சிக்கும் “இப்படியே போனால்” என்ன மாறுதல் இருக்கும்….எதில் மாறுபாடு இருக்கும்..ஒண்ணும் இருக்காது..

இப்பிடி பொலம்பிக்கிட்டே போனால்..என்னன்னு..தெரியும்..சீக்கிரம் விஷயத்தை சொல்லுன்னு நீங்க கேக்குரது காதுல விழுது….சொல்றேன்..

திடீர் இட்டிலி…..திடீர் பாயாசம்…..மாதிரி சென்ற வாரம் “ஜெ’”..ஒரு திடீர் “வரி” போட்டாங்க..
ஒரேநாள் “ராவுல”..வாட் விற்பனை வரிகள்…4 சதம் 5 ஆனது…12 சதம் 14.5 ஆனது

எடுத்தேன்..கவிழ்த்தேன்னு..இப்பிடி “சடக்குன்னு”  வரியை ஏத்துனா என்ன செய்வது?...அதுவும் சட்டசபை கூடுற தேதியை அறிவிச்சுட்டு…..இதை மக்கள் மட்டுமல்ல..கலைஞரும் கேட்கிறார்..11 ந்தேதி..அறிவிப்பு..12ந்தேதியே அமுல்…

இப்ப அடுத்த “ஷாக்” ரெடியாகிகிட்டு இருக்கு..
”ஷாக்”.அடிக்கும்னு கையை வச்சாலும் கரண்டு வராத மின்சார வாரியத்துனுடைய நஷ்ட்டத்தை சரிகட்டணுமாம்…மின்வாரியம் 40300 கோடி ரூபாய் கடன்ல இருக்காம்..ஆண்டுக்கு 10000 கோடி ரூபாய் நஷ்ட்டத்தில் இயங்குதாம். (இயங்குனா தேவைலையே..இயங்கவே இல்லையே ).மின்சார வாரியத்தை காப்பாத்தணும்னா..மின்கட்டணத்தை கட்டாயம் ஒசத்தியே ஆகணுமாம்..

அப்ப மக்கள யாரு காப்பாத்துறது…..ஏற்கனவே விலைவாசி உயர்வால் மூழ்கிக்கிடக்கும் மக்களை யார் காப்பாத்துவாங்க…..”விலைவாசியை குறைப்பேன்…மின்வெட்டை ரத்து செய்து மின்சாரத்தை கொடுப்பேன்னு.” .நீங்க சொன்னதுனால தான மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தாங்க…

மின்வாரியம் கடன்ல தத்தளிக்க யார் காரணம்?..ஆட்சியாளர்தானே?..மக்கள் யாரும் மின்கட்டணம் கட்ரதே இல்லையா?..அதனால தான் கடனா?..முந்தைய ஆட்சியாளர் செய்த தவறுக்கு மக்களை பலியாக்குவதா?..

நல்ல ஆட்சி குடுப்பீங்கன்னு நம்பிதானே மக்கள் ஒங்கள்ட்ட ஆட்சியை ஒப்படிச்சிருக்காங்க..இப்படி வரிமேல் வரி..கட்டண உயர்வுமேல் கட்டண உயர்வுன்னு. போட்டால்….விலைவாசி.. எப்பிடி குறையும்..மக்கள் எப்பிடி சந்தோஷமாய் இருக்கமுடியும்?...

கரண்டே கொடுக்காமல்..கட்டண உயர்வுங்கிறது எந்த ஊர் நியாயம்?..கட்டண உயர்வுக்கு பக்கத்து மாநிலங்களை துணைக்கு கூப்பிடுவது அநியாயமாக தெரியவில்லையா?...ஒங்க உடன்பிறப்பு நரேந்திர மோடியால மட்டும் எப்பிடி தரமான ..தடையில்லாத..மின்சாரத்தை குறைந்த விலையில் தரமுடிகிறது?

தப்பு செய்வதற்கு..தவறானவர்களையும்..தவறான விஷயங்களையும்…. உதாரணமாக சொல்வதில் திராவிட கட்சிகள்..ஒன்றுக்கொன்று..சளைத்ததில்லை..எனபதை நிரூபிக்க முயலாதீர்கள்...

முதலில் மின்சாரம் கொடுங்கள்..கட்டண உயர்வை அப்புரம் பார்க்கலாம்…திமுக ஆட்சியின் அவலங்களை சரிசெய்வேன் என்று உத்தரவாதம் கொடுத்தது நீங்கள்தானே..மின்கட்டணத்தை உயர்த்துவதால்..திமுகவின் அவலங்களை தொடர்வதாகத்தானே அர்த்தம்..

மின்வாரியத்தின் கடன்களை தீர்க்க..நஷ்ட்டத்தை தடுக்க வேறு வழி என்ன என்று கண்டுபிடியுங்கள்…உங்கள் கட்சி மந்திரிக்களுக்கு தெரியாது..அவர்கள் வெறும் பூஜ்யங்கள்தானே..உங்கள் “வக்காலத்து”.. “சோ”.விடம் கேட்டுப்பாருங்கள்… அவரும் “ மோடியிடம்” தான் கேட்கச்சொல்லுவார்..

எக்காரணம் கொண்டும் ஏற்கனவே நொந்துகிடக்கும் மக்கள் வயிற்றில் மட்டும் அடித்து விடாதீர்கள்..

Tuesday, July 12, 2011

டெல்லி திஹார் ஜெயில் ..அறை எண் 6

யார்  ?..மஹாத்மா..காந்தி இருந்த செல்லா..?—சுபாஷ் போஸ் அங்கு இருந்தாரா?...அப்படி எந்த நல்ல
  விஷயங்களும் இல்லை…நம்ம 2ஜி..புகழ் கனிமொழி செல்தான் அது……..இவர் இருந்ததாக பிற்காலத்தில் புகழ்
பெருகிறதோ இல்லையோ இப்போதே புகழ் பெற தொடங்கி விட்டது.

ஆம்…..கொலை… கொள்ளை..போதை மருந்து கடத்தல்..வரதட்சிணை கொடுமை..ஆகிய குற்றங்களில்..ஆண்களை
விட பெண்களே அதிகம்பேர் குற்றம் புரிந்திருக்கின்றனர்….தண்டனை பெற்றிருக்கின்றனர்…..அதாவது ஆண்களை
விட 10 முதல் 13 சதவீதம் அதிகம் பெண்கள் குற்றம் புரிந்திருக்கின்றனர். தண்டனை பெற்ற பெண்
குற்றவாளிகளில் பாதிபேர் கொலை குற்றம் புரிந்தவர்கள்.. .அத்தனை பேரும் இங்கே தான் அடைக்கப்
பட்டிருக்கின்றனர்..

இந்த “காராகிரகத்தில்”..கனிமொழியும் அடை பட்டுரிப்பது கலைஞருக்கு கவலை அளிப்பது நியாயமானதே…சுட்டெரிக்கும் “சூரியனால்”..மகள் கனியின் உடலில் கொப்புளங்கள்…சூரியனுக்கு….தலைவர் மகள்…தொண்டர் மகள் என்கிற வித்யாசம் இல்லையே…

“ வாழுகின்ற மக்களுக்கு
வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் வைத்த கடன்
பிள்ளைகளை சேருமடி “
இது கலைஞருக்கு மட்டுமல்ல…எல்லோருக்கும் பொருந்துமல்லவா..

2ஜி யின் “சூத்திர தாரி” சோனியா…ஆலோசனை தந்து ராசாவை செய்யதூண்டிய கனிமொழி….இரண்டுபக்கமும்..மீடியேட்டராக வழிகாட்டிய நீரா ராடியா…அனைவரும் பெண்தானே…

இதில் ஒன்று உள்ளே இருக்கு..மற்றது…..விரைவில் வரும் ..உள்ளே..
பெருமை மிக்க “திஹார்”’   இவர்களுக்காக..காத்திருக்கிறது…

Wednesday, July 6, 2011

ஏன் பிறந்தாய் மகனே

ஏன்  பிறந்தாய்  மகனே

பழைய தலைப்பு…..புதிய எழுத்து..
பிறந்த போது யாருக்குத் தெரியும்
வளர்ந்த போதும் தெரியாமல் வாழுவோர்
மண்டிக் கிடக்கும் மந்தை யில்
ஒண்டியாய் சிந்தித்து உயர நினைத்தேன்

சிந்திக்க தொடங்கியதும்……
.சந்திக்கு வந்ததும்….
உதிரம் சிந்தும் ராணுவ வீரருக்கு
ரத்தம்தர ஆர்.எஸ்.எஸ். அழைப்பை ஏற்று
கொடுத்தது ரத்தம் மட்டுமல்ல
வாழ்வையும் நாட்டுக்காகவே…..……

விளையாட அழைத்துப்  போய்
விளையாட்டாய் கொள்கை ஊட்டி
வாழ்க்கை விளையாட்டை
ஒலிம்பிக் ரேஞ்சுக்கு உயர்த்தினர்…

பாரதியும் பகத் சிங்கும்
வாஞ்சியும் மதன்லால் டிங்ராவும்
சாவர்க்கரும் திலகரும்
விவேகானந்தரோடு சேர்த்துக் குழைத்து
ஊட்டிய அமுதம் உரம் ஏற்றியதால்
ஓடுகிறேன்..ஓடுகிறேன்..இன்றும்..இன்னும்..

ஆட்டுக் கூட்டத்துக்குள் சிங்கக்குட்டியா..?
அவசியமில்லை..புலிக்கூட்டத்தில்..சிங்கக்குட்டி
மாற்றம் வேண்டி சிந்தித்ததால்
மர மூளைகளுக்கு ஏற்பில்லை
மாத்தி யோசி மறந்து போய்
” பார்த்து யோசி”.. படமெடுத்து ஆடியது

சிக்கலில் சுற்றியிருந்த மன வலையை
பக்குவமாய் அவிழ்த் தெரிந்தார் wayne dyer
Eric Berனும் தாமஸ் ஹாரிஸூம்
தொடர்ந்து வந்து தூண்டி விட்டனர்.

தன்னை அறிதல்.... உன்னை அறிதல்...
என்னை அறிதல்..... நம்மை அறிதலென...
கீதையில் சொன்ன சாரங்களை
ஆங்கில ஆசிரியன் அழகாய் சொன்னான்…

என்னை அறியும் முயற்சியால் ஒருஏகாந்தம்
தன்னை அறியாதவர் போடும் பகல்வேஷம்
பார்த்தவுடன் தெரிந்தது கேட்காமலே புரிந்தது

ஓநாயையும்…..ஓணானையும்..
பசுவையும்……பாம்பையும்
போர்வையை… விலக்காமலே
பார்வையே படம் பிடித்தது

உணந்த     விஷயங்களை
விதைத்து.......விளைவிக்க
எழுத்தை..... ஏராக்கினேன்
உழுதலைத்.... தொடர்ந்தேன்

கால்டுவெல்லும்…மெக்காலேயும்
விதைத்த “பார்த்தீனியனை”
அழிக்கும் விதைகளை
அக்கம் பக்கம் தூவி
அழைக்கிறேன் புது விடியலை

வாஜ்பாயும்    கலாமும்
வித்திட்ட   புரட்சிக்கு
”ஜேப்பி”   எதிர்பார்த்த
முழுப்  புரட்சிக்கு

வடிவமாய்..வழிகாட்டியாய்
ஏற்றிவைப்பேன் என்னெழுத்தை

வேதாந்த தேசிகரும் ராமானுஜரும்
சங்கரரும் நாரயண குருவும்
ஆற்றிய பணிகளில் வராத மாற்றம்
என் எழுத்தால் வருமா..?
முயல்கிறேன் முழுமூச்சாய்..

அப்போதே என்பிறப்பு முழுமை பெறும்
அன்றோடு இப்பிறவி..நிறைவுறும்


--

Tuesday, July 5, 2011

இன்றைய சிரிப்பு…....நன்றி…//..ராம்தாஸ்..வைகோ

தலைப்பு இந்தவார சிரிப்பு..என்று கொடுப்பதாக இருந்தேன்..வாரம் முடிய இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால்நம் அரசியல் பபூன்களிடமிருந்து இதைவிட இன்னும் அதிகம் வர வாய்ப்பிருப்பதால்இதுசெவ்வாய்.. ( இன்றைய ) சிரிப்பாகிறது

சென்னை இந்திரா நகர் சிறுவன்தில்ஷன்”…அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டான்என்பது  மிகவும் வருத்தமளிக்கிறது..

இந்தஇழவு வீட்டில்மருத்துவர் ஐய்யாவும்மறுமலர்ச்சி..வைக்கோவும் ஏன் ஓவராக..அனுதாபபொங்கல்வைக்கிறார்கள்..காரணம் இல்லாமலில்லை..

அண்ணாதிமுக ஆட்சியில் உயிரின் விலை ஐந்து லட்சம்……இதுவே கலைஞர் ஆட்சியில் ஒரு லட்சம்தான்……..விலைவாசி ஏறியதால் இதுவும் ஏறியுள்ளது போலும்..

அன்று  கலைஞர் ஆட்சியில் ராம்தஸ் இர்ண்டு லட்சம் கேட்டார்…..இன்று 10 லட்சம் கேட்கிறார்…..நகைச்சுவைக்கு ஒரு எல்லையே இல்லையா….வடிவேலு வெளியே வரமுடியாததால்ராம்தாஸுக்கு நல்ல மார்க்கெட்

இதைவிடகாமடி..வைக்கோவுடையதுராணுவ அதிகாரிகள்.. எந்தவார்னிங்கும் குடுக்கல்லையாம்….சுட்டதே காட்டும்பிராண்டித்தனம்இதில் எச்சரிக்கை செய்தால்..என்ன..செய்யாவிட்டால் என்ன;;; எச்சரிக்கை செய்தால் சுடலாமா?..

இந்த அரசியல் பபூன்களுக்குதில்ஷன்மேல் ஏனிந்த அக்கரை
1..முதலில் இந்த இருவருக்கும் எந்தவேலையுமில்லைஆட்சியில்லைதிகாரமில்லை..அறிக்கை வெளியிடபாயிண்ட்டும்இல்லை

2…இந்திரா நகரில் திரண்ட மக்கள் கூட்டம்அந்த ஓட்டு வங்கி…… கண்களை உறுத்தியது…..எனபதோடுகூட்டத்தை பார்த்தவுடன் உளறுவது பலரின் இயல்பு….அது இவர்களுக்கும் ….மாறாப்பழக்கம்

மருத்துவரே…….மறுமலர்ச்சிக்காக..காத்திருப்பவரே (வைக்கோ ) …தினசரி அறிக்கை விடவேண்டும் என்பது கட்டயமில்லை

இலங்கை பிரச்சினை……தமிழ்….…கலைஞர்……..குடி….….எனபதற்குள் சுற்றிக்கொண்டிருந்தவர்கள்…..இன்றுஇந்திரா நகர் அளவுக்கு இறங்கி வந்துள்ளது….இரக்கத்தினாலா?.....அல்லது...இவர்கள்லெவலே”..இறங்கிப்போச்சு”..எனபதாலா?

Monday, July 4, 2011

ஜெ யின் அடிக்கடி மாற்றங்கள் அசத்தலா..?சொதப்பலா.?……




இதுதான் நிர்வாகத் திறமையா?...50 நாளில் 12 மந்திகளின் இலாகா மாற்றம்…ஒரு மந்திரி டிஸ்மிஸ்..

சிறந்த நிர்வாகத்தை தரவே ஜெ இப்படி செய்கிறார்..இதுதான் ஜெ ஸ்டைல்…இப்படித்தான் “சோ”…மாதிரி “ஜெ” கோஷ்டியினர்..”நடுநிலை “ கமண்ட் அடிக்கின்றனர்.

அதிகாரிகள் மாற்றமாவது ஆட்சி மாறியதும் செய்யும் முதல் சடங்கு என ஜீரணித்துக் கொள்ளலாம்..ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் இன்னைக்கு தாங்கள் “போஸ்டில்”..உள்ளோமா…என்பதை தெரிந்து கொள்ள தினசரி டி.வி. முன்னாலேயே இருக்கவேண்டும் போலிருக்கிறதே…இது சரியான சூழலா?

ஆட்சி அமைக்கும் போதே மந்திரிகளின் “பயோ டேட்டா”  தெரியாதா?...ஜெ யிடம் பயோடேட்டா விற்கு வேலையேது?...”ஜாதகம்” மட்டுமே ”இவர்களுக்கு”.. தேவை…மந்திரியின் ஜாதகம் “இவர்கள்” ஜாதகத்தோடு பொருந்தி வருமா என்பதே முதல் தகுதி..” பொட்டிகள் பிரிக்காமல் போயஸ் தோட்டத்திற்கு வந்து சேருமா?” எனபது இர்ண்டாம் தகுதி.

இசக்கி சுப்பையாவிற்கு இதில் எது குறைந்தது என தெரியவில்லை..கட்சியில் அவர் முன்னணியில் இருந்ததாகவும் குறிப்பில்லை..பல சீனியர்களையும்..தகுதியானவர்களையும் புரக்கணித்து விட்டு “பாராசூட்டில்” இவரை இறக்குமதி செய்தது ஏன்?...

திமுக விட்டுச்சென்ற கடனிலிருந்து மீளவும்…நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யவும்..ஒருவலுவான “டீம்” வேண்டாமா?..இது மிகப்பெரிய சவால் இல்லையா..?..இதில் கோட்டையே முன்பின் பார்த்திராதவையும்..அனுபவமில்லாத 30 முகங்களையும் மந்திரியாக்கியதின் பின்னணி என்ன?”..ஜெ க்கு பின்னணியில் உள்ளவரின் முன்னணி முடிவா இது?  அல்லது ஆட்சியை “சீரியஸாக” எடுத்துக்கொள்ளவில்லையா?’”

மேலே எழுதியதில் நான் “திறமை” என்று எங்கேயும் குறிப்பிடவில்லை..”ஜெ” க்கு “சைபர்கள்’” மட்டுமே வேண்டும்..அதற்கு மேலுள்ள எண்களை அவர் விரும்புவதில்லை..

அதனால்தான்..பொள்ளச்சி ஜெயராமன்..நைனார் நாகேந்திரன்..வளர்மதி போன்றோர் கைவிடப்பட்டனர்..திருநவுக்கரசர்..பண்ருட்டியார்…செல்வகணபதி..ஈரோடு முத்துசாமி..சென்னை சேகர்பாபு..போன்றோர் விரட்டி அடிக்கப்பட்டனர்..இவர்கள் பெரிய திறமை சாலி இல்லாவிட்டாலும்..அனுபவசாலிகள்.பொன்..வைக்கும் இடத்தில் “பூ”வாவது வைப்பார்கள்..

அதிகாரிகளையே வைத்து ஆட்சி செய்துவிடலாம்..எனபது நடக்குமா?..அல்லது கானல் நீரா?..

நீக்கப்பட்ட…….. இன்று மந்திரி………...நாளை மந்திரிகள்……….இலாகா மாற்றங்கள்…..எதை வைத்து செய்யப்பட்டது…

இவர்களது “பெர்ஃபார்மன்ஸ்”..செயல்பாடு எதை வைத்து தீர்மானிக்கப்பட்டது..
புலனாய்வு அறிக்கை அடிப்படையில் இவர்கள் நீக்கப்பட்டார்கள் என்றால் அது அபத்தமாக தெரியவில்லையா?.

மந்திரிகளையும் அதிகாரிகளையுமே சரியாக தேர்ந்தெடுக்க தெரியாதவருக்கு பேர்தான் திறமையான முதல்வரோ?

Saturday, July 2, 2011

ஜெ..யின்…முதல் 50 நாட்கள்

ஜெ..யின்…முதல் 50 நாட்கள்

முதல் நாளே தேர்தல் வாக்குறுதிகள்..நிறைவேற்ற துவங்கியாகிவிட்டது..அதான் இலவசங்கள் வினியோகம்…ஆடம்பரமில்லாத அரசு நிகழ்ச்சிகளில்..”ஜெ” படம் போட்ட பைகளில்..”நல்ல அரிசி” பெண்களுக்கு வினியோகம்..
 
புதிய தலைமைச் செயலகத்துக்கு ஏதேதோ காரணம் சொல்லி பூட்டு…..சமச்சீர் கல்விக்கு முழுக்கு……ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும்”ராப்பகலாக”….புஸ்தகங்களை கிழிக்கும் பணி…”ஜெயின்” அதிர்ஷ்ட நிறம் இன்னும் பச்சைதான் போலும்..அந்த கலர் “ஸ்டிக்கர்கள்” தான் கிழித்த புத்தகங்களில் ஒட்டப்படுவதி இருந்து தெரிந்தது..
பாட புத்தகங்கள் தயாராவது தாமதமாவதால்..சாரி..சாரியாக பள்ளிக்குழந்தைகள்..அரங்கம்..அரங்கமாக..சினிமா பார்க்க அனுப்பும் புதிய பண்பாடு..
இலங்கை தமிழர்களுக்காக..ஒரேடியாக..சட்டசபையில் ஒரு தீர்மானம்..இலங்கை அரசுமீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம்..இலங்கை தமிழர்களுக்காக “கடைசியாக கண்ணீர்விட” இப்படி ஒரு நடக்காத முயற்சி..
ஒரு லட்சம் கோடி ரூபாய் வேண்டி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியாகிவிட்டது..பணம் உடனே வந்துவிடப் போகிறது..பிரச்சினை எல்லாம் தீரப்போகிறது…இப்படி தினம் தினம் நாம் கனவு காணலாம்..

“களேபரமாக” தமிழ் நாட்டை திமுக விட்டுச் சென்றதை..”ஜெ” …..லேசாக “கூட்ட” ……ஆரம்பித்தவுடனேயே..பத்திரிக்கைகள் போட்டி போட்டு புகழாரம்..

ஒரு யூனிட் மிசாரம் ரூபாய் 12 என்று ( ரூபாய் எட்டு அதில் கமிஷன் )ஆந்திர மாநிலத்திலிருந்து திமுக வாங்கியதை நிறுத்தி..ரூ.4.13.க்கு கமிஷனில்லாது..ஒரிஸ்ஸவிலிருந்து வாங்குவது நல்ல முயற்சி..மின்வாரியத்திற்கு ரூ.1200/= கோடி கொடுத்து..”பழுது பார்க்கும் வேலைகளை” துவங்கி இருப்பது அடுத்த நல்ல முய்ற்சி..

சிக்கனத்தை கடை பிடிப்பதில்..”தனி விமானத்தில்” செல்வதை நிறுத்தினால்..அதுவும் நல்ல முயற்சியாக இருக்கும்..இதை “ஜெ”யிடம் யார் சொல்வது…..”சோ” சொல்லுவாரா?

மின்வாரிய பொறியாளர்கள் இடமாற்றத்தில்..பெரும் விலை பேசப்பட்டு..லட்சங்கள் கை மாறியது..”ஜெ”க்கு தெரியாதா?..அல்லது நத்தம் விஸ்வநாதன் பொட்டி கை மாற்றும் “குருவியா” ?

TIMES NOW ஆங்கில டி.வி.க்கு “ஜெ” கொடுத்த பேட்டி அபாரம்..”கம்யூனல் பில்” லுக்கு ஆதரவோ..எதிர்ப்போ..தெரிவிக்காமல்..சொன்ன பதில்..திமுக காங்கிஸூக்கு அதிர்ச்சி அளிக்கலாம்..

அடுத்த பிரதமர் ஓட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு “ஜெ” யின் பதில் பாஜக வாக்கு வங்கி மீது வைத்த குறியாகத்தான் இருக்கமுடியும்.

நாட்டை நிர்வகிக்க..வலுவான்..திடமான பிரதமர் அவசியமாம்..இந்தியா உலகின் வல்லரசாக ஆக வேண்டும் எனபதே அவர் ஆசையாம்..இதை செய்யும் பிரதமர் வேண்டும் எனபது மட்டுமே இவரது நோக்கமாம்..

இதைத்தானே வல்லவன் வாஜ்பாய்..செய்தார்..இதை செய்யத்தானே..ஒருமாநிலத்திலே தனது திறமைகள் முழுவதையும் காட்டி..அதை முன்மாதிரி மாநிலம் ஆக்கிகொண்டிருக்கிறார் நரேந்திரமோடி…

.இதற்க்காகத்தானே லட்சக்கணக்கான தன்னலம் கருதா தேச பக்தர்களின் இயக்கம் பாஜக தினம் தினம் பணியாற்றிவருகிறது..போராடி வருகிறது..

இவர்கள் உருவாக்கி வைத்துள்ள ஓட்டு வங்கியை ஒரே பேட்டியில் அள்ளிச் செல்லும் ஆசை “ஜெ”யின் பேட்டியில் தெரிந்தது..இதை பாஜக புரிந்து கொண்டால் சரி..

மனோதத்துவத்தில்..”HABIT DIE HARD” என்கிறார்கள்..1991லும்..2001 லும் “ஜெ” யின் குணம் மாறியதாக தெரியவில்லை..திடீர்..திடீர்..அதிகாரிகள் மாற்றம்..கூண்டோடு போலிஸார் மாற்றம்..

மந்திரிகளின் இலாக்காகள் திடீர் மாற்றம்..எனபதில் ஆரம்பித்து..இன்று மந்திரி இசக்கி சுப்பையாவை முதல் பலி கொடுத்தது துவ்ங்கி “ஜெ” யின் செயல்பாடுகள்..இந்த சந்தேகத்தை தொடர வைக்கிறது..

அடுத்த 5 ஆண்டு முடியும் போது 146 எம்.எல்.ஏக்களில்..120 எம்.எல்.ஏக்கள் ஒருமுறை மந்திரி ஆகியிருப்பார்கள்

இந்த சந்தேகங்கள் பொய்க்குமா?....தமிழ் நாட்டுமக்களை போல் நாமும் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்..பொறுத்திருந்து பார்ப்போம்..நல்லாட்சி தருவாரென்று…